என் மலர்tooltip icon

    வேலூர்

    வேலூர் தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
    வேலூர்:

    மும்பை விக்டோரியா துறைமுகத்தில் கடந்த 1944-ம் ஆண்டு ஏப்ரல் 14-ந் தேதி நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. கப்பலில் ஏற்பட்ட தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டிருந்த தீயணைப்பு வீரர்களில் 66 பேர் கருகி பரிதாபமாக உயிரிழந்தனர். மும்பை துறைமுகத்தில் கப்பலில் உயிர்நீத்த 66 பேரின் தியாகத்தை போற்றும் வகையிலும், இந்தியா முழுவதும் மீட்பு பணியின்போது உயிர் நீத்தவர்களை நினைவு கூறும் வகையிலும் ஆண்டுதோறும் ஏப்ரல் 14-ந் தேதி அஞ்சலி செலுத்தப்பட்டு வருகிறது. மேலும் அதனை நினைவு கூறும் விதமாக தீத்தடுப்பு வாரம் அனுசரிக்கப்படுகிறது.

    தமிழகத்தில் இதுவரை மீட்பு பணியின்போது 33 தீயணைப்பு வீரர்கள் உயிரிழந்துள்ளனர். இந்தியா முழுவதும் உள்ள தீயணைப்பு நிலையங்களிலும், மும்பை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டிருந்த கப்பலில் ஏற்பட்ட தீ விபத்தில் உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. அதன்படி வேலூரில் உள்ள மாவட்ட தலைமை தீயணைப்பு நிலையத்தில் பணியின்போது உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட அலுவலர் அப்துல்பாரி, உதவி மாவட்ட அலுவலர்கள் சக்திவேல், சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    நிகழ்ச்சிக்கு வடமேற்கு மண்டல துணை இயக்குனர் சரவணகுமார் தலைமை தாங்கி, மீட்பு பணியின்போது உயிர்நீத்த வீரர்களின் நினைவாக வைக்கப்பட்டுள்ள நினைவிடத்தில் மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். அதைத்தொடர்ந்து வேலூர் தீயணைப்பு நிலைய அலுவலர் கார்த்திகேயன், தீயணைப்பு வீரர்கள், ஊழியர்கள் அஞ்சலி செலுத்தினார்கள்.

    இதேபோன்று வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தீயணைப்பு நிலையங்களிலும் உயிர்நீத்த தீயணைப்பு வீரர்களுக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தீயணைப்புத்துறை சார்பில் வருகிற 20-ந் தேதி வரை தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்தப்படுகின்றன. அரசு, தனியார் கல்லூரிகள், பொதுமக்கள் அதிமாக கூடும் இடங்கள், குடிசை அதிகம் நிறைந்த பகுதிகளில் தீயணைப்பு வீரர்கள் தீத்தடுப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள், துண்டுபிரசுரங்கள் வழங்க உள்ளனர் என்று தீயணைப்புதுறை அதிகாரிகள் தெரிவித்தனர்.
    வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி, வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் வேலூர் மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.
    வேலூர்:

    வேலூர் மாநகராட்சி பகுதியில் இதுவரை 45 வயதுக்கு மேற்பட்ட 60 ஆயிரம் பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது என்று கமிஷனர் சங்கரன் தெரிவித்தார்.

    வேலூர் மாவட்ட சுகாதாரத்துறை, வேலூர் மாநகராட்சி, வட்டார போக்குவரத்துத்துறை சார்பில் வேலூர் மாநகராட்சி பகுதியில் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது.

    ஓட்டேரியில் உள்ள ஒரு திருமண மண்டபத்தில் நடந்த தடுப்பூசி முகாமை மாநகராட்சி கமிஷனர் சங்கரன் தொடங்கி வைத்து பார்வையிட்டார். அப்போது அங்கு தடுப்பூசி போட வரும் பொதுமக்களுக்கு செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்தும், முகாம் குறித்து விழிப்புணர்வு பற்றியும் மாநகராட்சி அலுவலர்களிடம் கேட்டறிந்தார்.

    பின்னர் கமிஷனர் கூறுகையில், வேலூர் மாநகராட்சி பகுதியில் 5 லட்சத்து 15 ஆயிரம் பேர் வசித்து வருகிறார்கள். அவர்களில் 1 லட்சத்து 86 ஆயிரம் பேர் 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் ஆவர். அரசு மருத்துவமனைகள், நகர்புற சுகாதார நிலையங்கள், தடுப்பூசி முகாம்களில் 45 வயதுக்கு மேற்பட்ட 35 ஆயிரம் பேர், தனியார் மருத்துவமனைகளில் 25 ஆயிரம் பேர் என்று மொத்தம் 60 ஆயிரம் பேருக்கு இதுவரை தடுப்பூசி போடப்பட்டுள்ளது. அனைத்து வார்டுகளிலும் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடத்தப்படும். முகாமில் தடுப்பூசி போட்டு கொள்ளாதவர்கள் குறித்து வீடு, வீடாக ஆய்வு செய்யப்படும். அதன்பின்னர் அவர்களுக்கு தடுப்பூசி போடப்படும் என்று தெரிவித்தார்.

    முகாமில், வேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி, 3-வது மண்டல உதவிகமிஷனர் வெங்கடேசன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    இதேபோன்று வேலூர்-ஆற்காடு சாலையில் உள்ள பெட்ரோல் பங்கில் நடந்த முகாமில் ஆட்டோ டிரைவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது. அந்த வழியாக வந்த ஆட்டோக்களை வட்டார போக்குவரத்து அலுவலர்கள் நிறுத்தி சோதனை செய்து, தடுப்பூசி போடாத டிரைவர்களை முகாமில் தடுப்பூசி போடும்படி அறிவுறுத்தினர்.
    வனத்துறையினர் வீட்டுக்குள் சென்று மயங்கி கிடந்த சிறுத்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கூண்டுக்குள் வைத்து சிறுத்தையை அடைத்தனர்.
    குடியாத்தம்:

    குடியாத்தம் அருகே சிறுத்தை இரவு 1 மணியளவில் வீட்டுக்குள் புகுந்தது. அங்கு தூங்கி கொண்டிருந்த 3 பேரை கடித்தது. அவர்கள் கத்தி கூச்சலிட்டனர். இதனால் பயந்துபோன சிறுத்தையை அறையில் அடைத்து வைத்து வெளியே வந்தனர். வீட்டுக்குள் உள்ள 3 அறைக்குள் அங்கும் இங்குமாக உலாவி கொண்டிருந்தது.

    வீட்டுக்குள் அடைத்து வைக்கப்பட்டுள்ள சிறுத்தையை கூண்டு வைத்து அல்லது மயக்க ஊசி செலுத்தி பிடிக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

    அதன்படி வீட்டு முன்பு கூண்டு வைக்கப்பட்டுள்ளது. மயக்க ஊசி நிபுணர்கள் ஓசூரில் இருந்து வரவழைக்கப்பட்டுள்ளனர். பொதுமக்கள் அதிகளவில் வீட்டு முன்பு திரண்டதால் சிறுத்தை 3 அறைகளில் மாறிமாறி சென்று பதுங்கி கொண்டது.

    மயக்க ஊசி குழுவினர் வந்ததும் வெளியில் இருந்து ஜன்னல் வழியாக பார்த்தபோது சிறுத்தை கண்ணுக்கு தெரியவில்லை. அறையில் பதுங்கி விட்டது.

    அதனை ஹால் பகுதிக்கு கொண்டுவர வைக்கோல் திரிக்கொண்டு புகை பூட்டினர். அப்படியிருந்தும் சிறுத்தை வரவில்லை. அடுத்ததாக ரிமோர்ட் காரை உள்ளே விட்டு அதன் சத்தம் மூலம் சிறுத்தை ஹாலுக்கு கொண்டுவர முயற்சித்தனர்.

    சிறுத்தை பதுங்கி இருந்த அறையில் ட்டிரில்லிங் எந்திரம் மூலம் துளையிட்டனர். அந்த சத்தத்தை கேட்டு சிறுத்தை ஹாலுக்கு ஓடிவந்தது. அப்போது மயக்க ஊசி குழுவினர் மயக்க ஊசி துப்பாக்கி குண்டு மூலம் சிறுத்தையை சுட்டனர்.

    சிறுத்தை உடலில் மயக்க ஊசி பாய்ந்தது. பின்னர் அங்கும் இங்குமாக பாய்ந்தோடிய சிறுத்தை அங்குள்ள அறைக்குள் சென்று பதுங்கி கொண்டது.

    அரைமணி நேரம் கழித்து சிறுத்தை அறையில் மயங்கியது தெரியவந்தது. இதையடுத்து வனத்துறையினர் வீட்டுக்குள் சென்று மயங்கி கிடந்த சிறுத்தையை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். கூண்டுக்குள் வைத்து சிறுத்தையை அடைத்தனர். அதன்பின்னர் லோடு ஆட்டோவில் கூண்டை ஏற்றி சிறுத்தையை வனத்துறையினர் கொண்டு சென்றனர்.

    முதல் கட்டமாக டாக்டர் குழுவினர் மூலம் சிறுத்தைக்கு முதலுதவி சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மயக்கம் தெளிந்து இயல்பான நிலைக்கு வந்த பின்னர் சிறுத்தையை நடுவனப்பகுதிக்குள் கொண்டு சென்று விடுவார்களா? அல்லது வேறு ஏதேனும் நடவடிக்கை எடுப்பார்கள் என்பது தெரியவரும்.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.
    வேலூர்:

    ரம்ஜான் மாதத்தின் 30 நாட்களிலும் இஸ்லாமியர்கள் நோன்பு இருப்பது வழக்கம். 29-ம் நாளில் வானில் தோன்றும் பிறையை வைத்து ரம்ஜான் நோன்பு தொடங்கப்படும்.

    அவ்வாறு பிறை தென்படாத சூழலில் மறுநாள் முதல் நோன்பை தொடங்குவர். இந்தாண்டு ரம்ஜான் நோன்பு இன்று தொடங்கியது. இதனை முன்னிட்டு அனைத்து பள்ளி வாசல்களிலும் சிறப்பு தொழுகை நடைபெறுகிறது.

    வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டுள்ள 50 கைதிகள் ரம்ஜான் நோன்பு தொடங்க அனுமதிக்க வேண்டும் என்று சிறை நிர்வாகத்திடம் மனு அளித்தனர். இதையடுத்து அவர்களுக்கு நோன்பு இருக்க சிறை நிர்வாகம் அனுமதி அளித்தது.

    இதையடுத்து, இன்று முதல் 50 கைதிகள் ரம்ஜான் நோன்பை தொடங்கியுள்ளனர். இவர்களுக்கு அதிகாலை 5 மணிக்கு உணவும், மாலை 6 மணிக்கு மேல் உணவு வழங்கவும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக சிறைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். 
    கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொடங்கியது போலவே இந்தாண்டும் மார்ச் மாதத்தில் 2-வது அலை ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது.
    வேலூர்:

    கொரோனா கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் பரவ தொடங்கியது. ஆரம்பத்தில் சாதாரணமாக கருதப்பட்ட கொரோனா வீரியம் நாட்கள் செல்ல செல்ல அதிகரித்தது.

    தற்போது 2-வது அலை தொடங்கியுள்ளது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா தொடங்கியது போலவே இந்தாண்டும் மார்ச் மாதத்தில் 2-வது அலை ருத்ரதாண்டவத்தை ஆரம்பித்துள்ளது.

    முதல் அலையை விட 2-வது அலையில் வீரியம் அதிகமாக இருக்கும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

    இந்த நிலையில் கொரோனா பரவல் எப்போது கட்டுக்குள் வரும் உச்சநிலையை எப்போது அடையும் தாக்கம் எவ்வாறு இருக்கும் என்பது குறித்து ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    கடந்த ஆண்டு புதிய வைரஸ் நோய் பரவும் என்றும் அதன் தாக்கம் குறித்தும் ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணித்திருந்தது. அதன்படியே புதிய வைரசின் தாக்கம் அதிகமாக இருந்தது.

    ஆற்காடு பஞ்சாங்கம்

    கொரோனா பரவல் ஆகஸ்ட் கடைசி வாரத்தில் இருந்து செப்டம்பர் மாதத்தில் கணிசமாக குறையும் என்று ஆற்காடு பஞ்சாகங்கத்தில் கூறப்பட்டிருந்தது.

    அதேபோலவே கடந்த ஆண்டும் கொரோனா தாக்கம் ஆகஸ்ட், செப்டம்பர் மாதத்தில் இருந்து குறைய தொடங்கியது.

    இந்த ஆண்டும் கொரோனா பரவலின் தாக்கம் செப்டம்பர் மாதம் முதல் இருக்காது என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    ஆவணி 29-ந்தேதி (செப்டம்பர் 14) செவ்வாய்க்கிழமை இரவு 9.48 மணிக்கு அவிட்ட நட்சத்திரம் 2-ம் பாகம் மகர ராசிக்கு குரு வக்ர பெயர்ச்சி அடைகிறார். அன்றில் இருந்து படிப்படியாக குறைந்து கொரோனா தாக்கம் இருக்காது.

    மே, ஜூன் மாதத்தில் கொரோனா தாக்கம் உச்சநிலையில் இருக்கும். ஏற்கனவே நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கொரோனா பரவினால் உயிர் சேதம் ஏற்படலாம். தடுப்பு ஏற்பாடுகள் மூலம் பல உயிர்கள் காப்பாற்றப்படலாம் என்று ஆற்காடு பஞ்சாங்கத்தில் கணிக்கப்பட்டுள்ளது.

    ஆந்திரா பஞ்சாங்கம் ஒன்று தொற்று நோய்கள் முடிவுக்கு வந்துள்ளது. புதிய வைரசுக்கு எதிரான போரில் அனைவரும் வெற்றி பெறுவார்கள் என்றும், குரு மற்றும் கிரகங்களின் அசைவுகளால் இந்தாண்டில் பொருளாதாரம் மேம்படும் என்று கூறியுள்ளது.

    மேலும் இந்தாண்டு அதிகளவில் மழை பொழியும், பால் உற்பத்தி, கல்வி, வேளாண்மை அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது. 
    வேலூர் மாநகராட்சி பகுதியில் ஒரேநாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது. வேலூரில் 2 இடங்களில் நடந்த இலவச கொரோனா தடுப்பூசி முகாம்களை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.
    வேலூர்:

    வேலூர் மாவட்ட நிர்வாகம் மற்றும் வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் வேலூர் சத்துவாச்சாரி தஞ்சம்மாள் திருமண மண்டபத்தில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நேற்று நடைபெற்றது. வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன், சுகாதாரப்பணிகள் துணை இயக்குனர் மணிவண்ணன், மாநகராட்சி நலஅலுவலர் சித்ரசேனா ஆகியோர் முன்னிலை வகித்தனர். வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கி கொரோனா தடுப்பூசி போடும் முகாமை தொடங்கி வைத்தார்.

    பின்னர் அவர் கூறுகையில், வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க முன்களப்பணியாளர்கள், மருத்துவர்கள், செவிலியர்கள், வணிகர்சங்கத்தினர், காய்கறி வியாபாரிகள், தங்கும் விடுதி பணியாளர்கள், ஓட்டல் ஊழியர்கள் என்று பொதுமக்கள் தொடர்பில் உள்ள அனைத்து தரப்பினருக்கும் தடுப்பூசி செலுத்தும் பணி நடைபெற்று வருகிறது.

    அந்த வகையில் பஸ், லாரி, ஆட்டோ, தனியார் பள்ளி வாகன டிரைவர்கள், டிரைவிங் பயிற்சி பள்ளி ஊழியர்கள், கிளீனர்கள், பெட்ரோல் பங்க் ஊழியர்களுக்கு வருகிற 18-ந் தேதி வரை வேலூர், காட்பாடியில் 6 இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. இதில், அனைவரும் கலந்து கொண்டு கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என்றார்.

    இதேபோன்று ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலூர் மாவட்ட கிளை அலுவலகத்தில் நடந்த கொரோனா தடுப்பூசி முகாமை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார். இந்த முகாமில் வேலூர் மாநகராட்சி பகுதியில் உள்ள தேசிய, தனியார் வங்கிகளில் பணிபுரியும் 45 வயதுக்கு மேற்பட்ட 325 பேருக்கு தடுப்பூசி போடப்பட்டது.

    இந்த முகாம்களில், முன்னோடி வங்கி மேலாளர் ஜான் தியோடஸ்சியஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா வேலூர் மண்டல முதன்மை மேலாளர் குமார், மண்டல மேலாளர் சேது முருகதுரை, கிளை மேலாளர் பாலமுரளி, வேலூர் வட்டார மோட்டார் வாகன ஆய்வாளர்கள் சக்திவேல், கருணாநிதி, ராஜேஷ் கண்ணா, வேலூர் தாசில்தார் ரமேஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    வேலூர் மாநகராட்சி பகுதியில் 20 இடங்களில் இலவச கொரோனா தடுப்பூசி முகாம் நடைபெற்றது. அதைத்தவிர 10 நகர்புற சுகாதார நிலையங்களில் தடுப்பூசி போடப்பட்டது. அதன்படி 30 இடங்களில் நேற்று ஒரேநாளில் 3,300 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டது என்று மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர்.
    ஆற்காடு அருகே கணவன், மனைவி தற்கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    ஆற்காடு:

    ஆற்காடு அடுத்த கலவை மேல்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா (44). உமாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும்படி தனது கணவரிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு செல்வம் தன்னிடம் பணம் இல்லை என கூறி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இது சம்பந்தமாக கணவன், மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அறையில் தூங்கிக் கொண்டிருந்த உமா அங்கு இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வம், உமா தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என எண்ணி அதே ஊரில் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் இதுகுறித்து வாழபந்தல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்- மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கலவை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்துகொண்ட தம்பதிக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.
    ஆற்காடு, ஏப்.13-

    ஆற்காடு அடுத்த கலவை மேல்புதுப்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம் (வயது50). கூலித்தொழிலாளி. இவரது மனைவி உமா (44). உமாவுக்கு கடந்த சில மாதங்களாக உடல்நல குறைவு ஏற்பட்டுள்ளது. ஆஸ்பத்திரிக்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்கும்படி தனது கணவரிடம் அடிக்கடி வலியுறுத்தி வந்தார்.

    அதற்கு செல்வம் தன்னிடம் பணம் இல்லை என கூறி சிகிச்சைக்கு அழைத்துச் செல்லவில்லை என கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று இரவு இது சம்பந்தமாக கணவன் மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று காலை அறையில் தூங்கிக் கொண்டிருந்த உமா அங்கு இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.

    இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த செல்வம், உமா தற்கொலை செய்து கொண்டதால் போலீசார் தன்னை கைது செய்து விடுவார்களோ என எண்ணி அதே ஊரில் சாலையோரம் உள்ள மரத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இதனை கண்டு அதிர்ச்சி அடைந்த கிராமத்தினர் இதுகுறித்து வாழபந்தல் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து 2 பேரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆற்காடு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    கணவன்- மனைவி இருவரும் தூக்கிட்டு தற்கொலை செய்த சம்பவம் கலவை பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. தற்கொலை செய்துகொண்ட தம்பதிக்கு 2 மகள்கள் 1 மகன் உள்ளனர்.

    குடியாத்தம் அருகே 15 காட்டுயானைகள் தொடர் அட்டகாசம் செய்து வருகின்றன. அதில் மா, நெல், வாழையை சேதப்படுத்தின.
    குடியாத்தம்:

    குடியாத்தம் வனப்பகுதியில் காட்டு யானைகள் தொடர் அட்டகாசத்தில் ஈடுபட்டு வருகின்றன. நேற்று முன்தினம் இரவு 9 மணியளவில் கொட்டமிட்டா மலைப்பகுதி வழியாக 10 காட்டுயானைகள் கூட்டமாக வந்து வனப்பகுதியையொட்டி உள்ள மாந்தோப்புக்குள் புகுந்து மா மரக்கிளைகளை உடைத்து நாசம் செய்தன.

    அங்குள்ள சீதாபதி, ராஜகோபால், முருகன், லட்சுமணன், பத்மநாபன் ஆகியோரின் மாந்தோப்புக்குள் புகுந்து 50-க்கும் மேற்பட்ட மரக்கிளைகளை உடைத்து சேதப்படுத்தின. மாங்காய்கள், பிஞ்சுகளை உதிர்த்து சேதப்படுத்தின.

    இதுபற்றி விவசாயிகள், வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். வனத்துறையினர் காலதாமதமாக வந்ததால், விவசாயிகளே பட்டாசுகளை வெடித்து பலமணி நேரம் போராடி யானைகளை காட்டுக்குள் விரட்டி விட்டனர். வனத்துறையினர் இதுபோல் இருந்தால் விவசாயிகளின் நிலைமை பரிதாப நிலைக்கு தள்ளப்படும் என குற்றம் சாட்டினர்.

    குடியாத்தத்தை அடுத்த மோடிகுப்பத்தில் பொதுமக்கள் வசிக்கும் பகுதியில் இருந்து 200 மீட்டர் தொலைவில் உள்ள சீனிவாசனின் வாழைத்தோட்டத்தில் நள்ளிரவு 5 காட்டுயானைகள் குட்டியோடு வந்து 150-க்கும் மேற்பட்ட வாழை மரங்களை சேதப்படுத்தின. குலை தள்ளிய வாழைகள் அடுத்த மாதம் அறுவடை செய்யப்பட இருந்ததாகும். அதேபோல் விட்டல் என்பவரின் நெற்பயிரில் புகுந்து காட்டுயானைகள் சேதப்படுத்தின. வனத்துறையினரும், வருவாய்த்துறையினரும் சேதம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
    9 பவுன் நகை பறித்துக்கொண்ட மர்ம நபர்கள் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    வேலூர்:

    வேலூர் சலவன்பேட்டை லட்சுமிபுரத்தை சேர்ந்தவர் செல்வகுமார், வேலூர் மாவட்ட லாரி உரிமையாளர் சங்க தலைவர். இவரது மனைவி பாரதி (வயது 57). இவர் அப்பகுதியில் உள்ள கோவிலுக்கு சென்றுவிட்டு நேற்று காலை வீட்டுக்கு நடந்து வந்து கொண்டிருந்தார். அப்போது அவரை பின்தொடர்ந்து மோட்டார்சைக்கிளில் ஒருவர் சென்றார். யாரும் இல்லாத இடத்தில் அந்த நபர் திடீரென பாரதியின் கழுத்தில் இருந்த சுமார் 9 பவுன் சங்கிலியை பறித்துக்கொண்டு அங்கிருந்து தப்பி சென்றார்.

    இதுகுறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்யப்பட்டது. அதன்பேரில் அந்த பகுதியில் பதிவான கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அதில் பாரதியிடம், மோட்டார்சைக்கிளில் ஹெல்மெட் அணிந்து வந்த மர்மநபர் நகை பறித்தது பதிவாகி இருந்தது. அதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
    வட்டார போக்குவரத்து அலுவலகம் சார்பில் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் நடைபெற உள்ளது.
    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. 45 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது.

    அதன்படி வட்டார போக்குவரத்து அலுவலகம் மூலம் 6 இடங்களில் கொரோனா தடுப்பூசி சிறப்பு முகாம் அமைக்கப்படுகிறது. இதுதொடர்பான ஆலோசனை கூட்டம் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நேற்று நடந்தது. வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் தலைமை தாங்கினார். மோட்டார் வாகன ஆய்வாளர் கருணாநிதி முன்னிலை வகித்தார். கூட்டத்தில், தனியார் பஸ், லாரி உரிமையாளர்கள், ஆட்டோ சங்க நிர்வாகிகள், சுற்றுலா வாகன உரிமையாளர்கள், லோடு ஆட்டோ டிரைவர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின்னர் வட்டார போக்குவரத்து அலுவலர் செந்தில்வேலன் கூறியதாவது:-

    45 வயதுக்குமேற்பட்டவர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. இதற்காக மாநகரில் முதல்கட்டமாக சத்துவாச்சாரியில் உள்ள தஞ்சம்மாள் திருமண மண்டபம், காட்பாடி ஓடை பிள்ளையார்கோவில் பகுதியில் லாரி உரிமையாளர்கள் சங்க அலுவலகம், வேலூர் பழைய பஸ் நிலையம், புதிய பஸ் நிலையம் அருகே மற்றும் சி.எம்.சி. மருத்துவமனை அருகே உள்ள பெட்ரோல் பங்க்குகள், ஓட்டேரியில் உள்ள பிரியா மஹால் ஆகிய இடங்களில் சிறப்பு முகாம் நடத்தப்படும்.

    இந்த முகாம் நடைபெறுவது குறித்து ஆட்டோக்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. இந்த முகாம் நாளை முதல் தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும். இதன் மூலம் சுமார் 15 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி போட முடிவு செய்யப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.
    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமில்லை.
    காட்பாடி:

    வேலூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்க கடும் நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி மாநிலங்களில் இருந்து தமிழகத்திற்கு வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயமில்லை. இதனை தவிர மற்ற வெளிமாநிலங்களில் இருந்து வருபவர்களுக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

    இதனைத்தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள காட்பாடி கிறிஸ்டியான்பேட்டை, சேர்க்காடு மற்றும் ஆந்திர எல்லையோர சோதனைச் சாவடியில் போலீசார் மற்றும் சுகாதாரத் துறையினர் நேற்று காலை முதல் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.

    ஆந்திரா தவிர மற்ற மாநிலங்களில் இருந்து இ-பாஸ் அனுமதி பெற்று வரும் வாகனங்கள் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படுகிறது.

    வேலூர் மற்றும் ஆந்திர மாநிலம் சித்தூர், திருப்பதி இடையே வழக்கம் போல பஸ் போக்குவரத்து இயக்கப்படுகிறது. ஆந்திர மாநில வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன.

    ஆந்திராவில் இருந்து வருபவர்களுக்கு மாவட்ட எல்லையான காட்பாடி கிறிஸ்டியான்பேட்டையில் சுகாதாரத்துறையினர் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு உடல் வெப்ப நிலையை பரிசோதனை செய்கின்றனர். எங்கிருந்து வருகிறார்கள் என முகவரி பதிவு செய்யப்படுகிறது. அனைவரும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும் என அறிவுறுத்தப்படுகிறது. அனைவருக்கும் கிறிஸ்டியான்பேட்டையில் கொரோனா பரிசோதனைக்காக சளி மாதிரிகள் எடுக்கப்பட்டது.

    பஸ்களில் பயணம் செய்பவர்களுக்கும் கொரோனா பரிசோதனை செய்வதற்காக சளி மாதிரி எடுக்கப்பட்டன. அவர்களுடைய முழு விபரமும் சேகரிக்கப்படுகின்றன.

    மேலும் முக கவசம் அணியாதவர்களுக்கு போலீசார் ரூ.200 அபராதம் விதித்தனர்
    பள்ளிகொண்டா அருகே தனியார் பஸ் மோதி பெண் பரிதாபமாக இறந்தார். கணவர் படுகாயம் அடைந்தார்.
    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் எழில் நகர் பகுதியை சேர்ந்தவர் அன்பரசு. இவரது மகன் முரளி (வயது 38). வெளிநாட்டில் வேலை செய்து வருகிறார். விடுமுறையில் வந்த இவர் தன் மனைவி அனிதாவை அழைத்துக் கொண்டு நேற்று காலை குடியாத்தத்தில் இருந்து மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலை மாவட்டம் சந்தவாசலில் இருக்கும் உறவினரைப் பார்க்க சென்றார்.

    மோட்டார் சைக்கிளை அனிதா ஓட்டிச் சென்றார் பள்ளிகொண்டா அருகே கந்தனேரி தேசிய நெடுஞ்சாலையை கடக்கும்போது வேலூரில் இருந்து திருப்பத்தூர் நோக்கி சென்ற தனியார் பஸ் இவர்கள் சென்ற மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

    இந்த விபத்தில் கணவன்-மனைவி 2பேரும் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்ததும் பள்ளிகொண்டா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று படுகாயம் அடைந்தவர்களை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அனிதாவை பரிசோதனை செய்த டாக்டர்கள் வரும் வழியிலேயே இறந்துவிட்டதாக கூறினர்.

    முரளிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இறந்த அனிதாவிற்கு 11 மாத குழந்தை உள்ளது.

    இந்த விபத்து குறித்து முரளியின் தந்தை அன்பரசு பள்ளிகொண்டா போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் கண்ணன் வழக்குப்பதிவு செய்து தனியார் பஸ் டிரைவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்.

    இதுகுறித்து அந்தப் பகுதியைச் சேர்ந்தவர்கள் கூறுகையில், இந்த பகுதியில் அடிக்கடி விபத்துகள் நடந்து வருகிறது. விபத்தினை தடுக்க போலீசார் சிவப்பு விளக்குகள் மற்றும் தடுப்பு வேலிகளை அமைத்தும் வாகன ஓட்டிகள் சாலை விதிகளை மதிக்காமல் அதிவேகமாக வாகனங்களை ஓட்டி வருகின்றனர். எனவே, இந்தப் பகுதியில் சுழற்சி முறையில் போலீசாரை பாதுகாப்பு பணியில் நிறுத்த வேண்டும் என்றனர்.
    ×