search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "இரட்டைக்கொலை"

    • இவர்கள் குடும்பம் பால்டிமோரில் கடந்த 9 வருடங்களாக வாழ்ந்து வருகிறது
    • அவர்கள் மூவர் உடலிலும் குண்டு பாய்ந்த அடையாளங்கள் இருந்தது

    அமெரிக்காவின் மத்திய அட்லாண்டிக் பகுதியில் உள்ள மாநிலம் மேரிலேண்ட் (Maryland).

    இங்குள்ள பால்டிமோர் (Baltimore) நகரத்தில் வசித்து வந்த இந்தியர், கர்நாடகாவின் தாவண்கரே மாவட்டத்தை சேர்ந்த யோகேஷ் (37). இவரது மனைவி பிரதீபா (35). இவர்களது ஒரே மகன் யாஷ் (6).

    கணவன், மனைவி இருவரும் பொறியாளர்கள். இவர்கள் பால்டிமோரில் கடந்த 9 வருடங்களாக வாழ்ந்து வருகின்றனர்.

    யோகேஷின் தந்தை பல வருடங்களுக்கு முன் காலமாகிவிட்டதால், அவரின் தாய் மட்டும் தனியாக தாவண்கரேயில் வசித்து வருகிறார்.

    அமெரிக்காவில் நடைபெறும் வழக்கமான ஒரு ரோந்து ஆய்வில் நேற்று முன்தினம் இவர்கள் வீட்டிற்கு காவல்துறையினர் சென்றனர். அப்போது அவர்கள் மூவரும் உயிரிழந்து கிடந்தது தெரியவந்தது.

    அவர்கள் மூவர் உடலிலும் துப்பாக்குச் குண்டு பாய்ந்ததற்கான அடையாளங்கள் இருந்தது.

    முதல் கட்ட விசாரணையில் யோகேஷ், தனது மனைவி மற்றும் மகனை சுட்டுக்கொன்று விட்டு, தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்பது தெரியவந்துள்ளது.

    இந்தியாவில் உள்ள அவரது தாயாருக்கும், உறவினர்களுக்கும் இதுகுறித்து தகவல் தெரிவிக்கப்பட்டது. இறந்தவர்களின் உடல்களை இந்தியாவிற்கு கொண்டு வரும் முயற்சியில் அவர்கள் ஈடுபட்டுள்ளனர்.

    இதற்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாக கூறியுள்ள பால்டிமோர் காவல்துறை, இந்த சம்பவத்தை இரட்டை கொலை மற்றும் தற்கொலை வழக்காக தீவிரமாக விசாரித்து வருகிறது.

    யோகேஷ் இப்படிப்பட்ட முடிவை ஏன் எடுத்தார் என்பதற்கான காரணம் இதுவரை அறிவிக்கப்படவில்லை.

    • தேவகோட்டையில் இரட்டைக்கொலை சம்பவம் தொடர்பாக 48 இடங்களில் 140 கண்காணிப்பு கேமரா அமைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
    • அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலையில் தாய்-மகளை கொலை செய்து 60 பவுன் தங்க நகைகளை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். இந்த கொலையில் இதுவரை குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.

    இந்த நிலையில் தேவ கோட்டையில் பாதுகாப்பை பலப்படுத்தவும், குற்றவாளி களை கண்காணிக்கவும் போலீசார் கண்காணிப்பு காமிராக்கள் அமைக்கும்படி வியாபாரிகளுக்கு அறிவுரை வழங்கினர்.

    இதைத்தொடர்ந்து தேவகோட்டையில் 48 இட ங்களில் 140 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க அறிவுறுத்தப் பட்டது.

    இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு திருப்பத்தூர் சாலையில் அடுத்தடுத்து 3 கடைகளில் பூட்டை உடைத்து கொ ள்ளை சம்பவம் நடந்தது. இந்த திருட்டு சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்தனர்.

    இதைத்தொடர்ந்து பொதுமக்களின் அச்சத்தை போக்கும் வகையில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வராஜ் உத்தரவின்பேரில், கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்டாலின் ஆலோசனைபடி டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன், நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தலைமையில் துணைத்தலைவர் ரமேஷ் முன்னிலையில், வர்த்தக சங்க தலைவர் காஜா ஏற்பாட்டில் பொதுமக்கள் பாதுகாப்பு குறித்த கூட்டம் நடந்தது.

    கூட்டத்தில் தற்போது நகரில் உள்ள மக்கள் தொகைக்கு ஏற்ப கூடுதல் போலீசார் நியமிக்கப்பட வில்லை. இதனால் குற்ற சம்பவங்களை தடுக்க முடியவில்லை என்றும், எனவே நகர் பகுதிகளில் முதல் கட்டமாக 41 இடங்களில் 140 சி.சி.டி.வி. கேமராக்கள் பொருத்த வேண்டும் என்று இன்ஸ்பெ க்டர் சரவணன் கேட்டுக் கொண்டார். அதன்படி காமிரா அமைக்கும் பணியை நகர்மன்ற தலைவர் சுந்தரலிங்கம் தொடங்கி வைத்தார்.

    • இரட்டைக்கொலை வழக்கில் துப்புதுலக்காததை கண்டித்து தேவகோட்டையில் நாளை உண்ணாவிரதம்-கடையடைப்பு நடைபெறும்.
    • இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள், வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    தேவகோட்டை

    சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்ணங்கோட்டை கிராமத்தில் கடந்த மாதம் 11-ந் தேதி அதிகாலை நேரத்தில் கனகம், அவரது மகள் வேலுமதி, பேரன் மூவரசு ஆகிய 3 பேரை அரிவாள் மற்றும் பயங்கர ஆயுதங்களால் வெட்டி விட்டு கனகம் தனது பேத்தி திருமணத்திற்காக வாங்கி வைத்திருந்த 60 பவுன் நகைகளை மர்ம கும்பல் கொள்ளையடித்து சென்றது.

    இந்த கொள்ளை சம்பவத்தில் அரிவாளால் வெட்டப்பட்ட வேலுமதி சம்பவ இடத்திலேயே இறந்தார். கனகம் மருத்துவ மனையில் சிகிச்சை பல னின்றி இறந்தார். மேலும் மூவரசு தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    இந்த இரட்டை கொலை மற்றும் கொள்ளை சம்பவம் கண்ணங்கோட்டை கிராம மக்களை அச்சத்தில் ஆழ்த்தி உள்ளது. கிராம மக்கள் நகை கொள்ளைபோனதால் கனகம் பேத்தியின் திருமணம் நின்று விடக்கூடாது. அவரது குடும்பத்திற்கு தேவையான உதவிகளை செய்ய வேண்டும் என்று முடிவு செய்துள்ளனர்.

    மேலும் கொலை மற்றும் கொள்ளை சம்பவத்தில் 25 நாட்களாக போலீசார் துப்பு துலக்காததால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். இதைத்தொடர்ந்து கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதை வலி யுறுத்தி நாளை (7-ந்தேதி) அடையாள உண்ணாவிரதம் மற்றும் கடையடைப்பு போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளனர்.

    இந்த போராட்டத்திற்கு ஆதரவு திரட்டும் வகையில் பொதுமக்கள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.

    இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட குற்றவாளிகளை கைது செய்ய காரைக்குடி டி.எஸ்.பி. ஸ்டாலின் தலைமையில் சிறப்பு தனிப்படை போலீசார் கொள்ளையர்களை பிடிக்க தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

    • இரட்டைக்கொலை குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
    • இரட்டைக்கொலை சம்பவத்தால் தடங்கம் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    விருதுநகர்:

    விருதுநகர் அருகே உள்ள தடங்கம் கிராமத்தை சேர்ந்தவர் கண்ணன். விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தொழிற்சங்க பிரிவு மாவட்ட துணை அமைப்பாளராக உள்ளார். இவரது மனைவி வச்சக்காரப்பட்டி பஞ்சாயத்தில் துப்புரவு பணியாளராக பணிபுரிந்து வருகிறார்.

    கண்ணனுக்கு 3 மகன்கள் உள்ளனர். மூத்த மகன் சுபபிரமணியன் திருமணமாகி தனது மனைவியுடன் தனியாக வாழ்ந்து வருகிறார். 2-வது மகன் ஆறுமுகம் கடந்த 8 ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்து கொண்டார்.

    அவரது 3-வது மகன் கே.சந்தனக்குமார் (வயது23) கோவையில் கட்டிட தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். அவ்வப்போது ஊருக்கு வந்து செல்வார். அதேபோல் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருக்கிறார்.

    சந்தனக்குமாருக்கும் அதே ஊரைச் சேர்ந்த பொத்தையன் என்பவரின் மகன் பி.மணிகண்டனுக்கும் முன்விரோதம் இருந்து வந்துள்ளது. தடங்கம் கிராமத்தில் கடந்த சில மாதங்களுக்கு ஆடுகள் திருட்டு போயுள்ளன. அதற்கு காரணம் சந்தனக்குமார் என ஊர்க்காரர்களிடம் பி.மணிகண்டன் கூறியிருக்கிறார்.

    இது தொடர்பாக அவர்களுக்கிடையே முன்விரோதம் இருந்துள்ளது. கடந்த 1 மாதத்துக்கு முன்பு சந்தனக்குமார் மற்றும் அவரது நண்பர் கே.மணிகண்டன் ஆகிய இருவரும் தங்களின் கிராமத்தில் உள்ள கோவில் கொடிமரம் அருகே நின்று கொண்டிருந்தனர்.

    அந்த நேரத்தில் அங்கு பி.மணிகண்டன் வந்துள்ளார். அப்போது ஏற்கனவே இருந்து வந்த முன்விரோதம் காரணமாக அவர்களுக்கிடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்ட அவர்கள், ஒருவரை ஒருவரை தாக்கி கைகலப்பிலும் ஈடுபட்டிருக்கின்றனர்.

    இந்த சம்பவத்தை அடுத்து அவர்களுக்குள் மேலும் விரோதம் அதிகரித்துள்ளது. இந்த நிலையில் கடந்த 3 நாட்களுக்கு முன்பு ஊருக்கு வந்திருந்த சந்தனக்குமார் தனது நண்பரான அதே ஊரைச் சேர்ந்த குமார் என்பவரின் மகன் கே.மணிகண்டன் (19) என்பவருடன் சுற்றித்திரிந்துள்ளார்.

    நேற்று இரவு அவர்கள் இருவரும் வீட்டில் இருந்து வெளியே சென்றிருக்கின்றனர். இந்நிலையில் அவர்கள் இருவரும் அங்குள்ள கண்மாய் பகுதியில் ரத்த வெள்ளத்தில் பிணமாக கிடந்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டனின் குடும்பத்தினர், உறவினர்கள், கிராம மக்கள் சம்பவ இடத்துக்கு திரண்டனர். அங்கு வெட்டி படுகொலை செய்யப்பட்டு பிணமாக கிடந்த இருவரது உடலையும் பார்த்து கதறி அழுதனர்.

    இந்த இரட்டைக் கொலை குறித்து வச்சக்காரப்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டன் ஆகிய இருவரின் உடலையும் மீட்டு பிரதே பரிசோதனைக்காக விருதுநகர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    சந்தனக்குமார் மற்றும் கே.மணிகண்டனை வெட்டி படுகொைல செயதவர்கள் யார்? என்று போலீசார் விசாரணை நடத்தினர். அப்போது முன் விரோதம் காரணமாக தடங்கம் கிராமத்தைச் சேர்ந்த பி.மணிகண்டன் மற்றும் அவரது நண்பர்கள் சேர்ந்து இருவரையும் வெட்டிக் கொன்றது தெரிய வந்தது.

    இதையடுத்து அவர்கள் மீது போலீசார் வழக்குப்பதிந்து தேடினர். ஆனால் பி.மணிகண்டன் உள்ளிட்டோர் தலைமறைவாகிவிட்டனர். அவர்களை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. தனிப்படை போலீசார் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த இரட்டைக்கொலை சம்பவத்தால் தடங்கம் கிராமத்தில் பரபரப்பான சூழல் நிலவி வருகிறது. இதனால் அங்கு ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

    ×