என் மலர்
வேலூர்
- 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
- பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
மாவட்ட வருவாய் அலுவலர் மாலதி உதவி கலெக்டர் கவிதா உள்ளிட்ட அதிகாரிகள் பொதுமக்களிடமிருந்து மனுக்களை பெற்றுக் கொண்டனர்.
கே.வி.குப்பம் அடுத்த மகமது புரத்தை சேர்ந்தவர்கள் ஸ்ரீதர், முரளி, உத்திரகுமார்.
இவர்களது 3 குடும்பத்தை சேர்ந்த ஆண்கள் பெண்கள் குழந்தைகள் உட்பட 15 பேர் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தனர்.
அவர்கள் திடீரென தயாராக கொண்டு வந்த மண் எண்ணெய் உடல்களில் ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்றனர்.
பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு இருந்த போலீசார் அவர்களிடம் இருந்த மண்எண்ணெய் கேனை பறித்து அவர்கள் மீது தண்ணீரை ஊற்றினர். இதில் குழந்தைகளுக்கு உடல் மற்றும் கண் எரிச்சல் ஏற்பட்டது.
இதையடுத்து 108 ஆம்புலன்ஸ் ஊழியர்கள் குழந்தைகளுக்கு முதல் உதவி சிகிச்சை அளித்தனர்.
அவர்கள் கலெக்டரிடம் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-
எங்களுக்கு அதே பகுதியில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது.
கிராம குளத்திற்கும் எங்களது நிலத்திற்கு செல்ல பொது வழி உள்ளது. பொது வழியை முருகம்பட்டு முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் ஒருவர் ஆக்கிரமிப்பு செய்து மண்ணை கொட்டி உள்ளார். விவசாய நிலத்திற்கு செல்லும் போது ஆக்கிரமிப்பு செய்துள்ள நபர் மிரட்டல் விடுத்துள்ளார்.
மேலும் வெளியூரிலிருந்து ஆட்களை அழைத்து வந்து தாக்க முயற்சி செய்கிறார்.
இது குறித்து பலமுறை மனு அளித்தும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.
இவ்வாறு அதில் கூறியுள்ளனர். இது தொடர்பாக அவர்களிடம் அதிகாரிகள் விசாரணை நடத்தினர்.
- ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர்.
- 2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
வேலூர்:
ஆந்திராவில இருந்து ரெயில் மற்றும் பஸ்கள் மற்றும் வாகனங்கள் மூலம் கஞ்சா கடத்தும் சம்பவங்கள் அதிகரித்துள்ளது. தனிப்படைகள் அமைத்து போலீசார் சோதனை நடத்தியும், அவர்கள் ஒரு சில நேரங்களில் தப்பிச் செல்கின்றனர்.
அதன்படி வேலூர் புதிய மற்றும் பழைய பஸ் நிலையங்கள், காட்பாடி ரெயில் நிலையம் உள்ளிட்ட இடங்களில் அவ்வப்போது வாகன சோதனையில் ஈடுபடுகின்றனர்.
இந்த நிலையில் தமிழக-ஆந்திர எல்லையான வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த கிறிஸ்டியான்பேட்டை சோதனை சாவடி அருகில் போதைப்பொருள் தடுப்பு பிரிவு போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர்.
அப்போது ஆந்திராவில் இருந்து வந்த லாரியை மடக்கி சோதனை செய்தனர். இதில் சந்தேகிக்கும் வகையில் பிளாஸ்டிக் காகிதம் சுற்றப்பட்ட பண்டல்கள் இருந்தன.
அதனைப் பிரித்து பார்த்தபோது அதில் சுமார் 100 கிலோ கஞ்சா இருந்தது. லாரியில் வந்தவர்களை பிடித்து விசாரித்தனர்.
அவர்கள் ஈரோடு பகுதியை சேர்ந்த சதாசிவம் (வயது 30), திருச்சியை சேர்ந்த பாண்டீஸ்வரன் (25) என்பதும், ஆந்திராவில் இருந்து கஞ்சா கடத்தியதும் தெரிந்தது.
2 பேரையும் கைது செய்த போலீசார், அவர்களிட மிருந்து கஞ்சா பொட்டலங்களை லாரியுடன் பறிமுதல் செய்தனர்.
- போக்குவரத்து நெரிசல்- பொதுமக்கள் அவதி
- அதிகபட்சமாக 88 மில்லி மீட்டர் மழை பதிவு
வேலூர்:
வேலூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்து வருகிறது. இந்த நிலையில் நேற்று பகலில் வெயில் சுட்டெரித்தது.
மாலை 4 மணியளவில் வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது. அதைத்தொடர்ந்து கருமேகங்கள் திரண்டு இருள் சூழ்ந்தது. மாலை 5 மணியளவில் திடீரென மழை பெய்ய தொடங்கியது.
முதலில் மிதமாக பெய்த மழை நேரம் செல்ல செல்ல கனமழை கொட்டித்தீர்த்தது. அப்போது இடி, மின்னல், காற்றுடன் சுமார் 2 மணி நேரம் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அதன்பிறகு விடியும் வரை சீராக மழை பெய்தது.
வேலூரில் நேற்று மாலை பெய்த மழையால் தெருக்கள் மற்றும் சாலையோரங்களில் மழைநீர் ஆறுபோல் பெருக்கெடுத்து ஓடியது.
கிரீன் சர்க்கிள் பகுதியில் நாலாபுறமும் மழை வெள்ளம் சூழ்ந்தது.
மழைநீரை கடந்து செல்ல வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைந்தனர். இதனால் கிரீன் சர்கிள் பகுதியில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தகவல் அறிந்த 10-க்கும் மேற்பட்ட போலீசார் விரைந்து சென்று போக்குவரத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனர்.
அதேபோல் திருமலை-திருப்பதி தேவஸ்தான தகவல் மையம், காமராஜர் சிலை அருகே, ஆற்காடு சாலையில் உள்ள அம்பேத்கர் சிலை அருகே உள்பட பல்வேறு இடங்களில் மழைநீர் குட்டைபோல் தேங்கியது. இதனால் வாகன ஓட்டிகள் கடும் அவதிப்பட்டனர்.
மழைக்காலங்களில் சாலைகளில் மழைநீர் தேங்குவது தொடர் கதையாக உள்ளது. சிறிய மழைக்கே வேலூரில் ஆங்காங்கே மழை தேங்கி விடுகிறது.
தொடர் பருவ மழை பெய்யும் காலங்களில் பொதுமக்கள் அவதி அடைவது வாடிக்கையாகிவிட்டது. எனவே சாலைகளில் மழைநீர் தேங்காமல் இருக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
வேலூர் மாவட்டத்தில் பேரணாம்பட்டில் அதிகபட்சமாக 88 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருந்தது. அதேபோல் வேலூரில் 39, காட்பாடியில் 62, மேல் ஆலத்தூரில் 41.10, கே.வி. குப்பத்தில் 48.20, குடியாத்தத்தில் 85, ஒடுகத்தூரில் 73 மில்லி மீட்டர் மழை பதிவானது.
- போக்குவரத்து நெரிசலை தடுக்க போலீசார் நடவடிக்கை
- மக்கள் கூடும் முக்கிய இடங்களில் கண்காணிப்பு
வேலூர்:
தீபாவளி பண்டிகை வருகிற 12-ந் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளிக்கு இன்னும் ஒரு வாரமே உள்ள நிலையில் வேலூர் கடை வீதியில் பொதுமக்கள் தற்போதே அதிக அளவில் குவிந்து வருகின்றனர்.
குறிப்பாக ஜவுளிக்கடையில் தங்களுக்க பிடித்த ஆடைகளை தேர்வு செய்து வாங்கி செல்கின்றனர். இதனால் வேலூர் அண்ணா சாலை, பி.எஸ்.எஸ். கோவில் தெரு, லாங்குபஜார், நேதாஜி மார்க்கெட் உள்ளிட்ட இடங்களில் கூட்டம் அலைமோதுகிறது.
ஜவுளி கடைகளில் பெண்களுக்கு தேவையான சேலை, சுடிதார், ஆண்களுக்கான பேண்ட், சர்ட், குழந்தைகளுக்கான ஆடை, வேஷ்டி, துண்டு, டவல், பனியன் உள்ளிட்ட வைகள் விற்பனைக்கு குவிக்கப்பட்டுள்ளது.
வேலூர் மார்க்கெட்டில் மளிகை மற்றும் பூஜை பொருட்கள் வாங்கவும் கூட்டம் அலைமோதுகிறது.
வேலூர் மாநகரின் முக்கிய இடங்களில் போக்குவரத்து நெரிசலை சீர்செய்யவும், திருட்டு சம்பவங்களை தடுக்கவும் மாநகர போலீசார் அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.
இதற்காக மக்கள் கூடும் முக்கிய இடங்களில் தீவிரமாக கண்காணி க்கப்பட்டு வருகிறது.
- பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்
- போலீசார் வழக்கு பதிவு விசாரணை
வேலூர்:
வேலூர், கஸ்பா ஆர்.என். பாளையத்தை சேர்ந்தவர் சதாம்பாஷா ( வயது 32), டிரைவர். இவர் இன்று அதிகாலை 3 மணி அளவில் சத்துவாச்சாரி அடுத்த ரங்காபுரம் சர்வீஸ் சாலையில் மொபட்டில் சென்று கொண்டிருந்தார்.
பெட்ரோல் பங்க் அருகே சர்வீஸ் சாலையிலிருந்து நெடுஞ்சாலைக்கு செல்ல முயன்றார். அப்போது பின்னால் வந்த லாரி எதிர்பாராத விதமாக சதாம்பாஷா ஓட்டிச் சென்ற மொபட் மீது திடீரென மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்ட வாலிபர் பலத்த காயம் அடைந்து ரத்த வெள்ளத்தில் துடி துடித்தார்.
அந்த வழியாக சென்றவர்கள் படுகாயம் அடைந்த சதாம்பாஷாவை மீட்டு சிகிச்சைக்காக 108 ஆம்புலன்ஸ் மூலம் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வழியிலேயே சதாம்பாஷா பரிதாபமாக இறந்தார்.
போலீசார் வாலிபர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 1981-ல் தண்ணீருக்காக 25 அடி ஆழ கிணறு தோண்டப்பட்டது
- 10 அடி ஆழத்தில் நைலான் வலையை அமைத்து கட்டி வைத்தனர்
வேலூர்:
வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி, வெளியூர்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வருகை தந்து தரிசனம் செய்து செல்கின்றனர்.
இக்கோவிலில் தண்ணீர் இல்லாததால், கோவிலின் உள்ளே 1981-ல் தண்ணீருக்காக 25 அடி ஆழ கிணறு தோண்டப்பட்டது.
மழைக் காலங்களில் இந்த கிணற்றில் தண்ணீர் நிரம்பியது. கோவிலுக்கு வரும் பக்தர்கள் கோவிலை சுற்றி வந்து பின்னர் அங்குள்ள கிணற்றில் சில்லரை நாணயங்கள் மற்றும் ரூபாய் நோட்டுகளை அதில் போட்டு வந்தனர்.
பல ஆண்டுகளாக பக்தர்களால் கிணற்றில் போடப்பட்ட நாணயங்கள் நாளடைவில் குவிந்தன. கிணற்றில் இருந்து நாணய ங்களை எடுப்பதற்காக அதிகாரிகள் பலமுறை முயன்றனர். கிணற்றில் சேரும் சகதியுமாக இருந்ததால் நாணயங்களை எடுக்க முடியாமல் போனது. மேலும் கிணற்றில் போடப்படும் நாணயங்கள் கிணற்றின் உள்ளே விழாமல் இருப்பதற்காக 10 அடி ஆழத்தில் நைலான் வலையை அமைத்து கட்டி வைத்தனர்.
இந்த நிலையில் கிணற்றில் இருந்து நாணயங்களை எடுக்க முடிவு செய்தனர். நேற்று முன்தினம் கிணற்றில் இருந்து தண்ணீரை வெளியேற்றினர்.
பின்னர் கிணற்றில் இறங்கி நாணயங்களை சேகரித்தனர். நாணயங்கள் கிணற்றில் சுவற்றிலும், சேற்றிலும் சிக்கி இருந்தது.
அதனை ஊழியர்கள் எடுத்தனர். அந்த சில்லறை காசுகளை எண்ணிய போது ரூ.1 லட்சத்திற்கு மேல் இருந்ததாக கூறப்படுகிறது.
- மின்கம்பி அறுந்து கொட்டகை மீது விழுந்தது
- போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த அப்புகல் கிராமம், செட்டியார் தெருவை சேர்ந்த வெங்கடேசன் (வயது 40), விவசாயி. இவர் பசுமாடு ஒன்றை வளர்த்து வந்தார்.
பசு மாட்டை கட்டுவதற்காக இரும்பு தகர சீட்டை கொண்டு கொட்ட கை அமைத்துள்ளார்.
இந்நிலையில் நேற்று இரவு அணைக்கட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. அப்போது வெங்கடேசன் பாட்டை கொட்டகைக்கு அழைத்துச் சென்று கட்டி வைத்தார்.
அப்போது எதிர்பாராத விதமாக கொட்டகையின் மேல் சென்ற மின்சார கம்பி அறுந்து மாட்டு கொட்டகையின் மீது விழுந்தது. இன்று காலை வழக்கம் போல் வெங்கடேசன் பால் கறக்க கொட்டகைக்கு சென்றார். அப்போது பசு மாடு இறந்த கிடந்தது. அதிர்ச்சியடைந்த வெங்கடேசன் கொட்ட கையில் பொருத்தப்பட்டிருந்த இரும்பு கம்பியை பிடித்தார்.
அப்போது வெங்க டேசனையும் மின்சாரம் தாக்கியது.
இது தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்த அவரை, அந்த பகுதி மக்கள் மீட்டு சிகிச்சை க்காக அணை க்கட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து சென்றனர்.
அங்கு பரிசோதித்த டாக்டர்கள் வெங்கடேசன் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து அணைக்கட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர் தொடங்கி வைத்தார்
- பாம்பு கடித்து சில மாதங்களுக்கு முன்பு 2 பேர் உயிரிழந்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு வட்டத்துக்கு உட்பட்ட பீஞ்சமந்தை மலை கிராமத்தில் பாம்பு கடித்து சில மாதங்களுக்கு முன்பு 2 பேர் உயிரிழந்தனர்.
சாலை வசதி இல்லாத மலை கிராமத்தில் இருந்து குறிப்பிட்ட நேரத்தில் சிகிச்சைக்கு செல்ல முடியாத நிலையில் இருவரும் உயிரிழந்ததாக குற்றம் சாட்டுகள் எழுந்தது.
இதனை தொடர்ந்து, பீஞ்சமந்தை மலை கிராமத்தி ற்காக பிரத்தியோக ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வசதி கொண்ட வாகனத்தை ஏற்பாடு செய்யப்பட்டு, அந்த வாகனத்தை மலை கிராம மக்கள் பயன்படுத்தி கொள்ளலாம் என அறிவுரை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் மலை கிராம மக்களுக்காக பிரத்யேகமாக வடிவமைக்கப்பட்ட ஆம்புலன்ஸ் வாகனம் நேற்று முதல் பயன்பாட்டுக்கு கொண்டுவரப்பட்டது.
இதனை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் கொடியசைத்து தொடங்கிவைத்தார். வேலூர் கோட்டை அருகில் இருந்து இந்த வாகனம் தொடங்கி வைக்கப்பட்டது.
இந்த பிரத்யேக ஜீப் வடிவிலான ஆம்புலன்ஸ் வாகனம் மலை கிராம சாலைகளில் பயணிக்கும் வகையில் அதிக உந்து விசையுடன் கூடிய வாகனமாக தேர்வு செய்யப்பட்டுள்ளது.
மேலும், அந்த வாகனத்தில் உயிர்காக்கும் முதலுதவி சிகிச்சைகள் அளிக்கும்வசதிகளுடனும், மருத்துவ உதவி தேவைப்படும் நபருக்கான படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த வாகனம் பீஞ்சமந்தை மலை கிராமத்தில் முழு நேரமும் நிறுத்தி வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சியில் எம்.எல்.ஏ.க்கள் ஏ.பி. நந்தகுமார், ப.கார்த்திகேயன், அமலு விஜயன், வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதா ஆனந்தகுமார், துணை மேயர் சுனில்குமார், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு, சுகாதாரப் பணிகள் துணை இயக்குநர் பானுமதி, வேலூர் சப் -கலெக்டர் கவிதா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- கோவை உயிரியல் பூங்கா கொண்டுவரப்பட்டது
- ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்பட்டன
வேலுார்:
கோவை வ.உ.சி. மைதானம் அருகில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்தது. அங்கு முதலை, புள்ளிமான், குரங்கு, கிளி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டன.
அந்த பூங்காவை கோவை மாநகராட்சி நிர்வகித்து வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உயிரினங்களை பார்த்து ரசித்து சென்றனர்.
இந்நிலையில், பூங்காவை பராமரிக்க போதிய இடவசதி இல்லை எனக் கூறி, பூங்காவுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்துசெய்தது.
அதன்பிறகு பூங்காவுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்த உயிரினங்கள் வேறு பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து 2 முதலை, 3 நட்சத்திர ஆமை, 4 சாரைப்பாம்பு ஆகிய 9 உயிரினங்கள், சென்னை வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் மூலமாக, மினிவேனில் எடுத்துவந்து, வேலுார் மாவட்டம் அமிர்தி சிறு வனஉயிரின பூங்காவில் வனச்சரகர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்ப ட்டன.
- மேயர் சுஜாதா ஆய்வு
- முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்
வேலூர்:
வேலூர் சத்துவாச்சாரி 21-வது வார்டு பூங்கா நகர் பகுதியில் ரூ.20 லட்சம் செலவில் தார் சாலை அமைக்கும் பணி நடந்து வருகிறது.
தார் சாலை அமைக்கும் பணியை மேயர் சுஜாதா இன்று பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது குறிப்பிட்ட உயரத்தில் தரமாக சாலை அமைக்கப்படுகிறதா என அதிகாரிகளிடம் கேட்டறிந்தார்.
இ.பி நகர், ஸ்ரீராம் நகர் நேதாஜி போஸ் சாலை உள்ளிட்ட பகுதிகளில் நாளை அமைப்பதற்கான முன்னேற்பாடு பணிகளை பார்வையிட்டார்.
நிகழ்ச்சியில் மாநகராட்சி வார்டு கவுன்சிலர் சர்க்கரை மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர்.
- கணவர் உட்பட 5 பேர் மீது வழக்கு
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் மாவட்டம், கே.வி.குப்பம் அடுத்த முடினாம்பட்டை சேர்ந்தவர் ஐஸ்வர்யா (வயது 23).. இவருக்கும் கீழ்மொணவுரை சேர்ந்த அருண்குமார் (33) என்றவர்க்கும் திருமணம் நடந்தது திருமணத்தின்போது 12 சவரன் நகையை ஐஸ்வர்யாவின் பெற்றோர் வரதட்சணையாக கொடுத்தனர்.
இந்த நிலையில் அருண்குமார் மேலும் கூடுதல் வரதட்சணை கேட்டு ஐஸ்வர்யாவை துன்புறுத்தி வந்ததாக கூறப்படுகிறது.
மேலும் அருண்குமாருக்கு வேறு ஒரு பெண்ணுடன் தொடர்பு உள்ளதை ஐஸ்வர்யா தட்டி கேட்டுள்ளார். அப்போழ அருண்குமார் மற்றும் அவரது தந்தை அசோகன் (60), தாய் வசந்தா (50), அகிலா (32), ஆஷா (22) ஆகியோர் ஐஸ்வர்யாவை ஆபாசமாக திட்டி உள்ளனர்.
இது குறித்து ஐஸ்வர்யா வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மணல் கடத்தலை தடுத்ததால் ஆத்திரம்
- போலீஸ் குவிப்பு- பதட்டம்
வேலூர்:
வேலூர் மாவட்டம், குடியாத்தம் அடுத்த சின்னதோட்டாளம் கிராமத்தில் இரவு நேரங்களில் மாட்டு வண்டிகளில் மணல் கடத்துவதாக மேல்பட்டி தனிப்பிரிவு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் மணவாளனுக்கு தகவல் கிடைத்தது.
அதன்பேரில் நேற்று இரவு மணவாளன் அந்த கிராமத்தில் சோதனை மேற்கொண்டார்.
அப்போது அதே பகுதியை சேர்ந்த 2 பேர் மாட்டு வண்டிகள் மூலம் மணல் கடத்தி வந்தனர். அவர்களை மணவாளன் தடுத்து நிறுத்த முயற்சி செய்தார்.
கடத்தல்காரர்கள் சப்- இன்ஸ்பெக்டர் மணவாளனை சரமாரியாக தாக்கியதோடு, அவர் மீது மாட்டு வண்டிகளை ஏற்றி கொலை செய்ய முயற்சி செய்தனர்.
இதில் மணவாளன் படுகாயம் அடைந்தார். அருகில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு மணவாளன் சிகிச்சை பெற்று வருகிறார்.
இதுகுறித்து தகவல் அறிந்த குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி சம்பவ இடத்திற்கு நேரில் சென்று விசாரணை நடத்தினார்.
மேலும் அந்த கிராமத்தில் 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்ப ட்டதால் பதட்டமான சூழல் நிலவியது.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.






