என் மலர்
உள்ளூர் செய்திகள்

கோவையில் இருந்து கொண்டுவரப்பட்ட முதலைகள் அமிர்தி பூங்காவில் விடப்பட்ட காட்சி.
அமிர்தி பூங்காவுக்கு கூடுதலாக 2 முதலை, 4 பாம்பு, நட்சத்திர ஆமைகள் வருகை
- கோவை உயிரியல் பூங்கா கொண்டுவரப்பட்டது
- ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்பட்டன
வேலுார்:
கோவை வ.உ.சி. மைதானம் அருகில் உயிரியல் பூங்கா செயல்பட்டு வந்தது. அங்கு முதலை, புள்ளிமான், குரங்கு, கிளி உள்ளிட்ட 600-க்கும் மேற்பட்ட உயிரினங்கள் பராமரிக்கப்பட்டன.
அந்த பூங்காவை கோவை மாநகராட்சி நிர்வகித்து வந்தது. தினமும் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த உயிரினங்களை பார்த்து ரசித்து சென்றனர்.
இந்நிலையில், பூங்காவை பராமரிக்க போதிய இடவசதி இல்லை எனக் கூறி, பூங்காவுக்கு அளிக்கப்பட்டிருந்த அனுமதியை தேசிய வன உயிரின ஆணையம் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ரத்துசெய்தது.
அதன்பிறகு பூங்காவுக்கு மக்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
மேலும், அங்கிருந்த உயிரினங்கள் வேறு பூங்காவுக்கு இடமாற்றம் செய்யப்படும் என்றும் அறிவிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவை வ.உ.சி. பூங்காவில் இருந்து 2 முதலை, 3 நட்சத்திர ஆமை, 4 சாரைப்பாம்பு ஆகிய 9 உயிரினங்கள், சென்னை வண்டலுார் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா நிர்வாகத்தினர் மூலமாக, மினிவேனில் எடுத்துவந்து, வேலுார் மாவட்டம் அமிர்தி சிறு வனஉயிரின பூங்காவில் வனச்சரகர் குணசேகரனிடம் ஒப்படைக்கப்பட்டன.
பின்னர் ஒவ்வொன்றும் கூண்டில் அவிழ்த்து விடப்ப ட்டன.






