என் மலர்tooltip icon

    வேலூர்

    • பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000 விற்பனை செய்யப்பட்டது
    • மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன

    வேலூர்:

    கார்த்திகை மாதம் பிறந்ததால் ஏராளமான அய்யப்ப பக்தர்கள் மாலை அணிந்து விரதம் தொடங்கி உள்ளனர்.

    மேலும் நேற்று கந்த சஷ்டி விழா முடிந்து இன்று சாமிக்கு திருக்கல்யாணம் நடப்பதால் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பெரும்பாலானோர் அசைவ உணவுகளை தவிர்த்தனர்.

    இதனால் ஞாயிற்றுக்கிழமை எப்போதும் அதிக அளவில் கூட்டம் அலைமோதும் வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் மீன் வாங்க ஆட்கள் இன்றி வெறிச்சோடி காணப்பட்டது. இதனால் மீன்களின் விலையும் கனிசமாக குறைந்துள்ளன.

    பெரிய வஞ்சரம் மீன் ரூ.1000, சிறிய வஞ்சரம் மீன் ரூ.500, இறால் ரூ.350 முதல் ரூ.450, கட்லா ரூ.160, நண்டு ரூ.350 முதல் ரூ.450, மத்தி ரூ.140 முதல் ரூ.160, ஷீலா ரூ.350 என மீன் இன்று விற்பனை செய்யப்பட்டது.

    • உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பரிதாபம்
    • பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை

    வேலூர்:

    காட்பாடி அடுத்த சேவூரை சேர்ந்தவர் கதிர்வேல் (வயது 75). இவருக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். மகன் கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டார். மகள் மனநலம் பாதிக்கப்பட்டு உள்ளார்.

    இந்த நிலையில்.இவருக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு அவதியடைந்தார். தற்போது அதிக அளவில் பனிப்பொழிவு இருப்பதால் கதிர்வேலுக்கு மூச்சு விடுவதில் சிரமம் ஏற்பட்டு வந்தது. இதனால் விரக்தி அடைந்த கதிர்வேல் நேற்று இரவு வீட்டிலிருந்த மண் எண்ணையை எடுத்து உடலில் ஊற்றிக் கொண்டு தீ வைத்துக் கொண்டார்.

    உடல் முழுவதும் தீ பரவியது. இதனால் கதிர்வேல் வலியால் அலறி துடித்தார். இவரது அலறல் சத்தம் கேட்ட குடும்பத்தினர் மற்றும் அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து கதிர்வேல் மீது தண்ணீரை ஊற்றி அணைத்தனர்.

    அதற்குள் கதிர்வேல் உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    இதுகுறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கதிர்வேல் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர் .

    மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து கதிர்வேல் உடல்நிலை சரியில்லாத காரணத்தால் தீக்குளித்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா என பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • விளையாடி கொண்டிருந்தபோது விபரீதம்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    வேலூர்;

    காட்பாடி அடுத்த திருவலம், ஆரிமுத்து மேட்டூர், நரிக்குறவர் காலனியை சேர்ந்தவர் வீராசாமி. இவரது மகள் ரேச்சல் (வயது 2½). நேற்று மாலை ரேச்சிலின் தாய் வீட்டில் சமையல் செய்து கொண்டு இருந்தார்.

    சிறுமி வீட்டிற்கு வெளியே விளையாடிகொண்டு இருந்தார். அப்போது வீட்டிற்கு வெளியே வாளியில் இருந்த தண்ணீரில் சிறுமி விளையாடினார்.

    அப்போது எதிர்பாராத விதமாக சிறுமி தவறி வாளியில் உள்ள தண்ணீரில் விழுந்தார். இதில் மூழ்கி மூச்சு திணறி பரிதாபமாக ரேச்சல் இறந்தார்.

    நீண்ட நேரத்திற்கு பிறகு வீட்டில் இருந்து வெளியே வந்த சிறுமியின் தாய் குழந்தை வாளியில் உள்ள தண்ணீரில் மூழ்கிக் கிடப்பது கண்டு அதிர்ச்சி அடைந்தார். குழந்தையை மீட்டு பார்த்தபோது மகள் இறந்து கிடந்தது தெரிய வந்தது. மகளின் உடலை பார்த்து தாய் கதறி துடித்தார்.

    இது குறித்து தகவல் அறிந்த திருவலம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சிறுமியின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • வேலூர் கோட்டை அகழியில் பிணம் வீச்சு
    • ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த போது சிக்கினார்

    வேலூர்:

    வேலூர் கோட்டை அகழியில் கடந்த செப்டம்பர் மாதம் அடையாளம் தெரியாத ஒருவரின் சடலம் அழுகிய நிலையில் கண்டெடு க்கப்பட்டது. இந்த வழக்கில் துப்புதுலக்கிய தனிப்படை போலீசார் கொலை செய்யப்பட்டவர் ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் ரேணிகுண்டா பெத்தசா ரிபல்லியை சேர்ந்த சிரஞ்சீவி (வயது 35) என்பது தெரிய வந்தது. இவர் பழைய குற்றவாளியாகவும். போலீஸ் இன்பார்மராக வும் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் சிரஞ்சீவி ரேணிகுண்டா போலீஸ் சரகத்தில் நடந்த செல்போன் திருட்டு வழக்கில், சிறையில் அறிமுகமான தனது நண்பர்களான சென்னை வியாசர் பாடியை சேர்ந்த அஜீத்,மாரிமுத்துவை போலீசில் காட்டிக்கொடுத்ததால் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

    இதனால் ஏற்பட்ட முன் விரோதத்தில் அவர்கள் 2 பேரும் தங்கள் கூட்டாளிகளுடன் சேர்ந்து சிரஞ்சீவியை தந்திரமாக அவனது காதலியான ஜெயஸ்ரீ மூலம் அழைத்து வந்து வேலூர் கோட்டை அகழியில் கொலை செய்து வீசியது தெரிய வந்தது.

    இதையடுத்து இந்த வழக்கில் பரத்(எ)பரதன். அப்பு, ஜெயஸ்ரீ ஆகிய 3 பேரை தனிப்படை போலீசார் வேலூர் புதிய பஸ் நிலையம் அருகில் கைது செய்தனர். முக்கிய குற்றவாளியான மாரிமுத்துவும் அவரது கூட்டாளி பத்ரியும் ஏற்கனவே வேறு வழக்கில் கைதாகி சென்னை புழல் சிறையில் உள்ளனர்.

    இந்த கொலை வழக் கில் தொடர் புடைய மிட் டாய் (எ) அஜீத், விக்கி மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 3 பேரை தேடி வந்த நிலையில் வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் சுற்றி வந்த 17 வயது சிறுவன் கடந்த 11-ந் தேதி தேதி கைது செய்யப்பட்டான்.

    இந்த நிலையில் இந்த கொலை வழக்கில் தேடப் பட்டு வந்த முக்கிய குற்ற வாளியான வேலூரை சேர்ந்த மிட்டாய் (எ) அஜீத் (24) என்பவனை காட்பாடி ரெயில் நிலையத்தில் சுற்றித்திரிந்த போது வடக்கு போலீசார் கைது செய்தனர்.

    • தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ரஜாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (வயது 35) இவர் வழக்கம்போல் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது, வீட்டினுள் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பது இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுடைய சாரைபாம்பை லாவகமாக பிடித்தனர்.

    பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகே உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

    • 24 கைதிகள் சென்று இருந்தனர்
    • நன்னடத்தை அடிப்படையில் பல பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர்

    வேலூர்:

    வேலூர் தொரப்பாடியில் உள்ள ஆண்கள் மத்திய சிறையில், தண்டனை மற்றும் விசாரணை கைதிகள் என 1.500-க்கும் மேற்பட்டவர்கள் அடைக்கப்பட்டுள்ளனர்.இவர்களில் ஆயுள் தண்டனை பெற்று 3 ஆண்டுகளாக சிறையில் இருக்கும் கைதிகள், நன்னடத்தை அடிப்படை யில் ஜெயிலில் பல பணிகளில் ஈடுபடுத்தப்படுகின்றனர்.

    தண்டனை கைதிகள் தீபாவளி பண்டிகையை தங்கள் குடும்பத்துடன் கொண்டாடும் வகையில், பரோல் கேட்டு விண்ணப்பிப்பது வழக்கம். அந்தவகையில், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு பரோலில் 24 கைதிகள் சென்று இருந்தனர். பரோல் முடிந்த நிலையில் அவர்கள் அனைவரும் மீண்டும் ஜெயிலுக்கு திரும்பினர்.

    • தீ தடுப்பு கருவிகளை பயன்படுத்துவது குறித்து நடந்தது
    • செயல்முறை விளக்கம் செய்து காட்டினர்

    வேலூர்:

    பள்ளி மாணவர்களுக்கு போலீஸ் துறை சட்ட விதிமுறைகளை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த காவல் மாணவர் படை ஏற்படுத்தப்பட்டது. இந்நிலையில் இன்று தொரப்பாடி அரசு மேல்நிலைப் பள்ளி, ஊரீசு பள்ளியில் 8, 9-ம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு தீயணைப்பு நிலைய செயல்பாடுகளை தெரிந்துகொள்ளும் வகையில் மாணவர்களுக்கு நிலைய அலுவலர் பொறுப்பு அரசு விளக்கம் அளித்தார்.

    மேலும் தீ விபத்து ஏற்பட்டால் தீயணைப்பு கருவிகளை எவ்வாறு கையாளும் முறை. தீ விபத்திற்கு எந்த கருவிகளை பயன்படுத்த வேண்டும் என செயல்முறை விளக்கம் செய்து காட்டினர். இதில் உடற்கல்வி ஆசிரியர் அமிர்தராஜ், தொரப்பாடி பள்ளி ஆசிரியர் அனிதா ஆகியோர் உடன் இருந்தனர்.

    • திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
    • அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது

    வேலூர்:

    வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை மற்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இன்று கந்த சஷ்டி முன்னிட்டு முருகன் கோவில்களில் சிறப்பு வழிபாடு நடந்தது.

    கந்த சஷ்டியொட்டி ரத்தினகிரி பாலமுருகன் கோவில் நடை காலை 6 மணி அளவில் திறக்கப்பட்டது. வள்ளி, தெய்வானை சமேத பாலமுருகனுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டது.

    பின்னர் மூலவருக்கு வெள்ளிக்கவசம் அணிவித்து பாலமுருக னடிமை சுவாமிகள் சிறப்பு பூஜை செய்தார்.

    அதேபோல் வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலில் உள்ள சுப்பிர மணியசாமி, வேலூர்- ஆற்காடு சாலையில் உள்ள சைதாப்பேட்டை பழனி ஆண்டவர் கோவில் மூலவருக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு வழிபாடு நடந்தது.

    காமராஜர் சிலை அருகேயுள்ள பேரி சுப்பிரமணியசாமி கோவில், பாலமதி குழந்தை வேலாயுதபாணி கோவில், காங்கேயநல்லூர் சுப்பிரமணியசாமி கோவில், கைலாசகிரிமலை கொசப்பேட்டை சிவசுப்பிரமணியசாமி கோவில், திருப்பத்தூர் முத்துக்குமாரசாமி கோவில், தொரப்பாடி பாலசுப்பிரமணியசாமி கோவில், பேர்ணாம்பட்டு சுப்பிரமணியசாமி கோவில், வள்ளிமலை முருகன் கோவில், வளை யாம்பட்டு பழனி யாண்டவர் கோவில், ஜலகாம்பாறை வெற்றி வேல் முருகன் கோவில், ஏலகிரி மலை பாலமுருகன் கோவில், அணைக்கட்டு மூலைகேட்டில் உள்ள வேலாடும் தணிகை மலை, ஒடுகத்தூர் தென்புதூரில் உள்ள மயில்வாகனம் முருகர் கோவில், மேட்டு இடையம்பட்டி பாலசுப்பிரமணியர் கோவில், சாத்துமதுரை முருகர் கோவில், ஆர்காட்டான் குடிசை வடதிருச்செந்தூர் முருகன் கோவில், கம்மவா ன்பேட்டை முருகர் கோவில், தம்டகோடி மலை முருகர், தட்டமலை முருகர் கோவில், ரெட்டிபாளையம் முருகர் கோவில், தீர்த்தகிரி மலை முருகன் கோவில்களில் மூலவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடைபெற்றது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள கம்பத்து இளையனார் சன்னதியில் இன்று சிறப்பு பூஜைகள் நடந்தன.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • 25, 26-ந்தேதிகளில் நடக்கிறது
    • வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்

    வேலூர்:

    வேலூர் மாவட்டத்தில் தற்போது சிறப்பு சுருக்க திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது.

    அதன்படி பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கம் செய்தல், திருத்தம் மேற்கொள்ளுதல், முகவரி மாற்றம், வாக்காளர் அடையாள அட்டை பெற மற்றும் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்தல் ஆகியவற்றுக்கு விண்ணப்பிக்கலாம்.

    இப்பணிகள் மேற்கொள்ள அந்தந்த வாக்குச்சாவடி மையங்களில் கடந்த 4,5 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டது.

    மேலும் 2-ம் கட்டமாக இன்றும், நாளையும் நடைபெறுவதாக இருந்த முகாம்கள் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி ரத்து செய்யப்பட்டுள்ளது.

    அதற்கு மாற்றாக வருகிற 25, 26 ஆகிய தேதிகளில் முகாம்கள் நடத்த ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்த முகாம்களில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ளலாம் என கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்
    • அதிகாரி உத்தரவு

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் பள்ளிகொண்டா பேரூராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில் தினமும் விட்டு, விட்டு மழை பெய்து வருகின்றது.

    இதனால் ஜலதோசம், காய்ச்சல் போன்ற நோய்களால் பொதுமக்கள் பாதிக்கப்படுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் டெங்கு காய்ச்சல் அதிகரித்து வரும் சூழ்நிலையில் பொதுமக்களுக்கு எவ்வித பாதிப்பும் இல்லாமல் பார்த்துக்கொள்ளும் விதமாக நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விழிப்புணர்வு மற்றும் புகை மருந்து அடிக்கப்பட்டு வருகின்றது.

    அதன்படி பள்ளிகொண்டா பேரூராட்சி செயல் அலுவலர் உமாராணி உத்தரவின்பேரில் தூய்மை பணியாளர்கள் பேரூராட்சி பகுதிகளில் டெங்கு கொசு ஒழிப்பு புகை மருந்து அடித்து வருகின்றனர்.

    • வேலூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது
    • கூடுதல் தலைமை செயலர் ஆலோசனை

    வேலூர்:

    வேலூரில் சுருணா நிதி நூற்றாண்டு விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்து நீர்வளத் துறை அரசு கூடு தல் தலைமைச் செயலர் சந்தீப் சக் சேனா தலைமையில் ஆலோசனை நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 'பகுத் தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர்' என்ற தலைப்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொள்கிறார்.

    இது தொடர்பாக லெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத் தில் நீர்வளத் துறை கூடுதல் செய லர் மலர்விழி, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் மிகச் சிறப்பாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூரில் கொண்டாடப்பட உள்ளது. இதைச் சிறப்பாகக் கொண்டாட நீர்வளத் துறை அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த விழா சிறப்பு மலரும், ஒரு குறும்படமும் வெளி யிடப்பட உள்ளது என்றார். முன்னதாக விழா நடைபெறும் நகர அரங்கம், தனியார் மஹாலை சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

    அப்போது, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், நீர்வளத் துறை சிறப்பு செயலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

    • ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்
    • கலெக்டர் தகவல்

    வேலூர்:

    பொதுவினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்க ளுக்கும் வழங்கும்பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.

    குறைதீர்வு முகாம்

    இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம்; புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொ ள்ளப்படும்.

    மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.

    வேலூர் தாலுகாவில் கம்மவான்பேட்டை, காட்பாடி தாலு காவில் இடையகுப்பம் கொள்ளப்பள்ளி மதுரா, அணைக் கட்டு தாலுகாவில் செம்பேடு, குடியாத்தம் தாலுகாவில் வேப்பூர், கே.வி.குப்பம் தாலுகாவில் வேப்பங்கனேரி, பேர ணாம்பட்டு தாலுகாவில் அரவட்லா ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    ×