என் மலர்
உள்ளூர் செய்திகள்

பொதுவினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம்
- ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம்
- கலெக்டர் தகவல்
வேலூர்:
பொதுவினியோக திட்டத்தின் சேவைகள் அனைத்து மக்க ளுக்கும் வழங்கும்பொருட்டு வேலூர் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாவிலும் நாளை (சனிக்கிழமை) காலை 10 மணிக்கு பொது வினியோக திட்ட சிறப்பு குறைதீர்வு முகாம் நடைபெற உள்ளது.
குறைதீர்வு முகாம்
இதில், குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்குதல், முகவரி மாற்றம்; புதிய குடும்ப அட்டை மற்றும் நகல், குடும்ப அட்டைக்கு மனு செய்தல், செல்போன் எண் பதிவு செய்தல், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம் செய்தல் உள்ளிட்ட பணிகள் மேற்கொ ள்ளப்படும்.
மேலும் பொது வினியோக திட்ட பொருட்களின் தரம் குறித்த புகார்கள் இருப்பின் அதனையும் முகாமில் தெரிவித்து தீர்வு காணலாம்.
வேலூர் தாலுகாவில் கம்மவான்பேட்டை, காட்பாடி தாலு காவில் இடையகுப்பம் கொள்ளப்பள்ளி மதுரா, அணைக் கட்டு தாலுகாவில் செம்பேடு, குடியாத்தம் தாலுகாவில் வேப்பூர், கே.வி.குப்பம் தாலுகாவில் வேப்பங்கனேரி, பேர ணாம்பட்டு தாலுகாவில் அரவட்லா ஆகிய கிராமங்களில் சிறப்பு முகாம் நடைபெற உள்ளது. முகாமில் மனுதாரர்கள் தங்களது கோரிக்கைகள் மற்றும் ஆவணங்களின் நகலுடன் கலந்து கொண்டு பயன்பெறலாம். இந்த தகவலை கலெக்டர் குமாரவேல்பாண்டியன் தெரிவித்துள்ளார்.






