என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The snake was handed over to the forest department"

    • தீயணைப்புத் துறையினர் பிடித்தனர்
    • காப்பு காட்டில் விடப்பட்டது

    அணைக்கட்டு:

    அணைக்கட்டு அடுத்த ரஜாபுரம் பகுதியைச் சேர்ந்த பழனிவேல் (வயது 35) இவர் வழக்கம்போல் வீட்டில் வேலை செய்து கொண்டிருந்தார்.

    அப்போது, வீட்டினுள் பாம்பு ஊர்ந்து சென்றதை பார்த்து அதிர்ச்சியடைந்தனர். உடனடியாக ஒடுகத்தூர் தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்தார்.

    சம்பது இடத்திற்கு விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் வீட்டில் புகுந்த 6 அடி நீளமுடைய சாரைபாம்பை லாவகமாக பிடித்தனர்.

    பிடிபட்ட பாம்பை வனத்துறையினரிடம் ஒப்படைத்தனர். அவர்கள் அருகே உள்ள காப்பு காட்டில் பத்திரமாக விட்டனர்.

    ×