என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கருணாநிதி நூற்றாண்டு விழா
    X

    கருணாநிதி நூற்றாண்டு விழா

    • வேலூரில் வருகிற 25-ந்தேதி நடக்கிறது
    • கூடுதல் தலைமை செயலர் ஆலோசனை

    வேலூர்:

    வேலூரில் சுருணா நிதி நூற்றாண்டு விழா வருகிற 25-ந் தேதி கொண்டாடப் படுகிறது. இந்த விழா முன்னேற்பாடுகள் குறித்து நீர்வளத் துறை அரசு கூடு தல் தலைமைச் செயலர் சந்தீப் சக் சேனா தலைமையில் ஆலோசனை நடந்தது.

    வேலூர் மாவட்டத்தில் 'பகுத் தறிவு சீர்திருத்த செம்மல் கலைஞர்' என்ற தலைப்பில் கருணாநிதி நூற்றாண்டு விழா வரும் 25-ந் தேதி நடைபெற உள்ளது.

    நீர்வளத் துறை அமைச்சர் துரைமுருகன் தலைமையில் நடைபெறும் விழாவில் வீட்டு வசதி, நகர்ப்புற வளர்ச் சித்துறை அமைச்சர் சு.முத்துசாமி, உணவு வழங்கல் துறை அமைச்சர் ஆர்.சக்கரபாணி ஆகியோர் முன்னிலை வகிக்க உள்ளனர். கைத்தறி, துணிநூல் துறை அமைச்சர் ஆர். காந்தி கலந்து கொள்கிறார்.

    இது தொடர்பாக லெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற கூட்டத் தில் நீர்வளத் துறை கூடுதல் செய லர் மலர்விழி, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் கூடுதல் தலைமைச் செயலர் சந்தீப் சக்சேனா பேசுகையில், முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்த நூற்றாண்டு விழாவை அரசு சார்பில் மிகச் சிறப்பாக மாநிலம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்த வகையில், வேலூரில் கொண்டாடப்பட உள்ளது. இதைச் சிறப்பாகக் கொண்டாட நீர்வளத் துறை அமைச்சர் பல்வேறு ஆலோசனைகளை வழங்கியுள்ளார்.

    கருணாநிதி நிறைவேற்றிய திட்டங்கள் குறித்த விழா சிறப்பு மலரும், ஒரு குறும்படமும் வெளி யிடப்பட உள்ளது என்றார். முன்னதாக விழா நடைபெறும் நகர அரங்கம், தனியார் மஹாலை சந்தீப் சக்சேனா ஆய்வு செய்தார்.

    அப்போது, கலெக்டர் பெ.குமாரவேல் பாண்டியன், போலீஸ் சூப்பிரண்டு என்.மணிவண்ணன், நீர்வளத் துறை சிறப்பு செயலர் முருகன், மாவட்ட வருவாய் அலுவலர் த.மாலதி உள்ளிட்டோர் உடனிருந்தனர்

    Next Story
    ×