என் மலர்
வேலூர்
- விவசாயிகள் போராட்டம்
- வனவிலங்குகளுக்கு குடிநீர் தொட்டிகள் அமைக்க வலியுறுத்தல்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கிராமத்தில் உள்ள வனத்துறை அலுவலகம் முன்பாக தமிழ்நாடு விவசாயிகள் சங்க சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
போராட்டத்திற்கு சங்கத்தின் பொருளாளர் ஜி.ரகுபதி,துணை செயலாளர்வெ ங்கடாஜலபதி ஆகியோர் தலைமை தாங்கினர்.நிர்வாகிகள் ஈஸ்வரன்,முனியம்மாள், மாணிக்கம்,தாமோதரன், சுனிதா,பூபதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
போராட்டத்தை விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் சாமிநாதன் தொடங்கி வைத்தார். இந்த ஆர்ப்பாட்டத்தில் நிர்வாகிகள் சிலம்பரசன், குணசேகரன், கோட்டீஸ்வரன், பாண்டுரங்கன், குமார், பாபு ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள் சிஐடியு மாவட்ட துணை செயலாளர் சரவணன் ஆர்ப்பாட்டத்தை முடித்து வைத்து பேசினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் மத்திய அரசின் விவசாயிகள் விரோத பட்ஜெட்டை கண்டித்தும். மோர்தானா அணையை சுற்றுலா தலமாக அறிவித்து தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்திடவேண்டும்.
யானை,காட்டுப்பன்றி சிறுத்தை,குரங்கு உள்ளிட்ட வனவிலங்கு தொல்லையிலிருந்து விவசாயிகளை பாதுகாத்திட வேண்டும். மோர்தானா பகுதியில் செல்போன் டவர் அமைக்க வேண்டும். கிளை கால்நடை மருத்துவமனை அமைக்க வேண்டும். சைனகுண்டா பகுதியில் நிரந்தர போலீஸ் நிலையம் அமைத்திட வேண்டும். வனவிலங்குகள் சரணாலயம் தொடங்கிட வேண்டும்.
மோடிக்குப்பம் ஆரம்ப சுகாதார நிலையத்தை கூடுதல் வசதி செய்து மேம்படுத்திட வேண்டும். கொட்டமிட்டா அரசு மேல்நிலைக்கு பள்ளிக்கு இடிக்கப்பட்ட கட்டிடங்களுக்கு பதிலாக புதிய கட்டிடங்களை கட்டித்தர வேண்டும்.
மோடிகுப்பம் கால்நடை மருத்துவமனைக்கு சுற்றுச்சுவர் அமைக்க வேண்டும். கொட்டமிட்டா ஆரம்பகிளை சுகாதார நிலையத்தை திறக்க வேண்டும். கூடுதலாக வனத்துறை ஊழியர்களை நியமிக்க வேண்டும்.
வனப் பகுதியில் வனவிலங்குகளுக்காக குடிநீர் தொட்டிகள் அமைத்திட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டது.
- செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண் செய்த உத்தரவிட்டார்.
வேலூர்:
பெண் ஊழியரிடம் செல்போனில் ஆபாசமாக பேசி தொல்லை கொடுத்த செய்த துணை வட்டார வளர்ச்சி அலுவலரை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலகம் செயல்பட்டு வருகிறது. இதில்துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதன் என்பவர் நீண்ட நாட்களாக செல்போனில் சக பெண் ஊழியரிடம் ஆபாசமாக பேசி தொல்லை செய்து வந்துள்ளதாக கூறப்படுகிறது.
கடந்த வாரமும் அவரது தொல்லை அதிகரித்தது. இதுபற்றி உயர் அதிகாரிகளிடம் பெண் ஊழியர் புகார் தெரிவித்தார். அதன் அடிப்படையில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட அலுவலர் ஆர்த்தி விசாரணை மேற்கொண்டார்.
இதையடுத்து கலெக்டர் குமாரவேல் பாண்டியன், ஊராட்சிகள் உதவி இயக்குனர் (தணிக்கை) அலுவலக துணை வட்டார வளர்ச்சி அலுவலர் லோகநாதனை அதிரடியாக சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.
வேலூர் மாவட்டத்தில் அரசு அலுவலகங்களில் அங்கொன்றும் இங்கொன்றுமாக பெண் ஊழியர்களிடம் தவறாக நடக்கும் அதிகாரிகள், சகஅலுவலர்கள் மீது புகார்கள் வந்தவுடன் உரிய நடவடிக்கைகள் உட னே எடுக்கப்பட்டு வருகிறது.
கடந்த டிசம்பர் மாதம் கே.வி. குப்பம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் பெண் ஊழியரிடம் போதையில் சென்று சீண்டலில் ஈடுபட்ட பி.டி.ஓ. கோபி என்பவர் அதிரடியாக சஸ்பெண்ட் செய்யப்பட் டார் என்பது குறிப்பிடத்தக்கது.
- அவர் யார்? என அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
வேலூர்:
வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே கிறிஸ்தவ தேவாலயம் உள்ளது. அதன் நுழைவு வாயில் அருகே இன்று காலை சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் இறந்து கிடந்தார்.
அங்கிருந்து அவர்கள் இது குறித்து வடக்கு போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சப்-இன்ஸ்பெக்டர் வெங்கடேசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து இறந்த கிடந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் வெளியூரில் இருந்து புதிய பஸ் நிலையம் வந்தபோது மாரடைப்பு ஏற்பட்டு இறந்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.
இறந்து கிடந்த நபர் நீள நிற டி-ஷர்ட்டும், வெள்ளை நிற பேண்டும் அணிந்துள்ளார்.
- அதிகாரி பேச்சு
- அரசு அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் மனித வள மேம்பாட்டு மேலாண்மை துறை சார்பில் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி இன்று நடந்தது.
நிகழ்ச்சிக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஆய்வு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வு குழு துணை அலுவலர் சரவணமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் துணை கலெக்டர் முருகன் பயிற்சி வழங்கினார்.
நிகழ்ச்சியில் விஜயரா கவன் பேசியதாவது,:-
அரசு ஊழியர்கள் பொதுமக்களின் சேவனாக பணியாற்ற வேண்டும்.
நாம் மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு சேவை செய்ய கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.
அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பொதுமக்களின் மனுக்க ளையும் அலைக்கழிக்க கூடாது சம்பந்தம் இல்லாத மனுக்கள் நம்மிடம் வரும்போது உரிய வழிகாட்டி அந்தந்த துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.
கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலாஜி, குற்றவியல் மேலாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
- ஒருவர் படுகாயம்
- போலீசார் விசாரணை
வேலூர்:
காட்பாடி காங்கேயநல்லூர் பகுதியை சேர்ந்தவர் லோகநாதன் (வயது 73). அதே பகுதியை சேர்ந்தவர் பாலு. நண்பர்களான இருவரும் நேற்று முன்தினம் பைக்கில் வள்ளிமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
பள்ளிக்குப்பம் ரெயில்வே கேட் அருகே வந்தனர். அப்போது அங்கிருந்த வேகத்தடையில் பைக் வேகமாக ஏறி இறங்கியது. இதில் பைக் நிலை தடுமாறி இருவரும் கீழே விழுந்தனர்.
இதில் 2 பேரும் படுகாயம் அடைந்தனர். பின்னர் அங்கிருந்தவர்கள் படுகாயம் அடைந்த இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக வாலாஜா அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை என்று லோகநாதன் பலனின்றி பரிதாபமாக இறந்தார். இது குறித்து காட்பாடி போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆஸ்பத்திரிக்கு சென்ற போலீசார் லோகநாதன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- 5 பேர் படுகாயம்
- போலீசார் விசாரணை
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த மேலரசம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் சீனு (29), இவர் சொந்தமாக ஆட்டோ வைத்து ஓட்டி வருகிறார். மேலரசம்பட்டில் இருந்து ஒடுகத்தூர் பகுதிக்கு ஆட்களை ஏற்றிச் செல்வதை வழக்கமாக கொண்டு இருந்தார்.
இந்நிலையில், நேற்று காலை வழக்கம்போல் சீனு ஆட்டோவில் அதே பகுதியை சேர்ந்த 5 பயணிகளை ஏற்றிக்கொண்டு ஒடுகத்தூர் நோக்கி புறப்பட்டார். அப்போது, கொட்டாவூர் கிராமம் அருகே வந்த போது முன்னால் சென்ற தனியார் பஸ் மீது எதிர்பாராத விதமாக ஆட்டோ மோதி தலைகுப்புற கவிழ்ந்தது.
பயணிகளின் அலறல் சத்தம் கேட்டு வந்த அக்கம் பக்கத்தினர் ஆட்டோவின் அடியில் சிக்கியிருந்த பயணிகளை மீட்டனர். இதில், ஆட்டோவில் பயணம் செய்த தீபா(29), தினகரன்(50), ஆகிய இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.
மேலும் 3 பயணிகள் லேசான காயம் அடைந்தனர். படுகாயம் அடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் ஒடுகத்தூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திலும், பலத்த காயம் ஏற்பட்டவர்களை வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து வேப்பங்குப்பம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- விபத்தில் மூளைச்சாவு அடைந்தார்
- கல்லீரல், கிட்னி வேலூர் சி.எம்சி. ஆஸ்பத்திரிக்கு தானமாக வழங்கப்பட்டது
வேலூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் அருகே உள்ள ஆர்.குன்னத்தூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சரவணன் (வயது 39) ஓய்வு பெற்ற ராணுவ வீரரான இவர் திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.
நேற்று முன்தினம் மாலை போளூர் ஆரணி ரோட்டில் உள்ள எட்டி வாடி அருகே பைக்கில் சென்றார். அப்போது ஏற்பட்ட விபத்தில் சரவணன் படுகாயம் அடைந்தார். அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். பின்னர் வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். அங்கு சரவணனுக்கு மூளைச்சாவு ஏற்பட்டது. அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய குடும்பத்தினர் முன் வந்தனர்.
அவருடைய இதயம் ஒரு கிட்னி சென்னை தனியார் ஆஸ்பத்திரிக்கும்.கல்லீரல், ஒரு கிட்னி, ஆகியவை வேலூர் சிஎம்சி ஆஸ்பத்திரிக்கும் தானமாக வழங்கப்பட்டது.
சரவணனுக்கு ரேகா என்ற மனைவியும் ஹயந்திகா என்ற மகளும், துஷ்யந்த் என்ற மகனும் உள்ளனர்.
- நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனது.
- பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியுள்ளார்.
வேலூர்:
வேலூர் அடுத்த சித்தேரி குமரவேல் நகரைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணங்களுக்கு பை தயாரித்து கொடுக்கும் தொழில் செய்து வருகிறார்.
இவர், வேலூர் ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு கடந்த 18-ம் தேதி (சிவராத்திரி) இரவு 10 மணியளவில் குடும்பத்தினருடன் சென்றுவிட்டு நள்ளிரவு 2 மணிக்கு வீடு திரும்பினார்.
அப்போது, வீட்டின் பின்பக்க கதவை உடைத்து உள்ளே புகுந்த மர்மநபர்கள் பீரோவை உடைத்து அதிலிருந்த 11 பவுன் தங்க நகைகள், 250 கிராம் எடையுள்ள வெள்ளி பொருட்களை திருடிச்சென்றிருப்பதைப் பார்த்து அதிர்ச்சியடைந்தார்.
இதுகுறித்து, அரியூர் போலீஸ் நிலையத்தில் நரேஷ்குமார் புகார் அளித்தார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமார், சப்-இன்ஸ்பெக்டர் ரேகா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
அந்த வீட்டுக்கு அருகில் இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். கருப்பு உடையுடன் சிவப்பு குல்லா அணிந்திருந்த ஒல்லியான உடலமைப்பு கொண்டவர் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. அவர் யார் என்று அடையாளம் தெரியாத நிலையில் தொடர் விசாரணை மேற்கொண்டனர்.
அப்போது, சித்தேரி ஆஞ்சநேயர் கோவில் தெருவைச் சேர்ந்த அர்ஜூன் ராஜ்குமார் (19) குறித்த தகவல் தெரியவந்தது. இவர், ஏற்கனவே அடிதடி வழக்கில் அரியூர் போலீஸ் நிலையத்தில் கைதாகி சிறை சென்றவர் தற்போது ஜாமீனில் வெளியே வந்திருப்பது தெரியவந்தது.
அதேநேரம், நரேஷ்குமார் வீட்டில் போலீசார் நேற்று முன்தினம் இரவு விசாரணை நடத்திக் கொண்டிருந்தபோது அர்ஜூன் ராஜ்குமார் தனது நண்பருடன் அந்த தெருவின் வழியாக சந்தேகத்துக்கிடமாக நடமாடிக் கொண்டிருந்தார்.
நரேஷ்குமார் வீட்டில் திருட்டில் ஈடுபட்ட மர்மநபர் அணிந்திருந்த சிவப்பு குல்லாவுடன் அர்ஜூன் ராஜ்குமார் அணிந்திருந்த சிவப்பு குல்லாவும் ஒத்துப்போனது.
இதையடுத்து அவரை பிடித்து விசாரித்ததும் திருட்டில் ஈடுபட்டதை ஒப்புக்கொண்டார். மேலும், நரேஷ்குமார் வீட்டில் திருடிய தங்க நகைகள், வெள்ளி பொருட்களையும் சப்-இன்ஸ்பெக்டர் ரேகா பறிமுதல் செய்ததுடன் திருட்டு சம்பவத்தின் போது அவர் அணிந்திருந்த கருப்பு உடையையும், குல்லாவையும் பறிமுதல் செய்தார்.
பூரி கட்டை மற்றும் வீட்டில் இருந்த சுத்தியை பயன்படுத்தி பீரோவை உடைத்து தங்க நகைகள், வெள்ளி பொருட்களை அர்ஜூன் ராஜ்குமார் திருடியுள்ளார்.
அர்ஜூன் ராஜ்குமார் ஏற்கனவே திருட்டு வழக்கில் கைது செய்யப்பட்டு போலீஸ் நிலையத்தில் கையெழுத்திட்டு வருகிறார். இந்த நிலையில் இன்ஸ்டாகிராமில் பழகிய கோவை பெண் தோழிக்கு பரிசளிக்க அவர் திருடியது தெரியவந்தது என்றார்.
- வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு
- சொத்து தகராறில் விபரீதம்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது. இதில் ஏராளமான பொதுமக்கள் மனு அளித்தனர்.
காட்பாடி அடுத்த வன்றந்தாங்கல் வெங்கடேசபுரம் கிராமத்தைச் சேர்ந்த கட்டிட மேஸ்திரி பிரபு (வயது 40) என்பவர் அவரது தாயார் முனியம்மாள் என்பவருடன் கலெக்டர் அலுவலகத்திற்கு வந்தார்.
தீக்குளிக்க முயற்சி
மக்கள் குறைதீர்வு கூட்டம் நடந்து கொண்டிருந்த காயிதே மில்லத் அரங்கம் முன்பு பிரபு திடீரென தனது உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீக்குளிக்க முயன்றார்.
இதனை கண்ட போலீசார் அவரை தடுத்து நிறுத்தி பின்னர் அவரது உடலில் தண்ணீரை ஊற்றி சமாதானம் செய்தனர். சொத்து தகராறில் அவர் தீக்குளிக்க முயன்றதாக கூறப்படுகிறது.
இந்த சம்மவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.
இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்ட செயலாளர் முன்னாள் எம்.எல்.ஏ. லதா சார்பில் கலெக்டர் அலுவலகத்தில் மனு அளித்தனர்.
அதில் பள்ளிக்குப்பம், கொல்லமங்கலம், சின்னசேரி, அகரம் சேரி, கூத்தம்பாக்கம் ஆகிய ஊராட்சிகள் வேலூர் மாவட்டத்தில் செயல்பட்டு வருகின்றன.இந்த ஊராட்சிகளை திருப்பத்தூர் மாவட்டத்தில் இணைக்க கூடாது.
அந்த பகுதி திருப்பத்தூர் மாவட்டத்தில் சேர்க்கப்பட்டால் மாவட்ட தலைநகரத்திற்கு 60 கிலோ மீட்டர் தூரம் செல்ல வேண்டிய நிலை ஏற்படும். இந்த ஊராட்சிகளை மையப்படுத்தி அகரம் சேரி பகுதியில் ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்.
இதே போல அ. கட்டுப்படி கிராமத்தைச் சேர்ந்த பொதுமக்கள் சார்பில் தங்கள் கிராமத்தின் அடையாளமாக கட்டுபடி கூட்ரோட்டில் அனைத்து மதத்தினரையும் மதிக்கும் வகையில் இருந்த நுழைவு வாயில் சாலை விரிவாக்கத்தின் போது அகற்றப்பட்டது.
மீண்டும் அந்த பகுதியில் நுழைவாயில் அமைக்க அனுமதி வழங்க வேண்டும் எனக் கூறியுள்ளனர்.
- பராமரிப்பு பணிகள் நடக்கிறது
- மின் அதிகாரி தகவல்
வேலூர்:
வேலூர் மின் பகிர்மான வட்டத்தை சேர்ந்த வேலூர் துணை மின் நிலையம் மற்றும் இறைவன்காடு துணை மின் நிலையத்தில் மாதாந்திர அத்தியாவசிய மின்சாதன பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் நாளை செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 2 மணிவரை அந்த துணை மின் நிலையங்களில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
இதனால் வேலூர் புதிய பஸ் நிலையம். பைபாஸ் ரோடு. தோட்டபாளையம். பழைய பஸ் நிலையம்.
வேலூர் டவுன். பஜார். சலவன்பேட்டை. ஆபிசர்ஸ்லைன். கஸ்பா. ஊசூர், கொணவட்டம். சேண்பாக்கம் மற்றும் விருதம்பட்டு, செங்காநத்தம் ரோடு கொசப்பேட்டை அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும்.
அதே போல் வல்லண்டராமம். விரிஞ்சிபுரம். செதுவாலை. கந்தநேரி. மருதவல்லிபாளையம் மற்றும அதை சுற்றியுள்ள அனைத்து பகுதிகளிலும் மின் நிறுத்தம் செய்யப்படுகிறது. இவ்வாறு செயற்பொறியாளர் பரிமளா (பொறுப்பு) தெரிவித்துள்ளார்.
- சாமி வேடமணிந்த பக்தர்கள் பரவசம்
- பக்தர்கள் கூட்டம் அலைமோதியது
வேலூர்:
வேலூரில் நேற்று மயானக் கொள்ளை திருவிழா நடந்தது.விழாவையொட்டி வேலூர் சைதாப்பேட்டை, தோட்டப்பாளையம், சத்துவாச்சாரி, விருதம்பட்டு மற்றும் நகரின் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த பக்தர்கள் அங்காளபரமேஸ்வரி அம்மனை அலங்கரித்து கோவிலில் இருந்து ஊர்வலமாக எடுத்து சென்றனர். பல இடங்களில் சாமியை சப்பரத்தில் வைத்து எடுத்து சென்றனர்.
ஊர்வலத்தின் முன்னே பக்தர்கள் தங்களுடைய நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கடவுள் போன்று வேடமிட்டு சென்றனர்.
அவர்களில் பலர் காளியம்மன் போல வேடமிட்டு சென்றதும், கையில் சூலாயுதம் ஏந்திச்சென்றதும் தத்ரூபமாக இருந்தது.
மேலும் ஊர்வலத்தில் சில பெண்கள் சாமி ஆடியபடி கோழி, ஆடுகளை வாயில் கவ்வியபடி சென்றனர். சில பக்தர்கள் எலும்பு துண்டுகளை கவ்வியபடியும், ஆட்டுக்குடலை மாலையாக அணிந்த படியும் ஊர்வலத்தில் கலந்து கொண்டனர்.
ஒரு சில இடங்களில் நடந்த ஊர்வலத்தை வெளிநாட்டினர் புகைப்படம் எடுத்தனர். இந்த ஊர்வலம் முக்கிய வீதிகள் வழியாகச்சென்று ஆங்காங்குள்ள மயானத்தை அடைந்தது. வேலூர்- காட்பாடியை சேர்ந்த பக்தர்கள் முத்துமண்டபம் அருகே உள்ள பாலாற்றங்கரைக்கு சாமியுடன் ஊர்வலமாக சென்றனர்.
அங்கு அம்மனுக்கு சிறப்பு பூஜையும், வழிபாடும் நடந்தது. பக்தர்கள் தங்கள் முன்னோர் சமாதிகளுக்கு சென்று கும்பிட்டனர். அம்மனை தரிசனம் செய்த பக்தர்கள் பின்னர் உப்பு, மிளகு, சுண்டல், கொழுக்கட்டை போன்றவற்றை சூறையிட்டு நேர்த்திக்கடனை செலுத்தினார்கள். வழக்கத்தை விட இந்த ஆண்டு மயான கொள்ளை திருவிழாவில் அதிக அளவில் பக்தர்கள் கலந்து கொண்டனர். நேற்று மதியம் முதல் இன்று அதிகாலை வரை பாலாற்றங்கரையில் மயான கொள்ளை திருவிழா தொடர்ந்து நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்தனர். இதனையொட்டி வேலூரில் விடிய விடிய போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
- ஜெயில் அதிகாரிகள் தகவல்
- ஒரே நேரத்தில் 100 கிலோ துணியை துவைக்கலாம்
வேலூர்:
தமிழ்நாட்டில் வேலூர் சென்னை புழல் கோவை சேலம் மதுரை கடலூர் பாளையங்கோட்டை உள்ளிட்ட ஜெயில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பயன்பாட்டிற்காக திருச்சி ஜெயிலில் தயாரிக்கப்படும் காந்தி சோப்பு மாதந்தோறும் தலா 4 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வகையில் நல்லெண்ணெய், பல்பொடி ஆகியவை வழங்கப்படுகின்றன. சோப்பை வைத்துக்கொண்டு கைதிகள் அவர்களின் துணியை துவைத்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் கைதிகள் துணியை துவைக்க பெரிய அளவிலான வாஷிங் மெஷின்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஜெயிலுக்கும் தலா ஒரு வாஷிங் மெஷின் வாங்கப்பட்டுள்ளன.
இதில் ஒரே நேரத்தில் 100 கிலோ துணியை துவைக்கலாம். இவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
வேலூர் ஜெயிலில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்களை ஜெயிலுக்குள் கொண்டு செல்வதை தடுக்க ஸ்கேனர் வாங்கப்பட்டுள்ளது. தற்போது வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயில்களுக்கு தனித்தனியாக வாஷிங்மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாஷிங் மெஷின்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






