என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    அரசு ஊழியர்கள் மக்கள் சேவகனாக பணியாற்ற வேண்டும்
    X

    அரசு அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சியில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் பேசிய காட்சி.

    அரசு ஊழியர்கள் மக்கள் சேவகனாக பணியாற்ற வேண்டும்

    • அதிகாரி பேச்சு
    • அரசு அலுவலர்களுக்கான புத்தாக்க பயிற்சி நடந்தது

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள காயிதே மில்லத் அரங்கில் மனித வள மேம்பாட்டு மேலாண்மை துறை சார்பில் அரசு அலுவலக உதவியாளர்கள் மற்றும் இளநிலை உதவியாளர்களுக்கு புத்தாக்க பயிற்சி இன்று நடந்தது.

    நிகழ்ச்சிக்கு கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவன் தலைமை தாங்கினார்.மாவட்ட ஆய்வு அலுவலர் கிருஷ்ணமூர்த்தி, ஆய்வு குழு துணை அலுவலர் சரவணமுத்து ஆகியோர் முன்னிலை வகித்தனர். முன்னாள் துணை கலெக்டர் முருகன் பயிற்சி வழங்கினார்.

    நிகழ்ச்சியில் விஜயரா கவன் பேசியதாவது,:-

    அரசு ஊழியர்கள் பொதுமக்களின் சேவனாக பணியாற்ற வேண்டும்.

    நாம் மக்கள் வரிப்பணத்தில் தான் சம்பளம் வாங்குகிறோம் என்பதை நினைவில் கொள்ள வேண்டும். பொது மக்களுக்கு சேவை செய்ய கடவுள் நமக்கு ஒரு வாய்ப்பு வழங்கி இருக்கிறார்.

    அதனை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். எந்த ஒரு பொதுமக்களின் மனுக்க ளையும் அலைக்கழிக்க கூடாது சம்பந்தம் இல்லாத மனுக்கள் நம்மிடம் வரும்போது உரிய வழிகாட்டி அந்தந்த துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும் என்றார்.

    கலெக்டர் அலுவலக பொது மேலாளர் பாலாஜி, குற்றவியல் மேலாளர் பழனி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×