என் மலர்
உள்ளூர் செய்திகள்

வேலூர் ஜெயிலில் கைதிகள் துணி துவைக்க வாஷிங் மிஷின் வசதி
- ஜெயில் அதிகாரிகள் தகவல்
- ஒரே நேரத்தில் 100 கிலோ துணியை துவைக்கலாம்
வேலூர்:
தமிழ்நாட்டில் வேலூர் சென்னை புழல் கோவை சேலம் மதுரை கடலூர் பாளையங்கோட்டை உள்ளிட்ட ஜெயில்களில் 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கைதிகள் அடைக்கப்பட்டுள்ளனர்.
அவர்களின் பயன்பாட்டிற்காக திருச்சி ஜெயிலில் தயாரிக்கப்படும் காந்தி சோப்பு மாதந்தோறும் தலா 4 வழங்கப்பட்டு வருகிறது.
மேலும் எண்ணெய் தேய்த்து குளிக்கும் வகையில் நல்லெண்ணெய், பல்பொடி ஆகியவை வழங்கப்படுகின்றன. சோப்பை வைத்துக்கொண்டு கைதிகள் அவர்களின் துணியை துவைத்து கொள்கின்றனர்.
இந்த நிலையில் கைதிகள் துணியை துவைக்க பெரிய அளவிலான வாஷிங் மெஷின்கள் வாங்க நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஜெயிலுக்கும் தலா ஒரு வாஷிங் மெஷின் வாங்கப்பட்டுள்ளன.
இதில் ஒரே நேரத்தில் 100 கிலோ துணியை துவைக்கலாம். இவை விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்பட உள்ளது.
வேலூர் ஜெயிலில் சுகாதாரத்தை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். தடை செய்யப்பட்ட பொருட்களை ஜெயிலுக்குள் கொண்டு செல்வதை தடுக்க ஸ்கேனர் வாங்கப்பட்டுள்ளது. தற்போது வேலூர் ஆண்கள் மற்றும் பெண்கள் ஜெயில்களுக்கு தனித்தனியாக வாஷிங்மெஷின்கள் வாங்கப்பட்டுள்ளன.
இந்த வாஷிங் மெஷின்கள் விரைவில் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என ஜெயில் அதிகாரிகள் தெரிவித்தனர்.






