என் மலர்
வேலூர்
- குமரேசன் நேற்று வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளியபடி சம்பவ இடத்திலேயே இறந்தார்.
- போலீசார் குமரேசன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த ஆசனம்பட்டு பகுதியை சேர்ந்தவர் குமரேசன் (வயது 46). இவர் கட்டிட கூலி வேலை செய்து வந்தார்.
இவரது மனைவி செந்தாமரை(45). இவர்களுக்கு 2 மகன்கள், ஒரு மகள் உள்ளனர். குமரேசனுக்கு குடிப்பழக்கம் இருந்துள்ளது.
இந்நிலையில் குமரேசன் நேற்று மாலை அதே பகுதியில் வரும்போது கீழே விழுந்து வாந்தி மற்றும் வாயில் நுரை தள்ளியபடி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து செந்தாமரை வேப்பங்குப்பம் போலீசில் புகார் கொடுத்தார். தனது கணவர் கள்ளச்சாராயம் குடித்து இறந்ததாக கண்ணீர் மல்க கூறினார்.
சட்டவிரோதமாக கள்ளச்சாராய விற்பனையில் ஈடுபடுபவர்களை கைது செய்து தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினார்.
போலீசார் குமரேசன் உடலை கைபற்றி பிரேத பரிசோதனைக்காக அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் பழனிமுத்து விசாரணை நடத்தி வருகிறார்.
எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் தற்போது விசாரணை மேற்கொண்டு வருகிறோம். குமரேசன் உயிரிழந்ததற்கான காரணம் தெரியவில்லை. தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது என்றார்.
இதற்கிடையில், டி.எஸ்.பி. திருநாவுக்கரசு மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து சென்று விசாரணை நடத்தினர்.
இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- குறை தீர்வு கூட்டம் நடைபெறவில்லை
- ஒரு சிலர் மனுக்களை அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்
வேலூர்,
வேலூர் மாவட்டம், குடியாத்தம் சாலை கெங்கை அம்மன் சிரசு திருவிழாவையொட்டி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் மனு அளிப்பது வழக்கம் கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்தது தெரியாமல் இன்று ஒரு சிலர் மனு அளிக்க வந்தனர்.
மனு அளிக்க வந்த பொது மக்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவலு, உதவி கலெக்டர் தனஞ்செழியன் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். ஒரு சிலர் மனுக்களை அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.
- 22-ந் தேதி நடக்கிறது
- மஞ்சள்நீர் விடையாற்று உற்சவம் திருவீதி உலா நடைபெறும்
வேலுார்,
வேலுார் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் திருத்தேர் திருவிழா, இன்று தொடங்கி, வரும் 24-ந்் தேதி வரை நடக்கிறது.
இதை முன்னிட்டு, இன்று காலை 6 மணிக்கு மகா கணபதி ஹோமம், 10 மணிக்கு அம்மனுக்கு கூழ்வார்த்தல், மதியம் 2 மணிக்கு சப்தகன்னிகள் செவிட்டாத்தம்மன் முனீஸ்வரர் ஆகிய பரிவாரங்களோடு ஜமாதிமலை அடிவாரத்தில் வீற்றிருக்கும் வயிரநாதருக்கு, பால் பொங்கல் வைத்தல், இரவு11 மணிக்கு திருக்காப்பு அணிவித்தல் நடந்தது.
தொடர்ந்து, 16 மற்றும் 17-ந் தேதிகளில் சிறப்பு அபிஷேகமும், 18-ந் தேதி மாலை 6 மணிக்கு மறு காப்பு அணிவித்தல் மற்றும் இரவு 7 மணிக்கு ஸ்ரீ துர்கையம்மன் திருவீதி உலா நிகழ்ச்சி நடக்கிறது.
இதைத்தொடர்ந்து, 19, 20,21 ஆகிய தேதிகளில் மாலை 6 மணிக்கு முறை யே ஆதிபராசக்தி, தனலட் சுமி, சிவலிங்க பூஜை திருவீதி உலா நடக்கிறது.22-ந் தேதி காலை 7 மணிக்கு ஸ்ரீ சாலை கெங் கையம்மனுக்கு சீர்வரிசை' செலுத்துதல், காலை 9 மணிக்கு விசேஷ அலங்காரத்துடன் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் திருத்தேர் திருவீதி உலா, மாலை 6 மணிக்கு அந்திமழை இன்னிசை நிகழ்ச்சி நடக்கிறது.
தொடர்ந்து, 23-ந் தேதி காலை 9 மணிக்கு சிரசு ஏற்றம், விஸ்வரூப காட்சி, மாலை 6 மணிக்கு இசை நிகழ்ச்சி நடக்கிறது.
பின்னர், 24-ந் தேதி மதியம் 2 மணிக்கு மஞ்சள்நீர் விடையாற்று உற்சவம் ஸ்ரீ சாலை கெங்கையம்மன் திருவீதி உலா நடக்கிறது.
- 106.7 டிகிரி பதிவு
- அக்னி வெயில் 29-ந் தேதி முடிவடைகிறது
வேலூர்,
வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் வழக்கம் முதல் முறையாக 106 டிகிரியை வெயில் சுட்டெரித்தது.
தமிழகத்தில் அதிக வெயில் பதி வாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கம் முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தினசரி 100 டிகிரியை கடந்து கொளுத்தி வந்த வெயில் அளவு கடந்த சில நாட்களாக 90 டிகிரியாக குறைந்து பதிவானது.
கடந்த வாரம் தொடர்ச்சியாக கோடை மழை பெய்ததால் வெயில் சற்று குறைந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.
இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு மேல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் 12 மணிக்கு உச்சி வெயில் மண்டையை பிளந்தது.
வெயில் வழக்கத்தை காட்டிலும் வெயில் அதிகமாக இருந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.
மாலை 5 மணி கடந்தும் வெயில் தாக்கம் வேலூரில் அதிகமாகவே இருந்தது. பகலில் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகள் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறுகளை வாங்கி சாப்பிட்டு வெயில் உஷ்ணத்தை குறைக்க முயன்றனர்.
106.7 டிகிரி
இருப்பினும், நேற்று மாலை வரை வெயில் உஷ்ணம் வேலூரில் பரவலாக காணப்பட்டது. இதற்கிடையே,வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பதிவான அளவு 106.7 டிகிரியாக இருந்தது.
இது நடப்பாண்டில் முதல் முறையாக 106.7 டிகிரியை கடந்தது. வெயில் 29-ந் தேதி முடிவடைகிறது.
அதுவரை வெயில் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி என தவித்து வருகின்றனர்.
- கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்
- போலீசில் புகார்
குடியாத்தம்,
வேலூர் மாவட்ட தி.மு.க. செயலாளர் அணைக்கட்டு சட்டமன்ற உறுப்பினருமான ஏ.பி.நந்தகுமார், குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகரமன்ற உறுப்பினர் ஜி.எஸ்.அரசு, பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத் உள்ளிட்டோர் புகைப்படத்துடன் சமூக வலைதளங்களில் செய்தி பரவியது.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவின் போது கடைகள் மற்றும் ராட்டினம் போன்ற விளையாட்டு அம்சங்களை தடை செய்துவதாகவும் குடியாத்தம் நகரம் மற்றும் சுற்றுவட்டார கிராம பொதுமக்களின் சந்தோஷத்தை சீர்குலைப்பதாக பல்வேறு அவதூறு கருத்துக்களை கூறி சமூக வலைதளங்களில் பதிவிட்டு இருந்தனர்.
நேற்று இந்த பதிவுகளை பதிவிட்டவர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி குடியாத்தம் நகரமன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், நகர்மன்ற உறுப்பினர்களுடன் சென்று குடியாத்தம் டவுன் போலீஸ் நிலையத்தில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு கோடீஸ்வரனிடம் புகார் அளித்தார்.
புகாரை பெற்றுக் கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு புகார் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தார்.
நகரமன்ற தலைவர் சவுந்தரராஜன் உடன் நகராட்சி வழக்கறிஞர் எஸ்.விஜயகுமார், நகர்மன்ற உறுப்பினர்கள் ஜி.எஸ்.அரசு, ஆட்டோமோகன், சி.என்.பாபு, எம்.எஸ்.குகன், சவுந்தரராஜன், ஏகாம்பரம் உள்பட 20-க்கும் மேற்பட்ட நகர்மன்ற உறுப்பினர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.எஸ்.அமர்நாத், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் உடன் இருந்தனர்.
- சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
- சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் கோபாலபுரம் கவுண்டன்ய மகாநதி கரையில் உள்ள கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா இன்று கோலாகலமாக நடந்தது.
விஷ்ணுவின் அம்சமான பரசுராமன் தனது தாயின் தலையை வெட்டி மீண்டும் உயிர்பித்த புராண கதையை நினைவுக்கூரும் விதமாக சிரசு திருவிழா விமரிசையாக கொண்டாடப்பட்டது நேற்று தேரோட்டம் நடந்தது
இன்று காலை 6 மணிக்கு தரணம்பேட்டையில் உள்ள முத்தியாலம்மன் கோவிலில் இருந்து கெங்கையம்மன் சிரசு பக்தர்களின் வெள்ளத்தில் புறப்பட்டது.
பம்பை, உடுக்கை, சிலம்பாட்டம், புலி ஆட்டம் ஆகிய பாரம்பரிய கலைகள் முன்செல்ல, அம்மன் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் பவனியாக கொண்டு செல்லப்பட்டது. நடுப்பேட்டை, காந்திரோடு, ஜவஹர்லால் தெரு வழியாக கோபாலபுரத்தில் உள்ள கெங்கையம்மன் கோவிலை வந்தடைந்தது.
சிரசு ஊர்வலம் நடைபெற்ற தரணம்பேட்டை முதல் கோபாலபுரம் வரை இருபுறமும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. வேலூர் மாவட்டத்தை சேர்ந்த மக்கள் மட்டுமின்றி ஆந்திரா மற்றும் கர்நாடகா பக்தர்களும் வந்திருந்தனர்.
லட்சக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்ததால் குடியாத்தம் நகரம் முழுவதும் திருவிழாக்கோலமாக காட்சி அளித்தது.
பக்தர்கள் வெள்ளத்தில் சிரசு கொண்டு செல்லப்பட்டபோது ஆங்காங்கே மரங்கள், சுற்றுச்சுவர்கள், வீட்டு மாடி மீது நின்றும் அம்மன் சிரசை பக்தர்கள் தரிசனம் செய்தனர்.
சிரசு ஊர்வலம் நடைபெற்ற வழிநெடுகிலும் கெங்கையம்மனுக்கு பூமாலை சாத்தியும், கற்பூரம் ஏற்றியும் தேங்காய்களை உடைத்து பக்தர்கள் வழிபட்டனர்.
பின்னர் கெங்கையம்மன் கோவில் சிரசு மண்டபத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்த இருந்த சண்டாளச்சி உடலில் அம்மன் சிரசு பொருத்தப்பட்டது. சிறப்பு பூஜைகளும், அதனைத்தொடர்ந்து கண் திறப்பு நிகழ்ச்சியும் வெகு விமரிசையாக நடந்தது.
குடியாத்தம் நகரம் முழுவதும் பொதுமக்கள் மற்றும் சமூகநல ஆர்வலர்கள், பக்தர்கள், கல்வி நிறுவனங்களின் சார்பிலும் ஆங்காங்கே பந்தல்கள் அமைத்து நீர், மோர், கூழ், பானகம், குளிர்பானம், அன்னதானம் வழங்கப்பட்டது.
மேலும் குடியாத்தம் நகராட்சி சார்பிலும் குடிநீர், சுகாதாரம், முதலுதவி மருத்துவ வசதிகள் செய்யப்பட்டிருந்தது.
கோவிலில் அம்மன் கண் திறப்பு நிகழ்ச்சிக்கு பின்னர் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று அம்மனை தரிசனம் செய்து வருகின்றனர்.
சிரசு ஊர்வலம் தொடங்கிய முத்தாலம்மன் கோவிலில் இருந்து கங்கையம்மன் கோவில் சுமார் ஒரு கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. காலையில் 6 மணிக்கு சிரசு ஊர்வலம் புறப்பட்டு ஒரு கிலோ மீட்டர் தொலைவை சுமார் 3 மணி நேரம் பக்தர்கள் வெள்ளத்தில் மிதந்து சென்று கோவிலை அடைந்தது.
எந்த ஆண்டும் இல்லாத வகையில் வரலாறு காணாத பக்தர்கள் கூட்டம் இருந்தது. 5 லட்சம் பக்தர்கள் இன்று அம்மன் சிரசு ஊர்வலம் மற்றும் கோவிலில் அம்மனை தரிசனம் செய்தனர்.
இன்று மாலை கவுண்டன்ய மகாநதி ஆற்றில் வாண வேடிக்கை நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
வேலூர் சரக டி.ஐ.ஜி. முத்துசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தலைமையில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டுகள் பாஸ்கரன், கோடீஸ்வரன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
- பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.
- பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஜோலார்பேட்டை:
கிருஷ்ணகிரி வனபகுதியில் சுற்றி திரிந்த காட்டு யானைகள் ஒருவரை மிதித்து கொன்றது. அந்த யானைகள் ஆந்திர வனப்பகுதிக்கு சென்றன.
ஆந்திராவில் இந்த யானைகள் மேலும் 5 பேரை மிதித்து கொன்றன.
ஜோடியாக வந்த காட்டுயானைகள் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி ஜோலார்பேட்டை கிராம பகுதிகளில் அட்டகாசம் செய்து வருகிறது.
யானைகள் நேற்று தண்ணீர் பந்தல் கிராமத்தை ஒட்டி செல்லும் சென்னை-பெங்களூர் தேசிய நெடுஞ்சாலையை கடந்தன. அந்த நேரத்தில் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி அடைந்து வாகனங்களை நிறுத்தினர்.
பைக்கில் வந்த வாலிபர் வாகனத்தை திடீரென நிறுத்த முடியவில்லை. அவர் யானைகளை மிக அருகில் சென்றார்.
அவரை யானைகள் தாக்க முயன்றன. அவர் யானைகளிடமிருந்து நூலிலையில் தப்பி சென்றார்.
நெடுஞ்சாலையைக் கடந்த காட்டு யானைகள் ஆத்தூர் கிராமத்திற்கு சென்றன. அங்குள்ள கரும்பு தோட்டத்தில் பதுங்கி நின்றன.
கரும்பு தோட்டத்தில் பதுங்கி இருந்த யானைகளை விரட்ட கிருஷ்ணகிரி தர்மபுரி மாவட்டத்திலிருந்து வனத்துறையினர் வரவழைக்கப்பட்டனர். அவர்கள் பட்டாசுகளை வெடித்து யானைகளை அங்கிருந்து வனப் பகுதிகளுக்குள் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர்.
ஆவேசமாக யானைகள் ஓடியது. பூசாரி ஊர் கிராமத்தை ஒட்டிய நிலத்தில் மாசிலாமணி என்பவரது பசுமாடு ஒன்று மேய்ந்து கொண்டிருந்தது. யானைகள் பசுமாடு மீது மோதியது. நிலைகுலைந்து விழுந்த பசுமாட்டினை யானைகள் காலால் மிதித்தன.
இதில் உடல் நசுங்கி பசுமாடு சம்பவ இடத்திலேயே பசு இறந்தது. அங்கிருந்த காட்டு யானைகள் சோமநாயக்கன் பட்டி வழியாக திரியாலம் ஏரிக்குள் சென்றது.
நேற்று இரவு ஜோலார்பேட்டை அருகே உள்ள பார்சம்பேட்டை ரெயில்வே மேம்பாலத்தில் ஏறி 2 யானைகளும் ஜோடியாக ஒய்யார நடைபோட்டு சென்றன.
சின்ன கம்மியம்பட்டு கிராமத்திற்குள் சென்றன. அங்கிருந்த வாலிபர்கள் மற்றும் பொதுமக்கள் 100-க்கும் மேற்பட்டோர் காட்டு யானைகளை கூச்சலிட்டு விரட்டினர்.
அப்போது யானைகள் அவர்களை நோக்கி திரும்பி வந்து விரட்டியது. அந்த நேரத்தில் லோகேஷ் (வயது 28) என்ற வாலிபர் தவறி கீழே விழுந்தார்.
அவரை காட்டு யானை தனது துதிக்கையால் தூக்கி வீசி விட்டு திரும்பி சென்றன.
இதில் படுகாயம் அடைந்த லோகேஷை மீட்டு திருப்பத்தூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதனை தொடர்ந்து காட்டு யானைகள் இன்று அதிகாலை ஏலகிரி மலை அடிவாரத்திற்கு சென்றன.
இதனை வனத்துறையினர் கண்காணித்து வருகின்றனர்.
யானைகள் ஏலகிரி மலையில் ஏற வாய்ப்பு இல்லை. மலை ஓரமாக சென்று கொண்டிருக்கிறது. பொதுமக்கள் யாரும் யானைகள் அருகே செல்ல வேண்டாம் என வனத்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
- கட்டியாபட்டு மலை கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து நேற்று நள்ளிரவில் பெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது.
- 48 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அருகே சுமார் 84 மலை கிராமங்கள் உள்ளன. இதில் ஒடுகத்தூர் அடுத்த பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்டு 47 குக்கிராமங்கள் உள்ளது.
பீஞ்சமந்தை ஊராட்சிக்கு உட்பட்ட கட்டியாபட்டு கிராமத்தில் சுயம்பாக அமைந்துள்ள பெருமாள் வடிவிலான புற்றை தங்களின் முதல் கடவுளாக தொன்று தொட்டு வழிபட்டு வருகின்றனர்.
அதேபோல், மற்ற பகுதிகளில் ஆண்டு தோறும் நடத்தப்படும் திருவிழாவை போன்று இது இல்லை.
இங்கு பூஜை செய்யும் நபருக்கும், அவர் கூறும் ஊரில் உள்ள ஏதேனும் ஒரு காளைக்கும் ஒரே நேரத்தில் சாமி அருள் வந்து அருள்வாக்கு கூறினால் மட்டுமே திருவிழா நடைபெறும்.
இல்லையென்றால் பூசாரி மற்றும் காளை மாடு உத்தரவு தரும் வரை எத்தனை ஆண்டுகள் ஆனாலும் திருவிழா நடக்காது.
கடந்த 2003-ம் ஆண்டு அருள்வாக்கு கிடைத்ததால் திருவிழா நடைபெற்றது. அதற்கு பிறகு காளையின் சம்மதம் கிடைக்காததால் திருவிழா நடைபெறவில்லை.
இந்த நிலையில் கடந்த 48 நாட்களுக்கு முன்பு கோவில் பூசாரி அருள்வாக்கு கூறினார். அதே நேரத்தில் பூசாரி கூறிய மலை கிராமத்தை சேர்ந்த ஒரு காளை மாடு தலையை அசைத்து திருவிழா நடத்த அருள்வாக்கு கூறியது.
இதனையடுத்து திருவிழா நடத்த ஏற்பாடு செய்தனர்.
அதன்படி, ஒடுகத்தூர் அடுத்த கட்டியாபட்டு மலை கிராமத்தில் சுமார் 20 ஆண்டுகள் கழித்து நேற்று நள்ளிரவில் பெருமாள் கோவில் திருவிழா வெகு விமர்சையாக நடந்தது. முன்னதாக அருள் வந்த காளையை அலங்கரித்து அதனை ஊர்வலமாக கொண்டு வந்தனர்.
பின்னர், கோவிலில் உள்ள புற்றுக்கு வண்ண மலர்களால் அலங்கரித்து சாமிக்கு பொங்கல் வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டது.
அப்போது, 48 நாட்கள் விரதம் இருந்து காப்பு கட்டியவர்கள் பொங்கல் வைத்தும், மாவிளக்கு எடுத்தும் நேர்த்தி கடன் செலுத்தினர்.
மேலும், அருள் வந்த காளைக்கு படையலிட்டு அதனிடம் மலைவாழ் மக்கள் வாக்கு கேட்டனர். அதேபோல், கொடிமரத்தில் நெய்விளக்கேற்றி சாமியை வழிபட்டனர்.
இதில், காணிக்கை கொடுத்த 47 கிராம மக்கள் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து சுமார் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில்:-
கடந்த 2003-ம் ஆண்டு நடத்தப்பட்ட திருவிழா சுமார் 20 வருடம் கழித்து தற்போது திருவிழா நடத்த உத்தரவு கிடைத்துள்ளது. கடந்த 48 நாட்களுக்கு முன் காளைக்கு அருள் வந்து வாக்கு கேட்டு திருவிழா தேதி குறிக்கப்பட்டது.
பின்னர், அருள் வாக்கில் சொன்னபடி முதலில் காளையை 20 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு கால்நடையாக கொண்டு சென்று சிறப்பு பூஜை செய்யப்பட்டது.
பின்னர் 44 பேர், 7 நாட்களாக 47 குக்கிராமங்களுக்கும் நடைபயணமாக சென்று திருவிழா நடத்த காணிக்கை திரட்டினர்.
இவை 20 ஆண்டுகளுக்கு பின் நேற்று இரவு தான் நடந்தது. மீண்டும் காளைக்கு அருள் வந்தால் மட்டுமே திருவிழா நடக்கும் என்று அப்பகுதி மலைவாழ் மக்கள் கூறினர்.
- அசைவ பிரியர்கள் அதிர்ச்சி
- பலர் விலையைக் கேட்டு மீன்களை வாங்காமல் திரும்பிச் சென்றனர்
வேலூர்:
வார விடுமுறையான இன்று வேலூர் புதிய மீன் மார்க்கெட்டில் அசைவ பிரியர்கள் ஏராளமானோர் மீன்கள் வாங்க அதிகாலை முதல் குவிந்தனர். மீன்களின் விலையைக் கேட்ட அசைவ பிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.
கடந்த வாரத்தை விட இன்று மீன்களின் விலை இரண்டு மடங்காக விலை ஏற்றம் கண்டுள்ளது. தமிழகத்தில் 40 நாட்கள் மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால் குறைந்த அளவு மீன்கள் வரத்து உள்ளது. இதனால் மீன்களின் விலை இரண்டு மடங்காக அதிகரித்து உள்ளது என வியாபாரிகள் தெரிவித்தனர்.
வஞ்சரம் மீன் ரூ.1450-க்கும், சங்கரா 350, எரா 400,கொடுவா மீன் 450,கட்லா உள்ளிட்ட ஏரி வகை மீன்கள் 150, நண்டு ரூ.400-க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
மீன் வாங்க வந்தவர்களில் பலர் விலையைக் கேட்டு மீன்களை வாங்காமல் திரும்பிச் சென்றனர்.
- நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
- வேகமாக வரும் பைக்குகள் இறங்கும் போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து படுகாயம் அடைகின்றனர்
வேலூர்:
வேலூர் கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள தனியார் ஓட்டல் அருகே கழிவு நீர் கால்வாய் கட்டப்பட்டு உள்ளது.
கால்வாயை இணைக்கும் தார் சாலைக்கும் சிமெண்டு சாலைக்கும் நடுவில் பெரிய அளவில் பள்ளங்கள் உள்ளது. வேகமாக வரும் பைக்குகள் இறங்கும் போது பைக் நிலை தடுமாறி கீழே விழுந்து விபத்தில் சிக்கி படுகாயம் அடைகின்றனர்.
மாவட்ட உயர் அதிகாரிகள் மற்றும் மாநகராட்சி அதிகாரிகள் தினமும் அந்த சாலையை கடந்து செல்கின்றனர்.
ஆனால் சாலையை சீரமைக்க யாரும் முன்வரவில்லை. விபத்துக்களை தடுக்க மாவட்ட நிர்வாகம் மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள், வாகன ஓட்டிக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
- நாளை முதல் தொடக்கம்
- 26- ந்தேதி வரை நடக்கிறது
வேலூர்:
அரசு தொடக்க, நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் இடை நிலை, பட்டதாரி, முதுகலை ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல் கலந்தாய்வு, கடந்த 8-ம் தேதி தொடங்குவதாக இருந்தது.
ஆனால், இந்த கலந்தாய்வு சில நிர்வாக காரணங்களுக்காக தற்காலிகமாக ஒத்திவைக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து, ஆசிரியர் கள் பொதுமாறுதல் கலந்தாய்வு, நாளை முதல் 26- ந்தேதி வரை நடக்கும் என பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது.
இதற்கான ஏற் பாடுகள், மாவட்டம்வாரியாக நடந்துவருகிறது. அதன்படி, வேலூர் மாவட்டத்தில் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி
ஆசிரியர்களுக்கான பணியிட மாறுதல் கலந்தாய்வு, மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலை) தயாளன் தலைமையில், வேலூர் டான் பாஸ்கோ உயர்நிலை பள்ளியில் நடக்கிறது.
இதேபோன்று, அரசு உயர் நிலை, மேல்நிலைப்பள்ளி ஆசி ரியர்களுக்கான கலந்தாய்வு, காட் பாடி காந்திநகர் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி மாவட்ட உதவி திட்ட அலுவலகத்தில் முதன்மைக் கல்வி அதிகாரி முனுசாமி, மாவட்ட கல்வி அதிகாரி (இடைநிலை) அங்கு லட்சுமி ஆகியோர் தலை மையில் நடக்கிறது. இதில், பணியிட மாறுதலுக்கு விண்ணப் பித்த ஆசிரியர்கள், தங்களுக்கான கால அட்டவணையின்படி கலந் துகொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- 1,700 போலீசார் பாதுகாப்பு
- குடியாத்தத்தில் பக்தர்கள் குவிந்தனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டத்தில் பிரசித்திப் பெற்ற கெங்கையம்மன் கோவில் சிரசு திருவிழா நாளை காலை கோலாகலமாக நடைபெறவுள்ளது.
திருவிழாவில் 5 லட்சத்துக் கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற் பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. திருவிழாவை முன்னிட்டு போலீஸ் சார்பில் விரிவான பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
முத்தியாலம்மன் கோவிலில் புறப்படும் சிரசு ஊர்வலம் பக்தர்கள் வெள்ளத்தில் கெங்கையம்மன் கோவிலை வந்தடையும்.
குடியாத்தம் கெங்கையம்மன் கோவில் திருவிழாவுக்காக மாவட்ட நிர்வாகம் சார்பில் உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆற்காடு, ராணிப்பேட்டை, ஆம்பூர், திருப்பத்தூர் உள்ளிட்ட நகரங்களில் இருந்து குடியாத்தத்துக்கு சிறப்பு பஸ்கள் இயக்கப்பட உள்ளன. திருவிழாவை யொட்டி குடியாத்தம் நகரில் நாளை போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும், பேரணாம்பட்டு சாலை, மேல்பட்டி சாலை, வேலூர் சாலை களில் தற்காலிக பஸ் நிலை யங்கள் அமைக்கப்பட்டுள்ளன. நகராட்சி நிர்வாகம் சார்பில் பக்தர்கள் வந்து செல்லும் சாலை யில் குடிநீர் வசதிகள் செய்யப் பட்டுள்ளன.
கெங்கையம்மன் கோவிலில் சிரசு திருவிழாவின் முக்கிய நிகழ் வாக தேர் திருவிழா இன்று நடைபெற்றது. கெங்கையம்மன் கோவிலில் இருந்து இன்று காலை புறப்படும் தேர், சிரசு ஊர்வலம் வரும் பாதையில் சென்று முத்தியாலம்மன் கோவிலை அடைந்து பின்னர் கெங்கையம்மன் கோவிலை மீண்டும் வந்தடையும்.
தேர் திருவிழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று சாமி தரிசனம் செய்தனர். தேரின் மீது மிளகு, உப்பு தூவி நேர்த்திக்கடனை செலுத்தினர். தேர் திருவிழாவை மாலை 6 மணிக்குள் முடிக்க நடவடிக்கை எடுத்துள்ளனர்.
இந்நிலையில், குடியாத்தம் கெங்கையம்மன் சிரசு திருவிழா வுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு முன்னேற்பாடுகளை வேலூர் சரக டிஐஜி முத்துசாமி ஆய்வு செய்தார்.
பின்னர் அவர் கூறும்போது, "குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா பாதுகாப்பு பணியில் 2 எஸ். பி.,க்கள், ஏடிஎஸ்பிக்கள், 5 டிஎஸ்பிகள் 13 டிஎஸ்பி கள் உள்பட 1,700 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
முதல் முறையாக 2 பட்டாலியன் சிறப்பு காவல் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர். பக்தர்கள் சிரமம் இல்லாமல் சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்யப்ப ட்டுள்ளது" என்றார்.
அப்போது, வேலூர் போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன், டி.எஸ்.பி. ராமமூர்த்தி உள்ளி ட்டோர் உடனிருந்தனர்.






