என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உள்ளூர் விடுமுறை நாளிலும் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை பெற்ற அதிகாரிகள்
    X

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் பொதுமக்களிடம் இருந்து அதிகாரிகள் மனுக்கள் பெற்ற காட்சி.

    உள்ளூர் விடுமுறை நாளிலும் கலெக்டர் அலுவலகத்தில் மனுக்களை பெற்ற அதிகாரிகள்

    • குறை தீர்வு கூட்டம் நடைபெறவில்லை
    • ஒரு சிலர் மனுக்களை அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்

    வேலூர்,

    வேலூர் மாவட்டம், குடியாத்தம் சாலை கெங்கை அம்மன் சிரசு திருவிழாவையொட்டி கலெக்டர் குமாரவேல் பாண்டியன் உள்ளூர் விடுமுறை அளித்துள்ளார். கலெக்டர் அலுவலகத்தில் திங்கட்கிழமை தோறும் நடைபெறும் குறை தீர்வு கூட்டத்தில் மாவட்டம் முழுவதும் முழுவதிலும் இருந்து ஏராளமானோர் மனு அளிப்பது வழக்கம் கலெக்டர் உள்ளூர் விடுமுறை அறிவித்தது தெரியாமல் இன்று ஒரு சிலர் மனு அளிக்க வந்தனர்.

    மனு அளிக்க வந்த பொது மக்களிடம் கலெக்டரின் நேர்முக உதவியாளர் விஜயராகவலு, உதவி கலெக்டர் தனஞ்செழியன் ஆகியோர் மனுக்களை பெற்றுக் கொண்டனர். ஒரு சிலர் மனுக்களை அளிக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    Next Story
    ×