என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The sun split the skull"

    • 106.7 டிகிரி பதிவு
    • அக்னி வெயில் 29-ந் தேதி முடிவடைகிறது

    வேலூர்,

    வேலூர் மாவட்டத்தில் நடப்பாண்டில் வழக்கம் முதல் முறையாக 106 டிகிரியை வெயில் சுட்டெரித்தது.

    தமிழகத்தில் அதிக வெயில் பதி வாகும் மாவட்டங்களில் வேலூர் மாவட்டம் முன்னணியில் உள்ளது. கடந்த மார்ச் மாத தொடக்கம் முதல் வெயில் சுட்டெரிக்க தொடங்கியது. தினசரி 100 டிகிரியை கடந்து கொளுத்தி வந்த வெயில் அளவு கடந்த சில நாட்களாக 90 டிகிரியாக குறைந்து பதிவானது.

    கடந்த வாரம் தொடர்ச்சியாக கோடை மழை பெய்ததால் வெயில் சற்று குறைந்தது. இந்நிலையில், கடந்த 2 நாட்களாக வெயில் சுட்டெரிக்க தொடங்கியது.

    இந்நிலையில், நேற்று காலை 10 மணிக்கு மேல் வெயில் தாக்கம் அதிகமாக இருந்தது. பகல் 12 மணிக்கு உச்சி வெயில் மண்டையை பிளந்தது.

    வெயில் வழக்கத்தை காட்டிலும் வெயில் அதிகமாக இருந்ததால் தேசிய நெடுஞ்சாலையில் வாகன நெரிசல் இல்லாமல் சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டது.

    மாலை 5 மணி கடந்தும் வெயில் தாக்கம் வேலூரில் அதிகமாகவே இருந்தது. பகலில் வெளியே சுற்றிய வாகன ஓட்டிகள் வெயில் தாக்கம் தெரியாமல் இருக்க இளநீர், நுங்கு, தர்பூசணி, பழச்சாறுகளை வாங்கி சாப்பிட்டு வெயில் உஷ்ணத்தை குறைக்க முயன்றனர்.

    106.7 டிகிரி

    இருப்பினும், நேற்று மாலை வரை வெயில் உஷ்ணம் வேலூரில் பரவலாக காணப்பட்டது. இதற்கிடையே,வேலூர் மாவட்டத்தில் நேற்று மாலை பதிவான அளவு 106.7 டிகிரியாக இருந்தது.

    இது நடப்பாண்டில் முதல் முறையாக 106.7 டிகிரியை கடந்தது. வெயில் 29-ந் தேதி முடிவடைகிறது.

    அதுவரை வெயில் அளவு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுவதால் பொதுமக்கள் கோடை வெயிலை சமாளிப்பது எப்படி என தவித்து வருகின்றனர்.

    ×