என் மலர்tooltip icon

    வேலூர்

    • ஜலகண்டேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் குவிந்தனர்
    • தங்க தேர், ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றப்பட்டது

    வேலூர்:

    வேலூர் கோட்டை ஜலகண்டேஸ்வரர் கோவிலில் மகா கும்பாபிஷேகம் இன்று அதி விமர்சையாக நடைபெற்றது.

    இதையொட்டி வேலூர் கோட்டை நுழைவாயில் முதல், கோவில் வளாகம் மற்றும் உள் புறங்க கட்டிடங்கள் வண்ண மின்விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டது. இரவில் கோபுரங்கள் மீது ஜொலித்த மின்விளக்கு அலங்காரம், பொதுமக்கள் அனைவரின் பார்வையை தன் பக்கம் கவர்ந்து இழுத்தது. கோவில் வளாகம் முழுவதும் வண்ண பூக்களால் அலங்கரிக்கப்பட்டதோடு, பிரமாண்டமாக அமைக்கப்பட்ட யாகசாலைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றது.

    கும்பாபிஷேகத்தை முன்னிட்டு இன்று அதிகாலை காலை 5 மணிக்கு 4-ம் காலயாக பூஜையும், 9 மணி அளவில் 4-ம் கால மஹா பூர்ணாஹுதி, பட்டு வஸ்த்ர சமர்ப்பணம் தீபாரா தனை யாத்ராதானம், கடம் புறப்பாடு நடைபெற்றது.

    புனித நீர் நிரப்பட்ட கலசங்களை பல்வேறு ஓமங்களுக்கு பிறகு மங்கள வாத்தியங்கள் முழங்க கோவிலை சுற்றி வலம் வரப்பட்டு கோபுரங்கள் மீது எடுத்துச் செல்லப்பட்டது.

    பின்னர் 9.30 மணி அளவில் புதிய தங்க தேர், ராஜகோபுரம் மற்றும் விமான கலசங்கள் மீது புனித நீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் பிரம்மாண்டமாக நடந்தது.

    ஸ்ரீபுரம் நாராயணி பீடம் சத்தி அம்மா கலசத்தின் மீது புனித நீரை ஊற்றி கும்பாபிஷேகம் நடத்தினார். இதைத்தொடர்ந்து அனைத்து மூர்த் திகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.

    இது சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக் கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அளவுக்கு அதிகமாக கூட்டம் குவிந்ததால், கோபுரத்தின் மீது கலச நீர் ஊற்றும் போது பக்தர்கள் கூட்டத்தில் நெரிசல் காணப்பட்டது.

    கும்பாபிஷேகம் முடிந்த பிறகும் பக்தர்கள் கூட்டம் கூட்டமாக கோவிலுக்கு வந்தபடி இருந்தனர். கோவில் வளாகத்தில் கூட்டம் குறையாமல் இருந்ததால் பக்தர்கள் வெள்ளத்தில் கோவில் மிதந்தது போல் காட்சி அளித்தது.

    பாதுகாப்பு

    அளவுக்கு அதிகமான கூட்டத்தால் சாமி தரிசனத்திற்கு நீண்ட நேரம் ஆனது. கோயில் நிர்வாகம் சார்பில் குடிநீர் மற்றும் அன்னதானம் வழங்கப்பட்டது.

    இதில் கலவை சச்சிதானந்த சுவாமிகள் ஐகோர்ட்டு நீதிப திகள் மகாதேவன், ஆதிகேசவலு மற்றும் முக்கிய பிரமுகர்கள், ஆதினங்கள் பலர் கலந்து கொண்டனர். வேலூர் போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் 600-க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    அசம்பாவிதம் ஏதும் நடக்காமல் இருக்க போலீசார் டிரேன் கேமரா மற்றும் பைனோகிளாக் மூலம் கண்காணிகப்பட்டது. இதைத் தொடர்ந்து இன்று மாலை திருக்கல்யாணம் மற்றும் சாமி திருவீதி உலா நடைபெற உள்ளது.

    • பின்னர் பணி தொடங்கப்படும்
    • அதிகாரிகள் தகவல்

    வேலூர்:

    வேலூர் கால்நடை மருத்துவமனை அருகே பெங்களூரு சாலையில் ரெயில்வே கேட் அமைந்துள்ளது. இந்த பகுதியில் தினமும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.

    எனவே அங்கு ரெயில்வே மேம்பாலம் அமைப்பதற்கான நடவடிக்கை எடுக் கப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் பெங்களூரு சாலை மாங்காய் மண்டி அருகே கழிவுநீர் கால்வாய் சிறுபாலம் சேதமடைந்துள்ளது. அந்த வழியாக செல்லும் வாகனங்களும் குறுகலான சிறுபா லத்தின் வழியாக செல்கிறது. சில நேரங்களில் குப்பைகள் அதில் அடைத்துவிடுவதால் கழிவுநீர் செல்ல முடியாத நிலை உள்ளது.

    அந்த சிறுபாலத்தை அகற்றிவிட்டு வேறு பாலம் கட்ட வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது. அதன்படி மாநில நெடுஞ்சாலைத்துறை சார்பில் ரூ.2 கோடி மதிப்பில் சிறுபாலம் அமைக்கப்பட உள்ளது. இந்தநிலையில் கழிவுநீர் கால்வாய் சிறுபாலத்தின் வழியாக குடிநீர் குழாய் மாற்றப்பட வேண்டும். அதை அகற்றுவது தொடர்பாக கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மற்றும் அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர்.

    அப்போது நெடுஞ்சாலைத்துறை கோட்ட உதவி பொறி யாளர் பிரகாஷ் மற்றும் அதிகாரிகள் உடன் இருந்தனர். குழாய்கள் அகற்றப்பட்ட பின்னர் சிறுபாலம் அமைக்கும் பணி தொடங்கப்படும் என நெடுஞ்சாலைத்துறை அதிகாரி கள் தெரிவித்தனர்.

    • வழியில் 10 இடத் தில் காணாறுகள் செல்கிறது
    • 9 இடங்களில் தரைப் பாலம் அமைகிறது

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம் கணி யம்பாடி ஒன்றியம், துத்தி க்காடு ஊராட்சிக்குட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்டகுடும்பத் தினர் வசித்து வருகின்றனர். மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும்இல்லை.இதனால் அவ சிகிச்சைகளுக்காக பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

    இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்து விட்டால் அவரது உடலை கூட டோலி கட்டி தான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.

    இவ்வாறு செல்லும் வழியில் 10 இடத் தில் காணாறுகள் செல்கிறது. ரேஷன் பொருட்கள் உள் ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக் கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகு திக்கு நடைபயணமாக செல் கின்றனர்.

    துத்திக்காடு கிராமத்தில் இருந்து மலை கிராமத்திற்கு செல்ல ஆற்று வழி தவிர வேறு எந்த வழியும் இல்லை.

    இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிரா மம் வரை சாலை அமைத்துக் கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவிற்கு 3 அடிஅகலத் தில் சாலையும், கடந்து செல்ல 9 இடங்களில் தரைப் பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதி உடன் தடையில்லா சான்று வழங் கப்பட்டுள்ளது.

    ரூ.7.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள் ளது. முதல் கட்டமாகசாலைடர் அளவீடு செய்யும் பணி செய்து முடிக்கப்பட்டது.

    தெள்ளை மலை கிராமத்திற்கு சாலை அமைக்கப்பட உள்ள இடத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன், அணைக்கட்டு எம்.எல்.ஏ. நந்தகுமார் ஆகியோர் ஆய்வு செய்ய முடிவு செய்தனர்.

    குண்டும், குழியுமாகபோக் குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் கிடந்த சாலையில் கலெக்டர் உள்ளிட்ட அதிகாரிகளின் கார்கள் செல்ல முடி யாத சூழல் நிலவியது.

    இதன் காரணமாக கலெக்டர் மற்றும் எம்.எல்.ஏ. ஆகியோர் மோட்டார்சைக்களில் சென்று சாலைகளை ஆய்வு செய்தனர். கலெக்டர் குமாரவேல் பாண்டியன் பைக்கை ஓட்ட எம்.எல்.ஏ. நந்தகுமார் அமர்ந்து உட்கார்ந்து சென்று ஆய்வு செய்தனர்.

    ஆய்வின்போது ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக் குனர் ஆர்த்தி, மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பாபு,கணியம்பாடி ஒன்றியக் குழு துணை தலைவர் கஜேந் திரன், ஊராட்சி மன்ற தலை வர் பாபு, வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

    • சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.
    • மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    ஜோலார்பேட்டை:

    வேலூர் மாவட்டம் காட்பாடி, ஜோலார்பேட்டை வழியாக 120 ரெயில்கள் தினமும் இயக்கப்பட்டு வருகின்றன.

    சென்னை, பெங்களூர், கேரளா மற்றும் கோவை, சேலம் பகுதிகளை இணைக்கும் முக்கிய ரெயில்வே பாதையாக இது உள்ளது.

    இந்நிலையில் இன்று ஆம்பூர் அருகே சென்னை ரெயிலை கவிழ்க்க மாபெரும் சதி அரங்கேற்றப்பட்டுள்ளது.

    கர்நாடக மாநிலம் மைசூரில் இருந்து சென்னை சென்ட்ரல் ரெயில் நிலையத்திற்கு காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் இன்று அதிகாலை வந்து கொண்டிருந்தது.

    திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த பச்சக்குப்பம் ரெயில் நிலையம் அருகே வீரவர் கோவில் என்ற இடத்தில் 3.45 மணிக்கு ரெயில் வந்தது. அந்த இடத்தில் கான்கிரீட் கலவையால் செய்யப்பட்ட சிமெண்ட் கல் மற்றும் கருங்கற்களை தண்டவாளத்தில் அடுக்கி வைத்திருந்தனர். ரெயில் அருகே வந்த போதுதான் என்ஜின் டிரைவர் அதை கவனித்தார்.

    அதனால் ரெயிலை உடனடியாக நிறுத்த முடியவில்லை. வேகமாக வந்த ரெயில் தண்டவாளத்தில் இருந்த கற்கள் மீது மோதி தூக்கி வீசியது.

    மேலும் தண்டவாளத்தில் இருந்த சிமெண்டு கற்களை நொறுக்கியபடி ரெயில் சென்றது.

    மற்ற பெட்டிகளில் உள்ள சக்கரங்களும் கற்கள் மீது ஏறி நொறுக்கின. இதனால் பயங்கர சத்தம் கேட்டது. ரெயிலில் தூங்கி கொண்டிருந்த பயணிகள் கண்விழித்தனர்.

    சத்தம் கேட்டதால் ரெயில் பயணிகள் கடும் அதிர்ச்சி அடைந்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து ரெயிலை என்ஜின் டிரைவர் மெதுவாக இயக்கினார். பச்சகுப்பம் ரெயில் நிலையத்தில் காவேரி எக்ஸ்பிரஸ் நிறுத்தப்பட்டது.

    அங்கிருந்து ஆம்பூர் மற்றும் ஜோலார்பேட்டை ரெயில் நிலையங்களுக்கு என்ஜின் டிரைவர் தகவல் தெரிவித்தார்.

    பின்னர் என்ஜின் கல் மீது மோதிய பகுதிகளை பார்வையிட்டார். அதில் சிறிய அளவு சேதம் ஏற்பட்டிருந்தது.

    இதனையடுத்து 15 நிமிடம் காலதாமதமாக காவேரி எக்ஸ்பிரஸ் ரெயில் சென்னை நோக்கி புறப்பட்டு சென்றது.

    தண்டவாளத்தில் கற்கள் வைக்கப்பட்ட இடத்திற்கு ஜோலார்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் இளவரசி தலைமையிலான போலீசார் விரைந்து வந்தனர்.

    அவர்கள் தண்டவாளத்தில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த கற்களை பார்வையிட்டனர். மேலும் அந்த பகுதியில் போலீசார் நடந்து சென்று ஆய்வு செய்தனர்.

    இந்த சம்பவத்தை தொடர்ந்து சென்னையில் இருந்து ரெயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள் விரைந்து வந்தனர்.

    மேலும் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டு பச்சக்குப்பம் பகுதியில் சோதனை நடத்தினர்.

    இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ஒடிசாவில், 3 ரெயில்கள் மோதி விபத்துக்கு உள்ளானது. இதில், 292 பேர் உயிரிழந்தனர். 1100-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இந்த சம்பவம் நாட்டையே உலுக்கியது.

    இதனைத் தொடர்ந்து நாடு முழுவதும் ரெயில்வே அதிகாரிகள் உஷார் படுத்தபட்டனர்.

    ரெயில் என்ஜின் டிரைவர்கள் விழிப்புணர்வுடன் இருக்க அறிவுறுத்தபட்டனர்.

    திருச்சியில் இருந்து சுமார் 21 கிலோ மீட்டர் தொலைவில் சமயபுரம் அருகே உள்ள வாளாடி ரெயில் நிலையத்தில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தண்டவாளத்தில் லாரி டயர்களை அடுக்கி வைத்து கவிழ்க்க சதி நடந்தது.

    இதில் கன்னியாகுமரி எக்ஸ்பிரஸ் ரெயில் பெரும் விபத்தில் இருந்து தப்பியது.

    இதேபோல திருப்பத்தூர் ரெயில்நிலையத்தில் சிக்னல் பெட்டி கற்கள் வீசி உடைக்கப்பட்டது.

    இதனைத் தொடர்ந்து அந்த பகுதிகளில் ரெயில்வே பாதுகாப்பு படையினர் மோப்ப நாய் கொண்டு சோதனை நடத்தினர். இந்த சதி சம்பவங்களில் குற்றவாளிகள் யாரும் கைது செய்யப்படவில்லை.தொடர்ந்து விசாரணை நடப்பதாக கூறுகின்றனர்.

    இந்நிலையில் தமிழகத்தில் ரெயில்களை கவிழ்க்க அடுத்தடுத்து நடைபெறும் சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    அசம்பாவிதங்களை தடுக்க கூடுதல் பாதுகாப்பு வழங்கப்படும். தண்டவாள பகுதிகளை தீவிரமாக கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக ரெயில்வே போலீசார் தெரிவித்தனர். 

    • 3 ஆண்டுகளாக காதலித்து வந்த நிலையில் வேறு பெண்ணுடன் திருமணம் நடந்தது
    • ஜெயிலில் அடைப்பு

    வேலூர்:

    காட்பாடி அடுத்த பரதராமி அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் 20 வயது இளம்பெண். இவரும் மாலியப்பட்டை சேர்ந்த வெங்கடேசன் (வயது 24) என்பவரும் கடந்த 3 ஆண்டுகளாக காதலித்து வந்தனர்.

    இளம் பெண்ணை திருமணம் செய்து கொள்வதாக கூறி வெங்கடேசன் பல இடங்களுக்கு அழைத்துச் சென்று உல்லாசமாக இருந்து உள்ளார். இதனால் இளம்பெண் தன்னை திருமணம் செய்து கொள்ள வேண்டும் என வெங்கடேசனை வற்புறுத்தி வந்தார். ஆனால் இளம்பெண்ணை வெங்கடேசன் திருமணம் செய்து கொள்ளாமல் காலம் தாழ்த்தி வந்தார்.

    இந்த நிலையில் வெங்கடேசனுக்கும் வேறு ஒரு பெண்ணிற்கும் இடையே திருமணம் நடந்தது.

    இதனால் ஆத்திரம் அடைந்த இளம் பெண் தன்னை காதலித்து திருமணம் செய்து கொள்வதாக உல்லாசமாக இருந்து ஏமாற்றிய வெங்கடேசன் மீது காட்பாடி அனைத்து மகளிர் போலீசில் புகார் செய்தார்.

    இன்ஸ்பெக்டர் ராணி வழக்கு பதிவு செய்து வெங்கடேசனை கைது செய்து சிறையில் அடைத்தார்.

    • வருகிற 5-ந் தேதி நடக்கிறது
    • முன்வைப்பு தொகையாக ரூ.6,500 செலுத்த வேண்டும்

    வேலூர்:

    வேலூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த வாகனம் கழிவு செய்யப்பட்டு ஏலத்திற்கு விடப்படுகிறது. ஏலம் வருகிற 5-ந் தேதி காலை 11 மணியளவில் கலெக்டர் அலுவலக வளாகத்தில் நடைபெறுகிறது. மேலும், வாகனத்தினை பார்வையிட விரும்புவோர் அலுவலக வேலை நாட்களில் பார்வையிட அனுமதிக்கப்படுவர்.

    ஏலம் எடுக்க விரும்பும் நபர்கள் வருகிற 3-ந் தேதி மாலை 5 மணிக்குள் வாகனத்திற்கான முன்வைப்பு தொகையாக ரூ.6,500 "Information and Public Relations Officer, Vellore" பெயரில் வங்கி வரை வோலை மற்றும் உரிய புகைப்பட அத்தாட்சி நகலுடன் வேலூர் செய்தி மக்கள் தொடர்பு அலுவலகத்தில் நேரில் செலுத்தி ஏலத்தில் கலந்து கொள்ளலாம். அரசு நிர்ணயித்த தொகையைவிட கூடுதலாக ஏலம் கேட்கும் ஏலதாரர் ஏலத்தொகையில் 100 சதவீதம் மற்றும் அதற்கான ஜி.எஸ்.டி. 18 சதவீதம் தொகையினை ஏலம் எடுத்த அன்றே செலுத்த வேண்டும்.

    அதன்பின்னர், ஏலதாரருக்கு வாகன விடுவிப்பு ஆணை மற்றும் வாகனத்தை விடுவிக்கும் நடவடிக்கை மேற்கொ ள்ளப்படும். கூடுதலாக ஏலம் கேட்டு வாகனத்தினை பெற்று க்கொண்ட எலதாரரை தவிர மற்ற ஏலதாரர்களுக்கு அவர்கள் முன் வைப்பு த்தொகை திரும்ப வழங்கப்படும் என கலெ க்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

    • 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் வி.ஐ.பி. பாஸ் வழங்கப்பட்டுள்ளது
    • நாளை கும்பாபிஷேகம் நடக்கிறது

    வேலூர்:

    வேலூர் கோட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஜலகண்டேஸ்வரர் கோவில் கும்பாபிஷேக விழா நாளை காலை நடைபெற உள்ளது.

    கும்பாபிஷேக விழாவையொட்டி கோவில் வளாகம் மற்றும் விழுப்புரம் முழுவதும் வண்ண மின்விளக்குகள் மற்றும் மலர்கள் கொண்டு அலங்கரிக்கப்பட்டு உள்ளன. முன்னதாக யாகசாலைகள் அமைத்து பூஜைகள் நடந்து வருகிறது.

    இன்று காலை ஸ்ரீபுரம் சக்தி அம்மா ஜலகண்டேஸ்வரர் கோவிலுக்கு வந்து ஜலகண்டேஸ்வரரை தரிசனம் செய்து யாகசாலை பூஜையில் கலந்து கொண்டார்.

    நாளை காலை கும்பாபிஷேக விழா நடைபெறுவதற்கு ஒட்டி வேலூர் சூப்பிரண்டு மணிவண்ணன் தலைமையில் இரண்டு ஏடிஎஸ்பிக்கள் டிஎஸ்பிக்கள் மற்றும் 600 போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

    நாளை காலை அபிஷேக விழாவின் போது கோவிலுக்குள் 3000 பக்தர்கள் மட்டும் பங்கேற்கும் வகையில் விஐபி பாஸ் வழங்கப்பட்டு உள்ள கோவில் நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • சவாரி செல்ல பஸ் நிலையம் சென்ற போது பரிதாபம்
    • பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோஸ்மணி (வயது 54) இவருக்கு மாலா என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.

    கோஸ்மணி குடியாத்தம் பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டிலிருந்து ஆட்டோ சவாரி செல்ல குடியாத்தம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.

    பலமநேர்ரோடு ஆனைகட்டிகணபதிதெரு சந்திப்பு அருகே வரும்போது குடியாத்தத்தில் இருந்து பரதராமி நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.

    கோஸ்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோஸ்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அதிகாலை நேரத்தில் கோஸ்மணி ஆட்டோ ஒட்டி வரும்போது வழியில் பஸ்நிலையம் செல்ல பயணிகள் அதில் ஏறுவார்கள்.

    ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.

    • 9 இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்படுகிறது
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

    பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டிதான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.

    பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச்செல்லும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராமத்திற்கு வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது. துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் கானாறுகள் செல்கிறது.

    ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர். தொடர் மழையின் காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால், மலை கிராம மக்கள் மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

    துத்திக்காடு கிராமத்தில் இருந்து மலை கிராமத்திற்கு செல்ல ஆறுகளை கடந்து செல்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு, 3 அடி அகலத்தில் சாலையும், 9 இடங்களில் தரைப்பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதியுடன் கூடிய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

    சாலை அமைப்பதற்கு நபார்டுவங்கி திட்டத்தின் கீழ் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி நபார்டு கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கணியம்பாடி ஒன்றியக் குழு துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சாலை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அமலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்

    குடியாத்தம்:

    வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்ராவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு சங்கீதா தலைமை தாங்கினார்.

    ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்றத்தலைவர் முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசி பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவே ல்முருகன், சத்தியமூர்த்தி, சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி வாழ்த்துரை வழங்கினார்.

    சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாணவர்களுக்கான இருக்கைகளை வழங்கினார்.

    இந்நிகழ்ச்சியில் தொலைபேசி ஆலோசனைகுழு உறுப்பினர் எம். சத்தியமூர்த்தி உள்பட ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராம கல்வி குழு நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    • 4 பேர் படுகாயம் அடைந்தனர்
    • போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை

    அணைக்கட்டு:

    ஒடுகத்தூர் அடுத்த கெங்கசாணிகுப்பம், கொல்லைமேடு பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன் (வயது 27). இவரது மனைவி பத்மாவதி (23). தம்பதியினர் மகள் டஷ்திதா (9 மாதம்).

    குழந்தை டர்ஷிதாவுக்கு வேலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் தடுப்பூசி போட வேண்டியிருந்தது. இதற்காக வெங்கடேசன் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் ஒடுகத்தூரிலிருந்து வேலூர் நோக்கி பைக்கில் வந்தார்.

    பத்மாவதியின் அக்கா மகள் மோனிதாஸ்ரீ (4) பைக்கின் முன்பக்கத்திலும், வெங்கடேசன் வண்டியை ஓட்ட பத்மாவதி குழந்தையுடன் பின் பக்கத்தில் அமர்ந்து சென்றனர்.

    அப்போது அணைக்கட்டு அடுத்த நாராயணபுரம் அருகே சென்றபோது, எதிர் திசையில் வந்த பெண்ணின் மொபெட், பைக் மீது நேருக்கு நேர் மோதியது.

    இதில் 9 மாத கைக்குழந்தை உள்பட 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதனைப் பார்த்த அந்த பகுதி மக்கள், படுகாயம் அடைந்தவர்களை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் அணைக்கட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.

    பின்னர் குழந்தை டஷ்திதா மேல் சிகிச்சைக்காக அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்ட வந்த நிலையில், குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தது.

    இது குறித்து தகவல் அறிந்த அணைக்கட்டு போலீசார் குழந்தை உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். 9 மாத குழந்தை உயிரிழந்த சம்பவம் அந்த கிராமத்தில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • 9 இடங்களில் தரைப்பாலம் அமைக்கப்படுகிறது
    • விரைவில் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தகவல்

    அணைக்கட்டு:

    வேலூர் மாவட்டம், கணியம்பாடி ஒன்றியம், துத்திக்காடு ஊராட்சிக்கு உட்பட்ட தெள்ளை மலை கிராமத்தில் 300-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இது மலை கிராமம் என்பதால் முறையான சாலை வசதிகள் ஏதும் இல்லை. இதனால் அவசர சிகிச்சைக்கு பல கிலோமீட்டர் தூரம் நடந்து செல்வதாக கிராம மக்கள் கூறுகின்றனர்.

    பிரசவ காலத்தில் பெண்களும் அவ்வாறே நடந்து சென்று வருவதாகவும், முடியாத நேரத்தில் டோலி கட்டி மருத்துவமனைக்கு தூக்கி செல்வதாகவும் வேதனை தெரிவிக்கின்றனர். இந்த ஊரை சேர்ந்தவர்கள் மருத்துவமனை உள்ளிட்ட வெளியிடங்களில் இறந்துவிட்டால் அவரது உடலை கூட டோலி கட்டிதான் மலைகிராமத்திற்கு சுமந்து செல்கின்றனர்.

    பிரசவத்திற்காக டோலி கட்டி அழைத்துச்செல்லும்போது உயிரிழப்பு சம்பவங்கள் நடைபெறுவது தொடர் கதையாக உள்ளது. கிராமத்திற்கு செல்வதற்கு முறையான சாலை வசதிகள் இல்லாததால் கிராமத்திற்கு வாகனம் செல்ல முடியாத சூழல் உள்ளது. துத்திக்காடு கிராமத்தில் இருந்து தெள்ளை மலை கிராமத்திற்கு செல்லும் வழியில் 10 இடத்தில் கானாறுகள் செல்கிறது.

    ரேஷன் பொருட்கள் உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கிக்கொண்டு கிராம மக்கள் தலைமீது சுமந்தபடியே ஆற்றை கடந்து மலை பகுதிக்கு நடைபயணமாக செல்கின்றனர். தொடர் மழையின் காரணமாக தற்போது ஆற்றில் தண்ணீர் செல்வதால், மலை கிராம மக்கள் மிகவும் சிரமத்துடன் ஆற்றை கடந்து செல்கின்றனர்.

    துத்திக்காடு கிராமத்தில் இருந்து மலை கிராமத்திற்கு செல்ல ஆறுகளை கடந்து செல்வதை தவிர வேறு எந்த வழியும் இல்லை. இந்த நிலையில் துத்திக்காடு முதல் தெள்ளை மலை கிராமம் வரை சாலை அமைத்துக்கொள்ள வனத்துறை சார்பில் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

    சுமார் 6 கிலோ மீட்டர் தொலைவு, 3 அடி அகலத்தில் சாலையும், 9 இடங்களில் தரைப்பாலமும் அமைத்துக் கொள்ள வனத்துறையினர் மூலம் அனுமதியுடன் கூடிய தடையில்லா சான்று வழங்கப்பட்டுள்ளது.

    சாலை அமைப்பதற்கு நபார்டுவங்கி திட்டத்தின் கீழ் நிதி கேட்டு அரசுக்கு அறிக்கை தயார் செய்து அனுப்பி வைக்கப்பட்டது. அதன்படி நபார்டு கிராமசாலைகள் திட்டத்தின் கீழ் ரூ.7.75 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

    அதன்படி கணியம்பாடி ஒன்றியக் குழு துணை தலைவர் கஜேந்திரன், ஊராட்சி மன்ற தலைவர் பாபு மற்றும் ஊரக வளர்ச்சித் துறை அதிகாரிகள் சாலை அளவிடும் பணியில் ஈடுபட்டனர். விரைவில் சாலை அமைக்கும் பணிகள் தொடங்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    ×