என் மலர்
வேலூர்
- மத்திய அரசு கருத்தை ஏற்றுக் கொள்ளக் கூடாது
- முன்னாள் அமைச்சர் தங்கமணி பேட்டி
குடியாத்தம்:
குடியாத்தம் நகர அதிமுக செயலாளர் ஜே.கே.என்.பழனியின் மகள் திருமணம் நாளை நடைபெற உள்ளது.
இதனையடுத்து அதிமுக நாமக்கல் மாவட்ட செயலாளர், முன்னாள் மின்சார துறை மற்றும் மதுவிலக்கு துறை அமைச்சருமான பி.தங்கமணி, முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி, அதிமுக மாவட்ட செயலாளர் த.வேலழகன் உள்ளிட்ட அதிமுகவினர் நேற்று மணமக்களை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதனைத் தொடர்ந்து முன்னாள் அமைச்சர் கூறியதாவது:-
உதய் திட்டத்தில் கையெழுத்துயி ட்டதால்தான் மின்கட்டண உயர்வு என தமிழக முதல் அமைச்சர் தவறான தகவல்களை தெரிவித்துள்ளார்.
உதய் திட்டத்தில் கையெழுத்திடுவதற்கு முன்னால் தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா விவசாயத்திற்கு மீட்டர் வைக்க கூடாது, 3 மாதங்களுக்கு ஒரு முறை மின் கட்டணத்தை மாற்றி அமைக்க கூடாது என்ற சட்டத்தை எடுத்தால் தான் நாங்கள் கையெழுத்து போடுவோம் என தெரிவித்து அதனை எடுத்த பின்னரே கையெழுத்திட்டோம். வேண்டுமென்றால் மு.க.ஸ்டாலின் அந்த சட்டத்தை பார்த்து கொள்ளட்டும்.
அதனை காரணம் காட்டி செயல்படுத்த முடியாமல் திறமை இல்லாத காரணத்தால் கட்டணத்தை உயர்த்தி விட்டு எங்கள் மீது பழி சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாது. சட்டத்தை நன்றாக படித்துப் பார்க்கட்டும்.
இப்போது மத்திய அரசு கொண்டுவந்துள்ள பகலில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம் வரை மின்கட்டணம் குறைப்பு, இரவில் 10 சதவீதம் முதல் 20 சதவீதம்வரை மின்கட்டணம் தொழிற்சாலைகளுக்கு அதிகம், வீடுகளுக்கு இல்லை என தெரிவித்துள்ளனர்.
இருந்தாலும் மாநில அரசு அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது, எப்போதுமே மத்திய அரசு ஒரு கருத்தை சொல்லுவார்கள் அதை ஏற்றுக் கொள்ளக் கூடாது அது நம்முடைய விருப்பம் தான்.
ஏற்கனவே தொழிற்சாலைகள் நசிந்து கொண்டிருக்கிறது. அந்த மின்கட்டண உயர்வை தமிழக அரசு ஏற்றுக் கொள்ளக் கூடாது.
இவ்வாறு அவர் கூறினார்.
- கலெக்டர் அலுவலகத்தில் பரபரப்பு புகார்
- கடலை மிட்டாய் கம்பெனியில் இருந்து வருகிறது
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
சலவன்பேட்டை சாது கார மடத் தெருவை சேர்ந்த ஜெயபால் என்பவர் மனு அளித்தார். அதில் அவர் கூறியிருப்பதாவது:-
எனது பக்கத்து வீட்டில் கடலை பர்பி, கடலை மிட்டாய், பொரி உருண்டை உள்ளிட்ட குழந்தைகளுக்கான தின்பண்டங்கள் தயாரித்து வருகின்றனர்.
இந்த திண்பண்டங்களில் மிகப்பெரிய கட்டெறும்புகள் மொய்த்து வருகிறது.
அந்த கம்பெனியிலிருந்து எங்கள் வீட்டிற்குள் கட்டெறும்புகள் மற்றும் எலிகள் அதிக அளவில் வந்து தூக்கத்தை கலைக்கிறது.
கட்டெறும்பு கடித்ததில் எனது கை கட்டைவிரல் பாதிக்கப்பட்டுள்ளது.
எங்கள் வீடு முழுவதும் நாளுக்கு நாள் கட்டெறும்பு பெருகிக்கொண்டே வருகிறது. அங்கிருந்து வெளிவரும் புகை கண் எரிச்சலை ஏற்படுத்துகிறது. என்னுடைய தாயார் ஆஸ்துமா நோயால் அவதிப்படுகிறார்.
எனக்கும் சர்க்கரை, ரத்த அழுத்த நோய் உள்ளது. பக்கத்து வீட்டில் மிட்டாய் கம்பெனி இருப்பதால் நாங்கள் மிகவும் அவதிப்படுகிறோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
நூதன புகார்
மேலும் கட்டெறும்புகளால் தனது விரல் பாதிக்கப்பட்டதாக கூறி அதிகாரியிடம் விரலை காண்பித்தார்.
இந்த நூதன புகாரால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
கே.வி.குப்பம் அருகே உள்ள மேல் காவனூர் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் மனு அளித்தனர். அதில் எங்கள் பகுதியில் 88 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கி அதில் வீடுகள் கட்டி வசித்து வருகிறோம். எங்கள் பகுதிக்கு முன்னாள் முதல்அமைச்சர் கருணாநிதி பேரில் கலைஞர் நகர் என்று பெயர் வைக்க வேண்டும்.
இதற்கு ஊராட்சி மன்ற வார்டு உறுப்பினர்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். எனவே கலைஞர் நகர் என்று பெயர் பலகைவைக்க அனுமதி வழங்க வேண்டும் என கூறியுள்ளனர்.
மிரட்டல்
ஊசூர் அடுத்த தெள்ளூர் கிராமத்தைச் சேர்ந்த முனுசாமி என்பவர் அளித்த மனுவில்,
`எனது மகன் கடன் வாங்கியதால் கும்பல் ஒன்று என்னையும், எனது மனைவியையும் மிரட்டி வருகின்றனர்.
இதனால் நானும், என் மனைவியும் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ளோம். எங்களுக்கு பாதுகாப்பு அளிக்க வேண்டும் என்று கூறியுள்ளார்.
- 108 ஆம்புலன்ஸ் மூலம் தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்
- குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறை தீர்வு கூட்டம் கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமையில் இன்று நடந்தது.
மாவட்ட திட்ட அலுவலர் அப்போது குடியாத்தம் அடுத்த செதுக்கரையை சேர்ந்த லில்லி என்பவர் தனது கணவர் கடந்த மாதம் இறந்து விட்டதால் இறப்புச் சான்று கேட்டு மனு அளித்தார். அப்போது திடீரென லில்லி மயங்கி கீழே விழுந்தார்.
அங்கு இருந்த அரசு ஊழியர்கள் மற்றும் போலீசார் லில்லியை மீட்டு 108 ஆம்புலன்ஸ் மூலம் சத்துவாச்சாரியில் உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவத்தால் கலெக்டர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
இதையடுத்து குழந்தை வளர்ச்சி திட்டத்தின்கீழ் ஊட்டச்சத்து குறைபாடு உள்ள 1157 குழந்தைகளுக்கு செறியூட்டப்பட்ட பிஸ்கட் வழங்கும் திட்டத்தை கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்.
- சில நாட்களுக்கு முன்பு ரூ.25 வரை விற்கப்பட்டது
- 100 கிராம், 200 கிராம், ¼ கிலோ என்ற அளவில் வாங்கி செல்கின்றனர்
வேலூர்:
சமையலில் முக்கிய இடம்பிடிப்பது தக்காளி ஆகும். கடந்த சில நாட்களுக்கு முன்பு வரை கிலோ ரூ.25 வரை விற்கப்பட்டது. பின்னர் படிப்படியாக தக்காளியின் விலை அதிகரிக்கத் தொடங்கியது.
தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் ஆந்திரா, கர்நாடகா பகுதிகளில் பெய்த பலத்த மழை கார ணமான தக்காளி வரத்து குறைந்ததால் இந்த விலை உயர்வு என்று கூறப்பட்டது. ஆனால் இன்னும் அதன் விலை குறையாமல் ஏறுமுகமாகவே உள்ளது.
வேலூர் நேதாஜி மார்க்கெட்டில் உள்ள சில்லரை விற்பனை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.80-க்கு விற்கப்பட்டது. வெளி மார்க்கெட்டில் உள்ள காய்கறி மற்றும் மளிகை கடைகளில் ஒரு கிலோ தக்காளி ரூ.100 வரை விற்கப்படுகிறது.
இதனால் தக்காளியை கிலோ கணக்கில் வாங்கிய இல்லத்தரசிகள் தற்போது 100 கிராம், 200 கிராம், ¼ கிலோ என்ற அளவில் வாங்கி சிக்கனமாக பயன்படுத்தி வருகிறார்கள். சமையலில் தக்காளியின் பயன்பாட்டையும் பெருமளவு குறைத்து விட்டனர்.
எகிறி வரும் தக்காளியின் விலையால் இல்லத்தரசிகள் கவலை அடைந்து உள்ளனர்.
- நாளை நடக்கிறது
- மோசடி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது
வேலூர்:
வேலூர், திருவண்ணா மலை, திருப்பத்தூர் மற்றும் ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களில் உள்ள பி.எப். அலுவலகங்கள் சார்பில் மக்கள் குறை தீர்வு முகாம் நாளை நடைபெற உள்ளது.
காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும் இந்த முகாமில் முதலாளி, தொழிலா ளிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகளுக்கு விளக்கம் அளிக்கப்படுகிறது.
ஆன்லைன் சேவை பற்றிய செயல்முறை விளக்கம், புதிய முயற்சி மற்றும் சீர்திருத்தங்கள் பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.
மேலும் டிஜிட்டல் சேவைகள் பற்றி கற்பித்தல், முதலாளிகள் தொடர்பான ஊழியர்களின் உரிமைகள் மற்றும் மோசடி தடுப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட உள்ளது.
இந்த முகாம் வேலூரில், அப்துல்லாபுரத்தில் உள்ள பல்லவன் கல்வியியல் கல்லூரியிலும், திருவண்ணா மலை மாவட்டத்தில் உள்ள வர்களுக்கு ஆரணி, கொசப்பாளையத்தில் உள்ள ஹீரோ கிட்சிலுல், திருப்பத்தூரில் ஒய் எம் சி ஏ இண்டஸ்ட்ரீஸ் பயிற்சி நிறுவனத்திலும், ராணிப்பேட்டையில் வாலாஜா சீகராஜபுரத்தில் உள்ள ரிஷி மெட்ரிகுலேஷன் பள்ளியிலும் நடக்கிறது.
இந்த முகாமில் பங்கு பெற விரும்புபவர்கள் தங்களது விவரங்களை இணையத்தில் பதிவு செய்யுமாறு மண்டல ஆணையாளர் ரிதுராஜ் மேதி தெரிவித்ததுள்ளார்.
- கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
- மக்கான் சிக்னல், அண்ணா சாலை வழியாக நேதாஜி மைதானத்தில் நிறைவடைந்தது
வேலூர்:
சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பாக இன்று தொடங்கியது.
இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.
விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகை ஏந்தி போதை பொருளுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.
மக்கான் சிக்னல் அண்ணா சாலை வழியாக சென்று நேதாஜி மைதா னத்தில் நிறைவடைந்தது.
- ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரத்தை சேர்ந்தவர் சுபாஷ் இவர் சாய்நாதபுரம் புதிய தெருவில் மரம் இழைக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மரப்பட்டறை திறக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மரப்பட்டறையில் இருந்து திடீரென புகை வந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பாகாயம் போலீஸ் மற்றும் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் மரப்பட்டையில் இருந்த மரங்களில் தீப்பிடித்து மரம் இழைக்கும் எந்திரங்கள் மற்றும் மர சாமான்கள் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மரம் இழைக்கும் எந்திரங்கள் மற்றும் மர சாமான்கள் எரிந்து நாசமானதாக தெரிவித்தனர்.
- வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுவதாக புகார்
- போலீசார் தடுக்க வலியுறுதத்ல்
அணைக்கட்டு:
பள்ளிகொண்டா அருகே உள்ள வெட்டுவாணம் பாலாற்று பகுதியில் இருந்து லாரியில் 2 யூனிட் மணல் திருட்டுத்தனமாக அள்ளிக்கொண்டு கட்டுப்படி சாலை வழியாக நேற்று இரவு சென்றது.
இதனை பார்த்த அந்த பகுதி மக்கள் லாரியை சிறை பிடித்தனர். இரவு நேரங்களில் மணல் கடத்தி வரும் லாரிகள் வேகமாக செல்வதால் அடிக்கடி விபத்து ஏற்படுகிறது. இதனை போலீசார் முற்றிலுமாக தடுக்க வேண்டும் என கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த லாரியின் உரிமை யாளர், பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் இனிமேல் இந்த பகுதி வழியாக மணல் எடுத்து வரமாட்டேன் என உறுதி அளித்தார்.
இதை அடுத்து லாரி விடுவிக்கப்பட்டது. இதனால் அந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
- ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் அமைக்கப்படும்
- ஏதுவான இடங்களை பார்வையிட்டார்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தத்தைச் சேர்ந்த தியாகி அண்ணன் தங்கோ தமிழ்மொழி மீது தீராத பற்று கொண்டு வடமொழிப் பெயர்களை தமிழ் படுத்தியும், கள்ளுக்கடை மறியல், வைக்கம் போராட்டம், சைமன் குழு எதிர்ப்பு, உப்பு சத்தியாகிரகம், மற்றும் நீல் சிலை சத்தியாகிரகம் ஆகிய போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்றவர்.
அவருக்கு குடியாத்தத்தில் ரூ.50 லட்சம் மதிப்பீட்டில் திருவுருவச் சிலை அமைக்கப்படும் என சட்டமன்றத்தில் தமிழக முதல் - அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து குடியாத்தத்தில் தியாகி அண்ணல் தங்கோ சிலை வைப்பதற்கான இடத்தை தேர்வு செய்யும் பணிகளை வேலூர் கலெக்டர் குமாரவேல்பாண்டியன் ஆய்வு செய்தார்.
குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகில், காமராஜர் பாலம் அருகில் உள்ள நேரு பூங்கா மற்றும் மேல்பட்டி ரோட்டில் உள்ள அய்யாசாமி தெரு ஆகிய பகுதிகளில் அண்ணல் தங்கோ சிலை வைப்பதற்கு ஏதுவான இடங்களை பார்வையிட்டார்.
இந்த ஆய்வின்போது குடியாத்தம் எம்.எல்.ஏ. அமலுவிஜயன், குடியாத்தம் உதவி கலெக்டர் வெங்க டராமன், குடியாத்தம் நகர மன்ற தலைவர் எஸ்.சவுந்தரராஜன், குடியாத்தம் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமமூர்த்தி, தாசில்தார் விஜயகுமார், நகராட்சி பொறியாளர் சிசில்தாமஸ், டவுன் போலீஸ் இன்ஸ்பெ க்டர் லட்சுமி, நகர மன்ற உறுப்பினர் நவீன்சங்கர் உள்பட வருவாய்த்துறை அதிகாரிகள், நகராட்சி அதிகாரிகள் உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.
- வாலிபர் கைது
- பஸ் நிலையத்தில் தவிக்க விட்டு சென்ற பரிதாபம்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், அணைக்கட்டு அடுத்த ஒடுகத்தூர் பகுதியை சேர்ந்தவர் விஸ்வநாதன் (25), வெல்டிங் ஷாப் நடத்தி வருகிறார். இவர் அருகிலுள்ள ஒரு பகுதியை சேர்ந்த 15 வயது சிறுமியை காதலிப்பதாக கூறி பழகி வந்துள்ளார்.
மேலும் விஸ்வநாதன், சிறுமியை கடந்த 22-ந் தேதி ஆசை வார்த்தைகள் கூறி கடத்திச் சென்றார். அதே பகுதியில் உள்ள கோவிலில் சிறுமியை திருமணம் செய்து கொண்டு, விஸ்வநாதன் நண்பர் வீட்டிற்கு அழைத்து சென்றார். அன்றிரவு தங்கி உள்ளார். அப்போது சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்ததாக கூறப்படுகிறது.
பின்னர் விஸ்வநாதன் கடந்த 24-ந் தேதி குடியாத்தம் பஸ் நிலையத்தில் சிறுமியை தவிக்கவிட்டு சென்றுவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த சிறுமி தனது பெற்றோருக்கு செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார்.
சிறுமியை மீட்ட பெற்றோர், வேலூர் அனைத்து மகளிர் போலீசில் புகார் அளித்தனர். அதன்பேரில் போலீசார் விஸ்வநாதன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் தலைமறைவாக இருந்த விஸ்வநாதனை போலீசார் கைது செய்தனர்.
- கெங்கையம்மன் சிரசு (தலை) உடல் மீது பொருத்தப்படுவதை, சிரசு ஏற்றம் என்று அழைக்கப்படுகிறது.
- தலை உடலுடன் சேரும்போது அம்மனுக்கு அதீத சக்தி மற்றும் உயிர் வரும் என முன்னோர் காலத்தில் இருந்து நம்பப்படுகிறது.
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், ஒடுகத்தூர் அடுத்த மராட்டியபாளையம் அருகே உள்ள ஏ.புதூர் சுப்புநாயுடு பாளையம் கிராமத்தில் கெங்கையம்மன் சிரசு திருவிழா நேற்று நடந்தது.
காலை 10 மணி அளவில் சிரசு ஏற்றம் நிகழ்ச்சி நடந்தது. அப்போது கெங்கையம்மனுக்கு எருமைக்கிடா பலி கொடுக்கப்பட்டது.
அதேபோல் எருமையின் முன்னங்கால்கள் வெட்டி கோவில் வாசப்படிகளிலும், பின்பகுதி கால்கள் வெட்டி கோவில் பின்புறத்திலும் வைக்கப்பட்டன.
மேலும் வெட்டப்பட்ட எருமை கிடா தலையை கோவில் முன்பு வைத்து அதன் தலைமீது விளக்கேற்றி வைத்து, கிராம மக்கள் வினோத வழிபாடு செய்தனர்.
இதை தொடர்ந்து கெங்கை அம்மனுக்கு ஆடு, கோழிகளை பலியிட்டு பக்தர்கள் நேர்த்தி கடனை செலுத்தினர்.
இது குறித்து கிராம மக்கள் கூறியதாவது:-
கெங்கையம்மன் சிரசு (தலை) உடல் மீது பொருத்தப்படுவதை, சிரசு ஏற்றம் என்று அழைக்கப்படுகிறது. அவ்வாறு தலை உடலுடன் சேரும்போது அம்மனுக்கு அதீத சக்தி மற்றும் உயிர் வரும் என முன்னோர் காலத்தில் இருந்து நம்பப்படுகிறது.
மேலும் ஆக்ரோஷமான அம்மன் என்பதால், கெங்கை அம்மனின் கோபத்தை தணிக்க சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகின்றது. கிராம மக்கள் நோய் நொடியின்றி செழிப்புடன் வாழ முதல் பலியாக எருமைக்கிடா பலி கொடுப்பது வழக்கம்.
அதன்படி பலி கொடுக்கப்பட்ட எருமை கிடா உடல் பாகங்கள் கோவிலை சுற்றி வைக்கப்படுகிறது.
மேலும் மழை பொழிய வேண்டி பலியிடப்பட்ட எருமைக்கடா தலை மீது விளக்கேற்றி வைத்தால் மழை பெய்யும் என்று நம்பப்படுகிறது.
இதனை ஒவ்வொரு ஆண்டும் நாங்கள் கடைபிடித்து வருகிறோம் என்றனர்.
- போலீஸ் நிலையத்தில் ஒப்படைப்பு
- ரூ.85 ஆயிரம் பணம், குழந்தை கால்செயின் உள் ளிட்ட நகைகள் இருந்தன
வேலூர்:
வேலூர் முள்ளிப்பாளையத்தை சேர்ந்தவர் வெங்கடேசன், ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறார். இவர் மோட்டார் சைக்கிளில் நண்பர் அறிவழகனுடன் கொண வட்டம் பகுதியில் சென்று கொண்டிருந்தார்.
அப்போது முன்னால் சென்று கொண்டிருந்த ஆட்டோவில் இருந்து பை ஒன்று கீழே விழுந்தது. இதைக்கண்ட வெங்கடேசன் மோட் டார் சைக்கிளை உடனடியாக நிறுத்தி அந்த பையை எடுத் துக்கொண்டு ஆட்டோவை பின்தொடர்ந்து சென்றார். போக்குவரத்து நெரிசல் காரணமாக சிறிதுதூரத்துக்கு பின்னர் அவரால் அதனை பின்தொடர முடியவில்லை.
ஆட்டோ எதுவென்று தெரியாததால் வெங்கடேசன் வேலூர் வடக்கு போலீஸ் நிலையத்தில் அந்த பையை ஒப்படைத்தார். அந்த பையில் ரூ.85 ஆயிரம் பணம், குழந்தை கால்செயின் உள் ளிட்ட நகைகள் இருந்தன. இதுதொடர்பாக இன்ஸ்பெக்டர் சீனிவாசன் விசாரணை நடத்தி வருகிறார்.






