என் மலர்
உள்ளூர் செய்திகள்

மரப்பட்டறையில் தீப்பற்றி எரிந்த காட்சி.
மரப்பட்டறையில் பயங்கர தீ விபத்து
- ரூ.30 லட்சம் பொருட்கள் எரிந்து நாசம்
- தீயணைப்பு துறையினர் போராடி தீயை அணைத்தனர்
வேலூர்:
வேலூர் விருப்பாட்சி புரத்தை சேர்ந்தவர் சுபாஷ் இவர் சாய்நாதபுரம் புதிய தெருவில் மரம் இழைக்கும் பட்டறை நடத்தி வருகிறார்.
நேற்று முன்தினம் வழக்கம் போல் பட்டறையை மூடிவிட்டு வீட்டிற்கு சென்றார். நேற்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறை என்பதால் மரப்பட்டறை திறக்கவில்லை.
இந்த நிலையில் இன்று அதிகாலை 3 மணி அளவில் மரப்பட்டறையில் இருந்து திடீரென புகை வந்தது. இதனைக் கண்ட அக்கம் பக்கத்தினர் பாகாயம் போலீஸ் மற்றும் வேலூர் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
அதற்குள் மரப்பட்டையில் இருந்த மரங்களில் தீப்பிடித்து மரம் இழைக்கும் எந்திரங்கள் மற்றும் மர சாமான்கள் முழுவதும் எரிந்து தீக்கிரையானது.
சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் நீண்ட நேரம் போராடி தீயை அணைத்தனர்.
இது குறித்து பாகாயம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர்.
முதற்கட்ட விசாரணையில் மின் கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாகவும் தீ விபத்தில் ரூ.30 லட்சம் மதிப்பிலான மரம் இழைக்கும் எந்திரங்கள் மற்றும் மர சாமான்கள் எரிந்து நாசமானதாக தெரிவித்தனர்.






