என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி
    X

    வேலூர் கலெக்டர் குமாரவேல் பாண்டியன், கார்த்திகேயன் எம்.எல்.ஏ., மேயர் சுஜாதா, டி.ஐ.ஜி.முத்துசாமி, போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் பேரணியில் சென்ற காட்சி.

    போதைப்பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு பேரணி

    • கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தொடங்கி வைத்தார்
    • மக்கான் சிக்னல், அண்ணா சாலை வழியாக நேதாஜி மைதானத்தில் நிறைவடைந்தது

    வேலூர்:

    சர்வதேச போதை பொருள் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுவிலக்கு மற்றும் ஆய தீர்வை துறை சார்பில் விழிப்புணர்வு பேரணி வேலூர் கோட்டை காந்தி சிலை முன்பாக இன்று தொடங்கியது.

    இந்த நிகழ்ச்சிக்கு வேலூர் கார்த்திகேயன் எம்.எல்.ஏ. மேயர் சுஜாதா, வேலூர் சரக டிஐஜி முத்துசாமி போலீஸ் சூப்பிரண்டு மணிவண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தலைமை தாங்கி விழிப்புணர்வு பேரணியை தொடங்கி வைத்தார்.

    விழிப்புணர்வு பேரணியில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட மாணவர்கள் கலந்து கொண்டு விழிப்புணர்வு பதாகை ஏந்தி போதை பொருளுக்கு எதிராக கோஷமிட்டபடி சென்றனர்.

    மக்கான் சிக்னல் அண்ணா சாலை வழியாக சென்று நேதாஜி மைதா னத்தில் நிறைவடைந்தது.

    Next Story
    ×