என் மலர்
வேலூர்
- விழிபிதுங்கும் சாமானிய மக்கள்
- வேலூரில் நாளுக்கு நாள் உயருகிறது
வேலூர்:
வேலூரில் கடந்த சில நாட்களாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளதால் ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
தமிழகத்தில் தென்மேற்கு பருவமழையின் தாக்கம் மற்றும் விளைச்சல் பாதிப்பு காரணமாக காய்கறிகளின் விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது. ஒவ்வொரு காய்கறி விலையும் புதிய உச்சத்தை நோக்கி நகர்கிறது.காய்கறிகளின் விலை உயர்வு என்பது ஏழை மற்றும் நடுத்தர மக்களின் பொருளாதாரத்தை அசைத்துப் பார்த்துள்ளது.
2 வாரங்களுக்கு முன்பு வாங்கிய காய்கறிகளை தற்போது 2 மடங்குக்கும் கூடுதல் விலையை கொடுத்து வாங்க வேண்டிய நிலைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
காய்கறி விலை உயர்வின் தாக்கம், வேலூர் நேதாஜி மார்க்கெட்டிலும் எதிரொலிக்கிறது. சின்ன வெங்காயம், தக்காளி, பீன்ஸ், பூண்டு, கேரட், பச்சை மிளகாய், இஞ்சி, அவரைக்காய் கருணைக் கிழங்கு, கத்தரிக்காய், நூக்கல், பாகற்காய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை திடீரென உயர்ந்துவிட்டது.
இதேபோல், சுரைக்காய், வெண்டைக்காய், முள்ளங்கி, பீட்ரூட், கொத்தவரை உள்ளிட்ட காய்கறிகளின் விலையும். கணிசமாக உயர்ந்துள்ளன. வெங்காயம், புடலங்காய், உருளை கிழங்கு உள்ளிட்ட காய்கறிகளின் விலையில் மட்டும் மாற்றம் இல்லாமல் தொடர்கிறது.
2 வாரங்களுக்கு முன்பு 35 ரூபாய்-க்கு விற்கப்பட்ட ஒரு கிலோ தக்காளி, தற்போது ரூ.80-க்கு விற்பனையாகிறது. இதேபோல், ஒரு கிலோ பீன்ஸ் ரூ.100-ல் இருந்து ரூ.120, பூண்டு ரூ.140-ல் இருந்து ரூ.160, இஞ்சி ரூ.200-ல் இருந்து ரூ.240, அவரைக்காய் ரூ.80-ல் இருந்து ரூ.100, கத்தரிக்காய் ரூ.60-ல் இருந்து ரூ.80, நூக்கல் ரூ.60-ல் இருந்து ரூ.70, சின்ன வெங்காயம் ரூ.60-ல் இருந்து ரூ.100, பச்சை மிளகாய் ரூ.80-ல் இருந்து ரூ.100 என விற்பனை செய்யப்படுகிறது. இதேபோல், இதர காய்கறிகள் மற்றும் பழங்களின் விலையும் கணிசமாக உயர்ந் துள்ளன.
காய்கறிகளின் விலை உயர்வால் பாதிக்க ப்பட்டுள்ள பொதுமக்கள் கூறும்போது, "அனைத்து தரப்பு மக்களும் காய்கறிகளை அதிகம் பயன்படுத்துகின்றனர். தினசரி பயன்படுத்தும் சின்ன வெங்காயம், தக்காளி, இஞ்சி, பச்சை மிளகாய் உள்ளிட்ட காய்கறிகளின் விலை உயர்வு என்பது எங்களது பொருளாதாரத்தை பெரிய அளவில் பாதிக்கிறது.
காய்கறிகளின் விலையை கட்டுப்படுத்த தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். இதில், குறிப்பாக சின்ன வெங்காயம் மற்றும் தக்காளியின் விலையை கட்டுக்குள் கொண்டுவரவேண்டும்.
மழையால் விளைச்சல் பாதிப்பு, வரத்து குறைவு என கூறி காய்கறிகளின் விலையை வியாபாரிகள் உயர்த்தி உள்ளதாக கூறப்படுகிறது.
எனவே, விலை உயர்த்தப்பட்டுள்ள காய்கறிகளை அரசே கொள்முதல் செய்து நியாய விலைக் கடைகள் மற்றும் வேளாண் துறை சார்பில் நடமாடும் காய்கறி வாகனங்கள் மூலம் விற்பனை செய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- பொதுமக்கள் குற்றச்சாட்டு
- சாலை விரிவாக்கம் பணி நடக்கிறது
அணைக்கட்டு:
ஒடுகத்தூர் பகுதிகளில் சாலை விரிவாக்கம் பணியில் சுமார் 100 ஆண்டுகள் பழமையான புளிய மரங்களை வெட்டி கடத்தப்படுவதாக பொதுமக்கள் குற்றச்சாட்டி வருகின்றன.
வேலூர் முதல் ஒடுகத்தூர் வரை சலையின் இருபுறமும் புளிய மரங்கள் உள்ளன.
பசுமையாகவும், சாலையில் செல்லும் வாகன ஓட்டிகளுக்கு நிழலாகவும் குளிர்ச்சி யாகவும் காற்றோட்டம் நிறைந்ததா கவும் காட்சியளிக்கின்றன புளிய மரங்கள் சுமார் 100 ஆண்டுகள் பழமையானதாக கூறப்படுகின்றது.
தற்போது சாலை விரிவாக்கம் பணியல் ஒரு சில மரங்களை வெட்ட அனுமதி வழங்கப்ப ட்டுள்ளது.
ஆனால் கூடுதலாக மரங்களை வெட்டி வருவ தாகவும் பொதுமக்கள் குற்றம் சாட்டுகின்றனர். இதனால் அதிகமான மரங்கள் வெட்டி கடத்தப்படு வதாகவும், பசுமை நிறைந்து காணப்படும் சாலை தற்போது வெயில் மட்டுமே சுட்டெரிக்கின்றது.
இதனைத் தொடர்ந்து ஒடுகத்தூரில் உள்ள அரசு ஆரம்ப பள்ளியில் சுமார் 10 ஆண்டுகளுக்கு மேலாக இருந்த வேப்பமரங்கள், புங்க மரங்கள் என 5-க்கும் மேற்ப்பட்ட மரங்களை எவ்வித அனுமதியின்றி வெட்டப்பட்டுள்ளன.
அனுமதி வழங்கிய மரங்களை மட்டுமே வெட்ட வேண்டும் மேலும் பொது மக்களுக்கும், வாகன ஓட்டிகளுக்கு இடையூறு இல்லாத மரங்களை வெட்ட வே்டாம்.
பள்ளிகளில் வளர்க்கப்படும் மரங்கள் குழந்தைகளுக்கு பாதுகாப்பு அளிக்கின்ற மரங்களாக கருதி அவற்றை அளிக்க வேண்டாம் எனவும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
- மது போதையால் சீரழிந்ததால் வாழ்க்கையில் விரக்தி
- மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்
வேலூர்:
வேலூர் ஆர்.என்.பாளையம், பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜிகுமார் (வயது 27). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த ராஜிகுமாரின் மனைவி கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு ராஜிகுமார் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த ராஜிகுமார் நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார்.
உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்ற ராஜிகுமார் இரவு 10 மணி அளவில் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ராஜேந்திரன் இது குறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜிகுமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா விசாரணை நடத்தி வருகின்றனர்.
- கலெக்டர், எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தனர்
- கோமாரி மற்றும் அம்மை தடுப்பூசி போடப்பட்டது
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம், கணியம்பாடி அடுத்த நஞ்சுண்டாபுரத்தில் கால்நடை பராமரிப்புதுறை மற்றும் கூட்டுறவு பால் உற்பத்தியாளர்கள் சார்பில் கால்நடை சிறப்பு மருத்துவ முகாம் இன்று நடந்தது.
ஊராட்சி மன்ற தலைவர் சீதா தமிழ்செல்வன் தலைமை தாங்கினார்.
கணியம்பாடி ஒன்றிய குழு தலைவர் திவ்யாக மல்பிரசாத், துணை தலைவர் கஜேந்திரன், மாவட்ட கவுன்சிலர் தேவி சிவா, தி.மு.க. ஒன்றிய செயலாளர் கலைச்சந்தர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ராஜன்பாபு, கவுரி ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஊராட்சி மன்ற துணை தலைவர் கன்னியப்பன் வரவேற்றார்.
முகாமின் சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் மற்றும் ஆற்காடு எம்.எல்.ஏ. ஈஸ்வரப்பன் ஆகியோர் கலந்து கொண்டு முகாமை தொடங்கி வைத்து பேசினர்.
இதில் கலந்து கொண்ட 200-க்கும் மேற்பட்ட, கால்நடைகளுக்கு கோமாரி மற்றும் அம்மை தடுப்பூசி போடுதல், குடற்புழு நீக்கும் மருந்து வழங்குதல், சினை நிற்காத கால்நடைகளுக்கு மலட்டுத்தன்மை நீக்குதல் உள்ளிட்ட சிகிச்சைகள் அளிக்கப்பட்டது.
- போலீசார் ரோந்து பணியில் சிக்கினார்
- 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல்
அணைக்கட்டு:
அணைக்கட்டு அடுத்த ஓங்கபாடி ஆற்றங்கரையில் சட்டவிரோதமாக கள்ளச்சாராயம் விற்பனை செய்யப்படுவதாக வேப்பங்குப்பம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
தகவலின் பேரில் இன்ஸ்பெக்டர் பழனிமுத்து மற்றும் போலீசார் நேற்று அப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
அப்போது அங்குள்ள ஆற்றங்கரை படுக்கையில் திருட்டுத்தனமாக கள்ளச்சாராயம் விற்று கொண்டிருந்த வாலிபரை பிடித்து விசாரணை செய்தனர்.
அதில் அவர் வாழைப்பந்தல் கிராமத்தை சேர்ந்த அஜித் (வயது 23), என்பது தெரியவந்தது. இதையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடம் இருந்து சுமார் 104 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர்.
- சாலையில் சைக்கிளில் சென்று கொண்டிருந்த நபரை அச்சுறுத்தும் வகையில் நடந்து கொண்டனர்
- தட்டி கேட்ட வாகன ஓட்டி மீது தாக்குதல்
வேலூர்:
வேலூர் பழைய பஸ் நிலை யத்தில் இருந்து ஆற்காடு சாலை வழியாக செல்லும் அரசு பஸ்களில் மாலைநேரத் தில் மாணவர்கள் அதிக அளவில் பயணிக்கின்றனர். குறிப்பாக தெங்கால் செல்லும் அரசு டவுன் பஸ்சில் அள வுக்கு அதிகமான மாணவர் கள் தினமும் படிக்கட்டுகளில் தொங்கிக்கொண்டு செல்கின் றனர்.
இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல் பழைய பஸ் நிலையத்தில் இருந்து தெங்கால் சென்ற அரசு பஸ்சில் படிக்கட்டில் தொங்கி கொண்டு மாணவர் கள் சென்றனர்.
காகிதப்பட்டறை வழியாக பஸ் சென்று கொண்டிருந்த போது, சாலையில் சைக்கி ளில் சென்று கொண்டிருந்த நபரை அச்சுறுத்தும் விதமாக மாணவர் ஒருவர் கையை ஓங்கி முதுகில் தட்டினார்.
அதனைக் கண்ட இருசக் கர வாகன ஓட்டி ஒருவர் மாணவர்களை தட்டி கேட்ட துடன், படிக்கட்டில் தொங் காமல் பஸ் உள்ளே சென்று பாதுகாப்பாக பயணம் செய் யும்படி கூறினார். பொதுமக்களின் அறிவு ரையை கேட்க பொறுமை இல்லாத மாணவர்கள், படிக்கட்டில் இருந்து குதித்து இரு சக்கர வாகன ஓட்டியை தாக்கினர்.
இதில் அந்த வாகன ஓட்டி காயமடைந்தார். இந்த சம்பவத்தை கண்டு அக்கம் பக்கத்தில் நின்ற பொதுமக்கள் கூடியவுடன் அந்த மாணவர்கள் வாகன நெரிசலுக்குள் புகுந்து ஓடி மறைந்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
தகவல் அறிந்த போக்குவரத்து போலீசார், கலெக்டர் அலுவலகம் அருகே மேம்பா லத்துக்கு அடியில் பஸ்சை மறித்து, மாணவர்கள் அனை வரையும் பஸ்சின் உள்ளே சென்று பாதுகாப்பாக செல் லும்படி நடவடிக்கை எடுத்ததுடன், தொங்கிக்கொண்டு சென்ற மாணவர்களை எச்சரித்து அனுப்பினார்.
- போக்குவரத்து பாதிப்பு
- போலீசார் பேச்சுவார்த்தை
வேலூர்:
வேலூர் கொணவட்டம், வசந்தம் நகரில் சுமார் 600-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர்.
வேலூர் மாநகராட்சி நிர்வாகம் சார்பில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் வசந்தம் நகரில் உள்ள 6 தெருக்களில் தார் சாலை போட நடவடிக்கை எடுக்கப்பட்டது.
இந்த தெருக்களில் இதுவரை கழிவுநீர் கால்வாய் வசதி செய்யப்படவில்லை.
எனவே கழிவுநீர் கால்வாய் கட்டிய பிறகே, தார் சாலை போட வேண்டுமென அந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இந்த நிலையில் இன்று 6 தெருக்களிலும் சாலை அமைக்கும் பணி விறுவிறுப்பாக நடந்தது.
இதனால் ஆத்திரமடைந்த அந்த பகுதி மக்கள் திரண்டு சென்று, தார் சாலை போடும் பணியை தடுத்து நிறுத்தினார்.
மேலும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் கருகம்புத்தூர் சர்வீஸ் சாலைக்கு சென்று மறியலில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்த மாநகராட்சி என்ஜினீயர் ரவிச்சந்திரன், வடக்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சீனிவாசன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர்.
போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகள், கழிவுநீர் கால்வாய் அமைக்கப்பட்ட பிறகே தார் சாலை போடப்படும்.
பொதுமக்கள் தெருக்களில் உள்ள ஆக்கிரமிப்புகளை தாங்களாகவே அகற்ற வேண்டும் என கூறினர். இதனை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அனைவரும், மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதனால் சிறிது நேரம் போக்குவரத்து பாதித்தது.
- கலெக்டர் தகவல்
- நாளை கடைசி நாள்
வேலூர்:
தமிழக அரசின் சார்பில் ஆண்டுதோறும் பல்வேறு துறைகளில் மற்றும் சமூ கத்தில் வீரத்துடனும், துணிச்சலுடனும் சாதனை செயல்கள் புரிந்த பெண்களுக்கு "கல்பனா சாவ்லா" விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டு வருகிறது.
அதன்படி இந்த ஆண்டிற்கான கல்பனா சாவ்லா விருதுக்கான விண்ணப்பங்கள் வரவேற் கப்படுகின்றன. பெண்கள் தாங்கள் புரிந்த சாதனைகளை விரிவாக எழுதி "கல்பனா சாவ்லா" விருதுக்கான விண்ணப் பம் என்று குறிப்பிட்டு அனுப்ப வேண்டும்.
மேலும் விருதுக்கான விவரங்களை http://awards.tn.gov.in என்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம்.
பூர்த்தி செய்த விண்ணப்பங்களை தபால் மூலம் உறுப்பினர் செயலர், தமிழ் நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம், நேரு விளை யாட்டரங்கம், பெரியமேடு, சென்னை-03 என்ற முகவரிக்கு நாளைக்குள் (புதன்கிழமை) கிடைக்கும்படி அனுப்பிவைக்க வேண்டும்.
கூடுதல் விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர்நலன் அலுவலரை தொடர்பு கொள்ளலாம். இந்த தகவலை வேலூர் மாவட்ட கலெக்டர் குமாரவேல் பாண்டியன் தெரிவித்துள்ளார்.
- தனியாக 10 படுக்கை வசதிகள் கொண்டது
- கல்லூரி முதல்வர் குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார்
வேலூர்:
வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அறுவை சிகிச்சை துறை சார்பில் நுண்கிருமி அறுவை சிகிச்சை பிரிவு நேற்று தொடங்கப்பட்டது.
விழாவை கல்லூரி முதல்வர் பாப்பாத்தி குத்து விளக்கேற்றி தொடங்கி வைத்தார். பின்னர் அவர் பேசியதாவது:-
அறுவை சிகிச்சை பிரிவு பொதுவாக அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளையும், நுன்கிருமி அறுவை சிகிச்சை செய்யும் நோயாளிகளையும் ஒரே வார்டில் வைத்து சிகிச்சை அளிக்கும் போது நுண்கிருமி நோயாளிகளால் அறுவை சிகிச்சை நோயாளிகளுக்கு தொற்று ஏற்படும் அபாயம் உள்ளது.
இதனால் நுண்கிருமியால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு என்று தனியாக 10 படுக்கை வசதிகள் கொண்ட நுண்கிருமி அறுவை சிகிச்சை பிரிவு தொடங்கப்பட்டுள்ளது என்றார்.
தலைவர் ராஜவேலு, மருத்துவ கண்காணிப்பாளர் ரதி திலகம், ஆர்.எம்.ஓ இன்பராஜ்,துறை பேராசிரியர்கள் லோகநாதன், கோமதி மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.
- சேற்றில் சிக்கிய சக்கரத்தை மீட்க முயன்ற போது பரிதாபம்
- போலீசார் விசாரணை
பேரணாம்பட்டு:
பேரணாம்பட்டு டவுன் தரைக்காடு பகுதி, அல்லி மஜித் தெருவை சேர்ந்தவர் மெகபூப் பாஷா, கூலி தொழிலாளி. இவரது மகன் அப்துல்ரஹ்மான் (வயது 17), இஸ்லாமியா மேல்நிலைப்பள்ளி தெருவில் உள்ள ஒரு இரும்பு வெல்டிங் ஒர்க் ஷாப்பில் தொழிலா ளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலை யில் நேற்று காலை லோடு ஆட்டோவில் இரும்பு சட்டங்களை ஏற்றி கொண்டு அப் துல்ரஹ்மான் ஆட்டோவை ஓட்டி சென்றார். வீ.கோட்டா ரோடு தனியார் பள்ளி பின்புறம் அருகில் உள்ள ஒரு குடோனுக்கு சென்றபோது ஆட்டோவின் பின் சக்கரம் சேற்றில் சிக்கியது.
இதனையறிந்த அப்துல்ரஹ்மான் இறங்கி சென்று சேற்றில் சிக்கிய ஆட்டோவை தள்ள முயன்றார். திடீரென ஆட்டோ கவிழ்ந்தது. அப்போது இரும்பு சட்டங்கள் அவர் மீது விழுந்ததால் இடிபாடு களில் சிக்கி படுகாயம் அடைந்து சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவலறிந்த பேரணாம்பட்டு போலீஸ் சிறப்பு சப்- இன்ஸ்பெக்டர் ராமலிங்கம் மற்றும் போலீசார் சென்று அப்துல் ரஹ்மான் பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பேரணாம்பட்டு அரசு மருத் துவமனைக்கு அனுப்பி வைத்தார். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- உறவினர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் முற்றுகை
- முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
வேலூர்:
காட்பாடி திருவலம் சாலையில் உள்ள பழைய காட்பாடி சினிமா தியேட்டர் அருகே பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இரவு நேர காவலராக பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 65) என்பவர் பணியாற்றி வந்தார்.
நேற்று இரவு ராமமூர்த்தி வழக்கம் போல பணிக்கு வந்தார். அவர் பணிக்கு வந்த சிறிது நேரத்தில் பள்ளி நுழைவாயிலில் இருந்த பெரிய இரும்பு கேட் அவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தி இறந்தார்.
இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினர் மற்றும் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இரவு நேரத்தில் கேட் விழுந்ததால் காவலாளி பலியாகி உள்ளார். பகல்நேரத்தில் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.
இதற்கிடையே ராமமூர்த்தியின் உறவினர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.
இரும்பு கேட் தானாக விழ வாய்ப்பு குறைவு. அவரது சாவில் சந்தேகம் உள்ளது.
இது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
- விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது
- ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்
அணைக்கட்டு:
வேலூர் மாவட்டம் அணைக்கட்டு தாலுக்கா, அன்பூண்டி ஊராட்சியில் நேற்று தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளின் மூலம் பாரத பிரதமரின் காப்பீட்டு திட்டம் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைப்பெற்றது.
மண்டல மேலாளர் ஜான்வெட் மற்றும் நிதி சேர்க்கை மேலாளர் கோகுல கண்ணன் ஆகியோர் தலைமை தாங்கினர். ஊராட்சி மன்ற தலைவர் உஷாராணி ரஜினி வரவேற்று பேசினார்.
இதில் சிறப்பு அழைப்பாளராக பொது இயக்குனர் ஜெயஸ்ரீ கலந்து கொண்டு பேசினார். இதில் முன்னோடி வங்கி மேலாளர் ஜாமல் மொய்தீன் மற்றும் வங்கியின் அலுவலக பணியாளர்கள் பொதுமக்கள் என ஏராளமானோர் கலந்துக்கொண்டனர்.






