என் மலர்
நீங்கள் தேடியது "ேமஸ்திரி தற்கொலை"
- மது போதையால் சீரழிந்ததால் வாழ்க்கையில் விரக்தி
- மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்
வேலூர்:
வேலூர் ஆர்.என்.பாளையம், பச்சையப்பன் தெருவை சேர்ந்தவர் ராஜேந்திரன். இவரது மகன் ராஜிகுமார் (வயது 27). கட்டிட மேஸ்திரியாக வேலை செய்து வந்தார்.
கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு இளம் பெண் ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ராஜிகுமாருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததால் தினமும் குடித்துவிட்டு வந்து மனைவியிடம் தகராறு செய்து வந்தார்.
இதனால் விரக்தி அடைந்த ராஜிகுமாரின் மனைவி கணவனை விட்டு பிரிந்து தனது தாய் வீட்டுக்கு சென்று விட்டார். மாமியார் வீட்டிற்கு சென்று மனைவியை தன்னுடன் குடும்ப நடத்த வருமாறு ராஜிகுமார் அடிக்கடி வற்புறுத்தி வந்தார். இதற்கு அவரது மனைவி மறுப்பு தெரிவித்ததால் விரக்தியில் இருந்த ராஜிகுமார் நேற்று இரவு மது போதையில் வீட்டிற்கு வந்து உள்ளார்.
உணவு சாப்பிட்டு விட்டு தனது அறைக்கு சென்ற ராஜிகுமார் இரவு 10 மணி அளவில் அறையில் இருந்த மின்விசிறியில் தூக்கில் பிணமாக தொங்கினார்.
இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த அவரது தந்தை ராஜேந்திரன் இது குறித்து வேலூர் தெற்கு போலீசில் புகார் செய்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ராஜிகுமாரின் பிணத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் போலீசார் வழக்கு பதிவு செய்து மனைவி பிரிந்து சென்ற விரக்தியில் தற்கொலை செய்தாரா அல்லது வேறு ஏதாவது காரணமா விசாரணை நடத்தி வருகின்றனர்.






