என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    காட்பாடி தனியார் பள்ளியில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி
    X

    இரும்பு கேட் விழுந்து இறந்த காவலாளியை படத்தில் காணலாம்.

    காட்பாடி தனியார் பள்ளியில் இரும்பு கேட் விழுந்து காவலாளி பலி

    • உறவினர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் முற்றுகை
    • முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

    வேலூர்:

    காட்பாடி திருவலம் சாலையில் உள்ள பழைய காட்பாடி சினிமா தியேட்டர் அருகே பிரபல தனியார் பள்ளி இயங்கி வருகிறது. இந்த பள்ளியில் இரவு நேர காவலராக பிரம்மபுரத்தை சேர்ந்த ராமமூர்த்தி (வயது 65) என்பவர் பணியாற்றி வந்தார்.

    நேற்று இரவு ராமமூர்த்தி வழக்கம் போல பணிக்கு வந்தார். அவர் பணிக்கு வந்த சிறிது நேரத்தில் பள்ளி நுழைவாயிலில் இருந்த பெரிய இரும்பு கேட் அவர் மீது விழுந்ததாக கூறப்படுகிறது. இதில் தலையில் பலத்த காயமடைந்த ராமமூர்த்தி இறந்தார்.

    இது குறித்து அவரது குடும்பத்தினருக்கு தகவல் தெரிவித்தனர். அவரது குடும்பத்தினர் மற்றும் காட்பாடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். போலீசார் உடலை கைப்பற்றி அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

    இரவு நேரத்தில் கேட் விழுந்ததால் காவலாளி பலியாகி உள்ளார். பகல்நேரத்தில் இந்த நிலை ஏற்பட்டிருந்தால் மாணவ மாணவிகள் பெரிதும் பாதிக்கப்பட்டிருப்பார்கள்.

    இதற்கிடையே ராமமூர்த்தியின் உறவினர்கள் காட்பாடி போலீஸ் நிலையத்தில் முற்றுகையிட்டனர்.

    இரும்பு கேட் தானாக விழ வாய்ப்பு குறைவு. அவரது சாவில் சந்தேகம் உள்ளது.

    இது குறித்து முறையான விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தினர். இந்த சம்பவம் காட்பாடியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    Next Story
    ×