என் மலர்
நீங்கள் தேடியது "ரூ.2 லட்சம் மதிப்பிலான இருக்கைகள்"
- அமலு விஜயன் எம்.எல்.ஏ. வழங்கினார்
- முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அக்ராவரம் அரசினர் மேல்நிலைப் பள்ளிக்கு குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து மாணவர்களுக்கு 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான இருக்கைகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பு சங்கீதா தலைமை தாங்கினார்.
ஒன்றியக்குழு உறுப்பினர் மனோகரன், ஊராட்சி மன்றத்தலைவர் முனிசாமி, துணைத்தலைவர் தமிழரசி பிரபாகரன், முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மஞ்சுளாவே ல்முருகன், சத்தியமூர்த்தி, சேட்டு ஆகியோர் முன்னிலை வகித்தனர். குடியாத்தம் மேற்கு ஒன்றிய செயலாளர் கள்ளூர்ரவி வாழ்த்துரை வழங்கினார்.
சிறப்பு அழைப்பாளராக குடியாத்தம் சட்டமன்ற உறுப்பினர் அமலுவிஜயன் கலந்து கொண்டு சட்டமன்ற உறுப்பினர் நிதியிலிருந்து 2 லட்சம் ரூபாய் மதிப்பிலான மாணவர்களுக்கான இருக்கைகளை வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் தொலைபேசி ஆலோசனைகுழு உறுப்பினர் எம். சத்தியமூர்த்தி உள்பட ஆசிரியர்கள் பெற்றோர் ஆசிரியர் கழக நிர்வாகிகள், கிராம கல்வி குழு நிர்வாகிகள், ஊர் முக்கிய பிரமுகர்கள் பலர் கலந்து கொண்டனர்.






