என் மலர்
உள்ளூர் செய்திகள்

விபத்தில் சேதமடைந்த ஆட்டோ.
ஆட்டோ மீது லாரி மோதி டிரைவர் பலி
- சவாரி செல்ல பஸ் நிலையம் சென்ற போது பரிதாபம்
- பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோஸ்மணி (வயது 54) இவருக்கு மாலா என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.
கோஸ்மணி குடியாத்தம் பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டிலிருந்து ஆட்டோ சவாரி செல்ல குடியாத்தம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.
பலமநேர்ரோடு ஆனைகட்டிகணபதிதெரு சந்திப்பு அருகே வரும்போது குடியாத்தத்தில் இருந்து பரதராமி நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
கோஸ்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோஸ்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலை நேரத்தில் கோஸ்மணி ஆட்டோ ஒட்டி வரும்போது வழியில் பஸ்நிலையம் செல்ல பயணிகள் அதில் ஏறுவார்கள்.
ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.






