என் மலர்
நீங்கள் தேடியது "லாரி மோதி டிரைவர் பலி"
- சவாரி செல்ல பஸ் நிலையம் சென்ற போது பரிதாபம்
- பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது
குடியாத்தம்:
வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த ஆர். வெங்கடாபுரம் கிராமத்தை சேர்ந்தவர் கோஸ்மணி (வயது 54) இவருக்கு மாலா என்ற மனைவியும் 3 மகன்கள் உள்ளனர்.
கோஸ்மணி குடியாத்தம் பஸ் நிலையத்தில் ஆட்டோ ஓட்டி வந்தார். இந்நிலையில் இன்று அதிகாலையில் வீட்டிலிருந்து ஆட்டோ சவாரி செல்ல குடியாத்தம் பஸ் நிலையத்திற்கு வந்து கொண்டு இருந்தார்.
பலமநேர்ரோடு ஆனைகட்டிகணபதிதெரு சந்திப்பு அருகே வரும்போது குடியாத்தத்தில் இருந்து பரதராமி நோக்கிச் சென்ற லாரி எதிர்பாராத விதமாக ஆட்டோ மீது மோதியது.
கோஸ்மணி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார். இந்த விபத்து குறித்து தகவல் அறிந்ததும் குடியாத்தம் டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கோஸ்மணியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குடியாத்தம் அரசு மருத்துவ மனைக்கு அனுப்பி வைத்தனர்.
அதிகாலை நேரத்தில் கோஸ்மணி ஆட்டோ ஒட்டி வரும்போது வழியில் பஸ்நிலையம் செல்ல பயணிகள் அதில் ஏறுவார்கள்.
ஆட்டோவில் பயணிகள் யாரும் இல்லாததால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது.
- கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). லாரி டிரைவர்.
- லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது.
குமாரபாளையம்:
திருவண்ணாமலை மாவட்டம் கொழுந்தப்பட்டு அருகே உள்ள குப்பந்தாங்கல் மேட்டுத்தெருவை சேர்ந்தவர் முரளி (28). லாரி டிரைவர்.
டயர் வெடித்தது
சம்பவத்தன்று இவரும் கிளீனர் பிரபாகரன் என்பவரும் கோவையிலிருந்து லாரியில் அலுமினிய பொருள்களை ஏற்றிக்கொண்டு சென்னையை நோக்கி சென்று கொண்டி ருந்தனர். இந்த லாரி குமாரபாளையத்தை கடந்து பல்லக்காபாளையம் அருகே சென்று கொண்டிருந்தபோது லாரியின் முன்பக்க டயர் வெடித்து பஞ்சராகி நிலை தடுமாறியது. இருப்பினும் டிரைவர் முரளி பிரேக் போட்டு லாரியை சமர்த்தியமாக நிறுத்தினார்.
கண்டெய்னர் லாரி மோதல்
அப்போது கோவை யிலிருந்து சேலம் நோக்கிச் சென்ற கண்டெய்னர் லாரி, பழுதடைந்து நின்ற லாரியின் பின்பகுதியில் பலமாக மோதியது. இதில் கண்டெய்னர் லாரியின் முன் பகுதி நொறுங்கி டிரைவரும், கிளீனரும் லாரிக்குள் சிக்கிக் கொண்டனர். இதுகுறித்து குமாரபாளையம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
டிரைவர் பலி
உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர். 2 மணி நேரம் போராடி டிரைவர் மற்றும் கிளீனரை வெளியே எடுத்தனர். படுகாயம் அடைந்த இருவரும் குமாரபாளையம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலன் இல்லாமல் கண்டெய்னர் லாரியின் டிரைவர் இறந்துவிட்டார். கிளீனர் மேல் சிகிச்சைக்காக ஈரோடு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
போலீசார் நடத்திய விசாரணையில் இறந்த லாரி டிரைவர் தூத்துக்குடி மாவட்டம் சாத்தான்குளம் வட்டம் சங்கரன் குடியிருப்பு வடக்குத் தெருவை சேர்ந்த முத்துராஜ் (50), கிளீனர் முருகன் என்பது தெரியவந்தது. இதையடுத்து விபத்து குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






