என் மலர்
திருவண்ணாமலை
- செய்யாறு ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்
வெம்பாக்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் வெம்பாக்கம் பகுதியில் உள்ள 13 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு செய்யாறு ஓ.ஜோதி எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 1,384 பேருக்கு இலவச சைக்கிள்களை வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
நிகழ்ச்சிக்கு வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் மாமண்டூர் டி ராஜு தலைமை தாங்கினார்.
மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் முன்னிலை வகித்தார். வெம்பாக்கம் மத்திய ஒன்றிய கழகச் செயலாளர் ஜே சி கே சீனிவாசன் வெம்பாக்கம் கிழக்கு ஒன்றிய செயலாளர் என் சங்கர் வெம்பாக்கம் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் தினகரன் மற்றும் அரசு அதிகாரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்.
- டிரைவர் படுகாயம்
- சாலையோரம் ஒதுங்கியதால் விபத்து
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, அருகே உள்ள, செவரப்பூண்டி, கிராமத்தை சேர்ந்தவர் சரவணன் (வயது 41) கூலி தொழிலாளி சரவணன், அவருக்கு சொந்தமான இடத்தில் வீடு கட்டும் பணியில் ஈடுபட்டு வருகிறார்.
வீடு கட்டுவதற்காக எம் சாண்ட் மணல் தேவைப்பட்டதால் சரவணன், பெரணமல்லூர் அருகே உள்ள தனியாருக்கு சொந்தமான குவாரிக்கு எம்சாண்ட் எடுத்துவருவதற்காக செவரப்பூண்டி, கிராமத்திற்கு டிரகட்ரில் சென்றார். அங்கிருந்து டிராக்டர் மூலம் எம்சாண்ட்டை ஏற்றி கொண்டு செவரப்பூண்டி, கிராமத்திற்கு திரும்பி கொண்டு இருந்தார்.
டிராக்டரைஅதே கிராமத்தை சேர்ந்த கார்த்திக், என்பவர் ஓட்டி வந்தார். டிராக்டர் செவரப்பூண்டி கிராமத்தின் அருகே சென்றபோது சாலையில் எதிரே வந்த ஆட்டோவிற்காக வழி விடுவதற்காக சாலையின் ஓரம் ஒதுங்கியது.
அப்போது நிலை தடுமாறி சாலையின் ஓரம் இருந்த பள்ளத்தில் டிராக்டர் தலை குப்புற கவிழ்ந்தது.
இதில் டிராக்டர் அடியில் சிக்கிக்கொண்ட சரவணன், சம்பவ இடத்திலேயே உடல் நசுங்கி பலியானார், டிரைவர் கார்த்திக் பலத்த காயம் அடைந்தார்.
உடனே அக்கம் பக்கம் உள்ள உள்ளவர்கள் மீட்டு கார்த்திகை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனை சிகிச்சைக்காக அனுப்பி வைத்தனர்.
விபத்து குறித்து சேத்துப்பட்டு போலீசார் மேலும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தொடரும் பைக் கொள்ளையர்களின் கைவரிசை
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு டவுன், கோபால் தெருவில் வசிப்பவர் ஆனந்தன்.
இவர் அரக்கோணம் நகராட்சியில் டிரைவராக பணிபுரிந்து வருகிறார். ஆனந்தனின் மனைவி வைஷ்ணவி பிரியா (வயது 28), இவர் செய்யாறு திருவத்திபுரம் நகராட்சியில் தற்காலிக அலுவலக ஊழியராக பணிபுரிந்து வருகிறார்.
நேற்று முன்தினம் வைஷ்ணப்பிரியா டைப் ரைட்டிங் கிளாஸ் முடித்துவிட்டு இரவு 8 மணி அளவில் காந்தி சாலையில் கோபால் தெரு சந்திப்பு அருகே செல்லும்போது பைக்கில் ஹெல்மெ ட் அணிந்து வந்த 2 பேர் வைஷ்ணவி கழுத்தில் இருந்த 7 பவுன் தாலிசெயினை அறுத்துக் கொண்டனர். பின்னர் மின்னல் வேகத்தில் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.
இதுகுறித்து செய்யாறு ேபாலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அதன்வபேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து தாலிச்சேனை அறுத்துச் சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றார். தொரும் பைக் கொள்ளையர்களின் அட்டகாசத்தால் பொது மக்கள் அச்ச மடைந்துள்ளனர்.
- கோழி இறைச்சியில் விஷம் வைத்து கொன்றனர்
- சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கொசப்பாளையம் திருமலை சமுத்திரம் ஏரி அருகே ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயி விளை நிலங்கள் உள்ளன.
இந்த விவசாய விளை நிலங்கள் சுற்றி நாய்கள் சுற்றி திரிவது வழக்கம் ஆனால் தற்போது இரவு நேரங்களில் இந்த விவசாய நிலத்தின் அருகில் சமூக விரோதிகள் கூடாரமாக விளங்கி வருகின்றன.
மேலும் மதுகுடித்து விட்டு பாட்டிகள் உடைத்து குடிமகன்கள் விவசாய நிலத்தை சேதபடுத்தும் விதமாக நடந்து கொள்கின்றனர்.
இதனால் குடிமகன்களுக்கு நாய்களால் தொந்தரவு ஏற்படுவதால் நாய்களுக்கு கோழி இறைச்சியில் தடை செய்யப்பட்ட விஷத்தை கலந்து நாய்களுக்கு உணவாக அளித்துள்ளனர்.
இதனால் விஷ கோழி இறைச்சியை திண்ற 10 நாய்கள் இறந்துவிட்டன. இச்சம்பவம்குறித்து சமூக வளைதலங்களில் வைரலாக பரவி வருகின்றன.
மேலும் விவசாய நிலத்தை சேதபடுத்தியும் நாய்களை விஷம் வைத்து கொன்ற சமூக விரோதிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
- ரெயில்வே மேம்பால பணிகள் காலதாமதமான நடப்பதாக குற்றச்சாட்டு
- அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மனு
திருவண்ணாமலை:
தமிழக முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தமிழகத்தில் உள்ள அனைத்து எம்.எல்.ஏ.க்களும் தங்கள் தொகுதியில் நிறைவேற்றப்படாத 10 பிரச்சனைகளை குறிப்பிட்டு அதனை மாவட்ட கலெக்டரிடம் கடினமாக கொடுக்க வேண்டும் என கடிதம் எழுதி இருந்தார்.
அதை தொடர்ந்து போளூர் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ.வும், அ.தி.மு.க. திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி போளூர் தொகுதியில் மேற்கொள்ள வேண்டிய கோரிக்கைகள் குறித்து திருவண்ணாமலை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் முருகேஷிடம் மனு அளித்தார்.
அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
போளூர் நகரில் அமைக்கப்பட்டு வரும் ரெயில்வே மேம்பாலம் பணிகள் காலதாமத்தின் காரணமாக மக்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர். எனவே ரெயில்வே மேம்பால பணிகளை உடனடியாக முடிக்க வேண்டும்.
கரைப்பூண்டி ஊராட்சியில் உள்ள தரணி சக்கர ஆலையை விவசாயிகளின் பயன்பாட்டிற்கு உடனடியாக திறக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். விவசாயிகளுக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவைத் தொகை வட்டியுடன் வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். போளூர் நகரில் வாகன போக்குவரத்து நெரிசல் காரணமாக போளூரில் புதிய பைபாஸ் சாலை அமைக்க ஏற்கனவே நெடுஞ்சாலைத் துறையின் மூலம் ஆய்வு பணிகள் மேற்கொள்ளப்பட்டது.
கடலூர் -சித்தூர் சாலையில் வசூரில் இருந்து அத்திமூர் செல்லும் வழியில் உள்ள அரசு மருத்துவமனை வரை புதிய பைபாஸ் சாலை அமைக்க வேண்டும். போளூர் சட்டமன்ற தொகுதியில் புதிய மகளிர் அரசு கலைக்கல்லூரி அமைக்கப்பட வேண்டும். படித்த இளைஞர்கள் மற்றும் இளம் பெண்களுக்காக அரசு சார்பில் சிப்காட் அல்லது சிட்கோ தொழிற்பேட்டை அமைத்து தரப்பட வேண்டும்.
போளூரில் செயல்பட்டு வரும் மருத்துவமனை போதிய வசதியின்மை காரணமாக புறநோயாளிகள் பிரிவு மருத்துவமனை இடத்தில் புதிய கட்டிடங்கள் அமைத்து மக்களின் பயன்பாடுக்காக கொண்டுவர வேண்டும். பெரணமல்லூர் ஒன்றியத்தை இரண்டாக பிரித்து பெரியகொழப்பலூரை தலைமை இடமாக கொண்டு புதிய ஊராட்சி ஒன்றியம் அலுவலகம் தொடங்கப்பட வேண்டும்.
சேத்துப்பட்டு- ஆரணி சாலையில் இருந்து கண்ணனூர் செல்லும் சாலையை அகலப்படுத்தி பாலம் மற்றும் தார் சாலை அமைத்து தரப்பட வேண்டும். இந்திரவனம், ஆவணியாபுரம், மட்டபிறையூர், ஆர்.குன்னத்தூர், மன்சூராபாத் ஆகிய ஊராட்சிகளில் அரசின் சார்பில் அனைத்து வசதிகளுடன் கூடிய புதிய திருமண மண்டபங்கள் அமைத்து தரப்பட வேண்டும். சேத்துப்பட்டில் இயங்கி வரும் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் போதிய இட வசதி இல்லாத காரணத்தால் நோயாளிகள் சிகிச்சை பெற முடியாது நிலையில் பாதிக்கப்படுகின்றனர்.
உடனடியாக அரசு தாலுகா மருத்துவமனைக்கு போதிய இடவசதி மற்றும் கட்டிடங்கள் உடனடியாக மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வேண்டும். இவ்வாறு அந்த மனதில் கூறப்பட்டுள்ளது.
- மின் நிலைய ஊழியர்கள் மீட்பு பணியில் ஈடுபட்டனர்
- வருவாய்த் துறையினர் விசாரணை
காவேரிப்பாக்கம்:
ராணிப்பேட்டை மாவட்டம் பாணாவரம் கோகுல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீதர், விவசாய கூலி தொழிலாளி. இவர் பசு மாடு களை வளர்த்து பால் வியாபாரம் செய்து வருகிறார் நேற்று மாலை பாணாவரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது.
அப்போது வீட்டின் அருகே மேய்ந்து கொண்டிருந்த பசு மாட்டின் மீது உயரழுத்த மின் கம்பி திடீரென அறுந்து விழுந்தது. இதில் பசுமாடு மின்சாரம் தாக்கி பரிதாப மாக உயிரிழந்தது.
இது குறித்து தகவல் அறிந்த பாணாவரம் துணை மின் நிலைய ஊழியர் கள் மின்சாரத்தைதுண்டித்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.
வருவாய்த் துறையினர் மற்றும் போலீசார் இச்சம்பவம் குறித்து விசாரனை நடத்தி வருகின்றனர்.
- திருமணத்திற்காக சென்ற போது விபரீதம்
- பைக்கில் வந்து பறித்து சென்றனர்
சேத்துப்பட்டு:
சேத்துப்பட்டு அடுத்த புதூர் கிராமத்தைச் சேர்ந்தவர் ஜெயபிரகாஷ் லாரி டிரைவர். இவரது மனைவி சுகன்யா (வயது 35). இருவரும் நேற்று மு்தினம் இரவு பைக்கில். புதூர், கிராமத்திலிருந்து சேத்துப்பட்டில் நடந்த உறவினர் திருமணத்திற்காக சென்றனர்.
சேத்துப்பட்டு, பழம்பேட்டை, பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபம் முன்பு நின்று உறவினர்களுடன் பேசிக் கொண்டிருந்தனர்.அப்போது இவர்களை பின் தொடர்ந்து வந்த 2 பேர் பைக்கில் ஹெல்மெட் அணிந்த வந்தனர்.
திடீரென சுகன்யா கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் நகையை மர்ம கும்பல் பறித்துச் சென்றனர்.
உடனே சுகன்யா, கத்தி கூச்சலிட்டார். திருமணத்திற்கு வந்திருந்தவர்கள், உறவினர்கள், பைக்கில் மர்ம கும்பலை பிடிக்க முயன்றனர், ஆனால் அவர்கள் மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.
இது குறித்து ஜெயபிரகாஷ், நேற்று சேத்துப்பட்டு பேரீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் சேத்துப்பட்டு போலீசார் வழக்கு பதிவு செய்து தப்பி சென்ற மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.
- திருவண்ணாமலையில் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.
- இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை தொடங்குகிறது.
திருவண்ணாமலை அருணாலேஸ்வரர் கோவிலுக்கு உள்ளூர் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்கள், மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்கின்றனர்.
மேலும் பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று கோவிலில் சாமி தரிசனம் செய்வார்கள்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நாளை(வெள்ளிக்கிழமை) மாலை சுமார் 6.20 மணியளவில் தொடங்கி மறுநாள் மாலை 4.30 மணியளவில் நிறைவு பெறுகின்றது. பக்தர்கள் கிரிவலம் செல்வதையொட்டி அடிப்படை வசதிகள் செய்யப்பட்டு வருகிறது.
- 108 கலசம் வைத்து பல்வேறு ஹோமங்கள் நடந்தது
- துணை சபாநாயகர் பிச்சாண்டி பங்கேற்பு
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர் அடுத்த மடம் கிராமத்தில் மிகவும் பழமை வாய்ந்த பிரகன் நாயகி சமேத தடகாபுரீஸ்வரர் கோவில் புதிதாக புதுக்கப்பட்டு பஞ்சவர்ணம் பூசி இதன் கும்பாபிஷேக விழா நடந்தது.
கோவில் முன்பு யாகசாலை அமைத்து 108 கலசம் வைத்து பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. மேளதாளங்கள் மற்றும் கைலாய வாத்தியங்கள் முழங்க புனித நீரை கலசத்தை கோவிலை சுற்றி வந்து ராஜகோபுரம் கொடிமரம் மற்றும் விமானம் மீது பின்னர் புனித நீரை தெளித்தனர். ட்ரோன் மூலம் பக்தர்கள் மீது புனித நீரை தெளித்தனர்.
கும்பாபிஷேக விழாவில் துணை சபாநாயகர் கீழ்பென்னாத்தூர் பிச்சாண்டி எம்.எல்.ஏ. , அம்பேத்குமார் எம்எல்ஏ, திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக செயலாளர் தரணி வேந்தன், மாவட்ட அறங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், பெரணமலை ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், ஒன்றிய குழு துணை தலைவர் லட்சுமி லலிதா வேலன், ஒன்றிய குழு உறுப்பினர் ரேகா புஷ்பராணி ராமதாஸ், மடம் ஊராட்சி மன்ற தலைவர் தரணி சங்கர், வட்டார வளர்ச்சி அலுவலர் மேகன சுந்தரம், இந்து சமயஅறநிலைத்துறை ஆணையர் அசோக்குமார், உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, மற்றும் முன்னதாக நேற்று முன்தினம் நடந்த 3 ம் காலயாக பூஜையில் முன்னாள் இந்து சமய அறநிலைத்துறை அமைச்சர், ஆரணிதொகுதி சட்டமன்ற உறுப்பினர் சேவூர் எஸ்.ராமச்சந்திரன், கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தார்.
கோவில் சார்பில் விழா குழு மேளதாளத்துடன் பூரண மரியாதை கும்பம் அளிக்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை செயல் அலுவலர் பாக்யராஜ், விழா குழுவினர் கிராம பொதுமக்கள், இளைஞர்கள், ஆகியோர் செய்து இருந்தனர்.
- போலீஸ் நிலையம் சார்பில் நடந்தது
- ஹெல்மெட் அணிவதின் அவசியம் என அறிவுரை
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் வந்தவாசி சாலையில் உள்ள சேத்துப்பட்டு, பழம்பேட்டை அரசினர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு போதைப்பொருட்களின் தீமை மற்றும் போதைப் பொருட்கள் ஒழிப்பு குறித்து சேத்துப்பட்டு, போலீஸ் நிலையம் சார்பில் விழிப்புணர் நிகழ்ச்சி நடந்தது.
சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, அரசினர் மேல் மேல்நிலைப் பள்ளி மாணவர்களிடையே போதை பொருட்களின் தீமை, அதனால் ஏற்படும் விளைவுகள், மற்றும் போதை பொருள்ஒழிப்பு, ஹெல்மெட் அணிவதின் அவசியம், ஆகியவை குறித்து மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.
நிகழ்ச்சியில் தலைமை காவலர் ரமேஷ், மற்றும் போலீசார் ஆகியோருடன் இருந்தனர்.
- முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் அமைக்க வலியுறுத்தல்
- தொடர் சம்பவத்தால் பொதுமக்கள் அச்சம்
செய்யாறு:
செய்யாறு திருவத்திபுரம், குமரன் திருவை சேர்ந்த ஜெயக்குமார் மனைவி அம்பிகா (வயது 32). செய்யாறு ஆரணி கூட்ரோட்டில் உள்ள தனியார் நிதி நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார்.
நேற்று இரவு 7.45 மணி அளவில் வேலை முடித்து ஆற்காடு சாலையில் சோழன் தெரு சந்திப்பு அருகே சென்று கொண்டிருந்தார். அப்போது பைக்கில் 2 பேர் அம்பிகாவை இடிப்பது போல் வந்து அம்பிகா கழுத்திலிருந்து 5 பவுன் தாலி செயினை பறித்து கொண்டு மின்னல் வேகத்தில் பறந்து விட்டனர்.
இது சம்பந்தமாக செய்யாறு போலீஸ் நிலைய சப் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன் வழக்கு பதிவு செய்து மர்ம நபர்களை தேடி வருகின்றார்.
செய்யாறில் இதுபோன்று தாலி செயின் அறுத்துச் செல்லும் மர்ம நபர்களின் செயல்கள்தொடர்ந்து அதிகரித்து வருவது மக்களிடையே பெரும் அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது.
செய்யாறில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் செயல்படாத நிலையில் உள்ளன. அனைத்து முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாட்டில் இருந்தால் இது போன்ற குற்ற சம்பவங்கள் நடைபெறாது என்று சமூக ஆர்வலர்கள் எதிர்பார்க்கின்றனர்.
- கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது
- திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த ரங்கராஜபுரம் கிராமத்தில் ஸ்ரீ குட்டியம்மன் கோவில் மகா கும்பாபிஷேகம் விழா நடைபெற்றது.
இதைத்தொடர்ந்து சிவாச்சாரியார்கள் கோவில் வளாகத்தில் யாகசாலை அமைத்து கணபதி ஹோமம், நவகிரக ஹோமம், மகாலட்சுமி ஹோமங்கள் உள்ளிட்ட பல்வேறு ஹோமங்கள் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு மகா பூர்ணாஹூதி நடைபெற்றது.
பின்னர் சிவாச்சாரியார்கள் கலசங்களை தலையில் சுமந்தவாறு கோவிலை சுற்றி வலம் வந்து கோபுரத்தில் உள்ள கலசத்திற்கு புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் அந்த புனித நீரை பக்தர்களுக்கு மீது தெளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஸ்ரீ குட்டியம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட்டது.
பின்னர் மங்கலம் மேலவாத்தியங்கள் முழங்க தீபாராதனை காண்பிக்கப்பட்டது. இந்த மகா கும்பாபிஷேகத்தை காண திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.






