என் மலர்
திருவண்ணாமலை
- ெபண் பலி
- 3 குழந்தைகள் உள்ளனர்
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அடுத்த பில்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் அசோக் இவருடைய மனைவி கண்ணம்மா (வயது 32) அதே பகுதியைச் சேர்ந்த செல்வரசு என்பருடன் பைக்கில் பில்லூரில் இருந்து திருவண்ணாமலை அருகே உள்ள தனது தாய் வீடான மல்லவாடி கிராமத்திற்கு திருவண்ணாமலை நோக்கி வந்து கொண்டிருந்தனர்.
நாயுடு மங்கலம் கூட்ரோடு அருகே பின்புறமாக வந்த கார் ஒன்று அதிவேகமாக மோதியதில் நிலைத்தலைமாறி கீழே விழுந்தனர்.
இதில் கண்ணம்மாவிற்கு தலையில் படுகாயம் ஏற்பட்டு கலசப்பாக்கம் மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கண்ணம்மா பரிதாபமாக இறந்தார்.
அவருக்கு 3 குழந்தைகள் உள்ளனர். இது சம்பந்தமாக கலசப்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
- உடல்நல குறைபாடால் அவதிப்பட்டு வந்தார்
- ஆன்மிக சுற்றுலா வந்த இடத்தில் விபரீதம்
திருவண்ணாமலை:
ஆஸ்திரேலியா நாட்டை சேர்ந்தவர் அர்ஜுனா சோலாப்பர்க் (வயது 78). இவர் கடந்த 2 வருடங்களுக்கு முன்பு ஆன்மிக சுற்றுலா பயணமாக திருவண்ணா மலைக்கு வந்தார்.
அவர் திருவண்ணாமலை அத்தியந்தல் பகுதியில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து வசித்து வந்தார். உடல்நல குறைபாடால் அவதிப்பட்டு வந்த அவர் நேற்று உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த திருவண்ணாமலை தாலுகா போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- மு.பெ.கிரி எம்.எல்.ஏ. பங்கேற்பு
- 527 பேர் பயன்பெற்றனர்
செங்கம்:
செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி கலந்து கொண்டார்.
செங்கம் பேரூராட்சி தலைவர் சாதிக்பாஷா, வட்டாட்சியர் முனுசாமி, மாவட்ட கவுன்சிலர்கள் ராமஜெயம், செந்தில்குமார் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் செங்கம் அரசு ஆண்கள் மற்றும் பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவ மாணவிகள் 527 பேருக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள்கள் வழங்கும் பணியை செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு.பெ.கிரி தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார்.
இதில் ஒன்றிய செயலாளர்கள் செந்தில்குமார், மனோகரன், நகர செயலாளர் அன்பழகன், பேரூராட்சி மன்ற கவுன்சிலர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கிருபாகரன், பள்ளி மேலாண்மை குழு முருகமணிரேவதி, மணி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.
- படவேடு அனந்தபுரம் குப்பம் பள்ளிகளில் வழங்கினர்
- புதுமைப்பெண் திட்ட ஊக்கத்தொகையை நல்ல முறையில் பயன்படுத்த அறிவுரை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளி, அனந்தபுரம் மேநிலைப்பள்ளி, குப்பம் மேநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியே நடந்த விழாவில் 374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா மிதி வண்டிகளை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.
மாணவ மாணவிகள் நல்ல முறையில் படித்து வாழ்க்கையில் முன்னேற வேண்டும். போதை வஸ்துகள் புகையிலை, சிகரெட் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும்.
புதுமைப்பெண் திட்டத்தின் கீழ் மாணவிகளுக்கு, தமிழக முதல்வர் வழங்கும் தலா ரூ.1000 ஊக்கத்தொகையை பெற்று நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றார்.
போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் ரேணுகொண்டாபுரம் ஆனந்தன், அனந்தபுரம் சீனிவாசன், குப்பம் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் படவேடு சீனிவாசன், அனந்தபுரம் வளர்மதிஅண்ணாமலை, குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சீதாராமன், போளூர் ஒன்றிய செயலாளர் ஆர் வி சேகர், படவேடு முருகன், ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.
- 3 பேர் குண்டர் சட்டத்தில் கைது
- போலீசார் நடவடிக்கை
திருவண்ணாமலை:
கலசப்பாக்கம் அருகே நிலம் பிரச்சினை காரணமாக கொலை முயற்சி தாக்குதலில் ஈடுபட்ட 3 பேரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கலசப்பாக்கம் அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியைச் சேர்ந்த முருகன் விவசாயி.
இவருக்கு அதே பகுதி சேர்ந்த பார்த்திபன் (வயது 24), பாண்டியன் (24), பில்லூர் கிராமத்தைச் சேர்ந்த விஜயகுமார் (30) ஆகியோருக்கும் கடந்த 2 மாதத்திற்கு முன்பு நிலம் சம்பந்தமான பிரச்சினை ஏற்பட்டு கலசப்பாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து முருகனை சரமாரியாக தாக்கி கொலை முயற்சியில் ஈடுபட்டனர்.
இதில் படுகாயம் ஏற்பட்ட முருகன் வேலூர் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இச்சம்பவம் தொடர்பாக மூன்று பேரையும் கலசப்பாக்கம் போலீசார் கைது செய்து விசாரணை செய்து வந்தனர்.
இந்த நிலையில் இந்த 2 பேரும் தொடர்ந்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடாத இருக்கும் வகையில் அவர்களை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கலெக்டர் முருகேசுக்கு பரிந்துரை செய்தனர்.
இதன் பேரில் கலெக்டர் முருகேஷ் 3 பேரையும் குண்டர் தொடுப்பு சட்டத்தில் கைது செய்ய உத்தரவு பிறப்பித்தனர்.
இதன் பெயரில் பார்த்திபன், பாண்டியன், விஜயகுமார் 3 பேரும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டு வேலூர் ஜெயிலில் அடைக்கப்பட்டனர்.
- ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
- 7அரசு மேல்நிலைபள்ளிகளில் வழங்கினர்
செய்யாறு:
செய்யாறு டவுன், அரசினர் ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, அரசினர் மாதிரி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மற்றும் ஒன்றியத்தில் நெடும்பிறை, வாழ்குடை, கொற்க்கை, முனுகப்பட்டு, பல்லி உள்ளிட்ட 7அரசு மேல்நிலைபள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு அரசின் விலையில்லா சைக்கிள் வழங்கும் திட்டத்தின் கீழ் 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் நேற்று நடைபெற்றது.
நிகழ்ச்சிகளுக்கு செய்யாறு ஒன்றிய குழு தலைவர் நாவல் பாக்கம் பாபு தலைமை வகித்தார். நகர மன்ற தலைவர் மோகனவேல், மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு 1354 மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி சிறப்புரையாற்றினர்.
நிகழ்ச்சியில் நகர செயலாளர் வழக்கறிஞர் கே விஸ்வநாதன், வழக்கறிஞர் அசோக், மாவட்ட சிறுபான்மை செயலாளர் வழக்கறிஞர் பாஷா, பள்ளி மேலாண்மை குழு தலைவர் சின்னதுரை, மற்றும் திமுக பிரமுகர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- கலசப்பாக்கம் எம்.எல்.ஏ. வழங்கினார்
- 374 மாணவர்கள் பயன் பெற்றனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு ரேணுகொண்டாபுரம் அரசு மேநிலைப்பள்ளி, அனந்தபுரம் மேநிலைப்பள்ளி, குப்பம் மேநிலைப்பள்ளி ஆகிய இடங்களில் தனித்தனியே நடந்த விழாவில் நேற்று 374 மாணவ மாணவிகளுக்கு விலையில்லா சைக்கிள்களை கலசபாக்கம் சட்டமன்ற உறுப்பினர் சரவணன் வழங்கினார்.
போளூர் ஒன்றிய குழு தலைவர் சாந்தி பெருமாள், ஒன்றிய கவுன்சிலர்கள் மனோகரன், சுரேஷ்கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர்கள் ரேணுகொண்டாபுரம் ஆனந்தன், அனந்தபுரம் சீனிவாசன், குப்பம் மகேஷ் ஆகியோர் வரவேற்றனர்.
இதில் ஊராட்சி மன்ற தலைவர்கள் படவேடு சீனிவாசன், அனந்தபுரம் வளர்மதிஅண்ணாமலை, குப்பம் துணை தலைவர் வீரமணிகண்டன், முன்னாள் கவுன்சிலர் சீதாராமன், போளூர் ஒன்றிய செயலாளர் ஆர் வி சேகர், படவேடு முருகன், ஜெகந்நாதன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் ஆசிரியர் ரெஜினா நன்றி கூறினார்.
- செங்கத்தில் விளையாட்டு போட்டி நடந்தது
- மார் 500 பேர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
இதில் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.சுந்தரபாண்டியன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.
இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார், பேரூர் செயலாளர் சீனுவாசன் உள்பட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- எனக்கு துரோகம் செய்தது நியாயமா என கேட்டதால் ஆத்திரம்
- போலீசார் விசாரணை
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் தாலுக்கா, பட்டறை கிராமத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 30). இவர் செய்யாறு மாங்கல் கூட்ரோட்டில் உள்ள சிப்காட்டில் தனியார் கம்பெனியில் பணிபுரிந்து வருகிறார்.
இவரது மனைவி கன்னியம்மாள் (28), இவர்களுக்கு 12 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடைபெற்று கீதா, ஹரிஷ் குமார் என்று 2 குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில் மணிகண்டன் சின்ன எழுச்சேரியை சேர்ந்த சினேகா (19), என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார்.
இந்த சினேகாவின் தாய்வீடு பட்டறை கிராமத்தில் மணிகண்டனின் எதிர் வீட்டில் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. ஒரு வாரத்துக்கு முன்பு திருமணம் செய்து கொண்ட மணிகண்டன் 2-வது மனைவியை அழைத்துக் கொண்டு பட்டறை கிராமத்திற்கு வந்துள்ளார்.
அதனைக் கண்ட கன்னியம்மாள் எனக்கு துரோகம் செய்துவிட்டு திருமணம் செய்தது நியாயமா என கேட்டதற்கு நான் அவளை 2-வது திருமணம் செய்து கொண்டேன் என்றும் இனி அவளுடன் தான் வாழ்வேன் என்றும், கூறி அசிங்கமான வார்த்தைகளால் திட்டி, அடித்து, கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.
இது சம்பந்தமாக கன்னியம்மாள் பிரம்மதேசம் போலீசில் புகார் செய்தார். சப் இன்ஸ்பெக்டர் பாபா வழக்கு பதிவு செய்து மணிகண்டனை கைது செய்து விசாரணை செய்து வருகிறார்.
- திருவண்ணாமலையில் பக்தர்களுக்கு இடையூறு
- அமைச்சர் எ.வ.வேலு எச்சரிக்கை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரித்தல் குறித்த ஆய்வு கூட்டம் கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது.
கூட்டத்திற்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு தலைமை தாங்கினார். துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, சி.என்.அண்ணாதுரை எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மு.பெ.கிரி, பெ.சு.தி. சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கலெக்டர் முருகேஷ் வரவேற்றார்.
கூட்டத்தில் பொதுப்பணித்துைற அமைச்சர் எ.வ.வேலு பேசியதாவது:-
கிரிவலப்பாதையில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வதால் திருவண்ணாமலை நகரத்திற்கு புகழ் சேர்கிறது. இதனால் இங்குள்ள வியாபாரிகள், பொதுமக்கள் பொருளாதாரத்தில் வளர்ந்து வருகின்றனர். கிரிவலம் செல்லும் பக்தர்களுக்கு இடையூறாக உள்ள ஆக்கிரமிப்புகளை பாரபட்சமின்றி அகற்ற வேண்டும்.
நடைபாதையில் சாமியார்கள் தங்குவதற்கும், நடைபாதையில் உள்ள இருக்கைகளை ஆக்கிரமித்துக் கொள்வதற்கும் அனுமதிக்க கூடாது. சாமியார்களுக்கு தங்குவதற்கான தனியான இடம் ஏற்படுத்தப்பட்டு அங்கு அவர்களை தங்க வைக்க வேண்டும்.
கிரிவலப்பாதை நடைபாதையில் சாமியார்கள் தற்காலிக குடியிருப்புகள் அமைக்க கூடாது.
சாமியார்களை முறைப்படுத்த காவல்துறை மூலம் கைரேகையுடன் கூடிய அடையாள அட்டை வழங்க வேண்டும். குறிப்பிட்ட இடங்களில் மட்டும் மாவட்ட நிர்வாகத்தில் அனுமதி பெற்று அன்னதானம் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிவலப் பாதையில் உள்ள மின்விளக்கு வசதிகளை அருணாசலேஸ்வரர் கோவில் சார்பில் கண்காணித்து கிரிவலப் பாதை இருள் சூழாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கிரிவலப்பாதையில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு 100 சதவீதம் இல்லாத அளவிற்கு கண்காணிக்க வேண்டும்.
கிரிவலப்பாதையை தூய்மையாக பராமரிப்பதற்காக வருவாய் துறை, ஊரக வளர்ச்சித்துறை, போலீசார் கொண்ட 7 குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளது. இந்த குழுக்கள் கிரிவலப்பாதையை தொடர்ந்து கண்காணிக்காக வேண்டும்.
ராஜகோபுரம் முன்பு இருந்து அகற்றப்பட்ட தேங்காய், பூ கடைகளை மீண்டும் நடத்த வியாபாரிகளுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் தற்காலிக இடம் ஒதுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
- ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
- பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
அருணாசலேஸ்வரர் கோவிலின் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி மட்டுமின்றி விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தூரம் கிரிவலம் செல்கின்றனர்.
இந்த மாதத்திற்கான பவுர்ணமி நேற்று மாலை 6.25 மணியளவில் தொடங்கியது. இதனால் நேற்று மாலை சுமார் 5 மணியில் இருந்தே பக்தர்கள் கிரிவலம் செல்ல தொடங்கினர். பக்தர்கள் கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களிலும், அருணாசலேஸ்வரர் கோவிலிலும் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர்.
இரவு 7 மணிக்கு மேல் கிரிவலம் செல்லும் பக்தர்களின் கூட்டம் அதிகரிக்க தொடங்கியது. இரவில் கிரிவலப்பாதையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. இன்று 2-வது நாளாக பக்தர்கள் கிரிவலம் சென்றனர்.
ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்றதால் கிரிவலப்பாதையில் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர்.
பவுர்ணமி கிரிவலத்தையொட்டி தற்காலிக பஸ் நிலையங்களில் பஸ்கள் நிறுத்தப்பட்டன. பக்தர்கள் அருணாசலேஸ்வரர் கோவில் ராஜகோபுரம் மற்றும் 16 கால் மண்டபத்தின் முன்பு கற்பூரம் ஏற்றி வழிபட்டனர்.
பவுர்ணமி இன்று மாலை 4.35 மணி வரை இருந்ததால் பக்தர்கள் விடிய விடிய கிரிவலம் சென்றனர். மேலும் பக்தர்களின் பாதுகாப்பை கருதி போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
- 2 வாலிபர்கள் கைது
- 7 பவுன் நகை மீட்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருபவர் தாமரைச்செல்வி. இவர் கடந்த மாதம் பணியை முடித்துக்கொண்டு மொப்பட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தாமரைச்செல்வியின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகைகயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தாமரைச்செல்வி தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டையில் நகை பறிப்பில் ஈடுபட்ட உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாமரைச்செல்வி இடம் நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் தெள்ளார் போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 7 ஏழு பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து தெள்ளார் போலீஸார் வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






