மாணவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் பரிசு வழங்கினார்

செங்கத்தில் விளையாட்டு போட்டி நடந்தது மார் 500 பேர் கலந்து கொண்டனர்
மாணவர்களுக்கு ஒன்றியக்குழு தலைவர் பரிசு வழங்கினார்
Published on

செங்கம்:

செங்கம் மற்றும் புதுப்பாளையம் ஒன்றியங்களுக்கு உட்பட்ட அரசு பள்ளி மாணவர்களுக்கு விளையாட்டு போட்டிகள் புதுப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் அரசு பள்ளி மாணவர்கள் சுமார் 500 பேர் கலந்து கொண்டனர். இந்த விளையாட்டு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு புதுப்பாளையம் ஒன்றிய குழு தலைவரும் மேற்கு ஒன்றிய செயலாளருமான சி.சுந்தரபாண்டியன் பரிசு மற்றும் சான்றிதழ்களை வழங்கி பாராட்டினார்.

இந்த நிகழ்வில் மாவட்ட பிரதிநிதி ஆனந்தகுமார், பேரூர் செயலாளர் சீனுவாசன் உள்பட அரசு பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

X

Maalai Malar
www.maalaimalar.com