என் மலர்
உள்ளூர் செய்திகள்

நர்சிடம் நகை பறிப்பு
- 2 வாலிபர்கள் கைது
- 7 பவுன் நகை மீட்பு
வந்தவாசி:
வந்தவாசி அடுத்த தெள்ளார் ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சாக பணியாற்றி வருபவர் தாமரைச்செல்வி. இவர் கடந்த மாதம் பணியை முடித்துக்கொண்டு மொப்பட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார்.
அப்போது இவரை பின் தொடர்ந்து பைக்கில் வந்த 2 வாலிபர்கள் தாமரைச்செல்வியின் கழுத்தில் இருந்த 7 பவுன் நகைகயை பறித்துச் சென்றனர்.
இதுகுறித்து தாமரைச்செல்வி தெள்ளார் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.
இந்த நிலையில் திண்டிவனம் அருகே வெள்ளிமேடு பேட்டையில் நகை பறிப்பில் ஈடுபட்ட உத்திரமேரூர் பகுதியைச் சேர்ந்த வினோத்குமார் மற்றும் லோகநாதன் ஆகிய 2 பேரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் தாமரைச்செல்வி இடம் நகையை பறித்து சென்றதை ஒப்புக்கொண்டனர்.
பின்னர் தெள்ளார் போலீசார் 2 வாலிபர்களையும் கைது செய்து அவர்களிடம் இருந்த 7 ஏழு பவுன் நகையை போலீசார் பறிமுதல் செய்தனர்.
மேலும் இது குறித்து தெள்ளார் போலீஸார் வாலிபர்களிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.






