என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பீட்ரூட் பொரியலில் எலி தலை இருந்ததையடுத்து சோதனை
    • விளக்கம் கேட்டு நோட்டீஸ்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பழைய பஸ் நிலையம் அருகே சைவ உணவகம் இயங்கி வருகிறது.

    இந்த சைவ உணவகத்தில் நேற்று முன்தினம் ஆரணி டவுன் காந்தி நகர் பகுதியைச் சேர்ந்த கூலித்தொழிலாளி முரளி என்பவர் 35 பார்சல் சாப்பாடு வாங்கி சென்றார்.

    இந்த உணவில் கொடுத்த பீட்ரூட் பொரியலில் எலி தலை உள்ளதாக கூறி சுமார் 25-க்கும் மேற்பட்டோர் சைவ உணவகத்தை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இந்நிலையில் உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தின் எதிரொலியாக மாவட்ட உணவு பாதுகாப்பு துறை அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சம்மந்தபட்ட உணவகத்தை ஆய்வு மேற்கொண்டனர்.

    ஆய்வின் போது தேனீர் டீ ஸ்டாலில் எலி அங்கும் இங்குமாக வந்து ஓடியதால் அதிகாரிகள் அதிர்ச்சியடைந்தனர்.

    மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் கூறியதாவது:-

    உணவு பொரியலில் எலி தலை உள்ள சம்பவத்தில் ஆய்வின் போது எலி வரவாய்ப்புள்ளன. ஆனால் எலி அதே இடத்தில் தங்கும் அளவில் இல்லை.

    உணவகதத்திற்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டுள்ளது. மேலும் எலிகள் வராதபடி ஓட்டைகளை அடைக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆரணி பகுதிக்கு தனி உணவு பாதுகாப்பு அதிகாரிள் நியமிக்கபட்டுள்ளனர்.இதுவரையில் ஆரணி அசைவ ஓட்டல்களில் எடுத்த பரிசோதனை மூலம் வழக்கு தொடப்பட்டுள்ளன என்றார். இதில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் இளங்கோ சேகர் உடனிருந்தனர்.

    • ரூ.1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் தொடக்கம்
    • ஏராளமானோர் பங்கேற்பு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் நகராட்சி அலுவலகம் அருகில் கலைஞர் நகர்புற மேம்பாட்டு திட்டத்தின் கீழ் 1 கோடியே 88 லட்சம் மதிப்பீட்டில் புதிய அறிவுசார் நூலக கட்டிட பணி பூமி பூஜை நிகழ்ச்சி நேற்று நடந்தது.

    நிகழ்சிக்கு ஆணையர் தமிழ்செல்வி அனைவரையும் வரவேற்றார்.

    சேர்மன் ஏ.சி.மணி தலைமை வகித்தார் சிறப்பு அழைப்பாளராக திருவண்ணாமலை வடக்கு மாவட்ட பொறுப்பாளர் தரணிவேந்தன் புதிய நூலக கட்டிடத்திற்கு பூமி பூஜை போட்டு அடிக்கல் நாட்டினார்.

    இந்நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர்கள் மோகன், அன்பழகன், துரைமாமது, நகர பொருளாளர் கவுன்சிலர் பழனி, முன்னாள் எம்.எல்.ஏக்கள் தயாநிதி, எதிரொலி மணியன், பிடிசி உதயசங்கர் ஆகியோர் பங்கேற்றனர்.

    இறுதியியில் பொறியாளர் விஜயகாமராஜ் நன்றி கூறினார்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. வழங்கினார்
    • 6 அரசு பள்ளிகளில் வழங்கப்பட்டது

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த அனக்காவூர் ஒன்றியத்தை சேர்ந்த செங்காடு, கோவிலூர், அனக்காவூர், புரிசை, ஆக்கூர், உக்கல் ஆகிய ஊர்களில் உள்ள 6 அரசு மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவ மாணவிகளுக்கு தமிழக அரசின் இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சிகள் அந்தந்த பள்ளிகளில் நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன் தலைமை வகித்தார். ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார், மாவட்ட கல்வி அலுவலர் நளினி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    சிறப்பு விருந்தினராக ஓ.ஜோதி எம்.எல்.ஏ கலந்துகொண்டு, நல்லாசிரியர் விருது பெற்ற பள்ளியின் தலைமை ஆசிரியர் அன்பரசுக்கு பொன்னாடை போர்த்தி பாராட்டு தெரிவித்தார்.

    பின்னர் மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிளை வழங்கி பேசினார்.

    நிகழ்ச்சியில் முன்னாள் எம்எல்ஏ கமலக்கண்ணன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

    • 3 விதமான போட்டிகள் நடந்தது
    • ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அரசு ஆண்கள் மேல் நிலைப்பள்ளியில் மாணவர்களுக்கு வாள் சண்டை பயிற்சி நடந்தது.

    தலைமை ஆசிரியர் கருணாநிதி முன்னிலையில் நடந்த நிகழ்ச்சியில், உடற்கல்வி இயக்குனர் கார்த்திகேயன், உடற்பயிற்சி ஆசிரியர்கள் அமுதா, அன்புக்கரசு மற்றும் குழுவினர் கலந்து கொண்டு மாணவர்களுக்கு 3 விதமான வாள் சண்டை பயிற்சியை தொடங்கி வைத்தார்.

    இதில் உதவி தலைமை ஆசிரியர்கள் சாந்தி, தசக்குமார், ஆசிரியர்கள் உள்பட பலர் வாழ்த்திப் பேசினர். முடிவில் ஆசிரியர் சுப்பிரமணி நன்றி கூறினார்.

    • வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடந்தது
    • 300-க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்

    செய்யாறு:

    தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மற்றும் காட்டுநாயக்கன் பழங்குடி மக்கள் சங்கம் இணைந்து பழங்குடி மாணவர்களுக்கு சாதி சான்று கேட்டும், பட்டா மற்றும் வீடு ஆகிய கோரிக்கைகளை முன்வைத்தும், செய்யாறு வருவாய் கோட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் பள்ளி மாணவ மாணவிகள், ஆண்கள், பெண்கள் என சுமார் 300-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

    ஆர்ப்பாட்டத்தில் பழங்குடியினர் கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் மேளதாளத்துடன் நடனமாடினர்.

    மன்னர் காலத்தில் காட்டிற்குவரும் அரசனை டோலி வைத்து பழங்குடியின மக்கள் தூக்கி செல்வார்கள் என்பதை நினைவுபடுத்தும் வகையில் ஆர்ப்பாட்டத்தில் டோலிவைக்கப்பட்டது.

    ஆர்ப்பாட்டம் காலை 10 மணி முதல் மாலை 5.30 மணி வரை பின்னர் வருவாய் கோட்டாட்சியர் வினோத்குமாரிடம் மனு கொடுத்தனர்.

    ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்கம் மாநில பொதுச் செயலாளர் ரா.சரவணன், மாவட்ட செயலாளர் எம்.மாரிமுத்து, பி.செல்வம், டி.கே.வெங்கடேசன், அய்யனார், விஜயா, அப்துல் காதர் உள்ளிட்ட 300-க்கும் மேற்பட்டோர்கலந்து கொண்டனர்.

    • கிரிவலம் செல்லும் பக்தர்கள் அஷ்டலிங்க கோவில்களில் வழிபாடு செய்வார்கள்.
    • இதில் பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள அண்ணாமலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் செல்வார்கள்.

    14 கிலோ மீட்டர் தூரம் கொண்ட இந்த மலை சுற்றும் பாதையில் இந்திர லிங்கம், அக்னிலிங்கம் எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் உள்ளிட்ட அஷ்ட லிங்க கோவில்களும் மற்றும் சூரியன், சந்திர லிங்கம் கோவில்களும் உள்ளன.

    கிரிவலம் செல்லும் பக்தர்கள் அந்த கோவில்களில் வழிபாடு செய்வார்கள். கடந்த சில மாதங்களுக்கு முன்பு திருவண்ணாமலைக்கு வந்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு கிரிவலப்பாதையில் உள்ள அஷ்டலிங்க கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றார்.

    இதைதொடர்ந்து அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் முன்னிலையில் சிவாச்சாரியார்கள் புனித நீர் அடங்கிய கலசம் வைத்து மங்கள வாத்தியங்கள் முழங்க சிறப்பு பூஜை செய்தனர்.

    பின்னர் கலசத்திற்கு தீபாராதனை காண்பிக்கப்பட்டு அதனை சிவாச்சாரியார்கள் சாமி சன்னதியை சுற்றி வந்தனர்.

    பின்னர் கும்பாபிஷேக திருப்பணிகளுக்கான பணியை தொடங்கி வைத்தனர். இதில் பக்தர்கள் மற்றும் கோவில் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

    இதைதொடர்ந்து அஷ்ட லிங்க கோவில்களில் கும்பாபிஷேகம் செய்வதற்கான திருப்பணிகள் நடைபெற உள்ளது.

    • அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை என புகார்
    • நடவடிக்கை எடுக்க சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கம் அருகே உள்ள கரியமங்கலம் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள காரியமங்கலம் பெரிய ஏரியில் தொடர்ந்து ஏரி மண்ணை அனுமதியின்றி எடுத்துச் செல்வதாக அப்பகுதி விவசாயிகள் தரப்பில் புகார் எழுந்துள்ளது.

    செங்கம் -திருவண்ணா மலை தேசிய நெடுஞ்சாலை பணி தேவைக்காக கரியமங்கலம் பெரிய ஏரியிலிருந்து மண் எடுத்துக் கொள்ள அனுமதி வழங்கப்பட்டு ஏரி மண் எடுத்துச் சென்றதாக கூறப்படுகிறது.

    ஆனால் அதன் தொடர்ச்சியாக சுமார் 5-க்கும் மேற்பட்ட லாரிகள் பகல் நேரத்திலேயே ஏரி மண்ணை சுரண்டி எடுத்துச் செல்வதாக அப்பகுதியில் உள்ள சமூக ஆர்வலர்கள் மற்றும் விவசாயிகள் தரப்பில் தரப்பில் கூறப்படுகிறது.

    கரியமங்கலம் ஏரி தண்ணீரை நம்பி கரியமங்கலம் சுற்றுவட்ட பகுதிகளில் பல நூறு ஏக்கர் விவசாய நிலங்கள் உள்ளது. ஏற்கனவே கரியமங்கலம் ஏரிக்கு செங்கம் அருகே உள்ள காயம்பட்டு ஏரியிலிருந்து வர வேண்டிய உபரி நீர் கால்வாய் பிரச்சனை காரணமாக தண்ணீர் வரத்து சரிவர வராத சூழல் உள்ளது.

    தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக ஏரியில் தண்ணீர் இருப்பு உள்ளது.

    மண் எடுக்கப்படுவதால் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாக குறையும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஏரி தண்ணீரை நம்பி உள்ள விவசாயிகள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளா வதாகவும் தெரிவித்துள்ளனர்.

    உரிய அனுமதியின்றி ஏரி மண் எடுத்துச் செல்லும் நபர்கள் குறித்து செங்கத்தில் உள்ள அதிகாரிகள் கண்டும் காணாமல் உள்ளனர்.

    இச்செயலில் ஈடுபட்டு வருபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் மற்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    • காலை குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா நடந்தது
    • கார்த்திகை தீபத்திற்குள் கும்பாபிஷேக விழா நடைபெறும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

    இந்திர லிங்கம், அக்னிலிங்கம் எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் மற்றும் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் ஆகிய 10 கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய நடைபெற உள்ளது.

    இன்று காலை 9 மணியளவில் குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா இந்திர லிங்கம் கோவிலில் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது.

    இதில் கோவில் இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலை வகித்தார். நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பணிகள் வரும் கார்த்திகை தீபத்திற்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

    • விவசாய நிலத்திற்கு சென்றவர் வீடு திரும்பவில்லை
    • கொலை செய்யப்பட்டாரா?- போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த வாணாபுரம் அருகே உள்ள உண்ணாமலை பாளையம் கிராமத்தைச் சேர்ந்தவர் முனுசாமி. இவரது மகன் ஆனந்தன் (வயது 42) இவர் வெளிநாட்டில் வேலை செய்துவிட்டு சொந்த ஊருக்கு திரும்பினார்.

    உண்ணாமலை பாளையத்திற்கு விவசாய கூலி வேலை செய்து வந்தார். நேற்று முன்தினம் காலை விவசாய நிலத்திற்கு சென்ற அவர் வெகுநேரமாகியும் வீடு திரும்பவில்லை.

    இதனால் அதிர்ச்சி அடைந்த அவரது குடும்பத்தினர் விவசாய நிலத்திற்கு சென்று பார்த்த போது நிலத்தின் அருகே மற்றொருவரின் விவசாய நிலத்தில் உள்ள தொட்டியின் அருகில் ஆனந்தன் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதனை கண்டு அவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அவரது கால், உடல் உள்ளிட்ட பகுதிகளில் பலத்த காயம் இருந்தது.

    இதுகுறித்து புகாரின் பேரில் வாணாபுரம் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து ஆனந்தனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் ஆனந்தன் கொலை செய்யப்பட்டாரா? அல்லது வேறு ஏதும் மர்மம் உள்ளதா என பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    இறந்த ஆனந்தனுக்கு சாந்தி (30) என்ற மனைவியும் சுபாஷ் (15) என்ற மகனும் லட்சுமி (11), அனுப்பிரியா (வயது 4) என்ற மகள்களும் உள்ளனர்.

    • பாழடைந்த கோவிலை சரிசெய்ய நடந்தது
    • சிவனடியார்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    கண்ணமங்கலம்:

    கணணமங்கலம் அருகே உள்ள 5 புத்தூர் கிராமத்தில் எஸ் தாங்கல் கவுரியம்மன் சமேத மீனாட்சி சுந்தரேசுவரர் கோவில் பாழடைந்த நிலையில் உள்ளது.

    இதனை விரைவில் சீரமைக்கவும், கும்பாபிஷேகம் நடத்த வேண்டியும் அண்டர் நாயகர் தொண்டர்கள் கூட்டம் சார்பில் மாணிக்கவாசகர் திருவீதி உலாவுடன், திருவாசகம் முற்றோதல் நடைபெற்றது.

    இதில் திருவாதவூர் திருக்கூட்டம், தேவிகாபுரம் பொன்மலைநாதர் திருவாசக முற்றோதல் குழுவினர் கலந்து கொண்டனர். பகலில் அன்னதானம், மாலையில் திருவருட்பிரசாதமும வழங்கப்பட்டது.

    இதில் ஏராளமான சிவனடியார்கள் கலந்து கொண்டனர்.

    • பவுர்ணமியையொட்டி வந்திருந்தனர்
    • 4 மணி நேரம் வரிசையில் நின்று சாமி தரிசனம்

    திருவண்ணாமலை:

    பவுர்ணமி மட்டுமின்றி விஷேச நாட்களில் ஏராளமான பக்தர்கள் 14 கிலோ மீட்டர் தொலைவு கொண்ட கிரிவலப்பாதையில் கிரிவலம் செல்வார்கள்.

    ஞாயிற்றுக்கிழமை மற்றும் விடுமுறை நாட்களில் இக்கோவிலில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.

    இந்த நிலையில் கடந்த 9-ந் தேதி மாலை 6.25 மணியளவில் பவுர்ணமி தொடங்கி நேற்று முன்தினம் மாலை 4.35 மணிக்கு நிறைவடைந்தது.

    பவுர்ணமியையொட்டி கடந்த 9-ந் தேதி முதல் திருவண்ணாமலையில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் இருந்தனர்.

    மேலும் கோவிலிலும் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். 3-வது நாளாக அலைமோதியது தொடர்ந்து 3-வது நாளாக நேற்றும் திருவண்ணாமலையில் பக்தர்கள் பலர் கிரிவலம் சென்றனர். கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுமார் 4 மணி நேரத்திற்கு மேல் காத்திருந்து சாமி தரிசனம் செய்தனர். வரிசையில் காத்திருக்க முடியாமல் சிலர் இடையில் நுழைவதற்காக இரும்பு தடுப்பு கம்பிகள் மேல் ஏறி இறங்கி சென்றனர்.

    இதனால் வரிசையில் வந்த பக்தர்கள் ஆத்திரம் அடைந்து கூச்சலிட்டனர். இதையடுத்து கோவில் பணியாளர்கள் வந்து அதனை சரி செய்தனர்.

    இதனால் சிறிது பரபரப்பு ஏற்பட்டது.

    • உறவினர்களுடன் ஓட்டலை முற்றுகையிட்டு தர்ணாவில் ஈடுபட்டனர்.
    • போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    ஆரணி :

    ஆரணி காந்திநகர் பகுதியை சேர்ந்தவர் முரளி. இவரது உறவினர் சிலதினங்களுக்கு முன்பு இறந்து விட்டார். நேற்று இறந்தவர் படத்தை வைத்து குடும்பத்தினர் வழிபடும் நிகழ்ச்சியை நடத்தினர். அப்போது உணவு படையலிடுவதற்காக ஆரணி பழைய பஸ் நிலையத்தை அடுத்த கோட்டை மைதானம் செல்லும் வழியில் உள்ள சைவ உணவகத்தில் ஆர்டர் கொடுத்துள்ளனர்.

    அதன்படி ஓட்டல் நிர்வாகத்தினர் அந்த வீட்டுக்கு உணவை வாகனத்தில் அனுப்பி டோர் டெலிவரி செய்துள்ளனர். அந்த உணவு படையலிடப்பட்டு வணங்கியபின் நிகழ்ச்சிக்கு வந்திருந்தவர்களுக்கு பரிமாறப்பட்டு அனைவரும் சாப்பிட்டனர்.

    அதன்பின்னர் மீதமான உணவுகளை வேறு பாத்திரத்திற்கு மாற்றியபோது ஓட்டலில் வழங்கிய பீட்ரூட் பொரியலில் எலி தலை ஒன்றின் துண்டு இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இது குறித்து ஓட்டல் உரிமையாளருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. ஆனால் உணவு டோர் டெலிவரி செய்யப்பட்ட வீட்டுக்கு வந்து தாங்கள் வழங்கிய உணவை பார்வையிட ஓட்டல் நிர்வாகத்தினர் வரவில்லை.

    இதனால் ஆத்திரம் அடைந்த முரளி தரப்பினர் அந்த பகுதியை சேர்ந்த நகரமன்ற உறுப்பினர் கு.வினாயகம் தலைமையில் எலி தலை கிடந்த பொரியலுடன் ஓட்டலுக்கு வந்து முற்றுகையிட்டு வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.

    பின்னர் அவர்கள் ஓட்டலின் வெளியே சாலையில் நின்று தர்ணாவில் ஈடுப்பட்டனர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.

    தகவல் அறிந்த ஆரணி நகர போலீசார் தர்ணாவில் ஈடுப்பட்ட நபர்களை அப்புறப்படுத்தி காவல் நிலையத்திற்கு அழைத்து சென்று பேச்சுவார்த்தையில் ஈடுப்பட்டனர். தொடர்ந்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். உணவு பாதுகாப்பு அதிகாரிகளும் ஓட்டலுக்கு சென்று உணவு மாதிரி எடுத்து பரிசோதனைக்கு உட்படுத்தி எடுத்துச் சென்றனர்.

    ×