search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kriwala Path"

    • மான்களுக்கு ஆபத்து ஏற்பட வாய்ப்பு?
    • நகராட்சி ஊழியர்கள் அப்புறபடுத்தும் பணியில் ஈடுபட்டனர்

    வேங்கிக்கால்:

    திருவண்ணாமலை கார்த்திகை தீபத் திருவிழாவில் பல லட்சம் பக்தர்கள் குவிந்தனர். அவர்களுக்கு அன்னதானம் வழங்குவதற்காக சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டி ருந்தது.

    கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு நேர்திக்க டனுக்காக அன்னதானம் வழங்க ஆன்லைன் மூலம் பொதுமக்கள் விண்ணப்பித்திருந்தனர். கோவில் நிர்வாகம் கிரிவலப் பாதையில் அன்னதானம் வழங்குவதற்காக அனுமதி அளித்திருந்தனர்.

    அருணாசலேஸ்வரரை தரிசிப்பதற்காகவும், பரணி மற்றும் மகா தீபத்தை காண்பதற்காக வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமான பக்தர்கள் வருகை தந்தனர்.

    இந்த நிலையில் பக்தர்கள் கிரிவலம் செல்லும் போது அவர்களுக்கு அனுமதித்த 101 இடங்களில் அன்ன தானங்கள் வழங்கப்பட்டது. மேலும் சிலர் அனுமதி வழங்கப்படாத இடத்திலும் அன்னதானங்களை வழங்கி யதாக கூறப்ப டுகிறது.

    பக்தர்க ளுக்கு வழங்கிய அன்ன தானத்தை பேப்பர் கப் மற்றும் பாக்கு தட்டு போன்ற வைகள் மூலம் வழங்கினர். இதனை வாங்கி சாப்பிட்ட பக்தர்கள் பேப்பர் கப்பு களையும், பாக்கு தட்டுகளையும் ஆங்காங்கே வீசி சென்றனர். இதனால் கிரிவல பாதை முழுவதும் குப்பையாக கிடந்தது.

    நகராட்சி ஊழியர்கள் கிரிவலப் பாதையில் ஆங்காங்கே தூக்கி வீசி எறிந்த பேப்பர் கப்புகள் மற்றும் பாக்கு தட்டுகளை அப்புற படுத்தும் பணியில் ஈடுபட்டனர்.

    கிரிவலப் பாதையில் மான்கள் சுற்றி திரிகின்றன. தூக்கி எரியும் பேப்பர் கப்புகளை மான்கள் சாப்பிடுவதால் ஆபத்தான சூழ்நிலை ஏற்பட வாய்ப்பு உள்ளது.

    இதனால் இந்த குப்பைகளை அகற்ற வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தி னர். இதுபோன்ற செயல்களில் பக்தர்கள் ஈடுபடக்கூடாது என்றும், அன்னதானம் சாப்பிட்ட பின் குப்பை தொட்டியில் போட வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்தியுள்ளனர்.

    • மழை நீர் கால்வாயில் எந்த வித தடையும் இல்லாமல் வெளியேறுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்
    • அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றி பவுர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் ஏராளமான பக்தர்கள் கிரிவலம் செல்கின்றனர்.

    தற்போது பவுர்ணமி மட்டுமின்றி அனைத்து நாட்களிலும் ஏராளமான பக்தர்கள் பகல், இரவு நேரங்களில் கிரிவலம் சென்ற வண்ணம் உள்ளனர்.

    இதனை கருத்தில்கொண்டு திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தர்களுக்கு தேவையான கூடுதல் சுகா தார வளாகம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் மேற்கொள்வது தொடர்பாக பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ.வேலு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது கிரிவலப்பாதை செங்கம் சாலை சந்திப்பு பகுதி, அடி அண்ணாமலை சீனிவாசா பள்ளி அருகில், வாயுலிங்கம் கோவில் அருகில், கோசாலையில் உள்ள இலங்கை அகதிகள் முகாம் அருகில், சின்னக்கடை வீதியிலும் புதிதாக சுகாதார வளாகம் கட்டுவதற்கான இடத்தினை அமைச்சர் எ.வ.வேலு பார்வையிட்டார்.

    மேலும் சின்ன கடை வீதியில் அமைக்கப்பட்டுள்ள மழை நீர் கால்வாயில் மழை சமயத்தில் மழைநீர் எந்த வித தடையும் இல்லாமல் முறையாக வெளியேறுகிறதா என்பது குறித்தும் அதிகாரிகளிடம் அமைச்சர் கேட்டறிந்தார்.

    ஆய்வின்போது கலெக்டர் முருகேஷ், சி.என்.அண்ணா துரை எம்.பி., மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, சரவணன் எம்.எல்.ஏ., மாநில தடகள சங்க துணைத்தலைவர் எ.வ.வே.கம்பன், தமிழ்நாடு அரசு உடல் உழைப்பு தொழிலாளர் மற்றும் சமூக பாதுகாப்பு வாரிய உறுப்பினர் ஸ்ரீதரன், நெடுஞ்சாலைத்துறை கண்காணிப்பு பொறியாளர் பழனி வேல், உதவி கோட்ட பொறியாளர் ரகுராமன், திருவண் ணாமலை நகராட்சி ஆணையாளர் தட்சிணாமூர்த்தி, திருவண்ணாமலை ஒன்றியக் குழு துணை தலைவர் ரமணன், தி.மு.க. நிர்வாகிகள்

    பன்னீர்செல்வம், பிரியா விஜயரங்கன், கார்த்திவேல் மாறன், அருணை வெங்கட் உள்பட பலர் உடன் இருந்தனர்.

    • உலக நன்மைக்காக நடந்தது
    • உலக சாதனை சான்று வழங்கப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அரசு கலைக்கல்லூரி வளாகத்தில் உலக நன்மைக்காக 1,008 சங்கு முழங்கும் விழா நடைபெற்றது.

    முன்னதாக கிரிவலப்பாதையில், அண்ணாமலையார் உண்ணாமுலையம்மன் மஹாகுபேர லஷ்மியாகம் மற்றும் கோ பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் சோப கிருது தமிழ் புத்தாண்டு தினத்தில் நடைபெற்றது.

    1,008 சிவலிங்கத்திற்கு மஹா புனித நீர் அபிஷேகம் செய்யப்பட்ட சங்கை ஒரே நேரத்தில் 1,008 சிவனடியார்கள் மற்றும் சாதுக்கள் ஒன்றிணைந்து சங்கு ஒலி முழங்கும் சாதனை விழா நடைபெற்றது. முன்னதாக பரதநாட்டியம், குத்து விளக்கு ஏற்றுதல், சிலம்பாட்டம், மயிலாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றது.

    தொடர்ந்து ஒரே நேரத்தில் 1,008 சங்கு முழங்கிய நிகழ்வுக்கு யுனிக் வேர்ல்ட் ரெக்கார்ட் சாதனை சான்று வழங்கப்பட்டது.

    • பக்தர்கள் வலியுறுத்தல்
    • மிகவும் சிரமப்பட்டு வருவதாக புகார்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் உள்ள ஆணாய் பிறந்தான், அத்தியந்தல் அடிஅண்ணா மலை, வேங்கிக்கால் ஆகிய ஊராட்சிகளின் கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறைகள் மூடப்பட்டு உள்ளதால் கிரிவலம் வரும் பக்தர்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்.

    தற்போது மார்கழி மாதத்தில் தினமும் பல ஆயிரக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்து கொண்டு உள்ளனர். உள்ளூர் மற்றும் வெளிமாவட்டம், வெளி மாநிலம், வெளிநாடுகளில் இருந்தும் பக்தர்கள் வருகின்றனர்.

    மலையை சுற்றி 14 கிலோமீட்டர் தொலைவு கிரிவலப் பாதையில் 4 ஊராட்சிகளிலும் பல லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டுப்பாட்டில் உள்ள கழிப்பறைகள் அனைத்தும் பூட்டி கிடப்பதால் பெண்கள் மற்றும் பக்தர்கள் மிகவும் சிரமப்பட்டு வருகின்றனர்.

    இதற்கு மாவட்ட நிர்வாகம் பூட்டிக் கிடக்கும் கழிப்பறைகளை தினமும் திறந்து வைக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • காலை குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா நடந்தது
    • கார்த்திகை தீபத்திற்குள் கும்பாபிஷேக விழா நடைபெறும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கிரிவல பாதையில் உள்ள அஷ்ட லிங்கங்கள் உள்ளன.

    இந்திர லிங்கம், அக்னிலிங்கம் எமலிங்கம், நிருதி லிங்கம், வருண லிங்கம், வாயு லிங்கம், குபேர லிங்கம், ஈசான்ய லிங்கம் மற்றும் சூரிய லிங்கம், சந்திர லிங்கம் ஆகிய 10 கோவில்களில் திருப்பணிகள் செய்து கும்பாபிஷேகம் செய்ய நடைபெற உள்ளது.

    இன்று காலை 9 மணியளவில் குடமுழுக்கு திருப்பணி பூஜை தொடக்கவிழா இந்திர லிங்கம் கோவிலில் நடந்தது. சிவாச்சாரியார்கள் வேத மந்திரங்கள் முழங்க பூஜைகள் நடைபெற்றது.

    இதில் கோவில் இணை ஆணையர் அசோக் குமார் முன்னிலை வகித்தார். நடந்தது திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    திருப்பணிகள் வரும் கார்த்திகை தீபத்திற்குள் முடிக்கப்பட்டு கும்பாபிஷேக விழா நடைபெறும் என தெரிவித்துள்ளனர்.

    ×