என் மலர்
திருவண்ணாமலை
- திருவண்ணாமலையில் நடந்தது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. தலைமையில் நடந்தது.
இதில் அ.தி.மு.க. செய்தித்தொடர்பாளர் கல்யாண சுந்தரம் கலந்து கொண்டு பேசினார்.
ஆர்ப்பாட்டத்தில் திரளான கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
- கல்லூரி முதல்வர் தகவல்
- நாளை கலந்தாய்வு நடைபெறுகிறது
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறில் உள்ள அறிஞர் அண்ணா அரசுக் கலைக் கல்லூரியில் முதுநிலை பாடப்பிரிவுகளுக்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க மாணவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கல்லூரி முதல்வர் ந.கலைவாணி புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் தெரிவித்து இருப்பதாவது:-
2022 - 23 ம் கல்வியாண்டிற்கான முதுநிலை தமிழ், ஆங்கிலம், பொருளியல், வரலாறு, வணிகவியல், கணிதம் இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், கணினி அறிவியல் மற்றும் தகவல் தொழிட்நுட்பம் ஆகிய பாடப் பிரிவுகளுக்கான மாணவர் சேர்க்கைக்கு www.tngasapg.in என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.
முதுநிலைப் படிப்புக்கு விண்ணப்பிக்க நாளை வெள்ளிக்கிழமை கடைசி நாள் ஆகும்.
அதேப் போல் இளநிலைப் பிரிவில் கலை வணிகவியல், மொழிப் பாடம் மற்றும் அறிவியல் பாடப் பிரிவுகளில் காலியாக உள்ள சில இடங்களுக்கான மாணவர்களுக்கான கலந்தாய்வு நாளை நடைபெறுகிறது.
கலந்தாய்வில் கலந்து கொள்ளும் மாணவ - மாணவிகள்் காலையில் வரவேண்டும். அனைத்து மாணவர்களும்கொ ரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மாணவர் சேர்க்கையின் போது பெற்றோர்கள் கல்லூரிக்குள் வர அனுமதி கிடையாது.
மாணவர்கள் சேர்க்கையின் போது ஆன்லைனில் பதிவு செய்த விண்ணப்பம் பெற்றோர் கையொப்பத்துடன்) 4 மதிப்பெண் பட்டியல், பத்தாம் வகுப்பு, பிளஸ் 1 மற்றும் பிளஸ் 2 (தலைமை ஆசிரியரிடம் கண்டிப்பாகச் சான்றொப்பம் பெற்றிருத்தல் வேண்டும்) அசல் மாற்றுச் சான்றிதழ், அசல் சாதிச் சான்றிதழ் போன்ற அனைத்து அசல் சான்றிதழ்களை கட்டாயம் கொண்டு வரவேண்டும்.
அனைத்து மாணவர்களும் அனைத்துச் சான்றிதழ்களிலும் 3 நகல்கள், 3 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றை கட்டாயம் கொண்டு வரவேண்டும். மாணவர்கள் விண்ணப்பத்தில் பெற்றோர் கையொப்பத்தைப் பெற்று உள்ளே வரவேண்டும்.
காலை 09.30 மணிக்கு மேல் வரும் மாணவர்கள் கலந்தாய்வில் கலந்து கொள்ள அனுமதி கிடையாது. மாணவ-மாணவிகள் சேர்க்கையானது மதிப்பெண், இனம் மற்றும் சிறப்புப்பிரிவு அடிப்படையில் மட்டுமே சேர்க்கைக்கான கலந்தாய்வு நடைபெறும் என தெரிவித்து உள்ளார்.
- 38 பேருக்கு பட்டா மாற்றம் செய்யப்பட்டது
- 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த மும்முனி கிராமத்தில் மனுநீதிநாள் முகாம் நடைபெற்றது.
முகாமுக்கு மாவட்ட தனித்துணை கலெக்டர் கோ.வெங்கடேசன் தலைமை தாங்கி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். தாசில்தார்கள் முருகானந்தம், சுபாஷ்சந்தர் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்.
முகாமில் 38 பேருக்கு பட்டா மாற்றம், 6 பேருக்கு மின்னனு குடும்ப அட்டை, 73 பேருக்கு முதியோர் மற்றும் இதர உதவித் தொகை, 3 பேருக்கு நத்தம் பட்டா நகல் உள்ளிட்ட 128 பேருக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.
முகாமில் துணை தாசில்தார் அகத்தீஸ்வரன் வருவாய் ஆய்வாளர் கலைவாணி, மருத்துவர் பூவிதா கிராம நிர்வாக அலுவலர் சுரேஷ், ஒன்றியக்குழு உறுப்பினர் சுகந்தி வேலு, ஊராட்சி மன்றத் தலைவர் ஜெயலட்சுமி தங்கராஜ் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
- அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. மாலை அணிவித்து மரியாதை
- ஏரளமானோர் கலந்து கொண்டனர்
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அதிமுக சார்பில், பேரறிஞர் அண்ணா 114-வது பிறந்தநாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அண்ணா சிலைக்கு முன்னாள் அமைச்சரும், மாவட்ட செயலாளரும், போளூர் எம்.எல்.ஏ.வுமான அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பின்னர் பொதுமக்களுக்கு இனிப்புகளை வழங்கினார்.
நிகழ்ச்சியில் மாவட்ட கழக நிர்வாகிகள், ஒன்றிய, நகர, பேரூராட்சி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், மாவட்டச் சார்பு அணி செயலாளர்கள், மற்றும் நிர்வாகிகள், உள்ளாட்சி நகராட்சி அமைப்பு பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க நிர்வாகிகள், மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
- கஞ்சா விற்பனை செய்பவர்கள் மீது நடவடிக்கை
- எஸ்.பி. எச்சரிக்கை
செங்கம்:
செங்கத்தில் அரசு பள்ளி மாணவர்கள் கஞ்சா புகைக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் இது குறித்த வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்நிலையில் செங்கம் போலீசார் விசாரணை செய்து வந்த நிலையில் நேற்று செங்கம் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் திருவண்ணாமலை எஸ்.பி. கார்த்திகேயன் பள்ளி மாணவர்களிடையே போதைப்பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்கள் சுமார் 100-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
அப்போது எஸ்.பி. கார்த்திகேயன் பேசுகையில்:-
பள்ளி மாணவர்கள் பள்ளி பருவத்தில் தேவையில்லாத சமூக வலைதளங்கள் மற்றும் போதை வஸ்து போன்ற பழக்கங்களுக்கு உள்ளாக கூடாது என்றும், கஞ்சா உள்பட போதை பொருட்கள் பயன்படுத்தும் சகமாணவர்கள் அல்லது பயன்படுத்த வற்புறுத்தும் மாணவர்கள் குறித்த தகவலை எவ்வித அச்சமுமின்றி ஆசிரியர்களிடமும் அல்லது போலீசாரிடம் தெரிவிக்கலாம்.
வருங்காலம் இந்தியா மாணவர்கள் கையில் தான் உள்ளது, மாணவர்கள் தங்களுக்கு பிடித்த துறையில் படித்து முன்னேறி தங்களது பங்களிப்பை இந்திய நாட்டிற்கு அளிக்க வேண்டும்
இவ்வாறு அவர் பேசினார்.
இதைத் தொடர்ந்து பள்ளி மாணவர்கள் போதை பொருள் பயன்படுத்துவதற்கு எதிராக உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.
நிகழ்ச்சியில் டி.எஸ்.பி. சின்னராஜ், இன்ஸ்பெக்டர் சரவணகுமரன், தலைமை ஆசிரியர் காமத், கவுன்சிலர் முருகமணி உள்பட ஆசிரியர்கள் பள்ளி மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் கூறியதாவது:-
கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனையை தடுப்பதற்காக தனி படைகள் அமைக்கப்பட்டு+ செயல்பட்டு வருவதாகவும், கஞ்சா விற்பனை செய்து சிறைக்கு சென்று திரும்பியவர்கள், பிணையில் வெளிவந்தவர்கள் உள்ளிட்டோர் குறித்த பதிவேடுகள் தயார் செய்யப்பட்டு வருவதாகவும், இனிவரும் காலங்களில் போதை பொருட்கள் நடமாட்டத்தை குறைக்க தேவையான அதிரடி நடவடிக்கைகள் எடுக்கப்படும் எனவும், போதைப் பொருட்கள் விற்பனை செய்யப்படுவது, பயன்படுத்துவோர் குறித்த தகவல்களை போலீசாருக்கு பொதுமக்கள் தெரிவிக்க வேண்டும்.
கஞ்சா உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை பாயும் என்றார்.
- சொத்தை மீட்டு தர வலியுறுத்தல்
- புற்று நோயால் அவதி- கண்பார்வை இழந்ததால் விரக்தி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் கோட்டை கிழக்கு தெரு பெரியார் நகரை சேர்ந்த தர்மன். இவரது மனைவி சின்னகுழந்தை (வயது95) தம்பதிகளுக்கு நடராஜன் ராஜேந்திரன் குமரேசன் ஆகிய 3 மகன்கள் உள்ளனர்.
இதில் தர்மன் ஏற்கனவே இறந்துவிட்டார். குமரேசன் நடராஜன் ஆகியோரும் இறந்து விட்டனர். இதனால் மற்றொரு மகன் ராஜேந்திரன் அரவணைப்பில் சின்னகுழந்தை வசித்து வருகின்றார்.
தற்போது ராஜேந்திரனுக்கு போதிய வருமானம் இல்லாததால் சின்னகுழந்தைக்கு, வரும் முதியோர் உதவி தொகை வைத்து பிழைப்பை நடத்தி வருகின்னர்.
மேலும் புற்று நோயால் அவதிபட்டு வரும் நிலையில் தன்னை ஏமாற்றி எழுதி வாங்கிய பேரனிடமிருந்து சொத்தை மீட்டு தர மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் நடவடிக்கை மேற்கொள்ளாத காரணத்தினாலும் கண்பார்வை இழந்ததால் வாழ பிடிக்கவில்லை. இதனால் தன்னை கருணை கொலை செய்ய கலெக்டருக்கு பதிவு தபால் மூலம் சின்னகுழந்தை கோரிக்கை மனு அளித்துள்ளார்.
இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
- 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கினார்
- ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், அருகே உள்ள அல்லியந்தல் அரசு உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் மாலவன் இவர் தமிழக அரசின் டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டு கடந்த 5-ம் தேதி சென்னையில் நடந்த விழாவில் இவருக்கு தமிழக அரசின்டாக்டர் ராதாகிருஷ்ணன் நல்லாசிரியர் விருது மற்றும் ரூபாய் 10, ஆயிரம் பரிசு தொகை வழங்கப்பட்டது.
இந்த நிலையில் தலைமையாசிரியர் மாலவன், தனக்கு வழங்கிய ரூ.10,000 பரிசு தொகை மற்றும் அவரது சொந்த பணம் ரூ.5000 சேர்த்து ரூபாய் 15,000 மதிப்புள்ள 43 இன்ச் ஸ்மார்ட் கலர் டிவியை 6-ம் வகுப்பு பள்ளி மாணவர்களின் கல்விக்காக வழங்கினார்.
நிகழ்ச்சியில் பள்ளி மேலாண்மை குழு தலைவர், துணைத் தலைவர், உறுப்பினர்கள், பெற்றோர் ஆசிரியர் கழக பொறுப்பாளர்கள், ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- போலீசார் மணல் கடத்தல் தடுப்பு பணியின் போது சிக்கினர்
- மாட்டு வண்டிகள் பறிமுதல்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர் அருகே செய்யாறு- கடுகுனுர் செய்யாற்று படுகையில் மணல் கடத்துவதாக செய்யாறு தனிப்படை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
இதன் பேரில் தனிப்படை போலீசார் செய்யாறு- கடுகனூர் செய்யாற்றப்படுகையில் மணல் கடத்தல் தடுப்பு பணியில் ஈடுபட்டனர்.
அப்போது வெள்ளரிபேட்டை புதுக்கோட்டை, பகுதியை சேர்ந்த ஜெயசீலன் (42), அசோகன் (33), இளஞ்செழியன் (23), பழனி (53), சதீஷ்குமார் (30), ராஜேந்திரன் (53), ஆகிய 6 பேர்மாட்டு வண்டியில் மணல் கடத்திக் கொண்டு வந்தனர்.அவர்களை மடக்கி பிடித்து. தனிப்படை போலீசார் 6 மாட்டு வண்டிகளை பறிமுதல் செய்தனர்.
மணல் கடத்தலில் ஈடுபட்ட 6 பேர் மீது பெரணமல்லூர், போலீசார் வழக்கு பதிவு செய்து கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- சாலையோரம் செல்ல முடியாமல் அவதி
- தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதிய சாலை பகுதி வேலூர் திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ள காரணத்தால் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.
கண்ணமங்கலம் பேரூராட்சி பழைய பஸ் நிறுத்தம் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாலையோரம் எண்ணற்ற நடைபாதைக்கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால் சாலையில் வாகனங்கள் வரும் போது பாதசாரிகள் சாலையோரம் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் கடையின் அளவே பத்து அடி அகலம் உயரம் உள்ள நிலையில் அவர்களது வியாபாரப் பொருட்கள், விளம்பர தட்டிகளை, வாகனங்கள், நடைபாதைவாசிகள் செல்ல முடியாதவாறு வைத்து விடுகின்றனர்.
எனவே கண்ணமங்கலம் ஆற்று மேம்பாலம் முதல் புதுப்பேட்டை வரை வாகன நெரிசல் தவிர்க்க உடனடியாக கண்ணமங்கலம் பகுதி சாலையில் நடுவே நெடுஞ்சாலைத்துறையினர் சென்டர் மீடியன் தடுப்புச் சுவர் அமைக்க முன் வரவேண்டும். சாலையில் ஓரம் வடிகால் வசதி இல்லை. மழையால் அடிக்கடி சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது.
இருபுறமும் மழைநீர், கழிவு நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
- உரிமையாளர்களுக்கு போலீஸ் எச்சரிக்கை
- தரமான முறையில் உணவை வழங்க அறிவுரை
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி டவுன் பகுதியில் உள்ள சைவ ஓட்டலில் பீட்ரூட் பொறியலில் எலி தலை கிடந்தது.இதனை கண்டித்து ஓட்டலை முற்றுகையிட்டு ஊழியர்களிடம் வாக்கு வாதத்தில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் ஆய்வு மேற்கொண்டனர்.
ஆய்வில் திடிரென எலி சுற்றி திரிந்த காரணத்தினால் ஓட்டலுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அளிக்கப்பட்டது. கலெக்டர் உத்தரவின் பேரில் ஓட்டலுக்கு சீல் வைத்தனர். ஓட்டல் லைசென்சு ரத்து செய்யப்பட்டது.
இதனையடுத்து நேற்று ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் ஆரணி டி.எஸ்.பி. ரவிசந்திரன் தலைமையில் ஓட்டல் நலசங்கத்தினர் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் டி.எஸ்.பி. ரவிசந்திரன் பேசியாதாவது:- ஆரணியில் தொடர்ந்து பல சச்சரவுகள் ஏற்படுகின்றன.
பிரியாணி சாப்பிட்டு இறந்த சிறுமி கரப்பான் பூச்சி காடையில் புழு தற்போது பொறியலில் எலி என்பதால் ஆரணியில் உள்ள உணவகங்களில் சாப்பிட அச்சமாக உள்ளது.
இதனால் தரமான முறையில் உணவை வாடிக்கை யாளர்களுக்கு வழங்க வேண்டும் என அறிவுறுத்தினார்.
இதில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ், சப்-இன்ஸ்பெக்டர் கிருஷ்ணமூர்த்தி மற்றும் ஓட்டல் சங்க உரிமை யாளர்கள் கலந்து கொண்டனர்.
- பெரிய கிளாம்பாடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் திருவேங்கடம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது.
- திருவேங்கடம் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை மாவட்டம் கலசபாக்கம் முன்னாள் தி.மு.க. எம்.எல்.ஏ. திருவேங்கடம் உடல் நலக்குறைவால் பாதிக்கப்பட்டார். அவர் நேற்று இரவு மரணமடைந்தார்.
மூத்த முன்னோடியான திருவேங்கடம் தி.மு.க. சொத்து பாதுகாப்பு குழு செயலாளராக இருந்தார். கலசப்பாக்கம் தொகுதியில் எம்.ஜி.ஆர். ஆட்சி காலம் முதல் 4 முறை எம்.எல்.ஏ.வாக இருந்தவர்.
தற்போது இவரது மகன் பெ.சு.தி. சரவணன் கலசப்பாக்கம் எம்.எல்.ஏ.வாக உள்ளார்.
பெரிய கிளாம்பாடி கிராமத்தில் உள்ள அவரது வீட்டில் திருவேங்கடம் உடல் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. ஏராளமான பொதுமக்கள் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலசப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. சரவணனை செல்போன் மூலம் தொடர்பு கொண்டு தந்தை திருவேங்கடம் மறைவுக்கு இரங்கல் தெரிவித்து ஆறுதல் கூறினார்.
திருவேங்கடம் உடலுக்கு அமைச்சர் எ.வ.வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். தொடர்ந்து துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி, திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும் சட்டமன்ற எதிர்கட்சி துணை செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ., கலெக்டர் முருகேஷ், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உட்பட கட்சி நிர்வாகிகள் அரசு அலுவலர்கள் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர்.
நாளை காலை 10 மணி அளவில் சொந்த ஊரான பெரிய கிளாம்பாடியில் அவரது உடல் அடக்கம் செய்யப்படுகிறது.
- பெற்றோர்கள் அதிர்ச்சி
- போலீசார் விசாரணை
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளியின் அருகே உள்ள மரத்திலிருந்து மறைத்து வைத்திருந்த கஞ்சாவை எடுத்து புகைப்பது போல வீடியோ செங்கம் பகுதியில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
செங்கம் பகுதியில் ஏற்கனவே கஞ்சா விற்பனை அதிக அளவில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்களிடம் குறிப்பாக பெற்றோர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது மாணவர்கள் குறித்தும், மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வெளியான வீடியோ எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
செங்கம் அருகே உள்ள மேல்செங்கம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, சாத்தனூர், இறையூர், மேல்புழுதியூர், செங்கம் தளவாநாயக்கன்பேட்டை, பரமனந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசார் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






