என் மலர்
உள்ளூர் செய்திகள்

பள்ளி மாணவர்கள் கஞ்சா பயன்படுத்தும் வீடியோ பரவுகிறது
- பெற்றோர்கள் அதிர்ச்சி
- போலீசார் விசாரணை
செங்கம்:
திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் பள்ளி மாணவர்கள் சிலர் பள்ளியின் அருகே உள்ள மரத்திலிருந்து மறைத்து வைத்திருந்த கஞ்சாவை எடுத்து புகைப்பது போல வீடியோ செங்கம் பகுதியில் சமூக வலைத்தளங்களில் பரவி வருகிறது.
செங்கம் பகுதியில் ஏற்கனவே கஞ்சா விற்பனை அதிக அளவில் உள்ளதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்பட்டு வரும் நிலையில் அப்பகுதி மக்களிடம் குறிப்பாக பெற்றோர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுகுறித்து போலீசாரிடம் கேட்டபோது மாணவர்கள் குறித்தும், மாணவர்கள் கஞ்சா பயன்படுத்துவதாக வெளியான வீடியோ எந்த இடத்தில் நடைபெற்றது என்பது குறித்தும் விசாரணை செய்து வருகிறோம். இதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும்.
செங்கம் அருகே உள்ள மேல்செங்கம், அன்வராபாத், செ.நாச்சிப்பட்டு, சாத்தனூர், இறையூர், மேல்புழுதியூர், செங்கம் தளவாநாயக்கன்பேட்டை, பரமனந்தல் சாலை உள்ளிட்ட பகுதிகளில் உள்ளிட்ட பகுதிகளில் கஞ்சா விற்கப்படுவதாக சமூக ஆர்வலர்கள் தரப்பில் கூறப்படுகிறது.
போலீசார் கஞ்சாவை பதுக்கி விற்பனை செய்பவர்களை கண்டறிந்து கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.






