என் மலர்
உள்ளூர் செய்திகள்

கண்ணமங்கலம் புதிய சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட காட்சி.
நடைபாதை கடைகளால் போக்குவரத்து பாதிப்பு
- சாலையோரம் செல்ல முடியாமல் அவதி
- தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் புதிய சாலை பகுதி வேலூர் திருவண்ணாமலை செல்லும் மெயின்ரோடு பகுதியில் அமைந்துள்ள காரணத்தால் தினமும் எண்ணற்ற வாகனங்கள் சென்று வருகின்றன.
கண்ணமங்கலம் பேரூராட்சி பழைய பஸ் நிறுத்தம் முதல் புதிய பஸ் நிலையம் வரை சாலையோரம் எண்ணற்ற நடைபாதைக்கடைகள் வைத்து வியாபாரம் செய்கின்றனர்.
இதனால் சாலையில் வாகனங்கள் வரும் போது பாதசாரிகள் சாலையோரம் செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
குறிப்பாக கடை வைத்து வியாபாரம் செய்பவர்கள் கடையின் அளவே பத்து அடி அகலம் உயரம் உள்ள நிலையில் அவர்களது வியாபாரப் பொருட்கள், விளம்பர தட்டிகளை, வாகனங்கள், நடைபாதைவாசிகள் செல்ல முடியாதவாறு வைத்து விடுகின்றனர்.
எனவே கண்ணமங்கலம் ஆற்று மேம்பாலம் முதல் புதுப்பேட்டை வரை வாகன நெரிசல் தவிர்க்க உடனடியாக கண்ணமங்கலம் பகுதி சாலையில் நடுவே நெடுஞ்சாலைத்துறையினர் சென்டர் மீடியன் தடுப்புச் சுவர் அமைக்க முன் வரவேண்டும். சாலையில் ஓரம் வடிகால் வசதி இல்லை. மழையால் அடிக்கடி சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கும் அவலநிலை உள்ளது.
இருபுறமும் மழைநீர், கழிவு நீர் செல்லும் வகையில் கால்வாய் அமைக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.






