என் மலர்
திருவண்ணாமலை
- பொதுக் கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் ஆவேசம்
- கடந்த அ.தி.மு.க. ஆட்சியின் திட்டங்கள் கிடப்பில் ேபாடப்பட்டுள்ளது
ஆரணி:
ஆரணி அண்ணாசிலை அருகில் அண்ணாவின் 114-வது பிறந்த நாளை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுகூட்டம் நடைபெற்றது.
இதில் நகர செயலாளர் அசோக்குமார் அனைவரையும் வரவேற்றார். நகர மன்ற துணைத் தலைவர் பாரி பாபு முன்னிலை வகித்தார். முன்னாள் அமைச்சரும் சட்டமன்ற உறுப்பினருமான சேவூர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக மாவட்ட செயலாளர் தூசி மோகன் பங்கேற்றார்.
கூட்டதில் முன்னாள் அமைச்சர் சேவூர் ராமச்சந்திரன் பேசியதாவது:-
கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆரணி நகராட்சியில் சுமார் ரூ.8 கோடி மதிப்பீட்டில் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தியது. அந்த பணிகள் கிடப்பில் போடப்பட்டுள்ளதால் ஆரணி நகர் பகுதியில் உள்ள பல்வேறு சாலைகள் குண்டும் குழியுமாக காணப்படுகிறது.
கடந்த அதிமுக ஆட்சியின் போது ஆரணி நகர பகுதி மக்களின் குடிநீர் பஞ்சத்தை போக்கும் விதமாக ராணிப்பேட்டை பாலாற்றில் இருந்து ஆரணி நகர் பகுதிக்கு கூட்டு குடிநீர் திட்டமும் செயல்படுத்தப்பட்டது தற்போது அந்த திட்டமும் கிடப்பில் உள்ளன.
இதனால் ஆரணி நகராட்சியை கண்டித்து அதிமுக சார்பில் விரைவில் மாபெரும் கண்டனம் ஆர்ப்பாட்டம் நடைபெறும் இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டதில் ஒன்றிய செயலாளர்கள் திருமால், கஜேந்திரன் வக்கீல் சங்கர் ஜெயபிரகாஷ், மாவட்ட பொருளாளர் கோவிந்தராசன் மாவட்ட ஐ.டி.விங் சரவணன், நகர மாணவரணி செயலாளர் குமரன், பையூர் சதிஷ், மற்றும் கவுன்சிலர்கள் உள்ளிட்ட பொதுமக்கள் பங்கே ற்றனர். இறுதியில் ஜெயலலிதா பேரவை துணை செயலாளர் முனிரத்தினம் நன்றி கூறினார்.
- போதை தடுப்பு குறித்த விழிப்புணர்வு
- போதை பொருட்கள் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா தலைமையில் நேற்று போதைதடுப்பு விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது.
சப்-இன்ஸ்பெக்டர் விஜயகுமார் முன்னிலை வகித்தார்.
இதில் கண்ணமங்கலம் பேரூராட்சி முன்னாள் தலைவர் கோவர்த்தனன் உள்பட வியாபாரிகள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் இன்ஸ்பெக்டர் சாலமோன்ராஜா, வியாபாரிகள் யாரும் தங்கள் கடைகளில் குட்கா, புகையிலை மற்றும் சிகரெட் உள்பட போதை பொருட்கள் விற்பனை செய்வது கூடாது. மீறி விற்பனை செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்தார்.
முடிவில் தனிப்பிரிவு சிறப்பு சப் இன்ஸ்பெக்டர் ஏகாம்பரம் நன்றி கூறினார்.
- ரூ.5 லட்சம் மதிப்பில் கட்டப்பட உள்ளது
- ஏராளமானோர் கலந்து கொண்டனர்
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த படவேடு வேட்டகிரிபாளையம்
ஊஊராட்சி துவக்கப்பள்ளியில் எம்ஜிஆர் சத்துணவு திட்ட வளாகம் கட்ட நேற்று 16-ம்தேதி பூமி பூஜை நடைபெற்றது.
ஒன்றிய கவுன்சிலர் பரிந்துரையின் பேரில் ரூ 5,00,000-/ மதிப்பில் கட்டப்பட உள்ள சத்துணவு கூடம் கட்டும் பூமி பூஜையில் ஒன்றிய கவுன்சிலர் தஞ்சியம்மாள் லோகநாதன், திமுக போளூர் (வ) ஒன்றிய கழக செயலாளர் ஆர்.வி.சேகர், ஒன்றிய கவுன்சிலர் மனோகரன், படவேடு துணைத் தலைவர் தாமரைச்செல்வி ஆனந்தன், ஊர் கவுண்டர் ஏழுமலை, பால் கூட்டுறவுசங்க தலைவர் சங்கர் நாட்டாண்மை சரவணன், முன்னாள் கவுன்சிலர் ஆர்.எம்.இரகு, திமுக கிளை செயலாளர் பிச்சாண்டி, ஏழுமலை, ராயல் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- திட்டங்கள் குறித்து விளக்கப்பட்டது
- அதிகாரிகள் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கம் அருகே உள்ள புதுப்பாளையம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஆன்லைன் மூலம் பயிற்சி வகுப்புகள் நேற்று நடை பெற்றது.
ஒன்றியக் குழு தலைவர் சி.சுந்தர பாண்டியன் தலைமையில் ஒன்றியக் குழு அலுவலக த்தில் இந்த பயிற்சி வகுப்பு நடைபெற்றது. இதில் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பி.பி.முருகன் முன்னிலை வகித்தார்.
இந்த பயிற்சி முகாமில் ஊராட்சி மன்ற தலைவர்களுக்கு ஊராட்சி மன்ற வரவு, செலவு கணக்குகள், செயல்படுத்தி வரும் திட்டங்கள் குறித்து ஆன்லைன் மூலம் பயிற்சி வழங்கப்பட்டது.
இந்த நிகழ்வில் ஊராட்சி மன்ற தலைவர்கள், வட்டார வளர்ச்சி அலுவலக அலுவலர்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
- அன்னதானம் வழங்கினர்
- தொண்டர்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்
செங்கம்:
செங்கத்தில் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் பிறந்த தினத்தை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் செங்கம் பகுதியில் உள்ள கோவில்களில் அர்ச்சனை மற்றும் அபிஷேகங்கள் செய்து அன்னதானம் வழங்கினர்.
செங்கம் போளூர் சாலையில் உள்ள தேரடி விநாயகர் கோவிலில் பிரதமர் மோடியின் பிறந்த நாளை முன்னிட்டு பா.ஜ.க. நிர்வாகிகள் நரேந்திர மோடி பெயரில் சிறப்பு அபிஷேகங்கள் செய்து அன்னதானம் வழங்கினர்.
இதில் மாநில நிர்வாகி ஜம்புகுமார், பேரூராட்சி கவுன்சிலர் முரளிதரன், ஆதவன், ஓபிசி துணை தலைவர் ராஜேந்திரன், வழக்கறிஞர்கள் இளங்கோவன், ஜெயச்சந்திரன், சேகர், பழனிவேல், ரமேஷ் உள்பட முக்கிய நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் பலர் கலந்து கொண்டனர்.
- ஆரணி போலீஸ் நிலையத்தில் நடந்தது
- தடையை மீறி செயல்பட்டால் கடைகளுக்கு சீல்- எச்சரிக்கை
ஆரணி:
ஆரணி டவுன் போலீஸ் நிலையத்தில் வியாபாரிகளுடன் போதை பொருள் விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.
இதில் இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் அனைவரையும் வரவேற்றார் சப்-இன்ஸ்பெக்டர் சுந்தரேசன் முன்னிலை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக டி.எஸ்.பி ரவிசந்திரன் பங்கேற்றார்.
மேலும் டி.எஸ்.பி பேசியாதாவது:-
தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட கஞ்சா புகையிலை போதை பொருட்களை விற்பனை செய்யக் கூடாது தடையை மீறி விற்பனை செய்தால் கடை உரிமையாளர்கள் மீது வழக்கு பதியப்பட்டு கடைகளுக்கு சீல் வைக்கப்படும் வங்கிக்கணக்குகள் முடக்கப்படும் இவ்வாறு அவர் பேசினார்.
இதில் ஆரணி வியாபார சேர்ந்தவர்கள் திரளாக பங்கேற்றனர்.
- விதிமுைறகளை கடைபிடிக்க வலியுறுத்தல்
- மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என எச்சரிக்கை
செய்யாறு:
செய்யாறு டி.எஸ்.பி. வெங்கடேசன் தலைமையில் உதவி ஆய்வாளர்கள் ராமகிருஷ்ணன், ராம்குமார், அரசு உள்படபோலீசார் நேற்று ஆற்காடு சாலை அண்ணா சிலை அருகே, மற்றும் ஆரணி கூட்ரோட்டில் ஓட்டுநர் உரிமம் இல்லாதவர்கள், 18 வயதுக்கு கீழ் வண்டி ஓட்டும் மாணவ மாணவிகள், குடித்துவிட்டு வாகன ஓட்டுபவர்கள், உரிய ஆவணங்கள் இல்லாமல் இருசக்கர வாகனம் ஓட்டுபவர்கள், போன்ற போக்குவரத்து விதிகளை மீறி வரும் வாகன ஓட்டிகளான அனைவரையும் நிறுத்தி அனைவரும் போக்குவரத்து விதிகளை கடைபிடிக்க வேண்டும் என்றும், தலைக்கவசம் அணிய வேண்டும், வாகனத்திற்குரிய உரிய ஆவணங்கள் கையில் வைத்திருக்க வேண்டும் என்றும், மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டக்கூடாது என்றும் அறிவுரை வழங்கி எச்சரித்து அனுப்பினார்.
- வேலை கிடைக்காததால் விரக்தி
- போலீசார் விசாரணை
செய்யாறு:
செய்யாறு அடுத்த வேலியநல்லூர் பகுதியை சேர்ந்தவர் ஆதித்யா (வயது 20) ஐடிஐ முடித்துள்ளார்.
இவர் பல நிறுவனங்களில் வேலைக்காக சுற்றியுள்ளார். வேலை கிடைக்காததால் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் வீட்டின் பின்புறம் தூக்கு போட்டுக் கொண்டார்.
இதனைக் கண்டு அவரது தந்தை மூர்த்தி ஆதித்யாவை மீட்டு செய்யாறு அரசு பொது மருத்துவமனைக்கு சென்றார். அங்கு பரிசோதனை செய்த டாக்டர் ஆதித்யா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தார்.
இதுகுறித்து மூர்த்தி செய்யாறு போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- தஞ்சாவூரிலிருந்து கொண்டுவரப்பட்டது
- 87 லாரிகள் மூலம் ஏற்றி அரிசி ஆலைகளுக்கு அனுப்பி வைப்பு
போளூர்:
திருவண்ணாமலை மாவட்டம் போளூர் ெரயில் நிலையத்துக்கு டெல்டா மாவட்டமான தஞ்சாவூரில் இருந்து விவசாயிகளிடம் கொள்முதல் செய்யப்பட்ட 50 ஆயிரம் நெல் மூட்டைகள் போளூர் வந்தடைந்தன.
சரக்கு ெரயில் மூலம் சுமார் 1500 டன் நெல் மூட்டைகள் 40 பெட்டிகளில் போளூர்வந்தது.
நெல் மூட்டைகளை 87 லாரிகள் மூலம் ஏற்றி அரிசி ஆலைகளுக்கு அதிகாரிகள் அனுப்பி வைத்தனர்.
- போலீஸ் நிலையத்தில் சரண்
- நடத்தையில் சந்தேகப்பட்டு ஆத்திரம்
போளூர்:
திருவண்ணாமலை மாவட் டம் போளூர் அடுத்த அலங்காரமங்கலம் கிராமத்தை சேர்ந்தவர் சுரேஷ் (வயது 36). சொந்தமாக கார் வைத்து வாடகைக்கு சவாரி செல்வது வழக்கம். இவரது மனைவி பச்சையம்மாள் (30). இவர்க ளுக்கு திருமணமாகி 12 வரு டம் ஆகிறது. 6-ம் வகுப்பு படிக்கும் திவ்யா (II) என்ற மகளும், நான்காம் வகுப்பு படிக்கும் கதிர்வேலு (9) என்ற மகனும் உள்ளனர்.
இந்த நிலையில் பச்சையம் மாள் நடத்தையில் சுரேசுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது. இதனால் கணவன்- மனைவி இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டுள்ளது. கடந்த 2 நாட்களுக்கு முன் கணவனிடம் சண்டைபோட் டுவிட்டு பச்சையம்மாள் கொரால்பாக்கம் கிராமத்தில் உள்ள தனது அத்தை வீட்டுக்கு சென்றுள்ளார்.
நேற்று காலை 10 மணி அள வில் கொரால்பாக்கம் கிரா மத்திற்கு சுரேஷ் சென்று கள்ளக்காதல் குறித்து பச்சையம்மாளிடம் கேட்டுள்ளார்.
அப்போதும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த சுரேஷ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து மனைவி பச்சையம்மாள் கழுத்தை அறுத்துள்ளார். இதில் அவர் துடிதுடித்து சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
அதைத்தொடர்ந்து சுரேஷ் போளூர் போலீஸ் நிலையத் துக்கு சென்று போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெயப்பிர காஷ் முன்னிலையில் சரண டைந்தார். உடனடியாக துணை போலீஸ் சூப்பிரண்டு குமார் மேற்பார்வையில், போலீசார் சென்று பச்சையம்மாள் உடலை கைப்பற்றி திரு வண்ணாமலை அரசு ஆஸ் பத்திரிக்கு பிரேத பரிசோத னைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஓட்டல் உரிமையாளரிடம் பணம் கேட்டு அடாவடி
- 3 வாலிபர்களை பிடிக்க தீவிரம்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம், வெம்பாக்கம் அருகே அசனமாபேட்டை கிராமத்தை சேர்ந்த சிவக்குமார் (வயது 52). இவர் அசனமா பேட்டை கூட் ரோட்டில் ஹோட்டல் நடத்தி வருகிறார்.
நேற்று மாலை 3 வாலிபர்கள் ஓட்டலுக்கு சென்று சிக்கன் பகோடா வாங்கிவிட்டு சென்றனர். மீண்டும் வந்த 3 வாலிபர்களும் கடை உரிமையாளர் சிவகுமாரிடம் பணம் கேட்டு மிரட்டினர்.
பணம் கொடுக்கவில்லை என்றால், பகோடாவில் புழு இருந்ததாக கடைக்கு சீல் வைத்து விடுவோம் என்று மிரட்டி, கடையில் இருந்த சிக்கன் வறுவலை கீழே தள்ளி கொலை மிரட்டல் விடுத்துள்ளனர்.
மேலும் பேஸ்புக், வாட்ஸ் அப்பிலும் தகவல் பரப்பி கடையை காலி செய்து விடுவேன் என்று மிரட்டியள்ளனர்.
இது சம்பந்தமாக ஓட்டல் உரிமையாளர் சிவகுமார் மோரணம் போலீசில் புகார் செய்து சப் இன்ஸ்பெக்டர் சுந்தரம் வழக்கு பதிவு செய்தார். கொலை மிரட்டல் விடுத்த 3 வாலிபர்களை தேடி வருகின்றார்.
- திருமணமான ஒரே வாரத்தில் சோகம்
- போலீசார் விசாரணை
கீழ்பென்னாத்தூர் :
கீழ்பென்னாத்தூர் அடுத்த செவரபூண்டி பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மகள் சந்தியா (வயது 20).
இவருக்கும் விழுப்புரம் மாவட்டம் அவலூர் பேட்டை பகுதியை சேர்ந்த முருகன் (35) என்பவருக்கும் கடந்த 9-ந் தேதி திருமணம் நடந்தது. திருமணம் முடிந்து தம்பதியினர் சந்தியாவின் வீடான தாயார் வீட்டுக்கு வந்தனர்.
இந்த நிலையில் நேற்று முன்தினம் சந்தியா வீட்டின் அருகே குளித்துக் கொண்டிருந்தார். அப்போது திடீரென சந்தியா மயங்கி கீழே விழுந்து கிடந்தார். அவரை உறவினர்கள் மீட்டு திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் சந்தியா ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.
இது குறித்து சந்தியாவின் தந்தை கீழ்பென்னாத்தூர் போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மனைவி இறந்த துக்கம் தாங்காமல் முருகன் மன உளைச்சலுக்கு ஆளானார். இந்த நிலையில் முருகன் உறவினர்களிடம் வெளியே சென்று வருவதாக கூறிவிட்டு சென்றார். பின்னர் விழுப்புரம் மாவட்டம் குண்டலம் பட்டி பகுதியில் உள்ள அவரது வீட்டு அருகே உள்ள விவசாய நிலத்தில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
திருமணம் ஆகி 6 நாட்களே ஆன நிலையில் மனைவி இறந்த நிலையில் கணவன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதி பொதுமக்கள் மற்றும் உறவினர்கள் இடையே சோகத்தை ஆழ்த்தியுள்ளது.






