என் மலர்
திருவண்ணாமலை
- யார் என்று அடையாளம் தெரியவில்லை
- போலீசார் விசாரணை
செங்கம்:
செங்கம் அருகே உள்ள அரசாங்கன்னி பஸ் நிறுத்தம் அருகே 45 வயது மதிக்கத்தக்க ஒருவர் சாலையை கடக்க முயன்றார்.
அப்போது பெங்களூரில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்ற அரசு பஸ் அவர்மீது மோதியது.
இதில் தூக்கி வீசப்பட்டு அவர் படுகாயங்களுடன் செங்கம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேல்சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.
அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். இறந்த நபரின் மார்பு பகுதியில் நந்தகோபால் எனவும், கைகளில் ராமு, பார்த்திபன் எனவும் பச்சை குத்தியுள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர்.
இது குறித்து மேல்செங்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
- ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
- அன்னதானம் வழங்கப்பட்டது
செங்கம்:
செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.
கோவிலில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி மூலவர் மற்றும் கனகவல்லி தாயார், ஆண்டாள் உட்பட அனைத்து சன்னதிகளிலும் உள்ள முலவர்களுக்கு சிறப்பாக அபிஷேகம் செய்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.
இதை தொடர்ந்து ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால் பார்த்த சாரதி மூலவர் சுவாமிக்கு துளசி மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.
கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் பிறப்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.
- தமிழகத்தில் விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்
- முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேச்சு
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ் பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கீழ்பென்னாத்தூரில் நடந்தது. கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சி. தொப்பளான் தலைமை தாங்கினார்.
கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாஷ்யம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.ஆர். ஜெயபிரகாஷ், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றியஅம்மா பேரவை செயலாளர் தட்சணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி கண்ணன், வேட்டவலம் நகர செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் ஒ.சி.முருகன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு, பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 10- ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சி நடந்தபோது மின்கட்டணம் அதிகரிக்கபடவில்லை, மின்தடை ஏற்படவில்லை, ஆனால், தற்போது நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, மின்மீட்டர் வாடகை, சொத்து வரி அதிகரிப்பு என மக்களை வாட்டி வதைக்கின்றனர். தேர்தல் வாக்குறுதியாக அளித்த குடும்பதலைவிகளுக்கான ரூ.ஆயிரம் தருதல் போன்ற திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை. எதிர்காலத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் தொண்டர்கள் பணியாற்றி பாடுபட வேண்டும். பா.ஜ.க உதவியுடன் 50 திமுக எம் எல்ஏ.க்கள் அதிமுகவில் இணைந்து எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி விரைவில் அமையஉள்ளது.நம்முடைய செயல்பாடுகள் ஒற்றுமையுடன் இருந்து ஆட்சி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமைக் கழக பேச்சாளர்கள் பரசுராமன், காவேரி, ஆகியோர் அண்ணாவின் பெருமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், மேக்களூர் ஞானசேகரன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளரும், கத்தாழம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும், கிளை செயலாளருமான அப்பாசாமி, மேக்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் லட்சுமி அப்பாசாமி, நெடுங்காம்பூண்டி தேவ.காளிதாசன், கார்ணாம்பூண்டி மண்ணுசாமி கலித்தேரி திருமூர்த்தி, வேடநத்தம் கிருஷ்ணமூர்த்தி, காட்டு மலையனூர் முருகன், கல்பூண்டி சி.ஆர். காளிமுத்து, ஆராஞ்சி சுந்தரமூர்த்தி கனபாபுரம் மாணிக்கவேல், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் வேட்டவலம் பேரூராட்சி கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தேவ.காளிதாசன் நன்றி கூறினார்.
- துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி வழங்கினார்
- ஏராளமானோர் கலந்துகொண்டனர்
கீழ்பென்னாத்தூர்:
கீழ்பென்னாத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பென்னாத்தூர் அரசினர் ஆண்கள் பெண்கள் மேல்நிலைப்பள்ளி, ஐங்குணம், வேடநத்தம், மேக்களுர் ஊராட்சிகளில் உள்ள அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ- மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கும் விழா நடந்தது.
கீழ்பென்னாத்தூரில் நடந்த விழாவில் பேரூராட்சி சரவணன் தலைமை தாங்கினார்.மாவட்ட கவுன்சிலர் ஆராஞ்சி ஆறுமுகம், முன்னாள் பேரூராட்சி தலைவர் ச.க.பன்னீர்செல்வம், நகர செயலாளர் சி.கே.அன்பு, பள்ளி மேலாண்மைக்குழு தலைவர் கவிதா ஏழுமலை, பேரூராட்சி துணை தலைவர் தமிழரசி சுந்தரமூர்த்தி, பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தலைமை ஆசிரியர் சுமதி அனைவரையும் வரவேற்றார்.
தமிழக சட்டமன்ற துணை சபாநாயகர் கு.பிச்சாண்டி கலந்துகொண்டு 5 அரசு மேல்நிலைப் பள்ளிகளை சார்ந்த 751-மாணவ மாணவிகளுக்கு இலவச சைக்கிள் வழங்கி சிறப்புரை ஆற்றினார்.
ஒன்றிய குழு தலைவர் அய்யாக்கண்ணு, ஒன்றியக்குழு உறுப்பினர் ராஜேந்திரன், சோமாசிபாடி அட்மா.சிவக்குமார், பேரூராட்சி கவுன்சிலர்கள் பாக்யராஜ், கனகா பார்த்திபன், ஜீவா, அம்பிகா ராமதாஸ், கே.பி.மணி, ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டமைப்பு தலைவர் குப்புசாமி, மேக்களூர் கேசவன், பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் பாண்டுரங்கன், கட்டிட குழு தலைவர் ராஜவேலு, பள்ளி மேலாண்மை குழுதலைவர் அறிவழகி ஞான முருகன், தலைமை ஆசிரியர் ராமச்சந்திரன், சமூக ஆர்வலர் கே.வி.ஏழுமலை, ஆசிரியர் - ஆசிரியைகள், திமுக அணி நிர்வாகிகள் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.
- போலீசார் விசாரணை
- மர்ம நபரை தேடி வருகின்றனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் சேத்துப்பட்டு, பழம்பேட்டை, கெங்கையம்மன், கோவில் தெரு என். ஜி. ஓ.நகர் பகுதியை சேர்ந்தவர் மணிவண்ணன் (வயது 49), அரசு பள்ளி ஆசிரியர், இவரது மனைவி திரிபுரசுந்தரி (43), இவர் சேத்துப்பட்டு வட்டாரவள மையத்தில் ஆசிரியர் பயிற்றுநராக பணியாற்றி வருகிறார்.
இவர்கள் கடந்த 16-ந் தேதி (வெள்ளிக்கிழமை), மாலை வீட்டை பூட்டிக்கொண்டு திண்டிவனத்தில், உள்ள தனது உறவினர் வீட்டிற்கு சென்று இருந்தனர்.நேற்று திண்டிவனத்தில் இருந்து வீட்டிற்கு வந்தனர் வீட்டுக்கு வந்தபோது முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.
பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த 22 பவுன் நகை மற்றும் 1 லட்சம் ரொக்கம் ஆகியவற்றை சென்றது தெரியவந்தது இதை சேத்துப்பட்டு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த சேத்துப்பட்டு போலீஸ் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகன், மற்றும் போலீசார் விசாரணை நடத்தினர்.
மேலும் திருபுரசுந்தரி சேத்துப்பட்டு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து மர்ம நபரை தேடி வருகின்றனர்.
மேலும் அக்கம் பக்கம் உள்ள வீட்டிலிருந்த சிசிடிவி காட்சிகளைக் கொண்டு விவாதித்து வருகின்றனர்.
- அருணாசலேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய் கட்டண வழி மட்டும் உள்ளது.
- வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்வார்கள். நேற்று புரட்டாசி மாத பிறப்பு என்பதால் அருணாசலேஸ்வரர் கோவில் வழக்கத்தை விட பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.
இதனால் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சாமி தரிசனம் செய்தனர். பொது தரிசனம் மட்டுமின்றி ரூ.50-க்கான கட்டண தரிசன வழியிலும் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
கோவிலில் முக்கிய பிரமுகர்கள் (வி.ஐ.பி.) சாமி சன்னதியில் உள்ள துர்க்கை அம்மன் அருகில் உள்ள கேட்டின் வழியாக தரிசனத்திற்காக செல்வார்கள். நேற்று அந்த பகுதியிலும் ஏராளமானோர் காத்திருந்து சென்றனர். கோவிலில் முக்கிய பிரமுகர்களுக்கு முக்கியத்துவம் அளித்து தரிசனத்திற்கு அழைத்து செல்லப்பட்டதால் பொது மற்றும் கட்டண தரிசன வழியில் வந்த பக்தர்கள் நீண்ட நேரம் வரிசையில் காத்திருக்க வேண்டிய அவல நிலை ஏற்பட்டது. இதனால் அவர்கள் சாமி தரிசனம் செய்ய 2 மணி நேரத்திற்கு மேலானதாக கூறப்படுகிறது.
இதற்கிடையில் வரிசையில் காத்திருந்த பக்தர் ஒருவர், "தமிழக கோவில்களில் காசு மட்டுமே பிரதானம். திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் 50 ரூபாய் கட்டண வழி மட்டும் உள்ளது. 2 மணி நேரம் காத்திருந்தும் தரிசிக்க முடியவில்லை. இதற்கு அருணாசலேஸ்வரரே முடிவு கட்டுவார்" என்று டுவிட்டர் மூலம் முதல்- அமைச்சருக்கும், இந்து சமய அறநிலையத்துறைக்கும் பதிவிட்டு இருந்தார்.
இதுகுறித்து அறநிலையத்துறையில் இருந்து கோவில் நிர்வாகத்திற்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனால் கோவில் அலுவலர்கள் மற்றும் பணியாளர்களிடம் சலசலப்பு ஏற்பட்டது.
இதையடுத்து முக்கிய பிரமுகர்கள் சென்ற சிறப்பு தரிசன வழியை கோவில் பணியாளர்கள் அடைத்து விட்டு பொது மற்றும் கட்டண தரிசன வழியில் இருந்த பக்தர்களை விரைந்து சாமி தரிசனம் செய்ய ஏற்பாடு செய்தனர். அதன் பின்னர் பக்தர்கள் விரைவாக சாமி தரிசனம் செய்தனர்.
நேற்று வெளி மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களை சேர்ந்த பக்தர்கள் அதிகமாக வந்திருந்தனர். கோவிலில் அம்மணி அம்மன் கோபுரம் நுழைவு வாயில் அருகிலும், திருமஞ்சன கோபுரம் நுழைவு வாயில் அருகிலும் பார்க்கிங் வசதி உள்ளது. நேற்று பகலில் அம்மணி அம்மன் கோபுரம் அருகில் கார் மற்றும் வேனில் வந்த பக்தர்கள் பார்க்கிங் செய்ய போதிய இட வசதி இல்லாததால் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. இதனால் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து அங்கிருந்த ஆட்டோ டிரைவர்கள் மற்றும் பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலை சீர் செய்ய முயற்சி செய்தனர். அப்போது அங்கு அதிக ஒலியுடன் சைரன் அடித்தபடி அதிவிரைவு படை போலீசார் வேனில் வந்தனர். போலீஸ் வாகனம் வேகமாக வருவதை கண்டதும் அங்கிருந்த கார் மற்றும் ஆட்டோ டிரைவர் செய்வது அறியாமல் அம்மணி அம்மன் கோபுரம் பகுதியில் இருந்து பே கோபுரம் செல்லும் வழியில் ஒருவர் பின் ஒருவர் செல்ல முயன்றதால் மேலும் அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.
இதையடுத்து போலீசார் வாகனத்தில் இருந்து இறங்கி வந்து போக்குவரத்தை சீர் செய்தனர். இதனால் சிறிதுநேரம் பரபரப்பு ஏற்பட்டது.
- இளைஞர்களின் சாகசங்களால் பொதுமக்கள் அச்சம்
- போலீசார் நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்
செங்கம்:
செங்கம் புதிய பேருந்து நிலையத்தில் தினமும் காலை மற்றும் மாலை வேலைகளில் பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் இருசக்கர வாகனங்களில் அதிவேகமாக சுற்றி வருவதும், அங்கு நிற்கும் பயணிகள் மற்றும் மாணவ, மாணவிகள் மீது இடிப்பது போல வாகனங்களை ஓட்டி வருவதும் வாடிக்கையாகி வருகிறது. மேலும் புதிய பேருந்து நிலையத்தில் நூற்றுக்கணக்கான பஸ்கள் வந்து செல்கின்றது.
இளைஞர்கள் இதுபோன்று சாகசங்கள் செய்யும் போது பஸ்களை இயக்கும் டிரைவர்கள் மிகுந்த அவதிக்கு உள்ளாகின்றனர்.
நேற்று மாலை புதிய பஸ் நிலையத்தின் நடுவே இளைஞர்கள் சிலர் இருசக்கர வாகனத்தை நிறுத்திவிட்டு பஸ்களுக்கும், பொதுமக்களுக்கும் வழி விடாமல் மாணவர்கள் மற்றும் பயணிகள் இடையே ரகளையில் ஈடுபட்டனர்.
இந்த சம்பவம் சிறிது நேரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது. சுமார் அரை மணி நேரத்திற்கு மேலாக புதிய பஸ் நிலையத்தின் நடுவே இருசக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு இளைஞர்கள் ரகளையில் ஈடுபட்டது பொது பொது மக்களிடையே மிகுந்த அதிருப்தியை ஏற்படுத்தியது.
போலீசார் இது போன்ற செயல்களில் ஈடுபடும் கல்லூரி மாணவர்கள், இளைஞர்கள் மீது போலலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படுவதில்லை எனவும் காலை, மாலை பள்ளி கல்லூரி மாணவர்கள் கூடும் இடங்களில் போலீசார் கண்காணிப்பதில்லை எனவும் பெற்றோர்கள், பொதுமக்கள் தரப்பில் புகார் கூறப்படுகிறது.
பள்ளி கல்லூரி மாணவர்கள் செல்லும் பஸ்சை பின் தொடர்ந்து செல்லும் இளைஞர்கள், பள்ளி கல்லூரி மாணவர்கள் மற்றும் பொது மக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில் செயல்படும் இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்,
காலை மாலை இரு வேலைகளிலும் புதிய பஸ்நிலையம், ராஜவீதி, பெருமாள்கோவில் தெரு சந்திப்பு உள்ளிட்ட பகுதிகளில் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட வேண்டும் எனவும் பொதுமக்கள் போலீசாருக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.
- 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள அருந்ததிபாளையம் பகுதியில் உள்ள முனிஸ்வரன் கோவில் அருகே சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது விளையாடி முடித்த சிறுவர்கள் அருகில் இருந்த மேல்நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் குடித்தனர்.
அப்போது திடீரென தண்ணீர் தொட்டியில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 10 சிறுவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுவர்கள் 10 பேர் தீவிர சிகிச்சைக் பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
- துணை தாசில்தார் பேச்சுவார்த்தை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சந்தவாசல் கிளை செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். வ.உ.சி. நகர் கிளை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் கண்டன உரையாற்றுகையில், "சந்தவாசல் வ.உ.சி. நகரில் வீடின்றி வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். சந்தவாசல் பாரதியார் நகர் மண்சாலையை தார் சாலையாக அமைத்திட வேண்டும்.
சந்தவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சந்தவாசலில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
சந்தவாசல் பகுதி பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். சந்தவாசல் புஷ்பகிரி ஏரி மதகை சீரமைக்க வேண்டும் எனறார். சரவணன் நன்றி கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் மண்டல துணை வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையின் மீது ஒரு மாத காலத்தில் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.
- திருவண்ணாமலை கலெக்டர் ஆபீசில் நடந்தது
- 1,500 வாக்காளர்களுக்கு அதிக மாக இருந்தால் 2-ஆக பிரிக்க அறிவுரை
திருவண்ணாமலை:
திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.
இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற் றம் மற்றும் பெயர் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திரு வண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற் றது.
கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் தலைமை தாங்கினார்.
அப்போது கலெக்டர் பேசியதாவது:-
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திரு வண்ணாமலை, கீழ்பென் னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன.
வாக்குச்சாவடிகளில் 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்தால் அதனை இரண்டாகப் பிரிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இது போன்ற நிலையில் எந்த வாக்குச்சாவடியும் இல்லை. எனவே வேறு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.
மேலும் வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அடையாள அட் டையுடன் இணைக்கும் பணி யில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், வருவாய் அலுவலர் கள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
- கையில் மெழுகுவர்த்தி ஏந்தி சென்றனர்
- 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்
செய்யாறு:
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் வீரவணக்க நாளை முன்னிட்டு கையில் மெழுகுவர்த்தி ஏந்தி பேரணியாக சென்றனர்.
வன்னியர் சமுதாயத்திற்கு இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு வீர வணக்கம் செலுத்தும் வகையில் வந்தவாசியில் வன்னியர் சங்கம் சார்பில் வன்னியர் சங்க மாவட்ட தலைவர் மச்சந்திரன் தலைமையில் பேரணி நடைபெற்றது.
இந்த பேரணியானது வந்தவாசி 5 கண் பாலத்தில் இருந்து தொடங்கி தேரடி பகுதி பஜார் சாலை பழைய பஸ் நிலையம் கோட்டை மூலை வழியாக சென்று குளத்துமேடு பகுதியில் உள்ள தர்மராஜா கோவில் அருகே சென்று முடிவடைந்தது.
பின்னர் இட ஒதுக்கீடு போராட்டத்திற்காக உயர்நீத்த தியாகிகளின் உருவப்படத்திற்கு சேலம் எம்.எல்.ஏ. அருள் கலந்து கொண்டு மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
இந்த பேரணியில் பாமக மாவட்ட செயலாளர் கணேஷ் குமார், நகர செயலாளர் பேட்டரி வரதன் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
செய்யாறில் நேற்று வன்னியர் சங்கம் சார்பில் 1987 இல் இட ஒதுக்கீடு உரிமை போரில் உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்க நாளை முன்னிட்டு வன்னியர் சங்கத்தினர் சுமார் 2000 பேர் செய்யாறு பெரியார் சிலை அருகில் இருந்து ஆரணி கூட்ரோடு வரை வழக்கறிஞர் கே. பாலு தலைமையில் பேரணி நடைபெற்றது.
பேரணி முடிவில் உயிர் நீத்த வீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தி பின்னர் பொதுக்கூட்டம் நடைபெற்றது. வன்னியர் சங்க மாவட்ட செயலாளர் சு. கிருஷ்ணன் தலைமை வகித்தார்.
மாவட்டத் தலைவர் தி.கா சீனிவாசன், கி. ஜெய்சங்கர், த. புஷ்பராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் தி.க.காத்தவராயன் வரவேற்றார். வழக்கறிஞர் கே. பாலு கலந்து கொண்டு உயிர் நீத்த மாவீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி பேசினார்.
நிகழ்ச்சியில் ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் மார்க்கெட் சங்கர், பாமக நிர்வாகி கோகுல், கார்த்தி உள்பட பாமகவினர் கலந்து கொண்டனர்.
போளூர் பஸ் நிலையத்தில் மாலை 6 மணி அளவில் பாட்டாளி மக்கள் கட்சி சார்பில் மெழுகுவர்த்தி ஏந்தி மௌன ஊர்வலம் சென்றனர் முக்கிய வீதி வழியாக வந்த மௌன ஊர்வலம் நீண்ட பஸ் நிலையத்தை வந்து அடைந்து உயிர்நீத்த 21 தியாகிகளுக்கு நினைவஞ்சலி செலுத்தப்பட்டது.
இந்த நிகழ்ச்சியில் மு.மணி மாவட்ட வன்னியர் சங்க தலைவர் தலைமையில் நடைபெற்றது.
சிறப்பு அழைப்பாளராக கா ஏழுமலை மாவட்ட தலைவர் கலந்து கொண்டனர் மற்றும் ரா கலைமணி மாநில பொதுக்குழு உறுப்பினர், அ பாலமூர்த்தி மாவட்ட அமைப்பு செயலாளர், கணேசன் மாநில செயற்குழு உறுப்பினர், மு ஏழுமலை மாவட்ட துணை தலைவர் சுப்பு என்கின்ற பாலசுப்பிரமணியம் மாவட்ட இளைஞர் அணிசங்க செயலாளர் கலந்து கொண்டனர். நகர செயலாளர் கே சி குமரன் நன்றி கூறினார்.
- நிலத்தகராறில் விபரீதம்
- போலீசார் விசாரணை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அருகே அனந்தபுரம் (ம) கைலாசபுரம் கிராமத்தைச் சேர்ந்த அசோக்குமார். இவரது மனைவி அனிதா (வயது - 30) அதே கிராமத்தைச் சேர்ந்த திருவேங்கடம் மகன் வெள்ளைகண்ணு என்பவருக்கும் நேற்று பிற்பகல் நிலத்தகராறு ஏற்பட்டது.
இதில் வெள்ளைக்கண்ணு அனிதாவின் இடது கையில் அரிவாளால் வெட்டினார். இதில் காயமடைந்த அனிதா சிகிச்சைக்காக வேலூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இது சம்பந்தமாக கண்ணமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.






