என் மலர்
உள்ளூர் செய்திகள்

ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வரும் சிறுவர்கள்.
குடிநீர் டேங்கில் தண்ணீர் குடித்த சிறுவர்கள் வாந்தி மயக்கம்
- 10 பேர் ஆஸ்பத்திரியில் அனுமதி
- பல்லி இறந்து கிடந்ததால் அதிர்ச்சி
ஆரணி:
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே பூசிமலைக்குப்பம் கிராமத்தில் உள்ள அருந்ததிபாளையம் பகுதியில் உள்ள முனிஸ்வரன் கோவில் அருகே சுமார் 10-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமிகள் விளையாடி கொண்டிருந்தனர்.
அப்போது விளையாடி முடித்த சிறுவர்கள் அருகில் இருந்த மேல்நீர் தேக்க தொட்டியில் தண்ணீர் குடித்தனர்.
அப்போது திடீரென தண்ணீர் தொட்டியில் பல்லி இறந்து கிடப்பதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். சிறிது நேரத்தில் வாந்தி ஏற்பட்டு மயக்கம் அடைந்தனர்.
உடனடியாக அவர்களை மீட்டு முள்ளண்டிரம் கிராமத்தில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்த்தனர். 10 சிறுவர்கள் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர்.
சிறுவர்கள் 10 பேர் தீவிர சிகிச்சைக் பிரிவில் அனுமதிக்கபட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.






