என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Political party leaders attended"

    • திருவண்ணாமலை கலெக்டர் ஆபீசில் நடந்தது
    • 1,500 வாக்காளர்களுக்கு அதிக மாக இருந்தால் 2-ஆக பிரிக்க அறிவுரை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் வரைவு வாக்குச் சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்து ஆலோசனை கூட்டம் கலெக்டர் முருகேஷ் தலைமையில் நடந்தது.

    இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவின்படி வாக்குச்சாவடிகள் பிரித்தல், இடம் மாற் றம் மற்றும் பெயர் மாற்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய வரைவு வாக்குச்சாவடிகளின் பட்டியல் அங்கீகரித்தல் குறித்து அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சியினருடனான ஆலோசனைக் கூட்டம் திரு வண்ணாமலை கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற் றது.

    கூட்டத்திற்கு மாவட்ட தேர்தல் அலுவலரும், கலெக்டருமான முருகேஷ் தலைமை தாங்கினார்.

    அப்போது கலெக்டர் பேசியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள செங்கம், திரு வண்ணாமலை, கீழ்பென் னாத்தூர், கலசபாக்கம், போளூர், ஆரணி, செய்யாறு, வந்தவாசி ஆகிய 8 சட்டமன்றத் தொகுதிகளில் 2,372 வாக்குச்சாவடிகள் உள்ளன.

    வாக்குச்சாவடிகளில் 1,500 வாக்காளர்களுக்கு அதிகமாக இருந்தால் அதனை இரண்டாகப் பிரிக்கலாம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

    ஆனால் திருவண்ணாமலை மாவட்டத்தில் இது போன்ற நிலையில் எந்த வாக்குச்சாவடியும் இல்லை. எனவே வேறு ஏதேனும் ஆட்சேபனை இருந்தால் தெரிவிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.

    மேலும் வாக்காளர் பட்டிய லில் இடம் பெற்றவர்களின் ஆதார் எண் விவரங்களை வாக்காளர் அடையாள அட் டையுடன் இணைக்கும் பணி யில் ஒத்துழைப்பு நல்குமாறு கேட்டுக் கொள்ளப்பட்டது. இதில் கலெக்டரின் நேர்முக உதவியாளர் (தேர்தல்) குமரன், வருவாய் அலுவலர் கள் மற்றும் அங்கீகரிக்கப் பட்ட அரசியல் கட்சி பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.

    ×