என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    கோவில்களில் சிறப்பு பூஜை
    X

    பெருமாளுக்கு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ள காட்சி.

    கோவில்களில் சிறப்பு பூஜை

    • ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்
    • அன்னதானம் வழங்கப்பட்டது

    செங்கம்:

    செங்கத்தில் பிரசித்தி பெற்ற ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாத பிறப்பை முன்னிட்டு சிறப்பு அபிஷேகங்கள், தீபாராதனைகள் நடைபெற்றது.

    கோவிலில் உள்ள ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால பார்த்தசாரதி மூலவர் மற்றும் கனகவல்லி தாயார், ஆண்டாள் உட்பட அனைத்து சன்னதிகளிலும் உள்ள முலவர்களுக்கு சிறப்பாக அபிஷேகம் செய்து வண்ண மலர்கள் கொண்டு அலங்கரித்து மகா தீபாராதனை நடைபெற்றது.

    இதை தொடர்ந்து ஸ்ரீருக்மணி சத்யபாமா சமேத ஸ்ரீவேணுகோபால் பார்த்த சாரதி மூலவர் சுவாமிக்கு துளசி மற்றும் வண்ண மலர்களால் அலங்கரித்து மகாதீபாராதனை நடைபெற்றது. இந்த நிகழ்வில் ஏராளமான பக்தர்கள் வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    கண்ணமங்கலம் லட்சுமி நாராயண பெருமாள் கோவிலில் நேற்று புரட்டாசி மாதம் பிறப்பு முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். பக்தர்களுக்கு பிரசாதம், அன்னதானம் வழங்கப்பட்டது.

    Next Story
    ×