என் மலர்
உள்ளூர் செய்திகள்

கூட்டத்தில் அ.தி.மு.க. முன்னாள் அமைச்சரும். திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளருமான அக்ரி.எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி எம்.எல்.ஏ. பேசிய காட்சி. அருகில் கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய செயலாளர் தொப்பளான் உட்பட பலர் உள்ளனர்.
அண்ணாவின் 114-வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம்
- தமிழகத்தில் விரைவில் எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆட்சி அமையும்
- முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி பரபரப்பு பேச்சு
கீழ்பென்னாத்தூர்:
திருவண்ணாமலை தெற்கு மாவட்டம் கீழ் பென்னாத்தூர் சட்டமன்றத் தொகுதி அதிமுக சார்பில் பேரறிஞர் அண்ணாவின் 114- வது பிறந்தநாள் விழா பொதுக்கூட்டம் கீழ்பென்னாத்தூரில் நடந்தது. கீழ்பென்னாத்தூர் வடக்கு ஒன்றிய கழக செயலாளர் சி. தொப்பளான் தலைமை தாங்கினார்.
கீழ்பென்னாத்தூர் தெற்கு ஒன்றிய கழக செயலாளர் ஆர்.பாஷ்யம், துரிஞ்சாபுரம் மேற்கு ஒன்றிய செயலாளர் கோவிந்தராஜ், துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றிய செயலாளர் ஏ.கே.ஆர். ஜெயபிரகாஷ், திருவண்ணாமலை கிழக்கு ஒன்றிய செயலாளர் அன்பழகன், ஒன்றியஅம்மா பேரவை செயலாளர் தட்சணாமூர்த்தி, பொதுக்குழு உறுப்பினர் சாந்தி கண்ணன், வேட்டவலம் நகர செயலாளர் செல்வமணி ஆகியோர் முன்னிலை வகித்தனர். கீழ்பென்னாத்தூர் நகர செயலாளர் ஒ.சி.முருகன் அனைவரையும் வரவேற்றார்.
சிறப்பு அழைப்பாளராக முன்னாள் அமைச்சரும், தெற்கு மாவட்ட செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் துணைச் செயலாளருமான அக்ரி.எஸ்.எஸ். கிருஷ்ணமூர்த்தி எம்எல்ஏ கலந்து கொண்டு, பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:- தமிழகத்தில் கடந்த 10- ஆண்டு காலத்தில் அதிமுக ஆட்சி நடந்தபோது மின்கட்டணம் அதிகரிக்கபடவில்லை, மின்தடை ஏற்படவில்லை, ஆனால், தற்போது நடைபெற்றுவரும் திமுக ஆட்சியில் மின் கட்டண உயர்வு, மின்மீட்டர் வாடகை, சொத்து வரி அதிகரிப்பு என மக்களை வாட்டி வதைக்கின்றனர். தேர்தல் வாக்குறுதியாக அளித்த குடும்பதலைவிகளுக்கான ரூ.ஆயிரம் தருதல் போன்ற திட்டங்களை திமுக செயல்படுத்தவில்லை. எதிர்காலத்தில் வரும் நாடாளுமன்ற தேர்தல், சட்டமன்ற தேர்தல், உள்ளாட்சி தேர்தல் உள்ளிட்ட தேர்தல்களில் அதிமுக வெற்றி பெற்று ஆட்சி அமைக்கும் வகையில் தொண்டர்கள் பணியாற்றி பாடுபட வேண்டும். பா.ஜ.க உதவியுடன் 50 திமுக எம் எல்ஏ.க்கள் அதிமுகவில் இணைந்து எடப்பாடியார் தலைமையில் அதிமுக ஆட்சி விரைவில் அமையஉள்ளது.நம்முடைய செயல்பாடுகள் ஒற்றுமையுடன் இருந்து ஆட்சி அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.
தலைமைக் கழக பேச்சாளர்கள் பரசுராமன், காவேரி, ஆகியோர் அண்ணாவின் பெருமைகள் குறித்து சிறப்புரையாற்றினார்கள். ஒன்றிய துணை செயலாளர் ஆறுமுகம், ஒன்றிய அதிமுக நிர்வாகிகள், மேக்களூர் ஞானசேகரன், எம்ஜிஆர் மன்ற துணை செயலாளரும், கத்தாழம்பட்டு ஊராட்சி மன்ற தலைவரும், கிளை செயலாளருமான அப்பாசாமி, மேக்களூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க இயக்குனர் லட்சுமி அப்பாசாமி, நெடுங்காம்பூண்டி தேவ.காளிதாசன், கார்ணாம்பூண்டி மண்ணுசாமி கலித்தேரி திருமூர்த்தி, வேடநத்தம் கிருஷ்ணமூர்த்தி, காட்டு மலையனூர் முருகன், கல்பூண்டி சி.ஆர். காளிமுத்து, ஆராஞ்சி சுந்தரமூர்த்தி கனபாபுரம் மாணிக்கவேல், கீழ்பென்னாத்தூர் பேரூராட்சி மற்றும் வேட்டவலம் பேரூராட்சி கழக நிர்வாகிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள், கூட்டுறவு சங்க பிரதிநிதிகள் அதிமுக நிர்வாகிகள் உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர். ஒன்றிய எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் தேவ.காளிதாசன் நன்றி கூறினார்.






