என் மலர்
உள்ளூர் செய்திகள்

கம்யூனிஸ்டு கட்சியினர் ஆர்ப்பாட்டம்
- தார் சாலை அமைக்க வலியுறுத்தல்
- துணை தாசில்தார் பேச்சுவார்த்தை
கண்ணமங்கலம்:
கண்ணமங்கலம் அடுத்த சந்தவாசல் மக்களின் அடிப்படை தேவைகளை நிறைவேற்றிட வலியுறுத்தி இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) சார்பில் நேற்று முன்தினம் கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
சந்தவாசல் கிளை செயலாளர் சிவக்குமார் தலைமை வகித்தார். வ.உ.சி. நகர் கிளை செயலாளர் பாஸ்கரன் முன்னிலை வகித்தார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் கண்டன உரையாற்றுகையில், "சந்தவாசல் வ.உ.சி. நகரில் வீடின்றி வசிக்கும் மக்களுக்கு வீட்டு மனைப்பட்டா வழங்க வேண்டும். சந்தவாசல் பாரதியார் நகர் மண்சாலையை தார் சாலையாக அமைத்திட வேண்டும்.
சந்தவாசல் அரசு மேல்நிலைப் பள்ளியில் உள்ள ஆசிரியர் காலி பணியிடங்களை நிரப்பிட வேண்டும். சந்தவாசலில் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்க வேண்டும்.
சந்தவாசல் பகுதி பழங்குடியின மாணவர்களுக்கு ஜாதி சான்றிதழ் வழங்க வேண்டும். சந்தவாசல் புஷ்பகிரி ஏரி மதகை சீரமைக்க வேண்டும் எனறார். சரவணன் நன்றி கூறினார்.
சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த போளூர் மண்டல துணை வட்டாட்சியர் தட்சணாமூர்த்தி ஆர்ப்பாட்டம் நடத்தியவர்களின் கோரிக்கையின் மீது ஒரு மாத காலத்தில் கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதியளித்ததின் பேரில் ஆர்ப்பாட்டத்தை கைவிட்டனர்.






