என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • ரத்தசோகை நோய் குறித்து விளக்கம்
    • 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை த்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் பெரணமல்லூர், வட்டாரம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, மற்றும் ரத்த சோகைக்காண, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.

    ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் கந்தன், தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் வேணி ஏழுமலை, துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, பெரணமல்லூர், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார ஒருங்கிணை ப்பாளர் தேன்மொழி, வரவேற்றார்.

    இதில் பெரணமல்லூர் அரசு பெண்கள், மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.

    பின்னர் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத உடல் நிலையைஅடைய நான் உறுதிஏற்கிறேன் என்று மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.

    விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தொடங்கி வைத்தார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார திட்ட உதவியாளர் ராஜ்குமார், நன்றி கூறினார்.

    • ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்
    • கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் ஒரு தனியார் வங்கி உள்ளது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வாழபந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயுது34) என்பவர் வங்கியில் வாடிக்கையாளர் மையம் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார்.

    மேலும் சுரேஷ் ஆரணியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சத்து 8ஆயிரத்து 300 ரொக்கம் எடுத்துள்ளார்.அதனை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வாழபந்தல் நோக்கிச் சென்றுள்ளார்.

    அப்போது சத்தியமூர்த்தி சாலையில் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்க கடையின் முன்பு தனது பைக்நிகை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை காணவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் கடை அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சுரேசை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பைக்கிள் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    ஆரணியில் பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    • தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தல்
    • நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கலெக்டர் அலுவலகம் முன்பு தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் அருண்பாட்சா தலைமை தாங்கினார். மாவட்ட துணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி வரவேற்றார். தமிழ்நாடு அரசு ஊழியர்கள் சங்க மாவட்ட தலைவர் பார்த்திபன் போராட்டத்தை தொடங்கி வைத்து பேசினார்.

    இதில் மத்திய அரசு வழங்கும் அதே நாளில் தமிழக அரசும் அகவிலைப்படி உயர்வை வழங்க வேண்டும். அகவிலைப்படி உயர்வு நிலுவைத்தொகையை உடனே வழங்க வேண்டும். தேர்தல் வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டத்தை உடனடியாக அமல்படுத்த வேண்டும்.

    தேர்தல் நேரத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதியான 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு கூடுதலாக 10 சதவீதம் ஓய்வூதியம் உயர்த்தி வழங்கப்பட வேண்டும். ரெயில் பயணங்களில் மூத்த குடிமக்களுக்கு அளிக்கப்பட்டு வந்த ரெயில் பயண கட்டண சலுகையை மத்திய அரசு உடனடியாக மீண்டும் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    இதில் ஓய்வூதியர் சங்கத்தை சேர்ந்த நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் ஆனந்தன் நன்றி கூறினார்.

    • சாலை விதிகள் மீறுபவர்களை போலீசார் மடக்கிப் பிடித்தனர்
    • பெற்றோர்கள் வந்தால் மட்டுமே வாகனங்கள் ஒப்படைக்கப்படும்

    வந்தவாசி:

    வந்தவாசி பகுதிகளில் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் இருசக்கர வாகனங்களில் இரண்டுக்கும் மேற்பட்டோர் பயணம் செய்து வருகின்றனர்.

    இந்த நிலையில் போலீஸ் சூப்பிரண்டு உத்தரவின் பேரில் வந்தவாசி இன்ஸ்பெக்டர் விஸ்வநாதன் தலைமையில் போலீசார் சாலை விதிகள் மீறுபவர்களை மடக்கிப் பிடித்து வருகின்றனர்.

    அதி வேகமாகவும் வருபவர்கள், பைக்கில் இரண்டுக்கும் மேற்பட்ட நபர்கள் பயணம் செய்பவர்கள், உரிமம் இல்லாத வாகனங்களின் மீது வழக்கு பதிவு செய்து போலீசார் பறிமுதல் செய்து வருகின்றனர்.

    வாகன ஓட்டுநர் உரிமம் இல்லாத வாகன உரிமையாளரின் பெற்றோர்களை அழைத்து அவர்கள் வந்தால் மட்டுமே வாகனங்கள் மீண்டும் வழங்கப்படும் என போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

    • பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெறும்.
    • கார்த்திகை தீபத் திருவிழா டிசம்பர் 6-ந்தேதி நடைபெறவுள்ளது.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா துர்க்கை அம்மன் உற்சவத்துடன் வரும் நவம்பர் 24-ம்தேதி தொடங்குகிறது. மூலவர் சன்னதி முன்பு உள்ள தங்கக் கொடிமரத்தில், கொடியேற்றம் நடைபெற்றதும், பஞ்சமூர்த்திகளின் 10 நாள் உற்சவம் நடைபெறும்.

    இதற்கிடையில், கொரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டுகளாக நடைபெறாமல் இருந்த, பஞ்ச ரதங்களின் மகா தேரோட்டம், கொடியேற்றத்துக்கு பிறகு வரும் 7-ம் நாள் உற்சவத்தில் நடைபெறவுள்ளது. விழாவின் முக்கிய நிகழ்வான கார்த்திகை தீபத் திருவிழா வரும் டிசம்பர் 6-ந் தேதி நடைபெறவுள்ளது.

    2,668 அடி உயரம் உள்ள, மலையே மகேசன் என போற்றப்படும் அண்ணாமலை உச்சியில் மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்பட உள்ளது. முன்னதாக, கோவிலில் பரணி தீபம் ஏற்றப்படும்.

    இந்நிலையில், கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி பூர்வாங்கப் பணிகளை மேற்கொள்வதற்காக, பந்தக்கால் முகூர்த்தம் வரும் 30-ந்தேதி காலை நடைபெறவுள்ளது. அருணாசலேஸ்வரர் கோவிலில் உள்ள சம்பந்த விநாயகர் சன்னதியில் அதிகாலை 5.30 மணிக்கு மேல் 7 மணிக்குள் கன்னியா லக்கினத்தில் பந்தக்கால் முகூர்த்தம் நடைபெறவுள்ளது.

    மங்கல இசை ஒலிக்க, சிவாச் சாரியார்கள் வேத மந்திரங்களை சிறப்பு முழங்க பந்தக்காலுக்கு அபிஷேகம் நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

    • முன்னாள் மாணவர்கள் கட்டி கொடுத்தனர்
    • 70-க்கும் மேற்பட்டோர் சந்தித்து தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே குன்னத்தூர் கிராமத்தில் உள்ள 1969-ம் ஆண்டு 1975-ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சந்திப்பு சங்கமம் நிகழ்ச்சி அரசு மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் நடைபெற்றது.

    இதில் 1975ம் ஆண்டு பயின்ற முன்னாள் மாணவர்கள் சுமார் 47 ஆண்டுகளுக்கு பிறகு ஒன்றிணைந்து சந்திப்பு நிகழச்சி நடத்தினார்கள்.

    இதில் சுமார் 70-க்கும் மேற்பட்ட முன்னாள் மாணவர்கள் தங்களது பழைய நினைவுகளை பகிர்ந்து கொண்டனர்.மேலும் இதில் 1975ம் ஆண்டு தங்களுக்கு பாடம் சொல்லி கொடுத்த ஆசிரியர்கள் ஆசிரியைகள் மேடையில் அமர வைத்து கேடயம் வழங்கி சால்வை அணிவித்து காலில் விழுந்து ஆசிர்வாதம் பெற்று கவுரவ படுத்தினார்கள்.

    மேலும் தனியார் பள்ளிக்கு நிகராக அரசு பள்ளியில் மாணவர்கள் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற நோக்கத்தில் தனது சொந்த செலவில் சுமார் ரூ.5 லட்சம் மதிப்பீட்டில் குன்னத்தூர் அரசு பள்ளி நுழைவுவாயில் கட்டி கொடுத்தனர்.

    • ஒ.ஜோதி எம்.எல்.ஏ. தொடங்கி வைத்தார்
    • ரூ.2.41 கோடி மதிப்பில் கட்டப்படுகிறது

    செய்யாறு:

    திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு தாலுக்கா, அனக்காவூர் ஒன்றிய அலுவலக வளாகத்தில் ரூ.2 கோடியே 41 லட்சம் மதிப்பில் புதியதாக வேளாண்மை பொறியியல் துறை அலுவலகம் மற்றும் சேமிப்பு கிடங்கு கட்டிடம் கட்ட பூமி பூஜை நேற்று நடைபெற்றது.

    நிகழ்ச்சிக்கு அனக்காவூர் ஒன்றிய குழு தலைவர் திலகவதி ராஜ்குமார் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சி குழு தலைவர் பார்வதி சீனிவாசன், வெம்பாக்கம் ஒன்றிய குழு தலைவர் ராஜு ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் அரி வரவேற்றார்.

    சிறப்பு விருந்தினராக ஒ.ஜோதி எம் எல் ஏ கலந்துகொண்டு புதிய கட்டிடம் கட்டபூமி பூஜையை செய்து தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் நகர செயலாளர் கே.விஸ்வநாதன், ஒன்றிய செயலாளர்கள் ஞானவேல், ரவிக்குமார் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

    • முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் பேச்சு
    • போளூரில் அண்ணா பிறந்தநாள் விழா பொதுகூட்டம் நடந்தது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட அ.தி.மு.க. சார்பில் அண்ணா 114-வது பிறந்த நாள் விழா பொதுக்கூட்டம் போளூர் பஸ் நிலையம் அருகில் நடந்தது.

    கூட்டத்திற்கு போளூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் மாவட்ட செயலாளருமான அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமை தாங்கினார்.

    முன்னாள் எம்எல்ஏ ஜெயசுதா, மாவட்ட துணை செயலாளர் செல்வம், பொதுக்குழு உறுப்பினர் ராஜன், கார்த்திகேயன், ஒன்றிய செயலாளர்கள் முன்னிலை வகித்தனர். நகர செயலாளர் பாண்டுரங்கன் வரவேற்றார்.

    கூட்டத்தில் அ.தி.மு.க. அமைப்பு செயலாளர் முன்னாள் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கலந்து கொண்டு பேசியதாவது:-

    இந்த கூட்டத்தை பார்த்தால் தி.மு.க.விற்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தி இருக்கும். தற்போது தேர்தல் நடத்தினால் கூட திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள 8 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும். வருகின்ற நாடாளுமன்ற தேர்தலில் 40 தொகுதிகளிலும் நாம் தான் வெற்றி பெறுவோம். அதுவும் நமது தலைமையில் கூட்டணி அமையும்.

    திருவண்ணாமலை தெற்கு மாவட்ட செயலாளர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி எதை கொடுத்தாலும் வெற்றி பெற செய்து விடுவார். எந்தப் பணியாக இருந்தாலும் சீரும் சிறப்பாக செய்து முடித்து விடுவார்.

    சட்டமன்றத்தில் எடப்பாடி பேசுகின்ற போது உடனடியாக குறிப்பு களை எடுத்துக்கொண்டு அவரது கையில் கொடுக்கின்ற ஆற்றல் மிக்கவர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி.

    நான் சட்டமன்றத்தில் 1980-ம் ஆண்டு இருக்கும்போது தான் சத்துணவு திட்டத்தை எம்.ஜி.ஆர். அறிவித்தார்.

    அப்போது எதிர்க்கட்சியினர் திட்டத்திற்கு எங்கே நிதி இருக்கிறது என்று கேட்டனர்.

    எம்.ஜி.ஆர். நான் தமிழ்நாடு முழுவதும் துண்டு ஏந்தியாவது இந்த திட்டத்தை நிறைவேற்றிக் காட்டுவேன் என்று கூறினார்.

    இன்று தமிழகத்தில் 48 லட்சம் குழந்தைகள் பசியாற உணவு அருந்தும் திட்டத்தை கொண்டு வந்தவர் எம்ஜிஆர் தான். ஆனால் இன்று எவ்வளவு பேருக்கு காலை உணவு ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மட்டும் தான்.

    பொங்கல், தீபாவளிக்கு இலவச வேட்டி சேலை திட்டத்தை கொண்டு வந்தவர் எம்.ஜி.ஆர். இதன் மூலம் நெசவாளர்கள் துயரங்களை துடைத்தார்.

    தமிழ்நாட்டில் பொன்னெழுத்துக்களால் பதிக்கக்கூடிய அளவிற்கு வாழ்ந்து காட்டியவர் எம்ஜிஆர். அவரது ஆட்சி நூறு நாட்கள் கூட நிலைக்காது என்று கூறினார்கள்.

    ஆனால் பத்தாயிரம் மயிலுக்கு தொலைவில் உள்ள அமெரிக்காவில் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கும் போது வெற்றி பெற்றவர் எம்ஜிஆர் இதற்குக் காரணம் அவரது ஆற்றலும் சிந்தனையும் தான்.

    எம்ஜிஆர் உயிர் உள்ளவரை 13 ஆண்டுகள் தொடர்ந்து திமுக தலை தூக்க முடியவில்லை என்பது வரலாறு.

    அதிமுகவை அசைத்து விடலாம் என்று கனவு காண்கின்றனர் இந்த இயக்கத்தை பொறுத்தவரை சில வெட்டுக்கிளிகள், சில வேடந்தாங்கல் பறவைகள், சில பட்டு பூச்சிகள் சில பருவ கால சிட்டுகள் பிரிந்து சென்றாலும் அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைத்து விட முடியாது.

    எந்த மாநிலத்திலும் இல்லாத வரட்சி நிவாரண திட்டத்தை ெஜயலலிதா கொண்டு வந்தார். தொட்டில் குழந்தை திட்டத்தையும் கொண்டு வந்தார் ஏழை குடும்பங்களுக்கு 25 கிலோ அரிசி வழங்கும் திட்டத்தையும் தந்தார்.

    தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டம் மூலம் பல லட்சம் பெண்கள் பயன் பெற்று வந்தனர் தற்போது இந்த திட்டத்தை திமுகவினர் முடக்கி வைத்துள்ளனர்.

    99 சதவீதம் பொதுக்குழு உறுப்பினர்கள் ஏற்றுக் கொண்டுள்ள தலைமையாக எடப்பாடி பழனிசாமி பவனி வந்துள்ளார். அடுத்த முதல்-அமைச்சர் எடப்பாடி தான். இந்த இயக்கம் பேரறிஞர் அண்ணாவால் வந்தது எம்ஜிஆர் ஜெயலலிதாவை தொடர்ந்து எடப்பாடி தலைமையில் இந்த இயக்கம் நடை போட்டுக் கொண்டிருக்கிறது.

    இந்த தவ மண்ணில் எவராலும் சாய்த்து விட முடியாது என நாம் நிரூபித்து காட்டுவோம். நாற்பதும் நமதே உறுதி ஏற்போம்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் மாவட்ட அவைத் தலைவர் நாராயணன், மாவட்ட எம் ஜி ஆர் இளைஞர் அணி செயலாளர் குணசேகரன், அமைப்பு சாரா ஓட்டுனர் அணி மாவட்ட செயலாளர் சுனில் குமார், மாவட்ட பொருளாளர் நயினார் கண்ணு உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் நிறுத்தம்
    • பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே உள்ள கீழ்பள்ளிப்பட்டு மற்றும் கணியம்பாடி அருகே உள்ள சாத்துமதுரை ஆகிய 2 துணை மின் நிலையங்களில் வருகிற 22-ந்தேதி (வியாழக்கிழமை) அத்தியாவசியமான மின் சாதன பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது.

    இதன் காரணமாக அன்று காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை சாத்துமதுரை, அடுக்கம்பாறை, துத்திப்பட்டு, பென்னாத்தூர், காட்டுப்புத்தூர், மூஞ்சூர்பட்டு, நெல்வாய், கனியம்பாடி குளவிமேடு, சாத்துப்பாளையம் மற்றும் உள்பட அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் மின் நிறுத்தம் செய்யப்படும்.

    மேலும் சாம்கோ, வல்லம், காட்டுக்காநல்லூர், ரெட்டிபாளையம் கீழ்பள்ளிப்பட்டு, கொங்க ராம்பட்டு, மோத்தக்கல், மோட்டுப்பாளையம், வரகூர், புதூர், கீழ்அரசம்பட்டு உள்பட அதைச்சுற்றி உள்ள பல்வேறு கிராமங்களில் காலை 9 மணிமுதல் மாலை 5 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என வேலூர் கோட்ட மின் வாரிய செயற்பொறியாளர் நடராஜன் தெரிவித்துள்ளார்.

    • திருவண்ணாமலை போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை
    • ஓட்டுனர் உரிமம் இல்லாத 25 ஆட்டோக்கள் பறிமுதல்

    திருவண்ணாமலை:

    18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் அவர்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்யப்படும் என்று போலீஸ் சூப்பிரண்டு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    திருவண்ணாமலை பஸ் நிலையம் அருகில் உரிய ஆவணங்களுடன் ஆட்டோக்கள் இயக்கப்படுகிறதா என்று திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன், வட்டார போக்குவரத்து ஆய்வாளர் பெரியசாமி மற்றும் போலீசாருடன் இணைந்து திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

    அப்போது ஆட்டோ டிரைவர்களிடம் ஒட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் போன்ற ஆவணங்கள் உள்ளதா என்று கேட்டறியப்பட்டு ஆவணங்கள் இல்லாத ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் பஸ்களில் படிகளில் தொங்கியபடி சென்ற மாணவர்களை இறக்கி விட்டு அவர்களுக்கு போலீஸ் சூப்பிரண்டு அறிவுரை வழங்கினார்.

    தொடர்ந்து அவர் கூறியதாவது:-

    திருவண்ணாமலை மாவட்டத்தில் காவல்துறை சார்பில் கடந்த 3 மாதங்களாக சாலை பாதுகாப்பு விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

    18 வயதிற்கு கீழ் உள்ளவர்கள் வாகனங்கள் ஓட்டினால் வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு அவர்களின் பெற்றோர் அல்லது வாகனத்தின் உரிமையாளர் மீது வழக்குப்பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    நேற்று ஒரே நாளில் 18 வயதிக்கு கீழ் உள்ளவர்கள் ஓட்டிய 45 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. 40 கடைகளுக்கு சீல் அதேபோல் பைக்கில் 3 பேர் செல்வோர், ஹெல்மெட் அணியாமல் செல்வோர், மதுபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு வருகிறது. இந்த நடவடிக்கை இன்னும் ஒருமாதத்திற்கு தீவிரமாக மேற்கொள்ளப்படும்.

    மேலும் ஓட்டுனர் உரிமம் போன்ற ஆவணங்கள் இல்லாத 25 ஆட்டோக்கள் பறிமுதல் செய்யப்பட்டு உள்ளது. இனி வரும் காலங்களில் சாலை விதிகளை பின்பற்றாதவர்களின் வாகனங்கள் பறிமுதல் செய்யப்படும் நடவடிக்கை அதிகளவில் நடைபெறும்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வழிப்பறி சம்பவங்களை தடுக்க தொடர்ந்து ரோந்து பணிகள் மேற்கொள்ளப்படும். மேலும் சாராயம் காய்ச்சி, விற்பனை செய்பவர்கள் கைது செய்யப்பட்டு குண்டர் சட்டத்தில் கைது செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கடந்த ஒரு வாரத்தில் மட்டும் குட்கா விற்பனை செய்த 40 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டு உள்ளது. திருவண்ணாமலை மாவட்டத்தில் சாராயம், கஞ்சா, குட்கா விற்பனையை தடுக்க தீவிரமாக நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

    • வாலிபர் கைது
    • ரூ.1 லட்சம் மதிப்பிலான குட்கா சிக்கியது

    ஆரணி:

    ஆரணி அருகே களம்பூர் பகுதியில் குட்கா ஹான்ஸ் போன்ற போதை பொருட்கள் விற்பனை நடைபெறுவதாக மாவட்ட போலீஸ் நிர்வாகத்திற்கு புகார் அளிக்கப்பட்டன.

    இதன் எதிரொலியால் போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் உத்தரவின் பேரில் களம்பூர் போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் கோகுல்ராஜ் தலைமையில் போலீசார் தீவிர வேட்டையில் ஈடுபட்டனர்.

    அப்போது களம்பூர் போலீஸ் நிலையம் அருகில் உள்ள குடியிருப்பில் அதே பகுதியை சேர்ந்த ஒருவரது வீட்டில் குட்கா போன்ற போதை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டு வந்தது தெரிய வந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.1 லட்சம் வரை இருக்கும் என்று கூறப்படுகிறது. பின்னர் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து வாலிபரை போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய மற்றொரு வரை போலீசார் தேடி வருகின்றனர்.

    • சிறுமியை பாலியல் வன்புணர்ச்சி செய்த வழக்கில் நடவடிக்கை
    • திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டு தீர்ப்பு

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி பாரதியார் தெரு பிரகாஷ் நகர் பகுதியை சேர்ந்தவர் மூர்த்தி (வயது 64). இவர் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி ஒன்றில் உதவியாளராக பணிபுரிந்து ஓய்வு பெற்றார். கடந்த 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் 18-ந் தேதி 11 வயதுடைய ஒரு சிறுமி கடைக்கு சென்றாள்.

    அப்போது அந்த சிறுமியை மூர்த்தி தனது வீட்டிற்கு அழைத்து சென்று பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்டு உள்ளார். கடைக்கு சென்ற சிறுமி வெகு நேரமாகியும் வீடு திரும்பாததால் சந்தேகம் அடைந்த அவரது பெற்றோர் சிறுமியை தேடி சென்றனர். அப்போது அழுதபடி வந்த சிறுமி நடந்த சம்பவம் குறித்து பெற்றோரிடம் தெரிவித்தாள்.

    இதுகுறித்து சிறுமியின் பெற்றோர் அளித்த புகாரின் பேரில் ஆரணி அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை கைது செய்தனர்.

    20 ஆண்டு சிறை

    இந்த சம்பவம் குறித்த வழக்கு விசாரணை திருவண்ணாமலை போக்சோ சிறப்பு கோர்ட்டில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் அரசு தரப்பில் வக்கீல் மைதிலி ஆஜரானார்.

    இவ்வழக்கை விசாரித்த நீதிபதி பார்த்தசாரதி தீர்ப்பு கூறினார். அதில், சிறுமியிடம் பாலியல் வன்புணர்ச்சியில் ஈடுபட்ட மூர்த்திக்கு 20 ஆண்டுகள் சிறை தண்டனையும், ரூ.3 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். இதையடுத்து மூர்த்தியை போலீசார் வேலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.

    ×