என் மலர்
உள்ளூர் செய்திகள்

குழந்தைகள் வளர்ச்சித் திட்டத்தின் சார்பில் ஊட்டச்சத்து மாத விழா மற்றும் ரத்த சோகை நோய் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்த போது எடுத்த படம்.
ஊட்டச்சத்து மாத விழா விழிப்புணர்வு
- ரத்தசோகை நோய் குறித்து விளக்கம்
- 300-க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்
சேத்துப்பட்டு:
திருவண்ணாமலை, மாவட்டம் பெரணமல்லூர், அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமை த்துறை ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் பெரணமல்லூர், வட்டாரம் சார்பில் தேசிய ஊட்டச்சத்து மாத விழா, மற்றும் ரத்த சோகைக்காண, விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி மாவட்ட திட்ட அலுவலர் கந்தன், தலைமை தாங்கினார். பேரூராட்சி மன்ற தலைவர் வேணி ஏழுமலை, துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, பெரணமல்லூர், வட்டார குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ரேவதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் வட்டார ஒருங்கிணை ப்பாளர் தேன்மொழி, வரவேற்றார்.
இதில் பெரணமல்லூர் அரசு பெண்கள், மேல்நிலைப் பள்ளியை சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட மாணவிகள் கலந்து கொண்டனர்.
பின்னர் ஊட்டச்சத்து குறைபாடு இல்லாத உடல் நிலையைஅடைய நான் உறுதிஏற்கிறேன் என்று மாணவர்கள் அனைவரும் உறுதிமொழி ஏற்றனர்.
விழிப்புணர்வு வாகனத்தை கொடியசைத்து ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், தொடங்கி வைத்தார்.
நிகழ்ச்சியில் ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார திட்ட உதவியாளர் ராஜ்குமார், நன்றி கூறினார்.






