என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "The theft of Rs.2 lakh"

    • ஆட்டோவில் வந்து தப்பி சென்றனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    சென்னையை சேர்ந்தவர் மகேஷ் ராஜசேகரன் (வயது30). இவர் சம்பவத்தன்று சென்னையிலிருந்து காரில் வேலூர் வழியாக பெங்களூருக்கு புறப்பட்டு வந்தார்.

    வேலூர் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள கிரீன் சர்க்கிள் பகுதியில் உள்ள ஒரு ஓட்டல் முன்பாக காரை நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார்.

    காரில் ரூ.2 லட்சம் மற்றும் செல்போன் காரின் மற்றொரு சாவி, சில ஆவணங்கள் இருந்தன. அவர் ஓட்டலில் சாப்பிட்ட நேரத்தில் மர்ம கும்பல் காரின் கண்ணாடியை உடைத்து அதிலிருந்து ரூ.2 லட்சம், செல்போன், கார் சாவி ஆகியவற்றை திருடி சென்று விட்டனர்.

    இதுகுறித்து வேலூர் வடக்கு குற்றப்பிரிவு போலீசில் ராஜசேகரன் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர்.

    ஓட்டல் காவலர்கள் மற்றும் போலீசார் அந்த பகுதியில் உள்ள கடைக்காரர்கள் ஆட்டோ டிரைவரிடம் விசாரணை நடத்தினர் ‌

    தொடர்ந்து போலீசார் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்தனர். அதிலிருந்த ஒரு கேமராவில் காரில் மர்மநபர்கள் பணத்தை திருடிச் செல்லும் காட்சிகள் பதிவாகி இருந்தன.

    ராஜசேகரன் காரை பூட்டிவிட்டு ஓட்டலுக்குள் சென்றதும் ஆட்டோவில் வந்து 3 பேர் இறங்குகின்றனர். ஒருவர் கார் கண்ணாடியை உடைத்து பணம், செல்போன் ஆகியவற்றை திருடுகிறார். பின்னர் இருவரும் அவர்கள் ஏற்கனவே வந்த ஆட்டோவில் தப்பிச் செல்கின்றனர்.

    இந்த காட்சிகள் கேமராவில் தெளிவாக பதிவாகியுள்ளது. இதில் உள்ள மர்ம நபர்கள் வேலூரைச் சேர்ந்தவர்களா? அல்லது வெளியூரை சேர்ந்த கொள்ளையர்களா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ஆரணியில் பட்டப்பகலில் துணிகரம்
    • கண்காணிப்பு கேமரா மூலம் விசாரணை

    ஆரணி:

    ஆரணி டவுன் அண்ணாசிலை அருகில் ஒரு தனியார் வங்கி உள்ளது. இதில் ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த வாழபந்தல் கிராமத்தை சேர்ந்த சுரேஷ் (வயுது34) என்பவர் வங்கியில் வாடிக்கையாளர் மையம் அதிகாரியாக பணிபுரிந்து வருகின்றார்.

    மேலும் சுரேஷ் ஆரணியில் உள்ள தனியார் வங்கியில் ரூ.2 லட்சத்து 8ஆயிரத்து 300 ரொக்கம் எடுத்துள்ளார்.அதனை தனது மோட்டார் சைக்கிளில் வைத்து வாழபந்தல் நோக்கிச் சென்றுள்ளார்.

    அப்போது சத்தியமூர்த்தி சாலையில் ஜெராக்ஸ் கடையில் நகல் எடுக்க கடையின் முன்பு தனது பைக்நிகை நிறுத்திவிட்டு உள்ளே சென்றுள்ளார்.

    பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது மோட்டார்சைக்கிளில் இருந்த பணத்தை காணவில்லை இதனால் அதிர்ச்சியடைந்த சுரேஷ் இச்சம்பவம் குறித்து ஆரணி டவுன் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின்பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பந்தப்பட்ட வங்கி மற்றும் கடை அருகே உள்ள சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர்.

    இதில் சுரேசை பின் தொடர்ந்து வந்த மர்ம நபர்கள் பைக்கிள் இருந்த பணத்தை திருடிச் சென்றது தெரியவந்தது.சிசிடிவி காட்சியை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு மர்ம நபர்களை தேடி வருகின்றனர்

    ஆரணியில் பட்டப்பகலில் நடந்த திருட்டு சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×