என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • வாகனங்கள் வேகமாக சென்று வருகின்றன
    • விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது

    போளூர்:

    திருவண்ணாமலை மாவட்டத்தில் வளர்ந்து வரும் முக்கிய நகரில் போளூர் ஒன்று போளூரில் மேம்பால பணி நடைபெறுவதால் திருவண்ணாமலை வேலூர் செல்லும் அனைத்து பஸ்களும் தீயணைப்பு நிலையம் வழியாகத்தான் செல்ல வேண்டும்.

    அப்போது நெருக்கடி நிலை ஏற்படுகின்றது. தீயணைப்பு நிலையம் அருகே அனைத்து அனைத்து பஸ்களும் நின்று செல்கின்றன.

    கல்லூரிக்கு செல்லும் மாணவர்கள் வேலைக்கு செல்லும், அனைவரும் இங்கு தான் ஏறி செல்ல வேண்டும். ஆனால் பஸ்கள் சில நேரங்களில் நிற்காமல் செல்கின்றன. வேகமாகவும் செல்கின்றன. விபத்துக்கள் ஏற்படும் வகையில் அச்சத்தை ஏற்படுகின்றன.

    அதற்காக தீயணைப்பு நிலையம் அருகே ஒரு வேகத்தடை அமைந்தால் மக்களுக்கு ஏதுவாக இருக்கும் என்று பொதுமக்கள் வலியுறுத்தி உள்ளனர்.

    நெடுஞ்சாலைத்துறை ஆகியோர் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • கல்வி அலுவலர் பேச்சு
    • உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் நெடுகுணம், அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பெரணமல்லூர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா, தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி, நெடுங்குணம், அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா வளர்மதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் இசையருவி, வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெரண மல்லூர், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், கலந்து கொண்டு மாற்று திறன் கொண்ட 30 குழந்தைகளுக்கு வாட்டர் பெட், ஸ்பைனல் பிரைஸ், மடிப்பு வாக்கர், சி, பி, சேர். உள்ளிட்ட 12 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கி பேசுகையில் :-

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முறையாக பயிற்சி அளித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவருமே தெய்வங்களுக்கு சமம் அவர்களை நல்ல முறையில் பராமரித்து அவர்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர பெற்றோர்கள் முன்வர வேண்டும், என பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கோர்ட்டு உத்தரவு
    • விபத்தில் இறந்த கல்லூரி பேராசிரியர் குடும்பத்துக்கு நஷ்ட ஈடு வழங்காததால் நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    செய்யாறு ஜீவா நகரை சேர்ந்தவர் தமிழ்வாணன் (வயது 46), கல்லூரி பேராசிரியர். செய்யாறு அரசு கல்லூரியில் பணியாற்றி வந்த இவர் சென்னையில் உள்ள பிரசிடன்சி கல்லூரிக்கு மாற்றப்பட்டார்.

    கடந்த 3.10.2005 அன்று கல்லூரிக்கு செல்வதற்காக செய்யாறு பஸ் நிலையத்தில் சென்னை செல்லும் அரசு பஸ்சில் ஏறியுள்ளார். அதற்குள் பஸ் திடீரென இயக்கப்பட்டதால் பஸ்சில் இருந்து கீழே விழுந்த அவர் படுகாயம் அடைந்தார்.

    பின்னர் மருத்து வமனையில் சிகிச்சை பெற்று வந்த அவர் சிகிச்சை பலனின்றி இறந்தார். இந்த விபத்து குறித்து செய்யாறு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.

    இந்த நிலையில், தமிழ்வாணனின் மனைவி கலைவாணி, அவரது சிறு வயது மகன்கள் 2 பேர் மற்றும் அவரது பெற்றோர் என 5 பேர் நஷ்டஈடு வழங்கக் கோரி செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.

    இந்த வழக்கை விசாரித்த சார்பு நீதிபதி நஷ்டஈட்டுத் தொகையினை வழங்க தமிழ் நாடு அரசு போக்குவரத்து கழகம் விழுப்புரம் மண்டலத்திற்கு 30.1.2017 அன்று உத்தரவிட்டார்.

    ஆனால் போக்குவரத்து கழகம் நஷ்டஈடு வழங்க வில்லை. இதையடுத்து நஷ்டஈடு தொகையை பெறுவதற்காக பேராசிரியர் குடும்பத்தினர் மீண்டும் நிறைவேற்று மனுவை தாக்கல் செய்தனர்.

    அந்த மனுவை விசாரித்த சார்பு நீதிபதி நஷ்டஈடு தொகையும், அதற்குண்டான வட்டியும் சேர்ந்து ரூ.68½ லட்சத்தை மனுதாரர் குடும்பத்திற்கு வழங்க 20.11.2019 அன்று உத்தரவிட்டார்.

    அந்த மனுவின் பேரில் போக்குவரத்து த்துறையினர் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்தனர். இந்த நிலையில், மனுதாரர் குடும்பத்திற்கு 5 தவணைகளாக ரூ.54 லட்சத்து 85 லட்சத்தை செய்யாறு சார்பு நீதிமன்றத்தில் செலுத்தியிருந்தனர்.

    மீதமுள்ள நஷ்டஈடு தொகை மற்றும் அதற்குண்டான வட்டியும் சேர்த்து செலுத்த தவறியக் காரணத்தால் செய்யாறு சார்பு நீதிபதி குமரகுருபரன் அரசு பஸ்சை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.

    அதன்பேரில், காஞ்சீபுரத்தில் இருந்து சேலத்திற்கு செய்யாறு வழியாக பயணிகளுடன் வந்த அரசு பஸ்சை செய்யாறு பஸ் நிலையத்தில் கோர்ட்டு அமீனா ஜப்தி செய்து சார்பு நீதிமன்றத்தில் ஒப்படைத்தார்.

    • 2-வது திருமணம் செய்து வைக்க மறுத்ததால் ஆத்திரம்
    • 2 மகன்கள் கைது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்டம் தண்டராம்பட்டு அடுத்த தானிப்பாடி அருகில் உள்ள மோத்தக்கல் ஊராட்சிக்குட்பட்ட குபேரப்பட்டினம் கிராமத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 58), விவசாயக் கூலி தொழிலாளி. இவருக்கு அன்னக்கிளி (48) என்ற மனைவியும் ராதிகா, மாலதி ஆகிய 2 மகள்களும், மணிகண்டன் (28), சக்திவேல் (25) ஆகிய 2 மகன்களும் உள்ளனர். மகன்கள் இருவரும் பன்றி கறி வியாபாரம் செய்து வருகின்றனர்.

    2-வது திருமணம்

    ராதிகா, மாலதி, மணிகண்டன் ஆகியோருக்கு திருமணம் ஆகி விட்டது. சக்திவேலுக்கு கடந்த 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவருடன் வாழாமல் அவரது மனைவி ஒரு மாதத்திலேயே தாய் வீட்டிற்கு சென்று விட்டார். எனவே சக்திவேல் தனக்கு 2-வது திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக அடிக்கடி குடும்பத்தில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

    வெட்டிக்கொலை

    இந்த நிலையில் நேற்று மாலை வழக்கம் போல சக்திவேல் தனக்கு திருமணம் செய்து வைக்கும்படி வற்புறுத்தி உள்ளார்.

    மேலும் இவர்களுக்கு சொந்தமான ஒரு ஏக்கர் நிலத்தையும் தனது பெயருக்கு எழுதிதரும் படி கேட்டுள்ளார். அதற்கு சகாதேவன் மறுத்துவிட்டு, இன்னும் 3 ஆண்டுகளுக்கு பின்பு தான் திருமணம் நடத்த முடியும் என்று கூறியதாக கூறப்படுகிறது.

    இதனால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த 2 மகன்களும் சேர்ந்து சகாதேவனை மண்வெட்டி மற்றும் கொடுவாளால் சரமாரியாக வெட்டி கொலை செய்தனர். இதில் சகாதேவன் சம்பவ இடத்திலேயே துடிதுடித்து பரிதாபமாக இறந்தார்.

    2 மகன்கள் கைது

    இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த துணை போலீஸ் சூப்பிரண்டு அஸ்வினி, இன்ஸ்பெக்டர் தனலட்சுமி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் தந்தையை வெட்டிக்கொன்ற மணிகண்டன், சக்திவேல் இருவரையும் போலீசார் கைது செய்தனர்.

    மேலும் இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அதிகாரிகள் நடவடிக்கை
    • தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்

    சேத்துப்பட்டு:

    பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி தலை மையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது . அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது முருகன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர். கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிர மணி மற்றும் அலுவலர்கள் சீல் வைத்தனர்.

    இதேபோல் சேத்துப்பட்டில் காமராஜர் சிலைக்கு பின்புறம் கடை நடத்தி வந்த விநாயகம் என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய் யப்பட்டது.

    இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கடைக்கு சீல் வைத்தனர்.

    • அதிகாரி தகவல்
    • பொருட்களை கூடுதல் விலைக்கு சந்தைப்படுத்த உதவும்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை மாவட்ட இயற்கை பண்ணைய விவசாயிகள் அங்கக சான்று பெற விண்ணப்பிக்கலாம் என்று விதை சான்று மற்றும் அங்கக சான்று உதவி இயக்குனர் குணசேகரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

    இயற்கை முறையில் ரசாயனங்கள், பூச்சிக்கொல்லி மருந்துகள் இன்றி மேற்கொள்ளப்படும் வேளாண்மைக்கும், அதன் மூலமாக விளைவிக்கப்படும் விளைபொருட்களுக்கும் தமிழக அரசின் விதை சான்று மற்றும் அங்கக சான்று துறையால் தரச்சான்று வழங்கப்படுகிறது.

    இயற்கை முறையில் விளைவிக்கப்பட்ட பொருட்கள் என விற்பனை செய்யப்படும் பொருட்களை வாங்கும்போது அதற்கான தரச்சான்று இருக்கும் பட்சத்தில் அதன் இயற்கை தன்மை உறுதி செய்யப்படுகிறது. மேலும் அங்கக விளை பொருட்களை கூடுதல் விலைக்கு சந்தைப்படுத்த உதவுகிறது.

    தமிழக அரசின் விதைச்சான்று மற்றும் அங்கக சான்று துறையால் அளிக்கப்படும் தரச்சான்று மத்திய அரசின் வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சகத்தின் மூலமாக அங்கக உற்பத்திக்கான தேசிய திட்டத்தின்படி அளிக்கப்படுவதால் இந்த சான்றிதழை கொண்டு அங்கக விளைபொருட்களை வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்து கூடுதல் வருமானம் பெறலாம்

    அங்கக சான்றளிப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் விண்ணப்ப படிவம் 3 நகல்கள், பண்ணையின் பொது விவர குறிப்பு, பண்ணை வரைபடம், மண், நீர் பரிசோதனை விவரம், ஆண்டு பயிர் திட்டம், துறையுடனான ஒப்பந்த நகல்கள் 3, நில ஆவணம், பட்டா, சிட்டா, நிரந்தர கணக்கு அட்டை நகல், ஆதார் நகல், 2 பாஸ்போர்ட் அளவு புகைப்படங்கள் ஆகியவற்றுடன் உரிய கட்டணம் செலுத்தி மாவட்ட விதை சான்று துறை உதவி இயக்குனருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    அங்கக சான்றளிப்பிற்கு தனிநபராகவோ அல்லது குழுவாகவோ விண்ணப்பிக்கலாம். பெரு வணிக நிறுவனங்களும் பதிவு செய்து கொள்ளலாம்.

    அங்கக விளை பொருட்களை பதப்படுத்துவோரும், வணிகம் மற்றும் ஏற்றுமதி செய்வோரும் பதிவு செய்யலாம். மேலும் விவரங்க ளுக்கு மாவட்ட வேளாண்மை இணை இயக்குனர் அலுவலக வளாகத்தில் அமைந்து ள்ள விதை சான்று மற்று ம் அங்கக சான்று உதவி இயக்குனர் அலுவலகத்தை தொடர்பு கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • 26-ந் தேதி தொடங்குகிறது
    • பந்தக்கால் முகூர்த்தம் நடந்தது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அருகே படவேடு ரேணுகாம்பாள் கோவி லில் நவராத்திரி விழா வருகிற 26 - ந் தேதி தொடங்குகிறது. இதை முன்னிட்டு அம்மனுக்கு 26 - ந் தேதி முதல் 5 - ந் தேதி வரை தினமும் காலை, மாலை இருவேளை லட்சார்ச்சனை பூஜை நடக்கிறது.

    உற்சவ அம்மன் கோவில் மகா மண்டபத்தில் கொலு வைத்து, 25-ந் தேதி பார்வதி அலங்காரம், 26-ந் தேதி காமாட்சி அலங்காரம், 27-ந் தேதி மாவடி சேவை அலங்காரம், 29-ந் தேதி மீனாட்சி அலங்காரம், 30-ந் தேதி ராஜராஜேஸ்வரி அலங்காரம், 1-ந் தேதி துர்க்கை அலங்காரம், 2-ந் தேதி அன்ன பூரணி அலங்காரம், 3-ந் தேதி தனலட்சுமி அலங்காரம், 4-ந் தேதி சரஸ்வதி அலங்காரம், 5-ந் தேதி திருஅவதார அலங்காரத்துடன் இரவு 8.30 மணி அளவில் பாரிவேட்டை உற்சவம், திருவீதி உலா நடக்கிறது.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மண்டல இணை ஆணையர் க.பெ.அசோக்குமார் உத்தரவின்பேரில் உதவி ஆணையர் ஜோதிலட்சுமி, செயல் அலுவலர் சிவஞா னம் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

    இதேபோல் கண்ணமங்க லம் புதுப்பேட்டை சிவசக்தி வள்ளி முத்து மாரியம்மன் கோவிலிலும் நவராத்திரி விழா 26-ந் தேதி முதல் 5-ந் தேதி வரை நடக்கிறது.

    இதைமுன்னிட்டு அம்மனுக்கும், பரிவார மூர்த்திகளுக்கும் தினமும் அபிஷேகம், அலங்காரம் மற்றும் உற்சவ அம்மனுக்கு பல்வேறு சிறப்பு அலங்காரம் தீபாராதனை நடக்கிறது.

    இதைமுன்னிட்டு நேற்று கோவிலில் பந்தக்கால் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் விழா குழுவினர் கே.டி.குமார் உள்பட பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    • தண்ணீர் பாய்ச்ச நிலத்திற்கு சென்ற போது பரிதாபம்
    • போலீசார் விசாரணை

    போளூர்:

    போளூர் அருகே எடப்பிறை கிராமத்தை சேர்ந்தவர் சங்கர் விவசாயி. இவரது மனைவி நதியா (வயது 34). இவர்களுக்கு 2 மகன்கள் உள்ளனர்.

    இந்த நிலையில் நதியா கடந்த 18-ந்தேதி நிலத்தில் நெல் நடுவதற்கு, நிலம் உழுவதற்கு தண்ணீர் பாய்ச்ச இரவு 9 மணிக்கு நிலத்தில் வரப்பு மீது நடந்து சென்றார்.

    அப்போது அவரது இடதுகாலில் பாம்பு கடித்தது. உடனடியாக அவரை போளூர் அரசு மருத்துவ மனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நதியா பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து போளூர் சப்-இன்ஸ்பெக்டர் அய்யப்பன் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு
    • போலி சாமியார்களை கண்டறிய நடவடிக்கை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க கைரேகை எடுக்கும் பணி நடந்தது. இதனை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் ஆய்வு செய்தார்.

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் பின்புறம் உள்ள மலையை சுற்றியுள்ள கிரிவலப்பாதையில் நூற்றுக்கணக்கான சாதுக்கள் வசித்து வருகின்றனர்.

    இவர்களில் குற்றப்பின்னணி கொண்ட மற்றும் கஞ்சா, சாராயம் போன்றவற்றை சாமியார் போர்வையில் விற்கும் போலி சாமியார்களை கண்டறிய கிரிவலப்பாதையில் வசிக்கும் சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்க மாவட்ட காவல்துறை சார்பில் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு உள்ளது.

    அதைத்தொடர்ந்து கிரிவலப்பாதையில் உள்ள சாதுக்களுக்கு அடையாள அட்டை வழங்குவதற்கான பணிகள் மேற்கொள்ளப்பட்டது.

    அப்போது சாதுக்களின் கைரேகைகள் எடுக்கப்பட்டு குற்ற பின்னணி ஏதேனும் அவர்கள் மீது உள்ளதா என்று விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

    போலீஸ் சூப்பிரண்டு ஆய்வு

    இந்த பணியை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

    அப்போது அவர், சாதுக்களிடம் உங்களோடு சாமியார் என்று போலி சாமியார்கள் எவரேனும் தங்கி கஞ்சா, சாராயம், புகையிலை போன்ற போதை வஸ்துக்களை பயன்படுத்தினாலோ அல்லது விற்றாலோ அவர்கள் குறித்து போலீசார் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ள இலவச செல்போன் எண் 9159616263 என்ற எண்ணுக்கு அழைத்து புகார் தெரிவிக்கலாம் என்று தெரிவித்தார்.

    மேலும் சாதுக்கள் இரவு நேரங்களில் தங்குவதற்கு இடம் அமைத்து தந்தால் அங்கு தங்குவீர்களா என்று கேட்டறிந்தார்.

    காவல்துறையின் நடவடிக்கைகளுக்கு சாதுக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என்று அவர் கேட்டு கொண்டார்.

    அப்போது திருவண்ணா மலை தாலுகா போலீஸ் நிலைய இன்ஸ்பெக்டர் விஜயபாஸ்கர் மற்றும் போலீசார் உடனிருந்தனர்.

    • அம்பேத்குமார் எம்.எல்.ஏ. வழங்கினார்
    • ஆசிரியர்கள், பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் பெரணமல்லூர், பேரூராட்சியில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் தமிழக அரசின் பள்ளிக்கல்வித்துறை மூலம் மாணவர்களுக்கு இலவச சைக்கிள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு வந்தவாசி தொகுதி அம்பேத்குமார் எம்.எல்.ஏ. கலந்து கொண்டு 186 மாணவர்களுக்கு சைக்கிள் வழங்கினர்.

    இதில் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும், அரங்காவலர் குழு உறுப்பினர் பாண்டுரங்கன், ஒன்றிய குழு தலைவர் இந்திரா இளங்கோவன், பெரணமல்லூர் பேரூராட்சி மன்ற தலைவர் வேணி ஏழுமலை, துணைத் தலைவர் ஆண்டாள் அண்ணாதுரை, ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் ராமசாமி, ஒன்றிய செயலாளர் மனோகரன், காங்கிரஸ் பொறுப்பாளர் பழக்கடை பாலையா, ஆண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் சங்கர், பெண்கள் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி, ஒன்றிய குழு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் ஆசிரியர்கள் பெற்றோர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

    • கலெக்டரிடம் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. மனு
    • 10 அம்ச கோரிக்கை அளிக்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் என உள்பட 10 அம்ச கோரிக்கை மனுவினை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் அளித்துள்ளார்.

    உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் சார்பில் செய்யாறு தொகுதியில் 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினைநேற்று முன் தினம் கலெக்டர் பா.முருகேஷிடம் வழங்கினார்.

    அது குறித்து விவரங்கள் வருமாறு:-

    செய்யாறு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்தல், செய்யாற்றின் குறுக்கே செய்யாறு நகரின் அருகே தடுப்பணை அமைத்து நீர் ஆதாரம் ஏற்படுத்தி தர வேண்டும், செய்யாறு நகரில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப நவீன பஸ் நிலையம் அமைத்தல், மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு நீர் வரும் வகையில் வட இலுப்பை பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

    செய்யாறிலிருந்து சென்னை செல்வதற்கு காஞ்சிபுரம் செல்லாமல் மாங்கல் கூட்ரோட்டில் இருந்து ஆர்ப்பாக்கம், அவலூர், வாலாஜாபாத் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அகல சாலை அமைத்து தருதல், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் வட்டம் 250 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைத்து தர வேண்டும், செய்யாறு நகருக்கு பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வளாகத்திலேயே மகளிர் கலைக்கல்லூரி அமைத்திடுதல் வேண்டும், வந்தவாசி சாலையிலிருந்து செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து வெங்கட்ராயன் பேட்டை, அம்பேத்கர் நகர் வழியாக காஞ்சிபுரம் சாலை புளியரம்பாக்கம் கிராம வரை புதிய உள் வட்ட சாலைவேண்டும்.

    செய்யாறு நகருக்கு புதியதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தேவைப்படும் இடங்களில் மேல் நீர் தேக்க தொட்டிகளும் தரைதலை தொட்டிகளும் அமைத்து தினசரி சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கை பணித்திட்டத்தினை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தருமாறு கலெக்டரிடம் பா .முருகேஷிடம் ஒ. ஜோதி எம் எல் ஏகோரிக்கை மனுவழங்கினார்.

    உடன் மாவட்ட தடகளசங்கத் தலைவர் டாக்டர்எ.வே.கம்பன், தலைமை நிலைய செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    • தவறி கீழே விழுந்ததில் கையில் முறிவு
    • சிறையில் அடைத்தனர்.

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை தாலுகா பள்ளிகொண்டாப்பட்டு பகுதியை சேர்ந்தவர் தங்கவேல் (வயது 35). இவர் திருவண்ணாமலை மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் தொடர் வழிப்பறியில் ஈடுபட்டு வந்துள்ளார்.

    இதுகுறித்து திருவண்ணாமலை கிழக்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்கவேலை தேடி வந்தனர். இந்த நிலையில் இன்று அவர் திருவண்ணாமலை தீபம் நகர் பைபாஸ் சாலையில் புதிதாக கட்டப்பட்டுள்ள மேம்பாலத்தின் அருகில் இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் அவர் தப்பியோட முயன்றார். தொடர்ந்து போலீசார் துரத்தி சென்றனர்.

    இதனால் தங்கவேல் தவறி கீழே விழுந்ததில் அவரது இடது கையில் முறிவு ஏற்பட்டது. இதையடுத்து அவரை போலீசார் பிடித்து கைது செய்து சிகிச்சைக்காக திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    சிகிச்சைக்கு பின்னர் அவரை போலீசார் சிறையில் அடைத்தனர்.

    ×