என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மாற்றுத்திறனாளி குழந்தைகள் தெய்வத்திற்கு சமம்
    X

    30 மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்களை கல்வி அலுவலர் குணசேகரன், வழங்கிய போது எடுத்த படம்.

    மாற்றுத்திறனாளி குழந்தைகள் தெய்வத்திற்கு சமம்

    • கல்வி அலுவலர் பேச்சு
    • உதவி உபகரணங்கள் வழங்கப்பட்டது

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, மாவட்டம் நெடுகுணம், அரசினர் மேல்நிலைப் பள்ளி வளாகத்தில் உள்ள பள்ளி ஆயத்த பயிற்சி மையத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவின் பேரில் மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு உதவி உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி நடந்தது.

    நிகழ்ச்சிக்கு பெரணமல்லூர், வட்டார வள மைய மேற்பார்வையாளர் ராஜா, தலைமை தாங்கினார்.

    வட்டார கல்வி அலுவலர் ராமமூர்த்தி, நெடுங்குணம், அரசினர் மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் ஷீலா வளர்மதி, ஆகியோர் முன்னிலை வகித்தனர். அனைவரையும் மாற்றுத்திறனாளிகள் குழந்தைகள் ஒருங்கிணைப்பாளர் இசையருவி, வரவேற்றார்.

    நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக பெரண மல்லூர், வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், கலந்து கொண்டு மாற்று திறன் கொண்ட 30 குழந்தைகளுக்கு வாட்டர் பெட், ஸ்பைனல் பிரைஸ், மடிப்பு வாக்கர், சி, பி, சேர். உள்ளிட்ட 12 வகையான மாற்றுத் திறனாளிகளுக்கான உதவி உபகரணங்களை வழங்கி பேசுகையில் :-

    மாற்றுத்திறனாளி குழந்தைகளுக்கு தமிழக அரசு பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது, மாற்றுத் திறனாளி குழந்தைகளுக்கு அவர்களது பெற்றோர்கள் முறையாக பயிற்சி அளித்து அவர்களுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும்.

    மேலும் மாற்றுத்திறனாளி குழந்தைகள் அனைவருமே தெய்வங்களுக்கு சமம் அவர்களை நல்ல முறையில் பராமரித்து அவர்களுக்குள் உள்ள திறமைகளை வெளிக்கொண்டு வர பெற்றோர்கள் முன்வர வேண்டும், என பேசினார்.

    நிகழ்ச்சியில் ஆசிரியர் பயிற்றுநர்கள், சிறப்பு ஆசிரியர்கள், மாற்றுத்திறனாளி குழந்தைகளின் பெற்றோர்கள், உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    Next Story
    ×