என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    செய்யாறு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்
    X

    செய்யாறை புதிய மாவட்டமாக அறிவிக்க கோரி ஒ.ஜோதி எம் எல் ஏ மனுவை கலெக்டர் முருகேஷிடம் அளித்த போது எடுத்த படம் உடன் டாக்டர் வே. கம்பன், மாவட்ட பொறுப்பாளர் தரணி வேந்தன் உட்பட பலர் உள்ளனர்.

    செய்யாறு புதிய மாவட்டமாக அறிவிக்க வேண்டும்

    • கலெக்டரிடம் ஒ.ஜோதி எம்.எல்.ஏ. மனு
    • 10 அம்ச கோரிக்கை அளிக்கப்பட்டது

    செய்யாறு:

    செய்யாறு தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டத்தை உருவாக்கித் தர வேண்டும் என உள்பட 10 அம்ச கோரிக்கை மனுவினை ஒ.ஜோதி எம்.எல்.ஏ. கலெக்டரிடம் அளித்துள்ளார்.

    உங்கள் தொகுதியில் முதல்-அமைச்சர் திட்டம் சார்பில் செய்யாறு தொகுதியில் 10 முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவினைநேற்று முன் தினம் கலெக்டர் பா.முருகேஷிடம் வழங்கினார்.

    அது குறித்து விவரங்கள் வருமாறு:-

    செய்யாறு பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான செய்யாறை தலைமை இடமாகக் கொண்டு புதிய மாவட்டம் அமைத்தல், செய்யாற்றின் குறுக்கே செய்யாறு நகரின் அருகே தடுப்பணை அமைத்து நீர் ஆதாரம் ஏற்படுத்தி தர வேண்டும், செய்யாறு நகரில் வளர்ந்து வரும் மக்கள் தொகைக்கேற்ப நவீன பஸ் நிலையம் அமைத்தல், மாவட்டத்தின் மிகப்பெரிய ஏரியான மாமண்டூர் ஏரிக்கு நீர் வரும் வகையில் வட இலுப்பை பாலாற்றில் குறுக்கே தடுப்பணை கட்ட வேண்டும்.

    செய்யாறிலிருந்து சென்னை செல்வதற்கு காஞ்சிபுரம் செல்லாமல் மாங்கல் கூட்ரோட்டில் இருந்து ஆர்ப்பாக்கம், அவலூர், வாலாஜாபாத் வழியாக சுமார் 20 கிலோ மீட்டர் தூரம் அகல சாலை அமைத்து தருதல், செய்யாறு தொகுதி வெம்பாக்கம் வட்டம் 250 ஏக்கர் மேய்ச்சல் புறம்போக்கு நிலத்தில் அரசு வேளாண்மை கல்லூரி அமைத்து தர வேண்டும், செய்யாறு நகருக்கு பாதாள சாக்கடை திட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும், செய்யாறு அரசு கலைக் கல்லூரியில் வளாகத்திலேயே மகளிர் கலைக்கல்லூரி அமைத்திடுதல் வேண்டும், வந்தவாசி சாலையிலிருந்து செய்யாற்றின் குறுக்கே மேம்பாலம் அமைத்து வெங்கட்ராயன் பேட்டை, அம்பேத்கர் நகர் வழியாக காஞ்சிபுரம் சாலை புளியரம்பாக்கம் கிராம வரை புதிய உள் வட்ட சாலைவேண்டும்.

    செய்யாறு நகருக்கு புதியதாக தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியம் மூலம் தேவைப்படும் இடங்களில் மேல் நீர் தேக்க தொட்டிகளும் தரைதலை தொட்டிகளும் அமைத்து தினசரி சீரான குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும் ஆகிய 10 அம்ச கோரிக்கை பணித்திட்டத்தினை தமிழ்நாடு அரசு நிறைவேற்றித் தருமாறு கலெக்டரிடம் பா .முருகேஷிடம் ஒ. ஜோதி எம் எல் ஏகோரிக்கை மனுவழங்கினார்.

    உடன் மாவட்ட தடகளசங்கத் தலைவர் டாக்டர்எ.வே.கம்பன், தலைமை நிலைய செயலாளர் ஸ்ரீதர், மாவட்ட பொறுப்பாளர் எம்.எஸ்.தரணிவேந்தன் உள்ளிட்ட பலர் இருந்தனர்.

    Next Story
    ×