என் மலர்
நீங்கள் தேடியது "'Seal' for tobacco shops"
- அதிகாரிகள் நடவடிக்கை
- தடை செய்யப்பட்ட போதை பொருட்கள் பறிமுதல்
சேத்துப்பட்டு:
பெரணமல்லூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நந்தினிதேவி தலை மையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது மேல்சாத்தமங்கலம் கிராமத்தில் தடை செய்யப்பட்ட புகையிலை விற்கப்படுவதாக தகவல் கிடைத்தது . அதன்பேரில் போலீசார் அங்கு சென்று கடைகளில் சோதனை செய்தனர்.
அப்போது முருகன் என்பவர் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் இருந்தது. இதனை போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும் அவரை கைது செய்தனர். கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிர மணி மற்றும் அலுவலர்கள் சீல் வைத்தனர்.
இதேபோல் சேத்துப்பட்டில் காமராஜர் சிலைக்கு பின்புறம் கடை நடத்தி வந்த விநாயகம் என்பவரின் கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பாக்கெட்டுகள் பறிமுதல் செய் யப்பட்டது.
இவர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து கைது செய்தனர். மேலும் இன்ஸ்பெக்டர் பிரபாவதி, சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார், உணவு பாதுகாப்பு அலுவலர் சுப்பிரமணி ஆகியோர் கடைக்கு சீல் வைத்தனர்.






