என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • கார், 35 கிலோ போதைபொருள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருகே 35 கிலோ குட்கா பொருட்களை காரில் கடத்தி சென்ற கணவன்-மனைவி கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை மாவட்டத்தில் குட்கா, கஞ்சா, சாராயம் விற்பனையை தடுக்க மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கார்த்திகேயன் தீவிர நடவடிக்கை மேற்கொண்டு வருகிறார்.

    இந்த நிலையில் அவரது உத்தரவின் பேரில் இன்று திருவண்ணாமலை அருகில் உள்ள மேல்பாலானந்தல் பகுதியில் மங்கலம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நசுரூதின் மற்றும் ஏட்டுகள் சின்னதுரை, மாசிலாமணி, பலராமன், முதல்நிலை காவலர் மோகன் ஆகியோர் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த வழியாக வந்த காரை வழிமடக்கி போலீசார் சோதனை நடத்தினர். காரில் சோமாசிபாடியை சேர்ந்த ஜான்பாஷா (வயது 37) மற்றும் அவரது மனைவி ஹஜீரா (35) ஆகியோர் இருந்தனர்.

    மேலும் சோதனை நடத்திய காரில் சுமார் 35 கிலோ எடையுள்ள தடை செய்யப்பட்ட குட்கா பொருட்கள் இருப்பது தெரியவந்தது.

    இதன் மதிப்பு சுமார் ரூ.50 ஆயிரம் ஆகும். இதையடுத்து அவர்களை போலீசார் மங்கலம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் குட்கா பொருட்களை கடைகளுக்கு வினியோகம் செய்வதற்காக காரில் கடத்தி சென்றது தெரியவந்தது. அதைத்தொடர்ந்து போலீசார் கணவன்-மனைவி இருவரையும் கைது செய்தனர்.

    மேலும் கார் மற்றும் குட்கா பொருட்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரூ.8250 மதிப்புள்ள புகையிலை பொருட்கள் பறிமுதல்
    • போலீசார் விசாரணை

    கண்ணமங்கலம்:

    திருவண்ணாமலை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு டாக்டர் கார்த்திகேயன் உத்தரவின் பேரில் நேற்று ஆரணி டிஎஸ்பி ரவிச்சந்திரன், கண்ணமங்கலம் இன்ஸ்பெக்டர் சாலமன் ராஜா, சந்தவாசல் சப் இன்ஸ்பெக்டர் நாராயணன், தனிப்பிரிவு போலீசார் ராஜ்குமார் மற்றும் போலீசார் கேளூர் சந்தை மேடு பகுதியில் உள்ள பெட்டி கடைகளில் சோதனை செய்தனர்.

    அப்போது அங்குள்ள கடையில் இருந்து குட்கா போன்ற போதை புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.

    இதன் மதிப்பு ரூ.8250 ஆகும். இது சம்பந்தமாக வியாபாரியை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • மகாளய அமாவாசையை முன்னிட்டு நடந்தது
    • ஏராளமானோர் குவிந்தனர்

    திருவண்ணாமலை:

    மகாளய அமாவாசை தினமான இன்று திருவண்ணாமலை அய்யங் குளக்கரையில் ஆயிரக்கணக்கானோர் தங்களுடைய முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து வழிபட்டார்கள்.

    புரட்டாசி மாதம் பவுர்ணமி தினம் முதல் அமாவாசை வரை 15 நாட்கள் முடிய மகாளய பட்சம் என்று நம்மளுடைய முன்னோர்களால் அழைக்கப்படுகிறது.

    மகாளய அமாவாசையான இன்று திருவண்ணாமலையில் அய்யன் குளம் என்று அழைக்கப்படுகின்ற இந்திர தீர்த்த குளக்கரையில் இன்று அதிகாலை முதல் ஆயிரக்கணக்கான மக்கள் தங்களுடைய மூதாதையர்களுக்கு வேத பண்டிதர்கள் மந்திரங்கள் முழங்க எல் வைத்து தர்ப்பணம் கொடுத்து தங்களுடைய குடும்பத்தையும் வம்சத்தையும் முன்னோர்கள் குலதெய்வமாக இருந்து காக்க வேண்டி தர்ப்பணம் செய்து வழிபட்டார்கள்.

    போளூர் பெருமாள் கோவில், கைலாசநாதர் கோவில், ஆஞ்சநேயர் கோவில் போன்ற இடங்களில் மகாளய அமாவாசை முன்னிட்டு ஏராளமான பொதுமக்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்து வழிபட்டனர்.

    • நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் போட்டிகள் நடந்தது
    • 600-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலையில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடந்தது.

    தடகள போட்டிகள் திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத்தின் சார்பில் 14 வயது முதல் 20 வயது உடைய வீரர், வீராங்கனைகளுக்கு திருவண்ணாமலை மாவட்ட விளையாட்டு அரங்கில் மாவட்ட அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடைபெற்றது.

    இதில் 14, 16, 18, 20 என வயதின் அடிப்படையில் 4 பிரிவுகளாக 60 மீட்டர், 100 மீட்டர், 600 மீட்டர், 800 மீட்டர், 2000 மீட்டர், 3000 மீட்டர் ஓட்ட பந்தயம், நீளம் தாண்டுதல், குண்டு எறிதல், வட்டு எறிதல், மும்முறை தாண்டுதல் ஆகிய போட்டிகள் வீரர், வீராங்கனைகளுக்கு தனித்தனியாக நடத்தப்பட்டது. இதில் 600-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

    இப்போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகள் தகுதியின் அடிப்படையில் மாநில அளவில் நடைபெறும் போட்டியில் பங்கேற்க உள்ளனர்.

    இதற்கான ஏற்பாடுகளை திருவண்ணாமலை மாவட்ட தடகள சங்கத் தலைவர் எ.வ.வே.கம்பன் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • 47-ம் ஆண்டு திருவிழா தொடங்கியது
    • பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது

    கண்ணமங்கலம்:

    கண்ணமங்கலம் அடுத்த படவேடு ஜவ்வாதுமலை ராஜகம்பிரம் (எ) கோட்டை மலையில் ராஜகம்பிர சம்புவராய மன்னரால் 2160 அடி உயர மலையில் கட்டப்பட்ட ஸ்ரீவேணுகோபாலசாமி கோவிலில் புரட்டாசி மாத சனிக்கிழமை 47-ம் ஆண்டு உற்சவ திருவிழா நேற்று தொடங்கியது.

    இதைமுன்னிட்டு கோவிலில் வண்ண வண்ண விளக்குகளால் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது.அதிகாலை 4 மணி அளவில் கோவில் திறக்கப்பட்டு, அபிஷேகம், ஆராதனை பஜனைகள் நடைபெற்றது. இக்கோயிலுக்கு தரையிலிருந்து மலைப்பாதை வழியாக பக்தர்கள் செல்ல டிராக்டர் மூலமும், மலையடிவாரத்தில் இருந்து கோவிலுக்கு சென்றனர்.

    மேலும் தரிசனத்துக்கு வந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

    உற்சவர் அலங்காரம் செய்து கோவில் உட்பிரகார உலாவும் மாலையில் படவேடு பகுதியில் திருவீதி உலாவும் நடந்தது. நேற்று சாமிக்கு சீனிவாசர் அலங்காரம் செய்யப்பட்டிருந்தது. 2-வது சனிக்கிழமை வருகிற அக்டோபர் 1ம்தேதி நர்ததன கிருஷ்ண அலங்காரம், 8ம்தேதி வைகுண்டநாதன் அலங்காரம், 15-ம்தேதி நாச்சியார் திருக்கோல அலங்காரம், 22-ம்தேதி வெண்ணைத் தாழி அலங்காரம் செய்யப்படுகிறது.

    மேலும் விழாவின் போது அதிகாலை சூரிய ஒளி மூலவர் மீது படுமாறு அமைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

    இவ்விழாவிற்கான ஏற்பாடுகளை படைவீடு கிராம பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் செய்து இருந்தனர்.

    • விரைவாக பணிகளை முடிக்க உத்தரவு
    • அதிகாரிகள் பலர் உடன் இருந்தனர்

    போளூர், செப்.24-

    போளூர் தாசில்தார் அலுவலகத்தில் நேற்று அரசின் முதன்மைச் செயலாளர் வணிகவரி ஆணையர் மற்றும் திருவண்ணாமலை மாவட்ட கண்காணிப்பு அலுவலரமான தீரஜ் குமார் ஆய்வு செய்தார்.

    அப்போது பொதுமக்களிடமிருந்து பெறப்படும் மனுக்களை நிராகரிக்கப்படும் போது அதன் காரணத்தை கணினியில் பதிவு செய்கிறீர்களா இல்லையா என்று தாசில்தார் கேட்டறிந்தார்.

    அவருடன் திருவண்ணாமலை கலெக்டர் முகேஷ் மற்றும் டி ஆர் ஓ டாக்டர் பிரியதர்ஷினி ஆரணி கோட்டாட்சியர் தனலட்சுமி ஏ பி ஆர் ஓ ஆசைத்தம்பி ஆகியோர் உடன் இருந்தனர்.

    அதே போல் அங்கிருந்து சென்று பேரூராட்சியின் மார்க்கெட் வணிக வளாகம் கட்டும் பணியை பார்வையிட்டார். அப்போது எத்தனை கடைகள் கட்டப்படுகின்றன. இதில் எத்தனை காய் காய்கறி கடைகள் மற்றும் இதர கடைகள் எத்தனை என்று கேட்டறிந்தார் இந்த பணியை எவ்வளவு நாளில் முடிப்பீர்கள் என்றும் கேட்டிருந்தார்.

    அப்போது கலெக்டர் முகேஷ் மண்டல அலுவலர் ஜிஜா பாய், பேரூராட்சி செயல் அலுவலர் முகமது ரஜ்வான் பேரூராட்சி தலைவர் ராணி சண்முகம், துணை தலைவர் சாந்தி நடராஜன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் நரேஷ் குமார் போளூர் பேரூராட்சியின் உறுப்பினர் மல்லிகா கிருஷ்ணமூர்த்தி, ஜோதி குமரன் ஆகியோர் உடன் இருந்தனர்.

    • சேத்துப்பட்டு அன்மருதை கிராமத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை, கலெக்டர் முருகேஷ், உத்தரவின் பேரில் பள்ளி செல்லா குழந்தைகள், மற்றும் பள்ளி இடை நின்ற மாணவர்களை, கண்டறிந்து அருகில் உள்ள அரசு பள்ளிகளில் சேர்க்க வேண்டும் என்று உத்தரவிட்டிருந்தார்.

    இதையடுத்து பெரணமல்லூர் வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், தலைமையில் வட்டாரவள மேற்பார்வையாளர் ராஜா, ஒருங்கிணைப்பாளர் சரவணன்ராஜ், மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள், ஆகியோர் குழுவாக சென்று அன்மருதை, கிராமத்தில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் வீடு, வீடாக சென்று பள்ளி செல்லா குழந்தைகள் மற்றும் பள்ளி இடைநின்ற மாணவர்கள், உள்ளார்களா என்று ஆய்வு செய்தனர்.

    அதுபோல இருளர் இன மக்கள் வசிக்கும் பகுதியில் பள்ளிசெல்லா குழந்தைகள் 5 பேர். பள்ளி இடை நின்ற மாணவர்கள் 2 பேரை கண்டறிந்து. அன்மருதை, ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் இவர்களை சேர்த்தனர்.

    புதிதாக பள்ளியில் சேர்ந்த மாணவர்களுக்கு வட்டார கல்வி அலுவலர் குணசேகரன், சீருடைகள், நோட்டு, புத்தகம், பேனா, பென்சில், வாய்ப்பாடு, ஆகியவற்றை வழங்கி, மாணவர்களிடம் கல்வியின் அவசியத்தை கூறி தொடர்ந்து பள்ளிக்கு வர மாணவர்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்தினார். நிகழ்ச்சியில் பள்ளி தலைமை ஆசிரியர் கஸ்தூரிபாய், பட்டதாரி ஆசிரியர்கள் பழனிவேல், வெங்கடேசன், சபிதாதேவி, ஜவகர் தேவநாயகம், வெங்கடாசலம், மற்றும் மாணவர்களின் பெற்றோர்கள் ஆகியோர் இருந்தனர்.

    • 2 ஆசிரியர்கள் பணியிட மாற்றம்
    • கல்வி அலுவலர் உத்தரவு

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் கிராமத்தில் உள்ள அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 765க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.

    இந்த பள்ளி தலைமையாசிரியராக மீனாட்சி உள்ளிட்ட 20 ஆசிரியர்கள் உள்ளனர்.

    மேலும் ராட்டினமங்கலம் கிராமத்தை சேர்ந்த பிரபாகரன் மகன் பூபதி 11-ம் வகுப்பு அறிவியில் பிரிவில் பயின்று வருகின்றார்

    பள்ளி மாணவனை 4 ஆசிரியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது.

    4 ஆசிரியர்கள் தாக்கியதை 11-ம் வகுப்பு பள்ளி மாணவன் பூபதி தனது பெற்றோரிடம் கூறியுள்ளான்.

    இதனால் மாணவனின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் சுமார் 20க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி தலைமையாசிரியை மீனாட்சியிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவனை தாக்கியதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ஆரணி தாலுகா போலீசில் மாணவன் பெற்றோர் புகார் மனு அளித்துள்ளனர்.

    இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் மாவட்டகல்வி அலுவலர் சந்தோஷ் ஆகியோர் சேவூர் அரசு பள்ளியில் நேரில் சென்று விசாரணை மேற்கொண்டனர்.

    மாணவனை உடல் ரீதியாக தாக்குதல் மற்றும் மனஉலைச்சல் ஏற்படுத்துதல் பிரிவின் கீழ் இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன் ஆங்கிலம் ஆசிரியர் திலிப்குமார் ஆகியோரை தற்காலிகமாக பணியிடை நீக்கம் செய்தனர் மற்றும் நித்தியானந்தம், பாண்டியன் ஆகிய 2 ஆசிரியர்களை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.

    ஆரணி அருகே பள்ளி மாணவனை அடித்த புகாரில் 2 ஆசிரியர்கள் பணியிட நீக்கம் செய்து உத்தரவு பிறப்பித்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    • தரசான்று இல்லாமல் செயல்பட்டு வந்தது
    • அதிகாரிகள் நடவடிக்கை

    ஆரணி:

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே கனிகிலுப்பை பகுதியில் குடிநீர் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனம் உள்ளது.

    குடிநீர் சுத்திகரிப்ப நிறுவனம் தரசான்று பெறாமல் இயங்கி வந்ததாக புகார் வந்தது. இதையடுத்து திருவண்ணாமலை மாவட்ட உணவு பாதுகாப்பு அதிகாரி ராமகிருஷ்ணன் தலைமையில் அதிகாரிகள் சுத்திகரிப்பு குடிநீர் நிறுவனத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.

    இதில் தரசான்று இல்லாமல் குடிநீர் நிறுவனம் செயல்பட்டு வந்தது தெரியவந்தது. இதனால் அந்த குடிநீர் நிறுவனத்தை தற்காலிகமாக மூடி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை மேற்கொண்டனர்.

    • 26-ந் தேதி தொடங்குகிறது
    • உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட்டது

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நவராத்திரி விழா வருகிற 26 -ந்தேதி தொடங்கி அக்டோபர் 4-ந் தேதி வரை நடைபெற உள்ளது.

    விழாவையொட்டி கோவிலில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் மாலையில் பராசக்தி அம்மனுக்கு பல்வேறு அலங்காரங்கள் செய்யப்பட உள்ளது.

    வருகிற 26-ந் தேதி மாலை பராசக்தி அம்மன் ஆஸ்தான மண்டபத்தில் இருந்து புறப்பட்டு வான வேடிக்கையுடன் மங்கள வாத்தியங்கள் முழங்க திருக்கல்யாண மண்டபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    இதைத்தொடர்ந்து 27-ந் தேதி ராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரமும், 28-ந் தேதி கஜலட்சுமி அலங்காரமும், 29-ந் தேதி மனோன்மணி அலங்காரமும், 30-ந் தேதி ரிஷப வாகன அலங்காரமும் மற்றும் பஞ்ச மூர்த்தி களுக்கு அபிஷேகமும் செய்யப்பட உள்ளது.

    தொடர்ந்து 1-ந் தேதி ஆண்டாள் அலங்காரமும் 2-ந் தேதி சரஸ்வதி அலங்காரமும், 3-ந் தேதி லிங்க பூஜை அலங்காரமும், 4-ந் தேதி மகிஷாசுர மர்தினி அலங்காரமும் நடைபெற உள்ளது.

    மேலும் அன்று காலையில் திருக்கல்யாண மண்டபத்தில் பராசக்தி அம்மனுக்கு அபிஷேகம் நடைபெறுகிறது.மாலை சரஸ்வதி பூஜை மற்றும் உண்ணாமலை அம்மனுக்கு சந்தன காப்பு அலங்காரம் செய்யப்பட உள்ளது.

    விழாவிற்கான ஏற்பா டுகளை அருணாசலேஸ்வரர் கோவில் இணை ஆணையர் அசோக்குமார் மற்றும் விழா குழுவினர் செய்து வருகின்றனர்.

    • மனைவி, 2 மகன்கள் கைது
    • போலீசார் விசாரணை

    திருவண்ணாமலை:

    தண்டராம்பட்டு தாலுகா தானிப்பாடி அருகே மோத்தக்கல் ஊராட்சி க்குட்பட்ட குபேரப்பட்டி ணம் கிரா மத்தை சேர்ந்தவர் சகாதேவன் (வயது 58), கூலி தொழி லாளி. இவரது மனைவி அன்னக்கிளி (50). இவர்களுக்கு ராதிகா. அமுதா ஆகிய 2 மகள்களும், மணிகண்டன், சக்திவேல் ஆகிய 2 மகன் களும் உள்ளனர்.

    கொலை

    அனைவ ருக்கும் திருமணமாகி விட் டது. மணிகண்டனுக்கு 2019-ம் ஆண்டு திருமணம் நடந்தது. ஆனால் அவரது மனைவி ஒரு மாதத்திலேயே பிரிந்து தாய் வீட்டுக்கு சென்று விட்டார். அவர் வேறு ஒருவரை திரும ணம் செய்து கொண்டதாக தெரிகிறது. எனவே தனக்கு 2 - வது திருமணம் செய்து வைக்கும்படி சக்திவேல் வற்புறுத்தி வந்துள்ளார். இது தொடர்பாக தந்தை, மக னுக்கு இடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தது.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் சகாதேவனை மகன்கள் மணிகண்டன், சக்திவேல் ஆகியோர் கத்தியால்வெட்டி கொலை செய்தனர்.

    இதுகுறித்து தண்டராம் பட்டு போலீஸ் இன்ஸ்பெக் தனலட்சுமி வழக்குப்பதிவு செய்து 2 மகன்களை கைது செய்து விசாரணை நடத்தினர்.மலைப்பகுதியில் ஒரு பெண் கைது செய்து விசாரணை நடத்தினார். இந்தகொலையில் அன்னக் கிளிக்கும் சம்பந்தம் இருப்ப அன்னக்கிளி தாக போலீசாருக்கு தெரிய வந்தது. அவரையும் பிடித்து விசாரணை நடத்தினர்.

    விசாரணையில் அன்னக்கிளியும் சேர்ந்து இந்த கொலையை செய்தி ருப்பது போலீசாருக்கு தெரிய வந்தது. எனவே அவ ரையும் போலீசார் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட 3 பேரும் அளித்துள்ள வாக்கு மூலத்தில் கூறியிருப்பதா வது, சகாதேவன் சேராப்பட்டு மலைப்ப குதியில் ஒரு பெண்ணுடன் கள்ள தொடர்பு வைத்துக்கொண்டு 5 ஆண்டுகளாக குடும்பம் நடத்தி வந்தார்.

    மேலும் கள்ளக்காதலிக்கு தான் சம்பாதித்த பணத்தை எல்லாம் செலவழித்து வந்ததோடு மலையிலேயே ஒரு வீட்டையும் சகாதேவன் கட்டிக் கொடுத்துள்ளார்.

    வாக்குமூலம்

    இதனால் சகாதேவன் சம்பாதிக்கும் பணத்தை குடும்ப செலவிற்கு கொடுக்காமலும், குடும்பத்தை கவனிக்கா மலும் இருந்துள்ளார்.

    இது தொடர்பாக பலமுறை குடும்பத் தகராறு ஏற்பட்டது. ஆனாலும் சகாதேவன் கள்ளத்தொ டர்பை கைவிடுவதாக இல்லை. மேலும் தங்களுக்கு சொந்தமான நிலத்தையும் கள்ள காதலிக்கு எழுதி வைக்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார். இது குறித்து தட்டிக்கேட்ட அன்னக்கிளியும் சகாதேவன் கொடு மைப்படுத்தி வந்துள்ளார்.

    எனவே மனைவி 2 மகன்கள் சேர்ந்து சகாதேவனை தீர்த்து கட்ட முடிவு செய்துள்ளனர். அதன் பேரில் நேற்று முன்தினம் மாலை சகாதேவன் வீட்டில் இருந்தபோது அவரை சராசரியாக வெட்டி கொலை செய்தனர்.இவ்வாறு அவர்கள் வாக்குமூலம் கொடுத்துள்ளனர்.

    இதையடுத்து கைது செய்யப்பட்ட 3 பேரும் வேலூர் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம்
    • 7 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினர்

    வந்தவாசி:

    வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூர், அதியங்குப்பம், கீழ்புத்தூர், கீழ்க்கொவளைவேடு, ரெட்டிக்குப்பம், தென்சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் அனைத்து பழங்குடியினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

    ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் எம்.மாரிமுத்து தலைமை வகித்தார். சங்க மாநில பொதுச் செயலர் சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலர் அ.அப்துல்காதர் ஆகியோர் ேபசினர்.

    இதைத் தொடர்ந்து தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் சென்ற அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் மேற்கொண்டனர்.

    இந்த நிலையில் வருவாய்த்துறையினர் தென்சேந்தமங்கலத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினர். மேலும் மற்றவர்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தினர் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    ×