என் மலர்
நீங்கள் தேடியது "விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர்."
- தாசில்தார் அலுவலகத்தில் போராட்டம்
- 7 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினர்
வந்தவாசி:
வந்தவாசியை அடுத்த எஸ்.மோட்டூர், அதியங்குப்பம், கீழ்புத்தூர், கீழ்க்கொவளைவேடு, ரெட்டிக்குப்பம், தென்சேந்தமங்கலம் ஆகிய கிராமங்களில் வசிக்கும் அனைத்து பழங்குடியினருக்கும் வீட்டுமனை பட்டா வழங்கக் கோரி தாசில்தார் அலுவலகம் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஆர்ப்பாட்டத்துக்கு தமிழ்நாடு மலைவாழ் மக்கள் சங்க மாவட்டச் செயலர் எம்.மாரிமுத்து தலைமை வகித்தார். சங்க மாநில பொதுச் செயலர் சரவணன், கரும்பு விவசாயிகள் சங்க மாநிலக்குழு உறுப்பினர் பெ.அரிதாசு, மார்க்சிஸ்ட் வட்டாரச் செயலர் அ.அப்துல்காதர் ஆகியோர் ேபசினர்.
இதைத் தொடர்ந்து தாசில்தார் அலுவலக வளாகத்துக்குள் சென்ற அவர்கள் தரையில் அமர்ந்து தர்ணா போராட்டம் மேற்கொண்டனர்.
இந்த நிலையில் வருவாய்த்துறையினர் தென்சேந்தமங்கலத்தைச் சேர்ந்த 7 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்கினர். மேலும் மற்றவர்களுக்கும் விரைவில் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என உறுதி அளித்தனர். இதைத் தொடர்ந்து போராட்டத்தினர் தர்ணாவை கைவிட்டு கலைந்து சென்றனர்.






