என் மலர்tooltip icon

    திருவண்ணாமலை

    • பள்ளி மாணவர்கள் ஆர்வத்துடன் பார்த்தனர்
    • பொதுமக்கள் பாராட்டு

    வந்தவாசி:

    வந்தவாசி அடுத்த இரும்பேடு கிராமத்தைச் சேர்ந்தவர் மோகன்ராஜ்(35). பட்டதாரியான இவர் சிறுவயதில் முதல் வானிலை ஆராய்ச்சி செய்வதில் ஆர்வம் காட்டினார்.

    இந்த நிலையில் ரூ.3 லட்சம் செலவில் அதிநவீன டெலஸ்கோப் வாங்கி 58 ஆண்டுகளுக்குப் பிறகு வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை படம் பிடித்து காண்பித்தார்.

    மேலும் வியாழன் கிரகம் பூமிக்கு அருகில் வருவதை பள்ளி மாணவர்களுக்கும், பொதுமக்களுக்கும் வீட்டின் மாடியில் டெலஸ்கோப் வைத்து காண்பித்தார்.

    மேலும் மோயகன்ராஜ் இத்தகைய வானிலை ஆராய்ச்சி செய்து மாணவர்களுக்கு வழிகாட்டியாக செய்து வரும் இச்செயலை அப்பகுதி மக்கள் பாராட்டி வருகின்றனர்.

    • மூதாட்டியை கட்டிப்போட்டு துணிகரம்
    • போலீசார் விசாரணை

    புதுப்பாளையம்:

    செங்கம் பகுதியை சேர்ந்தவர் குலோத்துங்க சோழன் (வயது 55). டாக்டர். இவர் செங்கம் டவுன் பழைய பஸ் நிலையம் அருகே சொந்தமாக மருத்துவமனை நடத்தி வருகிறார்.

    இவரது தாயார் ராஜேஸ்வரி அம்மாள் (75). செங்கம் அடுத்த கிளையூர் பகுதியில் உள்ள பண்ணை வீட்டில் தனியாக வசித்து வருகிறார்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு வீட்டில் ராஜேஸ்வரி அம்மாள் தூங்கிக் கொண்டிருந்தார். இதனை நோட்டமிட்ட மர்ம கும்பல் வீட்டுக்குள் புகுந்து டாக்டரின் தாயாரை கட்டிப்போட்டு தனி அறையில் அடைத்து வைத்தனர்.

    பின்னர் வீட்டில் உள்ள பீரோவில் வைத்திருந்த 25 பவுன் நகைகளை கொள்ளை அடித்துச் சென்றனர். இந்த நிலையில் அதிகாலையில் ராஜேஸ்வரி அம்மாள் வீட்டிற்கு வேலைக்கு வந்த பணியாளர்கள் வீட்டில் பொருட்கள் சிதறி கிடப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    மூடிக்கிடந்த ஒரு அறையை திறந்து பார்த்தபோது ராஜேஸ்வரி மர்ம கும்பல் கட்டிப்போட்டு விட்டு நகைகளை கொள்ளை அடித்துச் சென்றது தெரிய வந்தத. இது குறித்து தகவல் அறிந்த டாக்டர் குலோ த்துங்க சோழன் செங்கம் போலீசில் புகார் அளித்தார்.

    புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து நகைகளை கொள்ளை அடித்துச் சென்ற மர்ம கும்பலை தேடி வருகின்றனர்.

    • முட்புதரில் 5 பேர் பதுங்கியிருந்தனர்
    • 2 கத்தி பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை கூட்டுக் கொள்ளையில் ஈடுபட சதி திட்டம் தீட்டிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.

    திருவண்ணாமலை கிழக்கு போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சிவசங்கர் தலைமையிலான போலீசார் திருவண்ணாமலை திருக்கோவிலூர் பைபாஸ் சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.

    அப்போது அந்த பகுதியில் உள்ள முட்புதரில் சந்தேகப்படும் வகையில் 5 பேர் பதுங்கியிருந்ததை கண்டு அவர்களை பிடிக்க சென்றனர். போலீசார் வருவதை பார்த்த 5 பேரும் அங்கிருந்து ஓட்டம்பிடித்தனர். உடனே போலீசார் விரட்டிச்சென்ற தில் 3 பேர் பிடிபட்டனர்.

    அவர்கள் தர்மபுரி மாவட்டம் அரூர் பகுதியை சேர்ந்த பிரவீன்குமார் (வயது 29), பாண்டியராஜன் (33), கமல்ராஜ் (33) என்பதும் கூட்டு க்கொள்ளையில் ஈடுபட முயன்றதும் தெரியவந்தது.

    இதையடுத்து அவர்கள் 3 பேரையும் போலீசார் கைது செய்து 2 கத்தியை பறிமுதல் செய்தனர். தப்பி ஓடிய 2 பேரை தேடி வருகின்றனர்.

    • கன மழையால் சேதம்
    • மாணவர்கள் வலியுறுத்தல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை அடுத்த சி.கெங்கம்பட்டு கிராமத்தில் அரசு உயர்நிலைப் பள்ளியில் உள்ளது. இப்பள்ளி சுற்று வட்டாரத்தை சேர்ந்த சுமார் 200-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியை சுற்றி சுமார் 200 அடி நீளத்துக்கு மேல் சுற்றுச்சுவர் கட்டப்பட்டிருந்தன.

    மேலும் இதனை ஒட்டி பள்ளி மாணவர்களுக்கு தேவையான கழிப்பறைகளும் கட்டி வைக்கப்பட்டிருந்தன. கடந்த மாதம் பெய்த கன மழையின் காரணமாக இப்பள்ளியை சுற்றி கட்டப்பட்டுள்ள சுமார் 150 அடி நீளம் கொண்ட சுற்றுச்சுவர் அடியோடு சாய்ந்து விட்டன.

    அதோடு கழிப்பறை விழுந்து விட்டது. இதனால் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்கு போதுமான பாதுகாப்பு வசதி இல்லாமலும் மற்றும் கழிப்பறை வசதி இல்லாமலும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். இது சம்பந்தமாக உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என பள்ளியில் படிக்கும் மாணவ மாணவிகளும் மற்றும் பொதுமக்களும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    மேலும் இது பற்றி அப்பகுதி மக்கள் கூறுகையில் பள்ளியை சுற்றி கட்டப்பட்டுள்ள சுற்றுசூழல் தரமற்ற முறையில் கட்டப்பட்டதால் கீழே சாய்ந்து விட்டன. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். என தெரிவித்துள்ளனர்.

    • பள்ளிக்கல்வித்துறை 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
    • மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

    திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி அருகே சேவூர் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் சுமார் 765-க்கும் மேற்பட்ட மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந்த பள்ளி தலைமையாசிரியராக மீனாட்சி உள்ளிட்ட 20 ஆசிரியர்கள் உள்ளனர்.

    இந்த பள்ளியில் படித்து வரும் 11ம் வகுப்பு மாணவனை 4ஆசிரியர்கள் தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் மாணவனின் பெற்றோர் மற்றும் கிராம பொதுமக்கள் சுமார் 20-க்கும் மேற்பட்டோர் சேவூர் அரசு பள்ளியை முற்றுகையிட்டு பள்ளி தலைமையாசிரியையிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

    இதனை தொடர்ந்து பள்ளி மாணவனை தாக்கியதாக கூறி அரசு பள்ளி ஆசிரியர்கள் மீது ஆரணி தாலுகா போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.

    இதனையடுத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி மற்றும் மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் ஆகியோர் சேவூர் அரசு பள்ளியில் நேரில் சென்றுவிசாரணை நடத்தினர்.

    இயற்பியல் ஆசிரியர் வெங்கட்ராமன், ஆங்கில ஆசிரியர் திலிப்குமார் ஆகியோர் சஸ்பெண்டு செய்யப்பட்டனர். ஆசிரியர்கள் நித்தியானந்தம், பாண்டியன் பணியிட மாற்றம் செய்து முதன்மை கல்வி அலுவலர் கணேசமூர்த்தி அதிரடி உத்தரவிட்டார்.

    பள்ளிக்கல்வித்துறை 4 ஆசிரியர்கள் மீது நடவடிக்கை எடுத்ததை கண்டித்து 300-க்கும் மேற்பட்ட மாணவர்கள் காலாண்டு தேர்வை புறக்கணித்துவிட்டு திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். மாணவர்களின் பெற்றோர்களும் போராட்டத்தில் இறங்கினர்.

    மாவட்ட கல்வி அலுவலர் சந்தோஷ் டி.எஸ்.பி ரவிசந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

    அப்போது சஸ்பெண்டு மற்றும் பணியிட மாற்றம் செய்யப்பட்ட ஆசிரியர்கள் 4 பேரையும் மீண்டும் இதே பள்ளியில் பணியில் அமர்த்த வேண்டும். இல்லாவிட்டால் நாங்கள் மாற்றுச் சான்றிதழ் வாங்கிக் கொண்டு சென்று விடுவோம் என மாணவர்கள் தெரிவித்தனர். தொடர்ந்து அவர்களிடம் அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர்.இதனால் இந்த பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    • புஷ்ப பல்லக்கு வீதி ஊலா
    • பக்தர்கள் ஏராளமாேனார் தரிசனம்

    ஆரணி:

    ஆரணி டவுன் சைதாப்பேட்டையில் உள்ள பிரசித்தி பெற்ற ஸ்ரீ லட்சுமி நரசிங்க பெருமாள் கோவில் உள்ளது.

    இந்தக் கோவிலில் புரட்டாசி மஹாலய அமாவாசை முன்னிட்டு 99 ஆம் ஆண்டு விழா வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டது. நரசிங்க பெருமாளுக்கு மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட புஷ்ப பல்லக்கில் சாமி அலங்கரிக்கப்பட்டு ஊர்வலம் கமண்டல நாக நதி ஆற்றில் இருந்து மேட்டுத்தெரு நாடக சாலை பற்றி தெரு உள்ளிட்ட பகுதிகளில் மேல வாத்தியங்கள் முழங்க புஷ்ப பல்லுக்கு வீதி உலா நடைபெற்றது.

    இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு வழிநெடுகிளும் 8 லட்சத்திற்கும் மேற்பட்ட தேங்காய் உடைத்து நேர்த்திக் கடன் செலுத்தினர்.

    இதில் ஆரணி சுற்றியுள்ள பல்வேறு பகுதிகளில் இருந்து வந்த பக்தர்கள் நரசிங்க பெருமாளை வழிபட்டு சென்றனர்.

    • காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை மின் நிறுத்தம் செய்யப்படுகிறது
    • மாதாந்திர பராமரிப்பு பணிகள் நடக்கிறது

    புதுப்பாளையம்:

    புதுப்பாளையம் ஒன்றியத்துக்குட்பட்ட காரப்பட்டில் உள்ள துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் நாளை (செவ்வாய்க்கிழமை) நடக்க இருக்கிறது.

    இதனால் நாளை காலை 9 மணி முதல் மதியம் 2 மணிவரை காரப்பட்டு, வீரனந்தல், கீழ்குப்பம், மேல் குப்பம், பனைஓலைப்பாடி, மேலப்புஞ்சை, வாசுதேவன்பட்டு, படி அக்ரஹாரம், ஆகிய பகுதிகளில் நாளை மின்சாரம் நிறுத்தப்படும் என காரப்பட்டு செயற் பொறியாளர் சங்கரன் தெரிவித்துள்ளார்.

    • முன்விரோதம் காரணமாக விபரீதம்
    • போலீசார் விசாரணை

    சேத்துப்பட்டு:

    திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு பழம்பேட்டை மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்தவர் அய்யாசாமி (வயது 66). இவருக்கும் அதே தெருவில் வசிக்கும் விஜயகுமார் (38) என்பவருக்கும் இடையே முன்விரோதம் இருந்து வந்தது

    இதில் ஏற்பட்ட தகராறில் ஆத்திரமடைந்த விஜயகுமார், அய்யாசாமியை பிளேடால் வெட்டி உள்ளார். இதில் காயமடைந்த அய்யாசாமி சேத்துப்பட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    இதுகுறித்து சேத்துப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

    • மின் தடையை சரி செய்யாததால் அவதி
    • அதிகாரிகள் தீர்வு காண பொதுமக்கள் வலியுறுத்தல்

    போளூர்:

    போளூர் மின்சார வாரியத்தில் மின்வாரிய ஊர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர் இதனால் போளூர் சுற்றுவட்டார பகுதியில் சுமார் 1½ நேரமாக மின்சாரம் தடைப்பட்டு சரி செய்வதற்கு யாரும் ஆட்கள் இல்லை.

    தமிழ்நாடு முழுவதும் மின்சார வாரிய ஊழியர்கள் பஞ்சப்ப படி உயர்வினை உடனடியாக வழங்க கோரி இன்று வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.

    300-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் போளூர் மின்சார வாரியத்தில் வேலை செய்கிறார்கள். அவர்கள் இன்று வேலை நேரத்தில் சுமார் 80 சதவீதம் பேர் ஈடுபட்டுள்ளதால் போளூர் முழுவதும் தடைபட்டுள்ள மின்சாரத்தை சரி செய்வதற்கு ஆட்கள் இல்லை அதிகாரிகள் தலையிட்டு உடனடியாக தீர்வு காண வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • போலி சாப்ட்வேர் தயாரித்து துணிகரம்
    • லேப்டாப், செல்போன் பறிமுதல்

    திருவண்ணாமலை:

    திருவண்ணாமலை ெரயில் நிலையத்தில் சில மாதங்களுக்கு முன்பு பயணிகளிடம் ெரயில்வே போலீசார் டிக்கெட் பரி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, சில பய ணிகளிடம் இருந்த டிக்கெட்கள் மீது அதிகாரிகளுக்கு சந்தேகம் வந்தது. இதையடுத்து அவர்களிடம் - போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்த இடத்தில் முறைகேடு நடந்திருப்பது தெரியவந்தது.

    இதைத்தொடர்ந்து ெரயில்வே அதிகாரிகள் தீவிர விசாரணையில் ஈடுபட்டனர். விழுப்புரம் ெரயில்வே இன்ஸ்பெக்டர் அருண்குமார் தலைமையில் திருவண்ணாமலை ெரயில்வே போலீசார் உட்பட 8 பேர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டு கடந்த 2 மாதங்களாக தீவிரமாக கண்காணித்து வந்துள்ளனர்.

    கடந்த மாதம் வேலூர், காட்பாடி பகுதிகளில் உள்ள சில கடைகளில் ெரயில்வே தனிப்படை போலீசார் நடத்திய சோதனையில், தனியாக சாப்ட்வேர் உருவாக்கி அதிலி ருந்து ஐ.ஆர்.சி.டி.சி. இணையதளத்துக்குள் சென்று ெரயில் டிக்கெட்கள் முன் பதிவு செய்வது கண்டு பிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து இந்த இணையதளத்தை பயன்படுத்திய நபர்களிடம் போலீசார் விசாரணை நடத்தினர்.

    அதில், ெரயில் டிக்கெட் முன்பதிவு செய்ய சாப்ட்வேர் ஒன்றை, ஒரு இணை யதள முகவரியிலிருந்து வாங்கிய தாக அவர்கள் தெரிவித்து ள்ளனர். இதையடுத்து அவர்கள் பயன்ப டுத்திய சாப்ட்வேர் மற்றும் இணையதளத்தை சைபர் கிரைம் போலீசார் தீவிர மாக கண்காணித்ததில், பீகாரில் உள்ள ஒரு நபர் இந்த சாப்ட்வேரை விற்பனை செய்தது தெரியவந்தது.

    தனிப்படை ெரயில்வே போலீசார் பீகாருக்கு விரைந்து சென்று போலி சாப்ட்வேர் தயாரித்து விற்பனை செய்யும் இணையதள முகவரியை கண்டுபிடித்து கண்கா ணித்தனர். இந்த முறைகேட்டில் பீகார் மாநிலம் தானாபூர் பகுதியை சேர்ந்த சைலேஷ்யாதவ் (27) என்ற வாலிபர் ஈடுபட்டது தெரிய வந்துள்ளது.

    இதையடுத்து, வாலிபர் சைலேஷ் யாதவை ெரயில்வே தனிப்படை போலீசார் கைது செய்து, திருவண்ணாமலை ெரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து வந்து தீவிர விசாரணை நடத்தினர். அதில், இணையதளம் மூலம் போலியான சாப்ட்வேர் உருவாக்கி, நாடு முழுவதும் 3 ஆயிரத்து 484 பேரிடம் ரூ.2 ஆயிரம் முதல் 3 ஆயிரத்து 500 வரை விற்பனை செய்து வந்ததும், இதன் மூலம் கடந்த 9 மாதத்தில் ரூ.90 லட்சம் சம்பாதித்த தும் தெரியவந்தது.

    இதுதவிர, கடந்த 8 மாதங்களில் ஆன்லைன்மு ன்பதிவு செய்து ஒரு லட்சத்து 25 ஆயிரம் ெரயில்வே டிக்கெட்டுகள் விற்பனை செய்ததும், இதன் மூலம் ெரயில்வே துறைக்கு பல கோடி ரூபாய் இழப்பீடு ஏற்படுத்தியதும் தெரியவந்துள்ளது. கைது செய்யப்பட்டவரிடம் இருந்து ஒரு லேப்-டாப், 3 செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    இதுகுறித்த வழக்கு விசாரணை திருச்சி மண்டல ெரயில்வே போலீசார் மேற்கொள்ள உள்ளதால், கைது செய்யப்பட்ட நபரை திருச்சிக்கு அழைத்து சென்றுள்ளதாகவும், மேற் கொண்டு நடத்தப்படும் விசாரணையில் மேலும் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகும் எனவும் போலீசார் தெரிவித்தனர்.

    • குழந்தைகள் இல்லாததால் விரக்தி
    • போலீசார் விசாரணை

    ஆரணி:

    ஆரணியை அடுத்த துந்தரீகம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ஏழுமலை மகன் தினகரன் ( வயது 32 ) . சென்னையில் உள்ள தனியார் செல்போன் டவர் அமைக்கும் நிறுவனத்தில் மெக் கானிக்காக வேலை செய்து வந்தார் . இவருக்கு ஆரணி அடுத்த அக்ராப்பாளையம் கிராமத்தை சேர்ந்த சரோஜினி என்ற பெண்ணுடன் கடந்த 5 வருடங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. குழந்தைகள் இல்லை.

    இதனால் வாழ்க்கையில் விரக்தி அடைந்த தினகரன் மது போதைக்கு அடிமையாகிய தாக கூறப்படுகிறது, கடந்தசிலநாட்களுக்கு முன்பு மனைவி சரோஜினி அவரது தாய் வீட்டு நிகழ்ச்சிக்கு சென்றிருந்தார்.

    இந்த நிலையில் தினகரனும் தனது தாய் வீடான துந்தரீகம்பட்டு கிராமத்திற்கு கடந்த 2 நாட்களுக்கு முன்பு சனிக்கிழமை சாமி கும்பிடுவதற்காக வந்துள்ளார். அப்போது அளவுக்கு அதிகமாக மது குடித்ததாக கூறப்படுகிறது.

    நேற்று காலை நீண்டநேரமாகியும் அவர் எழுந்திருக்காமல் மயக்கநிலையில் இருந்துள்ளார். உடனடியாக அவரை ஆரணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் தினகரன் ஏற்க னவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.

    இதுகுறித்து அவரது தாய் வசந்தா ஆரணி தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் சப் - இன்ஸ்பெக்டர் ஷாபுதீன் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    • மின்சாரம் துண்டிக்கப்பட்டது
    • நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் வலியுறுத்தல்

    செங்கம்:

    செங்கத்தில் சாலையோர ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வேண்டும் என நெடுஞ்சாலை துறை சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. அகற்றாத கடைகளை நெடுஞ்சாலை துறை மூலம் அகற்றப்படும் எனவும் அறிவிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில் பெரும்பாலான கடைகள் பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை முதல் அகற்றப்பட்டிருந்தது.

    இந்நிலையில் செங்கம் நகரில் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் எதிரில் உள்ள பழமை வாய்ந்த குளம் அருகே போக்குவரத்துக்கு இடையூறாக இருந்த மரத்தின் கிளைகளை வெட்டி அகற்றினர்.

    இதனால் காலை முதல் பிற்பகல் வரை மின்சாரம் துண்டிக்கப்பட்டிருந்தது. வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அவதிக்குள்ளாயினர்.

    மேலும் தாலுகா அலுவலகம் அமைந்துள்ள பகுதியில் இருந்து மில்லத் நகர் வரையிலும் உள்ள சாலை வர கடைகளை அகற்றி போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத வண்ணம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என செங்கம் பகுதி சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×